Author: admin

  • டிஸ்கால்குலியா… டிஸ்கிராஃபியா… டிஸ்லெக்ஸியா… மாணவர்களை வதைக்கும் கற்றல் குறைபாடுகள்..!

      “ஒன்பதாம் வாய்ப்பாடு மனப்பாடமா சொல்லத்தெரியல… ஆனா.. சினிமா கதையை மட்டும் மறக்காமப் பேசு…” “எத்தன தடவை இந்த பாடத்தை எடுத்திருப்பேன். இவ்வளவு கம்மியா மார்க் வாங்கி இருக்கியே? பாடத்தை விட, பராக்கு பார்க்குறதுலதானே உனக்கு ஆர்வம்! நீ எல்லாம் ஏன் படிக்க வர்ற…?” “ஒரு கேள்விக்கும் சரியா பதில் எழுத்தத் தெரியல.. பாட்டு டான்ஸுன்னா மட்டும் முன்னாடி வந்து நின்னுடு!” இப்படி விதவிதமான திட்டுக்கள் வாங்கும் பிள்ளைகளை நாம் பள்ளியிலோ, வீட்டிலோ பார்த்திருப்போம். இன்னும் சொல்லப்போனால்…

  • நல்ல சூழல் என்பது நாம் நம் குழந்தைகளுக்குத் தரும் நல்ல சிந்தனைகளே! -ஆர்.எம். கெளரி (ஓய்வு பெற்ற ஆசிரியர்)

    (ஆமை காட்டிய அற்புத உலகம்- நூல் குறித்து, தனது கருத்துக்களை பகிர்ந்திருக்கும் ஆசிரியர் அம்மா கௌரி அவர்களுக்கு நன்றி) ================ ஒரு தாய் தன் குழந்தைகளுக்குக் கதை சொல்லி மகிழ்விப்பாள். ஆனால் எனக்கு என் பிள்ளைகள் கதை சொல்லி அதை நான் கேட்கும் வாய்ப்புக் கிடைத்துவிட்டது. என் பிள்ளை போன்ற யெஸ்.பாலபாரதியின் சிறார் நாவல் “ஆமை காட்டிய அற்புத உலகம்” படிக்கும் போது நானும் ஒரு குழந்தையாகவே உணர்ந்தேன். பாலா – பொதுவுடைமைவாதி. தன் சிந்தனையைப் படைப்பில் கொண்டுவரும்…

  • ஆட்டிசம்: “தெய்வக் குழந்தையை வளர்ப்பது உலகின் உன்னதம்!”

    – மனநலம் குறைந்த மகளை ஆசிரியையாக்கிய சாதனையாளர் சாதனை   “அப்பா… நாளைக்கு ஸ்கூல்ல பிங்க் கலர் ஆக்டிவிட்டி. எனக்கு டிரெஸ், வளையல், பொட்டு எல்லாம் பிங்க் கலர்ல எடுத்து வைப்பா’’ என்று தன் தந்தை சதாசிவத்திடம் கேட்கும் நந்தினி, மாணவி அல்ல… பள்ளியில் ஆசிரியை. மனநலம் குறைந்த அவரை ஆசிரியராக்கியது, அந்தத் தந்தையின் அடர்த்தியான அன்பும், அக்கறையும், முயற்சியும், பயிற்சியும்! மனவளர்ச்சி குறைந்த 32 வயதாகும் நந்தினிக்காக அந்த பாசத்தந்தை வாழ்ந்து வரும் போராட்ட வாழ்க்கை,…

  • ஆமை காட்டிய அற்புத உலகம் (சிறார் நாவலுக்கான முன்னுரை)

      சாகசகம் பிடிக்காத குழந்தைகளே இருக்கமுடியாது. அப்படியொரு சாகசக் கதைதான் இந்த நாவல். கடல் சூழ்ந்த ஊரில் பிறந்ததாலோ என்னவோ, எனக்கு எப்போதும் கடல் பிடிக்கும். அந்த கடலுக்குள் போய்ப்பார்த்தால் என்ன என்று தோன்றியது. அற்புதங்கள் நிறைந்தது அது. கணக்கில் வராத, கோடானுகோடி உயிரினங்கள் அதன் உள்ளே வாழ்கின்றன என்பது அறிவியலாளர்களின் கருத்து. பால்யத்தில் நான் நீச்சல் பழகி, விளையாடிய, பாறைகள் நிறைந்த, அதே இடத்தில் இருந்து கதையைத் தொடங்கியிருக்கிறேன். ஓர் உண்மையைச் சொல்வதானால் சிறுவயதில் அடிக்கடி…

  • தோல்வி நிலையென நினைத்தால்..

