Author: admin

  • சின்னச்சின்ன ஆசை

    கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்பது போல ஆட்டிச நிலையாளர்களின் உலகம் என்னவென்பது நமக்குப் புரியாது, அவர்களுக்கோ அதைச் சொல்லத் தெரியாது என்பதுதான் யதார்த்தம். டெம்பிள் கிராண்ட்லின் போல வெகு சிலர் எழுதத் துவங்கிய பின்னரே ஒரளவு அவர்கள் உலகின் மீதும் வெளிச்சம் விழுந்தது எனலாம். ஆனாலும் கூட ஒவ்வொரு ஆட்டிச நிலையாளரின் தனித்துவமான மன உணர்வுகளை இன்னமும் நம்மால் சரிவர புரிந்து கொள்ள முடிவதில்லைதான். அனுபவத்தினால் ஓரளவுக்கு பெற்றோர்/காப்பாளர்கள் சில அனுமானங்களைக் கொண்டிருக்கிறோம் என்றாலும் கூட…

  • குழந்தைக் கவிஞர் பிறந்தநாள் இன்று

    தமிழில் குழந்தைக்கவிஞர் என்றால் அது à®…à®´.வள்ளியப்பா தான். இந்த அடைமொழியுடன் சில நூல்களையும் அவர் வெளியிட்டிருக்கிறார். இன்று அவரது பிறந்தநாள். (நவம்பர் 7) வங்கில் பணியில் இருந்தாலும் தம் வாழ்நாளில் குழந்தைகள் இலக்கியதிற்காக பெரும் தொண்டாற்றி உள்ளார் என்றால் அது மிகையல்ல. பண்டித ஜவஹர்லால் நேரு மீது மிகுந்த பற்று கொண்டவர் வள்ளியப்பா. தொடர்ந்து பல பாடல்களை நேருவை கருப்பொருளாக வைத்து எழுதி இருக்கிறார். இவை தவிர, நேருவின் வாழ்க்கை வரலாற்றை பாடல் வடிவிலும், கட்டுரைவடிவிலும் எழுதியுள்ளார்.…

  • குழந்தைகள் படிக்க ஏற்ற கதைகள்

    மு. கலைவாணன் இப்பெயரை நீங்கள் அறிந்திருப்பீர்கள். தமிழகத்தின் இன்றும் பொம்மலாட்டக் கலையைத் தாங்கிபிடித்து நிற்கும் கலைஞர். தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவம் சுற்றி வருகிறார். பொம்மலாட்டத்தின் வழி, பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைச் செய்துவரும் இவர், குழந்தைகளுக்காகவும் எழுதிவருகிறார். அப்படி, இவர் எழுதிய சின்னஞ்சிறுக் கதைகள் அடங்கிய 8 நூற்களைச் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார். 32 பக்க அளவுடைய இக்குட்டி நூற்கள் ஒவ்வொன்றும் ரூ.10/. 8 நூற்களும் சேர்த்து ரூ.80/- மட்டுமே!   சின்னச்சின்னக் கதைகள் 1,2 அன்புள்ள குழந்தைகளுக்கு..…

  • ஹேப்பி பேரண்டிங்- தந்தையர் ஒன்று கூடல்!

    பொதுவாக எந்த வேலை செய்தாலும் அதன் விளைவென்ன என்று அறியத் துடிப்பது பொது இயல்பு. பொது வேலைகளில் வேண்டியது சில/பல மாதங்களில் கிடைத்துவிடுவதுண்டு. விழிப்புணர்வு பிரச்சாரங்களில் அதன் விளைவுகள் அவ்வளவு சீக்கிரமாக, வெளிப்படையாக தெரிவதில்லை. நாம் உழைத்துக்கொண்டே இருக்கவேண்டியதிருக்கும். எந்த வினையும் இன்றி எதிர்பார்ப்பின்றி உழைப்பைக் கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டியதிருக்கும். ஆட்டிசம் குறித்த எனது விழிப்புணர்வு பணிகளிலும் இதே கதைதான். அதிலும் குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாகவே ஆட்டிச நிலைக் குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் மகிழ்வைத் தொலைத்து விடாது…

  • அப்பா

    நண்பர்கள், தோழிகளின் அப்பாக்களில் எல்லாம் எனது அப்பாவைத் தேடுவேன். இன்னும் சொல்லப்போனால் வயது கூடி மூப்பெய்திய அப்பாவின் வயதொத்த மனிதர்கள் எல்லோரிடமுமே என் அப்பாவின் சாயலைத்தேடுவது எனது வழக்கம். அதற்கொரு காரணமும் உண்டு; எனது 15வது வயதில் என் அப்பா காலமானார். அதனால் எனக்கு அவரது நினைவுகள் பெரும்பாலும் பிறரின் வார்த்தைகளின் வழியே உருவகப்படுத்திக் கொண்டதாகவே இருக்கிறது. கொஞ்சமாக செல்லரித்துப்போன புகைப்படம் போல சொந்த அனுபவத்தில் இருக்கும் நினைவுகளும் கூட உடன் பிறந்தோரின் வார்த்தைகளோ என்ற மயக்கம்…

  • தமிழ்நாட்டில் 30 லட்சம் குழந்தைகளுக்கு ஆட்டிசம்…! – குறைபாடு ஏன், அறிகுறிகள், பயிற்சிகள்!

    ஆட்டிசம் விழிப்புஉணர்வு அவசியம் தேவை… ஏன்? புதிதாகத் தங்கள் குழந்தைக்கு ஆட்டிசம் பாதிப்பு இருப்பதாகக் கண்டறியும் பெற்றோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. அதனாலேயே ஆட்டிசம் குறித்து நாம் தொடர்ச்சியாக உரையாடிக்கொண்டே இருக்கவேண்டிய தேவையும் இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவில் `68 குழந்தைகளில் ஒன்று’ என்ற விகித்தில் ஆட்டிசநிலைக் குழந்தைகள் இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் சொன்னது. ஆனால் இப்போது, `45 குழந்தைகளில் ஒரு குழந்தை’ என்ற அளவில் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகச் சொல்கிறது மற்றோர் ஆய்வு.…

  • காவலர்களுக்கு – ஆட்டிசம் விழிப்புணர்வு பட்டறை

    அறிவுசார் வளர்ச்சியில் குறைபாடுடைய பிள்ளைகள் தொலைந்துபோவதும் பின் கண்டுபிடிக்கப்படுவதும் தொடர்ந்து வரும் சூழ்நிலையில்தான் பிரவீன் இறந்து போனார். 26 வயதான பிரவீன், சிறப்புகுழந்தைகளுக்கான பள்ளியான வித்யாசாகரில் படித்தவர். டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஹோட்டல் சவேராவின் உணவகத்தில் உதவியாளராக வேலையும் பார்த்து வந்தார். அவரைத் தினமும் காலையில் அம்மாவோ அப்பாவோ பேருந்தில் ஏற்றி, ஹோட்டல் வாசலில் இறங்கிவிட்டு விட்டுப் போவார்கள். அதே போல மாலையிலும் திரும்பி வந்து அழைத்துச்செல்வார்கள். இது அவர்களின் தினப்படி வழக்கம். கடந்த ஜனவரி…

  • பள்ளிகளில் கூடி விளையாட விடுங்கள்!

    இன்று(02.04.2018), உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம். இந்த நாளில், ‘ஆட்டிசம்’ என்ற, நரம்பியல் சார்ந்த வளர்ச்சி குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளும், பெற்றோரும் எதிர்கொள்ளும் முக்கிய சிக்கலை பற்றி பார்ப்போம். ‘எந்தக் குழந்தைக்கும் கல்வி கற்கும் உரிமை மறுக்கப்படக் கூடாது’ என்பது, பொதுவான விதி. அத்தகைய உரிமையை, அறிவுசார் வளர்ச்சிகுறைபாடு உடைய ஆட்டிசம் குழந்தைகள் எதிர்கொள்ளும் போது, சந்திக்கும் சிக்கல்கள் ஏராளம். குழந்தை பிறந்த, 18வது மாதத்தில், ஆட்டிசத்தின் சாயல் இருப்பதை கண்டறியலாம்; ஆனால், மூன்று வயதுக்கு மேல்,…

  • ஆட்டிசம்: பெற்றோரின் கையிலிருக்கும் 10 மந்திரச்சாவிகள்

    ஆட்டிசம்: பெற்றோரின் கையிலிருக்கும் 10 மந்திரச்சாவிகள் -யெஸ்.பாலபாரதி ஆட்டிச நிலைக்குழந்தைகள் எல்லோரும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல. அதோடு எல்லோர் குடும்ப பழக்க வழக்கங்களும் ஒன்றுபோல் இருப்பதுமில்லை என்பதால் ஒவ்வொரு பெற்றோரும் அவர்களின் குழந்தையை கூர்ந்து கவனித்து, அதற்கு ஏற்றார்போல கற்பிக்கவேண்டும். இக்கட்டுரையும் இதைத்தான் சொல்கிறது. இன்று கற்பித்தலில் ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்தனியாக ஐ.ஈ.பி முறை (IEP-Individualized Education Program) தேவை என்கிறார்கள். அதாவது, கல்வித் திட்டத்தை, ஒரு குழந்தை கற்றுக்கொள்ளும் திறன், அதை வெளிப்படுத்தும் திறன் உட்பட,…

  • சில வேண்டுகோள்கள்

        குறிப்பு: நண்பர்கள், உறவினர்கள், பெற்றோர் என எல்லோருக்குமான வேண்டுகோள். சிறப்புக்குழந்தை, ஆட்டிச நிலைக்குழந்தைகள் பற்றிய ஒரு புரிதலை ஏற்படுத்தவேண்டும் என்பதால் எழுதப்பட்டுள்ளது. 1. பொதுவெளியில் – பயணத்திலோ, திருமண மண்டபத்திலோ, கோவிலிலோ எந்த இடமாக இருந்தாலும், ஓர் ஆட்டிச நிலைக்குழந்தையை எதிர்கொண்டால் அவரின் பெற்றோரிடம் துருவித் துருவி விசாரணைகள் ஏதும் செய்யாமல் இருக்கலாம். கூடவே அதைச்செய், இதைச்செய் என்பதுபோன்ற இலவச அறிவுரைகளையும் தவிர்க்கலாம். 2. ஆட்டிச நிலைச்சிறுவர்களுக்கு புலனுணர்வு சார்த்த சங்கடங்கள் எப்போதும் இருக்க…