இலக்கியவாதியாக காட்டிக் கொள்ள சில வழிகள்…

ஆள்பாதி ஆடை மீதி

க்ளோஸ் அப்ல ஒரு போட்டோ. அல்லது பேனா கொண்டு மூக்கை குத்துவது போலவோ, கண்ணத்தில் கை வைத்து மோட்டு வளையை பார்த்த மேனிக்கோ, ஒருவாரமோ, ஒரு மாசமோ மழிக்காத தாடி மீசையுடன் இருந்தால் சிறப்பு.

பிரதி மட்டுமே மிச்சம். ஆசிரியன் செத்துவிட்டான்னு சொல்லிகிட்டாலும் நாளைக்கு நீங்க புத்தகம் போடும் போது கடைசி அட்டையில போட்டோ போட இதுமாதிரி புகைப்படங்கள் உதவும். பேண்ட் சட்டை எல்லாம் வேலைக்கு ஆவாது. அதனால.. நல்லதா நாலு ஜோடி ஜிப்பா வாங்கி வச்சுகுங்க. மேலுக்கு ஜிப்பாவும், கீழுக்கு ஜீன்ஸும் ஓகே!-ஜீன்ஸ் கொஞ்சம் அழுக்காகவும் இருக்கனும்.

அப்படியே ஒரு ஜோல்னா பை. இது இருந்தா மட்டும் தான் உங்களை நாங்க கணக்கிலேயே எடுத்துப்போம்.

அச்சுடகங்கள் குறித்த தெளிவு

வெகுஜன பத்திரிக்கைகள்/இதழ்கள் Vs சிறு பத்திரிக்கைகள் என்ற வார்த்தையை குறைந்தது ஒரு வார காலத்துக்கு ஒரு நாளைக்கு நூறு முறைக்கு குறையாமல் எழுதிப் பார்த்துக் கொள்ளவும். அவ்வப்போது பேச்சிலும், எழுத்திலும் இடைச்சொருகலாக பயன்படுத்திக்கொள்ளலாம். நம்மூர் சினிமா நடிகைகள்/இயக்குனர்கள் படத்தை அட்டையில் போட்டல் அது வெகுஜன பத்திரிக்கை/இதழ். ஈரானிய, ஹங்கேரி, மங்கோலிய நாட்டு நடிகைகள்/இயக்குனர்களை அட்டையில் போட்டால் அது இலக்கிய பத்திரிக்கை/சிறு பத்திரிக்கை என்ற வித்தியாசத்தை உணர்க.

சில பிரபல பெரிய ஊடகக்காரங்களை தண்ணியா கவனிச்சா.. எழுதி கூட அனுப்ப வேண்டாம். போனிலேயே கூட சொல்லிக்கலாம். அப்படியும் படைப்பு அந்த ஊடகத்தில் வரும். உலகம் போற்றும் எழுத்தாளர்னு சொல்லிக்கலாம்.

சொல்லறிவு

உலகம்- பிரபஞ்சம், நடுராத்திரி- நிசி என்று மாற்று வார்த்தைகளை சரியாக தேர்வு செய்ய பழகிக்கொள்ளவும். ”பார்க்கில் அவன் நடந்தான்” அப்படின்னு எழுத வேண்டிய இடத்தில்  “புற்தரையில் அவன் கால்களால் அளவளாவினான்”னு எழுதனும். அப்ப தான் நீங்க பெரிய ஆளாக மதிக்கப்படுவீங்க. தொடக்கத்தில் கஷ்டமாக தெரிந்தாலும் தொடர் பயிற்சியின் மூலம் வெற்றி பெற முடியும்.

உலக திரைப்பட விமர்சனம்

உலக சினிமா-ங்கிறது என்னென்னா. . வெள்ளைக்காரர்கள் நடித்த நல்ல ப்ளூ பிலிம் டிவிடியா பார்த்து பதினாலு வாங்கிக்கிடனும். அதுல துளியாவது கதையோட இருக்குற மாதிரி பார்த்துக்கிடனும். எடுத்த எடுப்பிலேயே.. ஆடைகளை அவிழ்த்துப்போட்டுட்டு ஜிங்கு ஜிக்கான் ஜிக்கான்னு ஏதும் வராதமாதிரி பார்த்துக்குங்க.

குறிப்பா.. அமெரிக்கர்களோட படத்தை தவிர்த்துடனும். அதுலேயும் துன்புறுத்தி இன்புறும் சைக்கோத்தனமான டிவிடி கிடைக்கும். அதை தேர்வு செஞ்சுட்டா பெட்டர். (அதை பார்த்தா நாலு நாளைக்கு சோறு திங்க முடியாது. அடவிடுங்க பாஸு  இது மாதிரி தியாகம் பண்ணினாத்தான் இலக்கியவாதியாக முடியும்) அப்புறம் அந்த படங்களில் இருக்கும் விசயங்களை எழுத்தில் கொண்டு வந்து எழுதினா.. அது தான் “உலக திரைப்பட விமர்சனம்”. எவனாவது கேட்டா உனக்கு பின்நவீனத்துவ அறிவே இல்லைன்னு சொலீடனும். நடுநடுவுல.. பாலியல்வறட்சி, பாலியல் தாகம், பாலியல் மோர், பாலியல் தயிர் என்று இடையிடையே கொஞ்சம் தூவ மறந்திட வேண்டாம்.

