Author: admin

  • ஆட்டிச நிலையாளர்களின் பெற்றோர் ஒன்றுகூடல்

        நண்பர்களே.. முன்னர் கூறியிருந்தபடி, // ஒரே மாதிரி தோன்றினாலும் ஒவ்வொரு ஆட்டிச நிலையாளார்களும் ஒவ்வொரு விதம். அவர்தம் பெற்றோருக்கு ஏற்படும் அனுபவங்களும் விதவிதமானவை. ஆனாலும்.. ஆட்டிச நிலையிலிருக்கும் நான்கு வயதுடைய ஒரு குழந்தையை வைத்திருக்கும் பெற்றோருக்கு, பதினெட்டு வயதுடைய இளைஞனை பராமரிக்கும் பெற்றோருடைய அனுபவம் பெரியதாக உதவா விட்டாலும் கூட ஒருவேளை பயன்படலாம். ஆனால் அவர்கள் பகிரத் தயாராக இருக்கவேண்டும் என்பதுதான் இங்கே விஷயம். கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு சந்தர்ப்பங்களில் சந்தித்த பல…

  • பாலா ஹாப்பி அண்ணாச்சி..

    ஒரே மாதிரி தோன்றினாலும் ஒவ்வொரு ