Author: admin

  • Hello world!

    Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!

  • துலக்கம் – மறுபதிப்பு

    2014ஆம் ஆண்டு விகடன் பதிப்பகத்தின் வழியாக வெளியானது துலக்கம் நாவல். அமெரிக்காவில் காணாமல் போன ஆட்டிச நிலையாளச் சிறுவன் ஒருவனை மூன்று நாட்களுக்குப்பின் வசிப்பிடத்திலிருந்து 64 கிலோமீட்டர் தூரத்தில் கண்டுபிடித்ததாகவும்; அப்படிக் கண்டுபிடிக்க அவர்கள் அடைந்த சிரமத்தையும் விவரித்தது செய்தி.மற்ற நாடுகளை விடக் கொஞ்சம் புரிதல் உள்ள அமெரிக்கா மாதிரி மேலைநாடுகளிலேயே ஆட்டிச நிலையாளச் சிறுவர்கள் காணாமல் போவதும், அவர்களைக் கண்டுபிடிக்க அந்தக் காவல்துறை திணறுவதுமான பல செய்திகள் காணக் கிடைத்தது. போதிய விழிப்புணர்வு இல்லாத நம்…

  • ஆட்டிசம் – துண்டு அறிக்கை

    ஆட்டிசம் எளிமையாக உணர்ந்துகொள்ளும் வழிகள் என 20 ஓவியங்களைக் கொண்டு, ஒரு துண்டு அறிக்கை தயார் செய்து பரவலாக மக்களிடையே கொண்டு சேர்ந்த்தோம். அந்த துண்டு அறிக்கையை மக்கள் பலரும் கேட்பதால் அந்த கோப்பை இணையத்தில் வலையேற்றி வைத்துள்ளோம். வேண்டுவோர் கீழ்க்காணும் சுட்டியைச் சொடுக்கி பதிவிறக்கம் செய்யலாம். சுட்டியை சொடுக்கவும்: ஆட்டிசம் விழிப்புணர்வு துண்டு அறிக்கை ++++++++++++++++++~~~~~~~~~~~~~~~~~~~~~++++++++++++++++

  • அப்துல்லாவின் கிளிகள் – சிறுவர் கதை

    “எங்கே இருந்து கிடைச்சுச்சுடா…?” என்று கேட்டான் தமிழ்ச்செல்வன். இடம் : தந்தை பெரியார் மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டு மைதானம். “நாங்க குடி இருக்கிற வீட்டு மாடியிலடா…!” என்று கூறும்போதே அப்துல்லாவின் குரலில் ஒரு பெருமிதம் தெரிந்தது. “எப்படிடா கிடைச்சது..?” “மாடியில காயப்போட்ட துணிகளை எடுத்து வந்துடுன்னு சொல்லிவிட்டு, எங்க அம்மா வீட்டு வேலைக்குப் போயிட்டாங்க. நானும் மாடிக்குப் போனேன். அங்கே காக்கைகள் கூட்டமாக அமர்ந்து, ‘கா..கா..’ன்னு கரைஞ்சுகிட்டு இருந்துச்சு. என்னடான்னு பார்த்தேன். ரெண்டு கிளிக் குஞ்சுகளை அதுங்க…

  • பூரணம் -பெற்றோர் ஒன்றுகூடல்

    கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம், ஈரோடு ஜெயபாரதி அம்மாவின் அழைப்பில் சித்தார்த்தா பள்ளிக்குச் சென்று சிறப்புக்குழந்தைகளின் பெற்றோரிடம் உரை நிகழ்த்தினேன். அக்கூட்டத்தில் பேசிய விஷயங்களில் ஒன்று சிறப்புத்தேவை உடைய பெற்றோர் ஒருங்கிணைந்து செயல்படவேண்டியதின் அவசியம் . அதன் தேவை குறித்தும் பேசிவிட்டுத் திரும்பினேன். அடுத்த சில மாதங்களிலேயே அங்கே பெற்றோரின் சங்கம் ஒன்று தொடங்கப்பட்ட து. மாதம் ஒரு துறைசார் வல்லுநரை அழைத்துவந்து உரையாடவைப்பது என்று அவர்களின் செயல்பாடுகளின் தொடக்கமாக இருந்தது. இதோ இப்போது மீண்டும்…

  • ஆட்டிசம்: நம்பிக்கை தரும் மனிதர்கள்- (ஜேக்கப் ராக்)

    19 வயது ஜேக்கப் ராக், ஓர் ஆட்டிச நிலையாளர். இவரால் சிறு வயதில் பேச முடியாததால் அறிவுத்திறனில் குறைவானவர் என்றே மதிப்பிடப்பட்டார். அவரது குடும்பத்தினரின் தொடர் முயற்சிகளுக்கும் பயிற்சிகளுக்கும் பின்னர் ஐ பேடில் தட்டச்சு செய்து, தன் எண்ணங்களை வெளிப்படுத்தத் தொடங்கினார். எழுத்துப் பிழைகளோ இலக்கணப் பிழைகளோ இல்லாத கச்சிதமான வாக்கியங்களை ஜேக்கப் எழுதுவதைக் கண்டு வியந்தனர் அவரது பெற்றோர். தட்டச்சு செய்யக் கற்றக்கொண்ட ஆறு மாதங்களுக்குப் பின், ஒருநாள் தனது பெற்றோரிடம் ’தனது மனத்திற்குள் 70…

  • என்னை மன்னிப்பாயா நண்பா!

    இருபது வயதுகளின் தொடக்கக் காலத்தில் எப்போதும் நண்பர்கள் குழுவுடனேயே சுற்றித்திரிவோம். அப்போது என் நெருக்கமாக இருந்த நண்பன் ராமகிருஷ்ணன். மிகவும் நல்லவன். தைரியசாலி. பிறக்கு உதவும் குணம் கொண்டவன். முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் என எல்லோருக்கும் தன்னால் உதவும் குணம் கொண்டவன். எப்போதும் ஒன்றாகவே சுற்றுவோம். சின்ன ஊர் என்பதால் காலையில் விடிந்ததும் அவன் வீட்டுக்கு அருகில் இருக்கும் தேனிர் கடைக்குச் சென்றுவிடுவேன். அவனும் எழுந்து வந்துவிடுவான். பெரியதாக வேலைகளுக்குச் சென்று சம்பாதிக்கவேண்டிய நெருக்கடி இல்லாத குடும்பப் பின்னணி…

  • கு. அழகிரிசாமியின் சிறப்பு நூல்: விலையில்லா பிரதி பெற பதிவுசெய்வதற்கான இணைப்பு

    எப்போதும் என் மனத்திற்கு மிகவும் நெருக்கமான எழுத்தாளர் கு. அழகிரிசாமி. இது அவரின் நூற்றாண்டு. இதனை ஒட்டி, அவரது படைப்புகளில் சிலவற்றைத் தொகுத்து, விலையில்லாமல் வழங்கவிருப்பதாக தன்னறம் பதிப்பகம் முன்பு அறிவித்தது பலருக்கும் நினைவிருக்கலாம். இந்த மகத்தான செயல்வழி அழகிரிசாமி என்னும் படைப்பாளுமையை அடுத்த தலைமுறை பலரிடமும் கொண்டுபோய் சேர்க்கிறது தன்னறம் பதிப்பகம். அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும். கவிஞர் ராணிதிலக், அந்நூலினை சிறப்பாகத் தொகுத்துள்ளார். மிகவும் நேர்த்தியான வடிவமைப்பில் வந்திருக்கும் இந்த நூல் நேற்று கிடைத்தது. இதன்…

  • மகிழ்ச்சியைப் பகிர்தல்!

    ஈரோட்டில் இருந்து இன்று காலை ஜெயபாரதி அம்மா அழைத்திருந்தார்கள். அவர்கள் பள்ளியில் படிக்கும் சிறப்புக்குழந்தைகளின் பெற்றோர் ஓர் அமைப்பாய் ஒன்று திரள்கின்றனர் என்ற மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துகொண்டார். அந்த அமைப்பின் முதல் கூட்டம் இன்று தொடங்க உள்ளதாகவும் தெரிவித்தார். நானும் எனது மகிழ்ச்சியைத் தெரிவித்தேன். நீங்கள் பள்ளிக்கு வந்து உரை நிகழ்த்திய பின்னர்தான் இப்படி அமைப்பாய் திரளவேண்டும் என்ற எண்ணமே ஏற்பட்டது அதற்கு உங்களுக்கும் நன்றி எனப் பாராட்டினார். உண்மையில் அந்த பாராட்டு பெரும் மனமகிழ்வைக்கொடுத்தது. ஜெயபாரதி…