ரே, Samira Makhmalbaf, அகிரா, Giuseppe Tornatore, சித்திக் பர்மக், மஜித் மஜிதி- போன்றோரின் படங்களை பார்க்க நேரிட்டாலும் இதைவிட.. குருவி, அதிசிய பிறவி போன்ற தமிழ்ப் படங்களே மேல் என்று சொல்லிக்கனும். அப்போதான்.. படிக்கிறவன்.. என்னமோ இருக்குடா… நமக்கு பின்நவீனம் தெரியாதுன்னு சொல்லீடுவாய்ங்க போலன்னு அமைதியாக ஓடிடுவாங்க.

கவிதை

இலக்கியவாதி ஆகனும்னா எதாவது எழுததெரியனுமேன்னு கேட்பீங்க.. அது ரொம்ப ஈஸிங்க. ஒரு கவிதைய உதாரணத்துக்கு சமைச்சு காட்டறேன் பாருங்க (கவிதய சமைக்கறதான்னு ஆச்சரியப்படாதீங்க, இப்படித்தான் அப்பப்ப படிக்கறவங்கள அதிர்ச்சியடைய வைக்கணும்) ஒங்க தெருவை இந்த பக்கத்திலிருந்து, அந்த பக்கம் வரை மெதுவா கவனிச்சுகிட்டே நடங்க.. கண்ணில் படுவதையெல்லாம் எழுதிகிட்டே வாங்க.. இதுல ரொம்ப முக்கியம் ஒண்ணுக்கு கீழ ஒண்ணா எழுதிகிட்டு வரனும். இப்படி..

பந்துவிளையாடும் சிறுவர்கள்
இடிந்த வீடு.
மணியடித்தபடி செல்லும் பால்காரன்
ஆளுயரம் வளர்ந்த எருக்கஞ்செடிகள்
சைக்கிள் பழகும் சிறுமி
பட்சிகள் புணரும் படபடப்புச்சத்தம்
காற்றில் திறந்து மூடும் ஒற்றைச் சன்னல்
செங்கல் பல்லிளிக்கும் வீடு
தெருநாய்
வீதியில் கிடக்கும் சானிட்டரி நாஃப்கின்
பிளாஸ்டிக் கழிவு திண்ணும் மாடு
பழங்கால பங்களாவின்முன்
வெகு நேரமாய்
யாசகம் கேட்டுகொண்டிருக்கும்

குருட்டு பிச்சைக்கார கிழவி

குனிந்து கோலம் போடும் எதிர்வீட்டுப் பெண்

குனியாமல் அதை வேடிக்கை பார்க்கும் இளைஞன் (இது நீங்களாக் கூட இருக்கலாம், படைப்பாளியும் பிரதிக்குள்ள வரலாம், தப்பில்ல)

**

இப்படி பார்த்தவற்றை எழுதிய பின் சில வரிகளை நடுநடுவே அடித்துவிட்டால் உங்களுக்கு ஒரு கவிதை கிடைத்து விடும். சில இடங்களில் முன்னும் பின்னுமாக வார்த்தைகளை மாற்றியும் போட வேண்டியதிருக்கும். கீழே பாருங்கள்

பந்துவிளையாடும் சிறுவர்கள்
இடிந்த வீடு.
மணியடித்தபடி செல்லும் பால்காரன்
ஆளுயரம் வளர்ந்த எருக்கஞ்செடிகள்
சைக்கிள் பழகும் சிறுமி

பட்சிகள் புணரும் படபடப்புச்சத்தம்
காற்றில் திறந்து மூடும் ஒற்றைச் சன்னல்
செங்கல் பல்லிளிக்கும் வீடு
தெருநாய்
வீதியில் கிடக்கும் சானிட்டரி நாஃப்கின்
பிளாஷ்டி கழிவு திண்ணும் மாடு
பழங்கால பங்களாவின்முன்
வெகு நேரமாய் யாசகம் கேட்டுகொண்டிருக்கிறாள்
அந்த குருட்டு பிச்சைக்கார கிழவி

குனிந்து கோலம் போடும் எதிர்வீட்டுப் பெண்

குனியாமல் அதை வேடிக்கை பார்க்கும் இளைஞன்

இப்படி எடிட் பண்ணிட்டீங்களா.. இனி கவிதை ரெடி.

