Author: admin

  • ஆட்டிசம்: நம்பிக்கை தரும் மனிதர்கள் -கர்ட் ஹர்பெர் (curt harper)

    “எதிர்காலத்தில் என் குழந்தை தன்பணிகளை தானே செய்துகொள்ளும்படி வளர்வானா?” எல்லா ஆட்டிச நிலைக்குழந்தைகளின் பெற்றோருக்கும் இக்கேள்வி இருக்கும். உண்மையில் எல்லோருக்கும் அது சாத்தியமா என்பதை நான் அறியேன். ஆனால் பலருக்கும் அது சாத்தியம் என்பதை நம்புகிறேன். நம் குழந்தை அந்த இடத்தை அடைய நாம் கடுமையாக உழைக்கவேண்டியதிருக்கும். புராணங்களில் சொல்லப்பட்ட பூமா தேவியை விட, அதிகம் பொறுமை மிக்கவர்களாக பெற்றோர் மாறவேண்டும். ஒரே விஷயத்தை திரும்பத்திரும்ப செய்வதிலோ, கேட்பதிலோ எப்படி நம் குழந்தைகள் சலிப்படைவதில்லையோ… அதைப்போல பல…

  • டிசம்பர் 3 : சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நாள்

    அறிவுசார் குறைபாடு உடையவர்களும் மாற்றுத்திறனாளிகள் தாம்!இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு நாள் * ஆட்டிச நிலைக்குழந்தைகளை வைத்துக்கொண்டிருப்போருக்கு மூன்று மாதத்திற்கோ, ஆறுமாதத்திற்கோ ஒருதரம் உளவியல் ஆலோசனைகள்.* மாதம் ஒரு முறை, தன்னார்வலர்கள் வந்து 8மணி நேரம் குழந்தையை தங்கள் பொறுப்பில் எடுத்துக்கொண்டு, பெற்றோருக்கு சற்று ஓய்வு வழங்கப்படுகிறது. * ஓட்டப்பந்தையம் மாதிரியான விளையாட்டுப் பயிற்சி+ போட்டிகளில் ஆட்டிசநிலைக்குழந்தைகளுடன் இதரக்குழந்தைகளையும் கலந்து, 1+1 விகிதத்தில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. * 18 வயது பூர்த்தியான ஆட்டிச நிலையாளர்களுக்கு கட்டாயமாக அவர்களின்…

  • புதிய அனுபவம் கொடுக்கும் சிறார் நாவல்: இருட்டு எனக்குப் பிடிக்கும்

    பயணம் பிடிக்காதவர்கள் இருக்கமுடியுமா? அல்லது பயணம் பிடிக்காத குழந்தைகள் இருக்கமுடியுமா? நானறிந்த வரை குதுகுலமாக குழந்தைகள் பயணங்களுக்குத் தயாராகிவிடுவார்கள். இன்னும் சொல்லப்போனால்.. ஊட்டிக்குப் போய் மலர்கண்காட்சி பார்ப்பதும், ஆக்ரா போய் தாஜ்மகால் பார்ப்பதும் வயதுவந்தவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனால் குழந்தைகளுக்கு புது இடத்திற்குப் போகிறோம் என்பதே மகிழ்வளிக்கக்கூடியதுதான். தமிழைச் சிரமமின்றி வாசிக்கத்தெரிந்த 10 வயதுக் குழந்தை தொடங்கி, எவரும் வாசித்துவிடக்கூடிய அளவில் எழுதப்பட்டுள்ள கதைதான் ’இருட்டு எனக்குப் பிடிக்கும்’  இச்சிறுவர் நாவலின் ஆசிரியர் ரமேஷ் வைத்யாவுக்கு தனி…

  • மீனவர்களின் துயரத்தை படம்பிடிக்கும் – வலை

    மீன் பிடிக்க கடலுக்குப் போன பிள்ளை திரும்புவான் எனப் பல ஆண்டுகளாகக் காத்திருக்கும் தாய். பிறக்கும் பிள்ளைக்கு அப்பாவைப் புகைப்படத்தில் மட்டுமே இனி காட்டமுடியும் என்று உள்ளுக்குள் உடைந்து அழுதுகொண்டிருக்கும் பிள்ளைத்தாச்சி. குடும்ப பாரத்தை சுமக்கப் பள்ளி இறுதியைக்கூடத் தொடாமல் வேலைக்குப்போன பிள்ளைகள் -இப்படி நூற்றுக்கணக்கான மீனவக் குடும்பங்களை பாம்பன் தீவுக்குள் பார்க்க முடியும். இன்னும் சொல்லப்போனால், ராமேஸ்வரத்தில் 500க்கும் குறைவான வீடுகள் கொண்ட, ஒரு சிறுகிராமத்தில் கணவனை இலங்கை ராணுவத்திற்குக் காவுகொடுத்த பெண்கள் வீட்டுக்கு ஒருவரையாவதுப்…

  • காகங்கள் ஏன் கருப்பாச்சு?

