Author: admin

  • ஆட்டிசம் : அடுத்து என்ன?

    இன்று உலக அளவில் குழந்தைகளைப் பாதிப்புக்குள்ளாக்கும் குறைபாடுகளில் ஆட்டிசமும் ஒன்று. ஆட்டிசம் என்பது ஒரு நிலை என்று இப்போது சொல்கிறார்கள். அதாவது, இந்த நிலைக்குள் இருப்பவர்கள் வெளியேயும் வரலாம், வராமலும் போகலாம். ஆனால், ஆட்டிசம் ஏன் வருகிறது? எப்படி இதை வராமல் தடுப்பது அல்லது கர்ப்ப காலத்திலேயே கண்டறிய முடியுமா என்று அப்பாவியாக நாம் கேள்விகளை அடுக்கிக்கொண்டே இருக்கிறோம். மருத்துவ உலகில் ஒரு பகுதியினர் இதுமாதிரியான நூற்றுக்கணக்கான கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.…

  • தானே தெளியும்!

      எப்போதும் பிஸியாக இருக்கும் பெரிய தொழிலதிபர் ராமு, மிகவும் பிரபலமான அந்த மருத்துவரைப் பார்க்கக் காத்திருந்தார். இவரது முறை வந்தது. கல்லூரியில் சேர்த்துள்ள தனது மகன் எப்போதும் விளையாட்டில் கவனம் செலுத்துவதாகவும், தனக்குப் பிறகு தனது தொழிலை அவன் கவனித்துக்கொள்வான் என்ற நம்பிக்கை அற்றுப்போய் விட்டதாகவும், அவனாலேயே தன் உடல் நிலையும் மன நிலையும் தனக்கு மோசமடைந்து வருவதாகவும் பெரிய புகார் பட்டியலை வாசித்தார் ராமு. எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட மருத்துவர், மகனை அழைத்துக்கொண்டு அடுத்த வாரம்…

  • ஃபீனிக்ஸ் சகோதரிகள்

      ‘‘என்னோட சின்ன வயசுல, இப்படி சக்கர நாற்காலியில்தான் வலம்வர முடியும்; யாரையாவது சார்ந்துதான் வாழவேண்டியிருக்கும்னு நினைச்சுக்கூட பார்த்ததில்லை. பத்து வயசு வரைக்கும் சாதாரண குழந்தைகள் போலத்தான் இருந்தேன். ஓட்டம் ஆட்டம்னு வாழ்க்கை இயல்பாகத்தான் போய்க்கிட்டிருந்துச்சு. பத்தாவது வயசுலதான், என்னால மாடிப்படிகளில் சரியா ஏறமுடியவில்லைங்கிறதை கவனிச்சேன்“ என்று பேச ஆரம்பிக்கிறார் வானவன் மாதேவி. மஸ்குலர் டிஸ்ட்ரோபி என்ற தசைச்சுருக்கு நோயால் பாதிக்கப்பட்டவர் இவர். இவரது சகோதரி இயல் இசை வல்லபிக்கும் இதே நோய். ஆனால், இருவரும் தம்…

  • மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் நிப்மெட்

    மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக, மத்திய அரசால், சென்னை அருகில்  முட்டுக்காடில் நடத்தப்பட்டு வரும் தேசிய நிறுவனம்தான், ஒன்றுக்கும் மேற்பட்ட குறைபாடுடையோரின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனம். அது ’National Institute for Empowerment of Persons with Multiple Disabilities’ (NIEPMD). மாற்றுத் திறனாளிகளின் நலனுக்கென அரசு சார்பாகவும், அரசு சாராத தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வாயிலாகவும் பல்வேறு நிகழ்ச்சிகளை நமது அரசு நடத்தி வந்தபோதும், ஒன்றுக்கும் மேற்பட்ட குறைபாடுடையோரின் நலனுக்காகவும் அரசு ஏதேனும் செய்யவேண்டும் என்று தொடர்ந்து…

  • முடிவெட்டிக்கொள்ளுதல் யாவருக்கும் எளிதல்ல

      பொதுவாக குழந்தைகளுக்கு முடிவெட்டுவதென்பது சிரமம். அதிலும் சென்ஸரி பிரச்சனைகளின் ஊடாக வாழும் ஆட்டிச நிலையாளர்களின் கதையைச்சொல்ல வேண்டாம். எங்கள் பகுதியில் எல்லா சலூன் கடைகளிலும் என்னையையும் கனியையும் பார்த்தால், அலறிவிடுவார்கள். அம்புட்டு அலப்பறை கொடுத்திருக்கிறான் பையன். சரி சாதாரண சலூன் கடைகள் தான் பிரச்சனை; கொஞ்சம் உயர்தரத்தில் இருக்கும் பியூட்டிபார்லருடன் இணைந்த சலூன் அழைத்துப்போகலாம் என்று போனால் அங்கேயும் அதே கதைதான். ஒரு பியூட்டி சலூன் விடாமல் எல்லாவற்றியும் அடுத்த தடவை போக முடியாமல் போயிற்று.…