முழுமையான சாம்பிள் கவிதை கீழே

ஆளுயரம் வளர்ந்த
எருக்கஞ்செடிகள்
பட்சிகள் புணரும் படபடப்புச்சத்தம்
காற்றில் திறந்து மூடும்
ஒற்றைச் சன்னல்
செங்கல் பல்லிளிக்கும்
அந்த பழங்கால பங்களாவின்
முன்
வெகு நேரமாய்
யாசகம் கேட்டுகொண்டிருக்கிறாள்
அந்த குருட்டு பிச்சைக்கார கிழவி.

கவிதை எழுதியாச்சு. இனி கவிஞன்னு சொல்லிக்கொள்ளலாம். உங்களை யாராவது இன்னொருவரிடம் அறிமுகப்படுத்தும் போது கவிஞர் என்று சொல்லி அறிமுகப்படுத்தும்படி கூறிவிடுங்கள். அவ்வளவு தான் நீங்களும் கவிஞர் ஆகிடலாம்.
கேள்விக்கு பதில் (விவாதங்களின் போது/உரையாடலை முன்வைத்து)

உங்களிடம் யாராவது ஏதாவது கேள்விகளை வைத்தால்.. தொடர்பு இருக்குறமாதிரியே.. தொடர்பு இல்லாமல் பதில் சொல்லனும். சில சமயம் எதிர் கேள்வியையும் கேட்டு வைக்கணும்.

சில உ.தா பாருங்கள்.

கேள்வி: நீங்கள் ஆணாதிக்கவாதின்னும், பின்நவீனத்துவவாதின்னும் சொல்லிக்கிறீங்களே.. பின்நவீனத்துவம் ஆணாதிக்கத்தை ஏற்றுக்கொள்வதில்லையே?

பதில்: நன்றி. எனக்கு பின்நவீனத்துவம் பற்றி நன்கு தெரியும்.

கேள்வி: உங்களுக்கு திருமணம் ஆகிடுச்சா இல்லையா?

பதில்: யோனியை பற்றி எழுதுவதால் எனக்கு மணமாகிடுச்சுன்னு தீர்மானத்து வருவது தப்பு. யோனியை பற்றி பேசாமல் இருக்குறவங்களுக்கெல்லாம் மணமாகலைன்னும் சொல்லீட முடியாது.

கேள்வி: சமீப காலமா உலகத்திரைப்படங்கள் குறித்து அதிகம் எழுதுகிறீர்கள்.. அப்ப இந்திய திரைப்படங்கள் குறித்து உங்கள் பார்வை என்ன?

பதில்: ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கலாம். கிட்டப்பார்வைக்கு குழி லென்சும் தூரப்பார்வைக்கு குவி லென்சும் தான் பயன்படுத்துகிறார்கள். அதெல்லாம் தப்புன்னு யாரும் சொல்லலையே.. என்னோட பார்வை எனக்கு. என்னைய மட்டும் ஏன் இப்படி கேக்குறீங்க?

-இப்படி நாலு இடத்தில் பதில் சொல்லிப் பாருங்க.. அப்புறம் ஒரு பய கேள்வியே கேட்க மாட்டான். அவரு பெரிய பின்நவீனத்துவ எலக்கியவியாதிப்பான்னு ஓட ஆரம்பிச்சுடுவான்.

கூட்டங்கள்

இது ஏதோ ஆவி எழுப்புதல் கூட்டம் மாதிரின்னு முன்முடிவுக்கு வந்துட முடியாது. வராமலும் இருக்க முடியாது. நான் சொல்ல வருவது இலக்கிய கூட்டங்கள், நூல் வெளியீட்டு விழா, கவிதை அரங்கம், விமர்சன கூட்டம் இது மாதிரி எங்க போவதாக இருந்தாலும் மேலே சொன்ன ஆடைகளில் போகனும் என்பதை நினைவில் கொள்க.

அப்புறம்.. இலக்கிய கூட்டங்களுக்கு வரும் பெரிய எழுத்தாளர்/சிந்தனையாள்ர்/அறிஞர்/விஞ்ஞானி யாரோ ஒரு ஆளுன்னு வச்சுக்குங்க.. அவரது புகழ்பரப்பும் தொண்டரடிப்பொடிகள் நிறைய பேரு இருப்பாங்க.. அவங்களையும் தெரிஞ்சு வச்சுக்குங்க. புகைப்படம் எடுக்க, புத்தகத்துல கையெழுத்து வாங்கன்னு உதவுவாங்க. (கமிசனா அரை குவாட்டர் கொடுத்தா போதும்)

கொண்டாட்டம்

இது தான் ரொம்ப முக்கியமான கட்டம்/சதுரம்/வட்டம்/நீள்வடிவம் எப்படியோ முக்கியமான ஒண்ணு. கண்டிப்பாக தண்ணியடிக்க தெரிஞ்சிருக்க வேண்டும். அதுவும் அடுத்தவன் காசில். அப்ப தான் நீங்க சரியான இலக்கியாவாதியா உருவாக முடியும். கொண்டாட்ட மனநிலையை உணர்ந்தவராக கருதப்படுவீர்கள்.

தண்ணிவாங்கி கொடுக்கும் ஸ்பான்ஸரிடம் பேசும் போது காப்கா, ஈஷ்கார், தெரிதா, தெரியலையா,  ஜெ.கே, மார்க்ஸ், முல்லர், கில்லர்  என்று ஏகப்பட்ட பெயர்களை நடுநடுவே சொல்லவேண்டும். அப்போது தான் அவர் உங்களை பெரிய ஆளாக நினைத்து பயப்படுவார். அவசியமெனில் திராவிடம், ஆரியம், பார்ப்பனியம், பெரியார் பெயர்களையும் இடையிடையே தூவிக்கலாம். நிஜமான பின்நவீனத்துவ ஆளாக காட்டிக்க இது உதவும்.

அதுக்காக ஒரேடியா இப்படியே பிளேடு போட்டுறக் கூடாது. அப்புறம் அந்த பலியாடு எஸ்ஸாகிரும். அதுனால அப்பப்ப அவங்க ரேஞ்சுக்கு சில சினிமா கிசு கிசுக்களையும் இடையிடையே தூவணும். அப்பத்தானே காசு செலவழிக்கறவனும் கொஞ்சம் திருப்தியாவான். இதில் இன்னொரு விஷயம். உள்ளூர் சினிமா கிசுகிசுவா இருக்கணும். நீங்க பாட்டுக்கு உலக சினிமா கிசு கிசுவ சொன்னா அவன் பின்னங்கால் பிடரியில் இடிபட ஓடிடுவான்.

சிறுபத்திரிக்கைகள் & வலைப்பதிவு

தமிழில் ஏகப்பட்ட சிறுபத்திரிக்கைகள் வருகிறது. அதில் சிலவற்றிற்கு சந்தா கட்டி விடுங்கள். அப்புறம் நீங்கள் அதிலும் தொடர்ந்து எழுதலாம். அதில் வரும் அறிவிப்புகளையும், நூல்விமர்சனங்களையும் தழுவியோ, காப்பி எடுத்த உங்கள் வலைத்தளத்தில்/பஸ்ஸில்/பேஸ்புக்கில்……. போட்டு விட்டால் நீங்களும் கூட இலக்கியவாதிக்கான அந்தஸ்த்தை பெற முடியும். எவனை பிடிக்கலையோ.. அவனையும் அவன் எழுதுனதையும் கூட திட்டி எழுதிட்டு, எள்ளல், பகடி, கபடி-ன்னு சொல்லிக்க வேணும்.

எவன் உங்களுக்கு டீ, தண்ணி வாங்கித்தரலையோ அவன் குசு விட்டால் கூட.. நிலப்பரப்புத்துவ, முதலாளித்துவ, தரகு முதலாளித்துவ, நவீனத்துவ, பின் நவீனத்துவ, குண்டூசி நவீனத்துவ, ஆணி நவீனத்துவ மற்றும் கூறுகள் கூறு இல்லாதவைகள்னு கட்டுரைஎழுதனும் /பதிவு போடனும்.

உங்களோடு பேசிக்கொண்டு இருக்கும் போது ஒருத்தனுக்கு அவசரமா சிறுநீர் வந்து, சிறுநீர் கழிக்க ஓடினான்னு வச்சுக்குங்க… உடனே… கார்ப்ரேட் கம்பெனியில் இருப்பதால் தான் இப்படி ஓடுறார். சாதாரண ஆளா இருந்திருந்தால்.. இப்படி ஓரமாக போய் இருப்பார். ஐந்து இலக்கத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் திமிர் அதனால் இப்படியெல்லாம் செய்கிறார் என்று கூவவேண்டும்.

நடுநடுவுல மானே தேனே போடுறமாதிரி.. ஆயா சுட்ட வடை கெட்டு போச்சு, அப்பத்தா செத்துப்போச்சு, தமிழ்ச்சூழல் நசுங்கிப் போச்சு, மலையாள சூழல் வீங்கிப் போச்சு, மராட்டி சூழலுக்கு விரை வீங்கிப்போச்சுன்னு சொல்லிகிட்டே இருக்கனும்.

அரசியல், சினிமா மாதிரி இங்கேயும் சில சமயங்களில் வாரிசுகள் களமிறங்கினாலும்.. உலகம் அவர்களை எளிதாக ஏற்றுக்கொள்ளாது. அதனால.. அவங்களைப் பத்தி பயப்பட வேண்டாம். வழக்கமா அவங்க பரம்பரை பூச்சாண்டி காட்டிட்டு போய்டுவாங்க. அவர்கள் வேறு இடம் சென்று வாரிசு உரிமையை நிலைநாட்டிக் கொள்வார்கள்.

அதைவிட மிக முக்கியமான ஒன்னு இருக்குங்க.. அது என்னென்னா.. வலை உலகில் நீங்க படைப்பு ஏதும் எழுதுனீங்கன்னா.. பல பொஸ்தவம் போட்ட ஆளுகளுக்கு எரிச்சல் வந்துடும். சகட்டு மேனிக்கு திட்டினாலும் திட்டுவாங்க. அதனால்.. நீங்க நூல் அறிமுகம், இலக்கிய வாசிப்பு, எழுத்தாளர் அறிமுகம்னு மட்டும் எழுதிகிட்டு வந்தீங்கன்னா.. சிறந்த ஆளுன்னு பணமுடிப்பும் பரிசும் கொடுத்து.. கவுரவிக்கப்படுவீர்கள் என்பதையும் நினைவில் கொள்க.

படங்கள்:

இலக்கியவாதிகள் போல பொருத்தமான படங்களை சரியான இடத்துல போடத்தெரியாததினால்.. இங்கு சுட்டி கொடுத்திருக்கிறேன். அதை பார்த்து, நீங்களே சரியான இடத்தில் பொருத்தி படித்துக்கொள்ளவும். இந்த படங்கள் சரியான தேர்வு இல்லை எனில் நீங்களே கூட தேடிக்கொள்ளலாம். சுட்டி கட்டக்கடைசியில் கொடுக்கப்பட்டுள்ளது.

http://tamizharivu.files.wordpress.com/2010/03/literature_1_large_by_james119.jpg

http://static.hfholidays.defacto-cms.com/hfholidays/assets/images/2010/01/Writing_6_jpg_220x145_crop–10,0_q85.jpg

http://oglobo.globo.com/blogs/arquivos_upload/2006/12/55_alienista.jpg

http://www.booksyouwant.net/Images/00530%281%29R.jpg

இங்கே போய் தேடலாம்.

—–

மீண்டும் இன்னொரு சந்தர்ப்பத்தில்…


Comments

51 responses to “இலக்கியவாதியாக காட்டிக் கொள்ள சில வழிகள்…”

  1. ///ஒங்க தெருவை இந்த பக்கத்திலிருந்து, அந்த பக்கம் வரை மெதுவா கவனிச்சுகிட்டே நடங்க.. கண்ணில் படுவதையெல்லாம் எழுதிகிட்டே வாங்க.. இதுல ரொம்ப முக்கியம் ஒண்ணுக்கு கீழ ஒண்ணா எழுதிகிட்டு வரனும். ///
    அய் நானும் கவிதை எழுதலாம் போல, இதோ எழுதிட்டு வரேன்

  2. இலக்கியவாதி ஆவதற்கான Survival Manual….! நீங்க சொன்ன எதையுமே நான் இன்னும் செய்யல. சத்தியமா நான் இலக்கியவதி இல்லை. 🙂

    ஸ்ரீ….

  3. susi thirugnanam Avatar
    susi thirugnanam

    பாலா, அதே கிண்டல்… படித்தேன்… ரசித்தேன்.. எழுதுங்க, எழுதுங்க, எழுதிக்கிட்டே இருங்க…

    சுசி திருஞானம்

  4. தமிழினியன்.. கவிதை எழுதீட்டீங்களா..அவ்வளவுதான் இலக்கிய உலகின் கதவுக்கு பக்கத்துல தான் நிக்கிறீங்க! 🙂

  5. ஸ்ரீ.. எப்பத்தான் இலக்கியவாதியா ஆவுறது… சீக்க்ரம் ஆரம்பிங்கப்பா..!

  6. நன்றி திருசார். 🙂

  7. குசும்பன் Avatar
    குசும்பன்

    //அப்படியே ஒரு ஜோல்னா பை. இது இருந்தா மட்டும் தான் உங்களை நாங்க கணக்கிலேயே எடுத்துப்போம்.//

    அண்ணே எவனாவது ஆல்பம் கேட்டுட்டா?:)) என்ன செய்வது?

  8. குசும்பன் Avatar
    குசும்பன்

    //சினிமா நடிகைகள்/இயக்குனர்கள் படத்தை அட்டையில் போட்டல் அது வெகுஜன பத்திரிக்கை/இதழ். ஈரானிய, ஹங்கேரி, மங்கோலிய நாட்டு நடிகைகள்/இயக்குனர்களை அட்டையில் போட்டால் அது இலக்கிய பத்திரிக்கை/சிறு பத்திரிக்கை என்ற வித்தியாசத்தை உணர்க.//

    அண்ணே சின்னபுள்ளைங்க இங்க ஊத்தி மொழுவுன மாதிரி ஓவியம் மாதிரியும் அதுக்குள்ள மண்ட ஓடு, கால் மாதிரி சில குறியீடு எல்லாம் கலர் கலரா பெயிண்ட் செஞ்சு இருப்பாங்களே அதுமாதிரி அட்டை படம் இருந்தா அது என்ன புக்கு?நான் செக்ஸ் புக்குன்னு நினைச்சிக்கிட்டு இருக்கேன்!

  9. //அண்ணே எவனாவது ஆல்பம் கேட்டுட்டா?:)) என்ன செய்வது?//
    குசும்பா.. இலக்கிய வாதிகளிடம் ஆல்பம் கேட்க மாட்டாங்க… காட்டுவாங்க! :)))

  10. குசும்பன் Avatar
    குசும்பன்

    //புற்தரையில் அவன் கால்களால் அளவளாவினான்// அண்ணே இவிங்க அளவளாவ்வும் பொழுது கூட ஒரு பொண்ணையும் சேர்த்துக்கிட்டு அளவளாவுறாய்ங்க அதை எங்கபோய் சொல்வது?

  11. உங்க பதிவுல கொஞ்சம் திருத்தம் அல்லது திருத்த வேண்டியிருக்குது. மிக முக்கியமான எந்த இலக்கியவாதிங்கறதை நீங்க தெளிவா குறிப்பிடல. அச்சு ஊடக இலக்கியவாதியப் பத்தி அச்சு ஊடகத்துல எழுதறதும், ப்ளாக் இலக்கியவாதிகளைப் பத்தி பதிவூடகத்துல எழுதறதும்தான் நியாயம்.

    இது சம்மந்தமா நான் குறைந்தபட்சம் 1000 பக்கத்துல ”தரவுகள் தகராறுகள் நியாயங்கள்… அல்லது முரண்கள் முற்பாடுகள் மூத்திரங்கள்” அப்படிங்கற புத்தகம் எழுதலாம்னு இருக்கறதால இங்க என்னோட கருத்துகளை எழுதறது நியாயமாப் படலை. புத்தகம் வெளிவந்தபிறகு காசு கொடுத்து வாங்கிப் படிங்க.. மத்தபடி இலக்கியவாதியா காட்டிக்கறதுல எனக்கு எப்பவும் விருப்பம் இருந்தது இல்லை. ஆனா மத்தவங்க பார்வையில இலக்கியவாதியா நான் தட்டுப்படுறதுக்கு என்னை குறை சொல்லக் கூடாது.

    (தொடரும்)

  12. குசும்பன் Avatar
    குசும்பன்

    அண்ணே இவ்வளோ அழகா கவிதை சமைக்க தெரிஞ்ச நீ இலக்கியவாதிதானே???
    அவ்வ்வ்வ் இவ்வளோ நேரம் இலக்கியவாதி பதிவிலா கும்மியடிச்சேன்:(((

  13. எல்கியவாதீஸா ஆய்டீங்கன்னு சொல்லவே இல்ல..

  14. களவாணி திரைப்படத்தின் பின்னவீனக்கூறுகளை ஆராய்ந்து விமர்சனம் எழுதிட்டு இருக்கேன்.. ஏதும் சிற்றிதழ்ல வெளியிட வாய்ப்பு வாங்கித் தருவீங்களா?

  15. கவிதை சமைக்கும்பொழுது காரமா இல்லாம எண்ணெய்விடாம வெறும் தண்ணியில வேக வைச்சத அப்படியே அள்ளிச்சாப்பிடுறதைப் பத்தின கூறுகளை நீங்க எழுதாததை இயற்கைக் கவிஞர்கள் பேரவை கண்டித்து கிண்டி கிழங்கெடுக்க உங்களை நோக்கி வந்துக்கொண்டிருக்கிறார்கள்.

  16. தல … காலையிலயே இங்க ப்ளாக்ல ஆரம்பிச்சாச்சா… அசத்தல்..:))))))))))

    //எவன் உங்களுக்கு டீ, தண்ணி வாங்கித்தரலையோ அவன் குசு விட்டால் கூட.. நிலப்பரப்புத்துவ, முதலாளித்துவ, தரகு முதலாளித்துவ, நவீனத்துவ, பின் நவீனத்துவ, குண்டூசி நவீனத்துவ, ஆணி நவீனத்துவ மற்றும் கூறுகள் கூறு இல்லாதவைகள்னு கட்டுரைஎழுதனும் /பதிவு போடனும்//

    rotfl

  17. என்னா தல வோட் பட்டனையே காணோம்??? நீங்க உண்மையிலயே பதிவர்தானா…. எங்களுக்கு சந்தேகமாவே இருக்கு

    :))

  18. சூப்பர் சூப்பர் சூப்பர்ண்ணே….

  19. நன்றி சென்ஷி.. நீ ஆயிரம் பக்கத்துல நூல் எழுதினதும் சொல்லுங்க.. வாங்கீடுவோம்.

    //அவ்வ்வ்வ் இவ்வளோ நேரம் இலக்கியவாதி பதிவிலா கும்மியடிச்சேன்:(((//

    குசும்பா.. பின்னூட்டங்களுக்கே நான் நேரடியாக பதில் சொல்லுவதில் இருந்து உனக்கு தெரியலையா.. அதுக்கெல்லாம் நாம ஒர்த் இல்ல ராசா. :)))

    விதூஷ்.. குசும்பனுக்கு சொன்னதையே ரிபீட்டிக்கிறேன்.

    கண்ணா.. நான் திரட்டிகளில் இருந்து வெளியே வந்துட்டேன். எல்லா திரட்டிக்கும் தகவல் கொடுத்தாச்சு.