    கிச்சா பச்சா என்று இரண்டு காகங்கள், தாங்கள் ஏன் கருப்பாக இருக்கிறோம்..? என்ற கேள்விக்கு விடை தேடி பயணப்படுகின்றன. இதுதான் விழியனின் கிச்சா பச்சா நூலின் ஒன் லைனர். மொத்தம் 9 அத்தியாயங்கள் கொண்ட கதை. ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒவ்வொரு விலங்குகளைச் சந்தித்து, தாங்கள் ஏன் கருப்பாக இருக்கிறோம் என்ற கேள்விக்கு விடை தேட முயல்கின்றன. விலங்குகள் சொல்லும் எந்தப் பதிலும் இவற்றைச் சமாதானப்படுத்தவில்லை என்பதால் இவற்றின் பயணம் தொடர்கிறது. நமக்கும் சுவாரஸ்யமான கதை கிடைக்கிறது. தொடர்…

  • மதுரைக்கு வந்த வேற்றுக்கிரக வாசிகள்

    ஐந்தாம் வகுப்பில் படிக்கும் அருண் என்ற சிறுவனும், அவனது நண்பர்களும் ஒரு வேற்றுக்கிரக்க வாசியைச் சந்திக்கிறார்கள். அதனுடன் விண்கலத்தில் பயணமாகி, அதன் உலகிற்குச் செல்கின்றனர். அங்கே என்னென்ன பார்த்தார்கள் என்ன கற்றுக்கொண்டார்கள் என்பதைக் குழந்தைகளுக்கான மொழியில் எளிமையாக எழுதியுள்ளார் நூலாசிரியர் க.சரவணன். மதுரையில் ஒதுக்குப்புறமாகக் குடிசையில் வாழும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன் அருண். அவனுடைய நண்பர்களோ வேறு பகுதியில் வசிக்கும் மத்தியதர குடும்பத்தினர். அருண் வீட்டில் மின்சாரம் இல்லை என்பதே நண்பர்களுக்கு பெரும் அதிர்ச்சியான செய்தி. அதோடு அவனுடனேயே…

  • வீரம் விளைந்தது (இளையோர் பதிப்பு)

    வீரம் விளைந்தது (இளையோர் பதிப்பு) நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்கி – தான் எழுதிய ஒரே புத்தகத்தின் மூலம் உலகம் முழுவதிலும் பிரபலமானவர். அந்த நாவலின் பெயர், ‘வீரம் விளைந்தது’ உலகப்புகழ்பெற்ற ரஷ்ய நாவல் இது. பாவெல் என்ற இளைஞனின் கதை இது. அவனது பிறப்பு, சிறுவயதில் அவன் அடையும் துயரங்கள், பின் ரஷ்ய ராணுவத்தில் அவன் பணியாற்றியபோது செய்த சாகசங்கள் பற்றி எல்லாம் விரிவாக சொல்லப்பட்டிருக்கும்; பின் ஒரு போரில் காயம்பட்டு, படுக்கையில் சாய்கிறான் பாவெல். ஆனாலும் கம்யூனிஸ்ட்…

  • சேவல் ஏன் கூவுகிறது தெரியுமா? இந்திய சிறுவர் நாடோடிக்கதைகள்

      சேவல் ஏன் கூவுகிறது தெரியுமா? ஆம்… அதற்கொரு கதை இருக்கிறது. இந்திய சிறுவர் நாடோடிக்கதைகள் படித்தபோது, அதற்கான காரணத்தைத் தெரிந்துகொண்டேன். நாடோடிக்கதைகளின் ஆசிரியர்கள் இன்னாரென்று கூறமுடியாது. பலவும் வாய்மொழியாகச் சொல்லப்பட்டு, அப்படியே எல்லைகள் கடந்து பல தேசங்களையும் இக்கதைகள் அடைந்துள்ளன. அவற்றை ஆங்காங்கே தொகுத்து எழுத்துவடிவில் சிலர் பதிவு செய்தும் வைத்துள்ளனர். அதனாலேயே இக்கதைகள் சாகாவரம்பெற்று இன்னும் உயிர்ப்போடு இருக்கின்றன என்றே சொல்லலாம். இந்திய தேசத்தில் சொல்லப்படுகின்ற பல நாடோடிக் கதைகளில் சிலவற்றைத் தொகுத்து, சுட்டிவிகடனில்…

  • சாகசங்களை அள்ளித்தந்த ஒரு பயணம்

      பயணங்கள் எப்போதுமே சுகமானவை. அதிலும் அனேக சிறுவர்களுக்கு பயணங்களின் மீது பெரும் காதலிருக்கும். பயணப்படும் ஊர் பற்றியோ, அங்கே காணப்போகும் அரிதான விஷயங்கள் பற்றியோ எவ்வித அக்கரையுமின்றி இருப்பதைக் காணமுடியும். அவர்களுக்குப் பயணங்கள் மட்டுமே புத்துணர்ச்சியைக்கொடுக்கும். ஒரு குடும்பம் கடல் வழிப் பயணம் மேற்கொள்கிறது. எதிர்பாராத விதமாகப் புயல் தோன்றக் கப்பல் உடைந்து நீர் உள்ளே வரத்தொடங்குகிறது. குடும்பத்தின் தலைவனும், தலைவியும் அவர்களது பிள்ளைகளுடன் சிறுபடகில் தப்பிக்க நினைக்கிறார்கள். அப்போது கப்பலில் இருக்கும் வளர்ப்பு பிராணிகளையும் காப்பாற்றவேண்டுமென்று…

  • கருவிகளின் கதை

    திருவிளையாடல் படத்தில் வரும் வசனம் அது போல, பிரிக்கவே முடியாதது எது என்று கேட்டால்… கேள்விகளும் குழந்தைகளும் என்று தைரியமாகச் சொல்லலாம். குழந்தைகள் கேள்விகள் கேட்கும் போது, பதில் சொல்லியபடியே இருக்கும் பல பெற்றோரும், நமக்குப் பதில் தெரியாத கேள்வி ஒன்றினை அக்குழந்தை கேட்கும் சமயத்தில் கோபப்பட்டு பார்த்திருக்கிறேன். தெரிந்துகொண்டு சொல்கிறேன் என்று சொல்லுவதை விட்டு, கோபப்படுவது எப்படி நியாயமாக இருக்கமுடியும். எல்லா விஷயங்களையும் எல்லோரும் விரல் நுனியில் தெரிந்துவைத்திருக்கமுடியுமா என்ற கேள்வி எழலாம். முடியாது என்பது…