  • உள்ளம் கவர் கோமாளி – வேலு சரவணன்

      “………………………….” பள்ளியின் பிரார்த்தனை மைதானம் மாணவர்களால் நிரம்பி வழிகிறது. வழக்கமாக மாணவர்கள் கூடுமிடத்தில் இருக்கும் சிறு சத்தம்கூட அங்கே இல்லை. எல்லோரும் எதையோ எதிர்பார்த்தபடி அமர்ந்திருக்கிறார்கள். மாணவர்களின் பின் வரிசையில் ஆசிரியர்கள் டேபிள் போட்டு அமர்ந்திருக்கிறார்கள். தூணில் மறைந்திருந்த கோமாளி ஒருவர், பலத்த ’ஹோய்’ ஓசையுடன் மாணவர்களின் மத்தியில் குதித்து வருகிறார். உடனடியாக ஆயிரம் வாட்ஸ் பாய்ந்த உற்சாகத்தில் மாணவர்கள் பதிலுக்கு எழுப்பும் குரல் விண்ணைத் தொடுகிறது. இத்தனை நேர நிசப்தம் இந்த ஆரவாரத்திற்கான முன்…

  • துலக்கம் – விமர்சனங்கள்

    நள்ளிரவு 12 மணிக்கு ஆரம்பித்து பரபரவென படித்து முடிக்கும்போது மணி 1.20. சமீபத்தில் எந்த ஒரு புத்தகத்தையும் கீழே வைக்காமல் ஒரே மூச்சில் படித்து முடித்ததாய் நினைவில்லை. பக்கங்கள் குறைவுதான் என்றாலும் தொடர்ச்சியாக வாசிக்க வைக்க சுவாரச்சியம் , எழுத்துநடை இல்லாவிட்டால் நிச்சயமாக முடியாது. முதல் அத்தியாத்தில் க்ரைம் நாவல் போல் தொடங்கும் பரபரப்பு , பின் பதைபதைப்பாகி , கல்யாண் கமலாவோடு கலங்கி நின்று , கடைசியில் அஸ்வின் திரும்ப கிடைத்தும் ஆசுவாசம் அடைகிறோம். கதை…

  • துலக்கம் – விமர்சனங்கள்

    துலக்கம் அமெரிக்காவில் ஒரு சிறுவனை திடீரென்று காணவில்லை. பெற்றோர் பதறிப்போய் தேடுகிறார்கள். சிறுவனுக்கு ‘ஆட்டிசம்’ பிரச்சினை வேறு உண்டு. மூன்று நாட்கள் கழித்து, அவர்கள் இருந்த ஊரிலிருந்து அறுபது கிலோ மீட்டர் தள்ளி வேறொரு ஊரில் அவனை கண்டுபிடித்தார்கள். அந்த மூன்று நாட்களும் பெற்றோர் பட்ட பாடு சொல்லி மாளாது. சாதாரண நிலையில் இருக்கும் குழந்தைகள் காணோம் என்றாலே கண்டுபிடிப்பது கடினம். இவனோ ஆட்டிச பாதிப்பில் இருப்பவன். ஆட்டிசம் பற்றிய புரிதல் இல்லாதவர்களைப் பொறுத்தவரை அவன் மனநிலை…

  • ஆட்டிசம் என்னும் ஞான நிலை – மதுமிதா

    அனைவருக்கும் இனிய அன்பான மாலை வணக்கம். குழந்தைகள் திரைப்படமோ, குழந்தைகளைக் குறித்த கதையோ அல்லது கவிதையோ எப்போதும் நம் மனதை உடனே லகுவாக்கும் வித்தையை தனக்குள் வைத்திருக்கும். நாமும் குழந்தையோடு குழந்தையாகி மகிழும் வாய்ப்பை அந்த நேரங்களிலாவது பெற்றுக் கொள்வோம். ஒரு பயணம், அது பேருந்து பயணமோ அல்லது இரயில் பயணமோ, தொடர் பயணத்தின் வறட்சியான ஒரு பொழுதை ஏதோ ஒரு குழந்தையின் புன்சிரிப்பு சட்டென வசந்தமான மனநிலைக்கு மாற்றிவிடும். ஏதோ ஒரு பயணத்தில், ஏதோ ஒரு…

  • ஏப்ரல் 5, 2014. சனிக்கிழமை – ஒன்றுகூடல்

    ஏப்ரல் 2, 2014 அன்று ஆட்டிச விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப் படுகிறது. அதை முன்னிட்டு ஏப்ரல் 5, சனி அன்று சென்னையில் ஆட்டிச நிலையாளர்களின் பெற்றோரது ஒன்றுகூடல் ஒன்றை ஒருங்கிணைக்க இருக்கிறோம். இந்த ஒன்றுகூடலின் முடிவில் பெற்றோர்கள் இணைந்து இயங்க ஒர் கூட்டமைப்பை தொடங்க எண்ணியுள்ளோம். ஒத்த மனமுள்ள பெற்றோர்கள் ஒன்று சேர்ந்து தங்களை பலப்படுத்திக் கொள்ளவும், பொதுவான தேவைகளை முன்னிட்டு போராடவும் உதவும் ஒரு அமைப்பாக அது விளங்கும். நாள்: ஏப்ரல் 5, 2014. சனிக்கிழமை…