      சமீபத்தில் நீங்கள் தோல்வியடைந்தது எப்போது?! நினைவு இருக்கிறதா? இந்தத் தோல்வி என்பது சின்னதாகக்கூட இருக்கலாம். பேருந்தை பிடிக்க முயன்று, முடியாமல் போனது, அலுவல் பணியைத் திட்டமிட்டபடி முடிக்காமல், மேலதிகாரியிடம் டின் வாங்கிக்கொண்டது இப்படி எதுவாகவும் இருக்கலாம். கொஞ்சம் யோசித்துப்பார்த்தால்.. புலப்படும். அப்படியே நமது கடந்த காலத்திற்குப் பயணமாகி சந்தித்த தோல்விகளைச் சிந்தித்துப்பாருங்கள். வரிசையாக அவை வரும். இன்று நம் பிள்ளை எப்போது தோல்வியை எப்போது சந்தித்தார்கள் என்று யோசித்துப்பாருங்கள். விடை கண்டுபிடிக்க முடியாவிட்டால்.. அவர்களை அழைத்தே…

  • ஆட்டிசம் – செய்ய வேண்டியவையும் செய்யக் கூடாதவையும்

    ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸாடர் (ASD) என்பதைத்தான், சுருக்கமாக ஆட்டிசம் என்று சொல்கிறோம் நாம். இப்பிரிவின் கீழ் பல நிலைகள் உள்ளன. எல்லாவற்றிற்கும் தனித்தனிப் பெயர்கள் இருந்தாலும், அத்தனையும் ஆட்டிசம் என்ற ஒரே குடையின் கீழ்தான் வரும். நேரடியாக கண்களைப் பார்ப்பதைத் தவிர்ப்பது, ஒரே மாதிரியான செயலை மீண்டும் மீண்டும் செய்வது, பிற குழந்தைகளுடன் கலந்து விளையாடாமல் இருப்பது, பேசாமல் இருப்பது என்று ஆட்டிசத்திற்கான சில அடையாளங்கள் சொல்லப்படுகின்றன. ஆனாலும், ஆட்டிசம் குறைபாடுகளை இப்படியானதுதான் என்று வரையறுக்க முடியாது.…

  • ஆட்டிசம் என்னும் பளிங்கு அறை

    ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று மணிமேகலை. அதில் ஒரு காட்சி.. மணிமேகலையை அடையும் எண்ணத்துடன் சோழ இளவரசன் துரத்தி வருகிறான். அவனிடமிருந்து தப்ப பூஞ்சோலையில் இருந்த ஒரு பளிங்கு மண்டபத்தில் ஒளிந்துகொள்கிறாள் மணிமேகலை. அந்தப் பளிங்கு அறை தனக்குள்ளே இருப்பவர்களை மறைத்து, அவர்களை வெவ்வேறுவிதமான ஓவியங்களாக வெளியே காட்டுமாம். அந்த ஓவியங்களைப் பார்த்து மனம் மாறி இளவரசன் பூஞ்சோலையைவிட்டு வெளியேறுகிறான் என்று செல்கிறது அந்தக் காட்சி. இதில் வரும் பளிங்கு அறை எனும் படிமம் ஆழமானது. உள்ளே இருப்பவர்கள்…

  • கல்வி: எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்

    அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், அன்னயாவினும் புண்ணியம் கோடி, ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல். பாரதியின் இந்த வரிகளுக்கு மேலதிக விளக்கம் தேவையில்லை. ஆனால் இதில் வரும் ஏழை என்பது பொருளாதாரரீதியில் வறுமையில் இருப்பவர்களை மட்டுமே குறிக்கும் ஒரு சொல்தானா? கல்வியை நோக்கி வரமுடியாத எல்லா இயலாமைகளையும் இச்சொல் அரவணைப்பதாகக் கொண்டால் உடல்ரீதியிலும் அறிவுவளர்ச்சியிலும் இயலாமை கொண்ட எல்லா சிறப்புக் குழந்தைகளுக்கும் கல்வி அளிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ளலாம். உடல் மற்றும் அறிவு…

  • மாற்றுத்திறன் குழந்தைகள் மற்றும் அவரது பெற்றோரின் சுயமரியாதை

      அரங்கில் நிறைந்திருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அறிவுசார் பலவீனங்கள்(Intellectual Impairment) எனும் குடையின் கீழ் பல்வேறு குறைபாடுகள் பட்டியலிடப் பட்டுள்ளன. பொதுவாக சமூகம் “லூசு” என்ற ஒற்றை வார்த்தையில் அடக்கிவிடும் இந்தப் பட்டியலில் இருக்கும் எண்ணற்ற குறைபாடுகளைப் பற்றி இங்குள்ள நண்பர்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? கற்றல் குறைபாடு, ஆட்டிசம், டவுன் சிண்ட்ரோம், செரிபரல் பால்சி, மனவளர்ச்சிக் குறைபாடு என நீளும் பட்டியல் சற்றே பெரியது. இந்த உலகில் இருக்கும் எல்லாக்…

  • நனி சைவம் ட்ரை பண்ணலாமா?

    இது என்ன புதுசா இருக்கே என்று பார்க்கிறீர்களா? வீகேன்(Vegan) என்று ஆங்கிலத்தில் சொல்லுவதைத்தான், தமிழில் நனி சைவம் என்கிறார்கள். நம்மில் பலரும் அறிந்தது சைவம், அசைவம் மட்டுமே. ஆனால் மாறி வரும் உலகில் மாறாதது எதுவுமிருக்க முடியாது என்பதைப்போல, சைவ உணவு பழக்கத்திற்குள்ளேயே தீவிரமான சைவப்பிரிவு தான் இந்த நனி சைவம். இன்றைக்கு உலகின் பல பகுதிகளிலும் கடைபிடிக்கப்பட்டு வரும் இப்பழக்கம், உணவிலிருந்து வாழ்க்கை முறையாக மாறி நனி சைவக் கோட்பாடாக (வீகேனிஸம்) பரவி வருகிறது. பொதுவாகச்…