    நன்றி அக்கினிபார்வை. :))

  20. சொல்லிய வண்ணம் செயல் !

  21. வாழ்த்துகள் எலக்கியவியாதி

  22. கேவிஆர் உமக்கு பெரிய மனசு.. நாளைக்கு ஆகப்போகுற எல்லா எலக்கியவியாதிகளுக்கும் வாழ்த்து சொல்லீட்டு போறீங்க. நன்றி!

  23. தல,
    வர வர உங்களுக்கெல்லாம் எலக்கியவியாதிங்க மேல பயமே இல்லாம போச்சி.. இருக்குடீ உங்களுக்கெல்லாம் ஒரு நாள்..

  24. //ஆளுயரம் வளர்ந்த
    எருக்கஞ்செடிகள்
    பட்சிகள் புணரும் படபடப்புச்சத்தம்
    காற்றில் திறந்து மூடும்
    ஒற்றைச் சன்னல்
    செங்கல் பல்லிளிக்கும்
    அந்த பழங்கால பங்களாவின்
    முன்
    வெகு நேரமாய்
    யாசகம் கேட்டுகொண்டிருக்கிறாள்
    அந்த குருட்டு பிச்சைக்கார கிழவி.//

    சூப்பர் கவிதை பாலா!

  25. நன்றி சிவாண்ணா.. :))

  26. இலக்கியவாதியாக
    காட்டிக்கொள்ள
    விடுபட்டவை(ஆச்சர்யக்குறி)
    சில வழிகள்
    சொல்லியவண்ணம் செயல்.

    அண்ணா கவிதை நல்லாருக்கா?? இலக்கியவாதி ஆயிட்டேனா??/

    @ குசும்பன் – சங்கத்தை கூட்டிருவோம்.

  27. அப்துல்லா, உன் கவிதைல பொருட்பிழை இருக்குப்பா. கவிதை ”சொல்லிய வண்ணம் செய்யாதிருத்தல்” அப்படின்னு முடியணும். 🙂

  28. :))

    கவிதை எழுதும் முறை விளக்கமும், கவிதையும் அருமை…

  29. கவிதைதானே எழுதச் சொன்னீங்க?? அர்த்தத்தோடயா எழுதச் சொன்னீங்க?? சொன்னதை செஞ்சாலும் தப்பு செய்யாட்டினாலும் தப்பு. வரவர நீங்க மருத்துவர் அய்யா மாதிரி ஆயிட்டீங்க :)))))

  30. எச்சுஸ்மீ

    புரியாததை கேட்டு புரிஞ்சுகிடற அளவுல ஃபிரஷ்ஷா இல்ல நானு!
    ஆனா தெரியாததை கேட்டு தெரிஞ்சுக்கிட அளவுக்கு டெரரா இருக்கேன்!

    ஆட் வெப்கேம் கமெண்ட் & ஆடியோ கமெண்ட் எப்பிடி ? :)))

  31. என்னம்மா புட்டுப்புட்டு வெச்சுருக்கீங்க. ஆரம்பத்துல கொஞ்சம் ஸ்லோவான patternல இருந்தாலும், போகப்போக கப்பல்லேர்ந்து கடலுல எண்ணெய் கலக்கற வேகம்!

    என்ன, நடுநடுல சில வார்த்தைகளை/உவமங்களைத் தவிர்த்துட்டு எழுதியிருந்தா அப்படியே உங்க ஃபோட்டோ போட்டு ஆபீஸ் நண்பர்களுக்கு forward பண்ணியிருப்பேன் 🙁

  32. திரு அண்ணே நன்றி!

    அப்துல்லா :))

    ஆயில்ஸ்.. அதற்கான பொத்தானை அமுக்கி பாரும்.

    க்ருபாஷங்கர், இலக்கியவாதியாக காட்டிக்கொள்வதற்கு வார்த்தைகளை/உவமங்களையும் சேர்க்கவேண்டியதாகி விட்டது. இதை தவிர்ப்பது என்னடீன்னு தன் தெரியலை. 🙂 பார்வேர்ட் பண்ணமுடியாமபோச்சேன்னு வருத்தமா இருக்கு. 🙁

  33. //கப்பல்லேர்ந்து கடலுல எண்ணெய் கலக்கற வேகம்!// என்னது இது! சமூகச்சிந்தனையெல்லாம் உள்ள கொண்டாந்துகிட்டு… ம்ஹூம்.. க்ருபாவெல்லாம் கடேசிவரை எலக்கியவியாதியா ஆகவே முடியாது

  34. அடுத்தவன் உசார் பண்ணி வெச்சிருக்குற பொட்டபுள்ளய ஆட்டைய போடுட்டு அதுக்கும் ஒரு நொண்ணை நாயம் பேசுற எலக்கியவியாதிய உங்களுக்குத் தெரியுமா? தெரிஞ்சிக்கணும்னு அவா அல்லது ஆசை அல்லது விருப்பம் இத்யாதி இருந்தா ஒடனே 500 ரூவாக்கு செக்கோ டிடியோ எடுத்து என்னோட ICICI ACCOUNT கு அனுப்புங்க

  35. அபிஅப்பா Avatar
    அபிஅப்பா

    \\(கமிசனா அரை குவாட்டர் கொடுத்தா போதும்)\\

    அடப்பாவமே! கட்டிங்ன்னு அழகு தமிழ்ல சொன்னா புரிய போவுது. அதை வுட்டுட்டு அரை குவாட்டர்ன்னு கிட்டு. புரியும் படி எழுதுங்கய்யா:-))

  36. விந்தை மனிதன் அண்ணாச்சி.., இலவசமாக என் தளத்தில் வந்து விளம்பரம் கொடுப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். கிடைக்குற பணத்துல 1% இந்தப்பக்கம் எனக்கு அனுப்பி வச்சுடுங்க! :))))))

    அபியப்பா.. :))))

  37. //தமிழினியன்.. கவிதை எழுதீட்டீங்களா..அவ்வளவுதான் இலக்கிய உலகின் கதவுக்கு பக்கத்துல தான் நிக்கிறீங்க! //

    அவ்ளோ கிட்ட வந்துட்டேனா?
    அதுக்குள்ளயா?
    என்னை எலக்கியவியாதி ஆக்கி நீங்க எலக்கியவியாதிக்கெல்லாம் குருவாகிட்டீங்களே

  38. // (அதை பார்த்தா நாலு நாளைக்கு சோறு திங்க முடியாது. அடவிடுங்க பாஸு இது மாதிரி தியாகம் பண்ணினாத்தான் இலக்கியவாதியாக முடியும்) அப்புறம் அந்த படங்களில் இருக்கும் விசயங்களை எழுத்தில் கொண்டு வந்து எழுதினா.. அது தான் “உலக திரைப்பட விமர்சனம்”. ///
    அம்பூட்டு கஷ்டப்படனுமா ..??
    அப்புறம் இந்த கவிதை எழுதற விஷயம் ரொம்ப எளிமையா இருக்கு ..
    நானும் கூட எழுதலாம் போலேயே ..

  39. //நவீனத்துவ, பின் நவீனத்துவ, குண்டூசி நவீனத்துவ, ஆணி நவீனத்துவ மற்றும் கூறுகள் கூறு இல்லாதவைகள்னு கட்டுரைஎழுதனும் /பதிவு போடனும்.
    ///
    இத்தனை இருக்கா ..? எனக்கு இன்னும் பின்நவீனத்துவம் அப்படின்னவே என்னனு தெரியாது ..?!?

  40. //சாதாரண ஆளா இருந்திருந்தால்.. இப்படி ஓரமாக போய் இருப்பார். ஐந்து இலக்கத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் திமிர் அதனால் இப்படியெல்லாம் செய்கிறார் என்று கூவவேண்டும்.///
    சத்தியமா என்னால சிரிச்சு சிரிச்சு …??!!??

  41. நச்சுன்னு இருக்கு

    கவுஜ மேட்டர் பட்டைய கிளப்பிட்டீங்க

    ம்ம்ம்ம் நடக்கட்டும்

  42. //தண்ணிவாங்கி கொடுக்கும் ஸ்பான்ஸரிடம் பேசும் போது காப்கா, ஈஷ்கார், ***தெரிதா, தெரியலையா***, ஜெ.கே, மார்க்ஸ், முல்லர், கில்லர் // class!

  43. முத்து Avatar
    முத்து

    அருமை. அருமை. அருமை. முதுகைக் காட்டுங்க. ரெண்டு தட்டு தட்டிக்கிறேன். சொல்லறிவு, கவிதை, கேள்வி – பதில், கூட்டம் சூப்பரோ. நானும் இலக்கியவாதியா ஆக முயற்சிக்கிறேன்.

  44. இலக்கியவாதி பாலபாரதி வாழ்க.. வாழ்க..

  45. //குனியாமல் அதை வேடிக்கை பார்க்கும் இளைஞன் (இது நீங்களாக் கூட இருக்கலாம், படைப்பாளியும் பிரதிக்குள்ள வரலாம், தப்பில்ல)//

    🙂

    எப்புடி தம்பி இப்படி !

  46. அண்ணே,
    பின்னிட்டீங்க பின்னி… இதமாதிரி ஒரு இடுகையதான் ரொம்பநாளா தேடிட்டு இருந்தேன்.:)))))))

  47. sisulthan Avatar
    sisulthan

    ஆனாலும் நான் இளக்கியவாதி ஆகியே தீருவேன், கவிதை 10நாளுக்கு முன் 3வார்த்தையில் எழுதி பேர்வாங்கிவிட்டேன்,
    அதை புத்தகமா போடப்போறேன்

  48. ரசித்து படித்தேன் . படித்தால் உண்மையான இலக்கியவாதியும் தன்னுடைய அத்துமீறல்களை உணருவான் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *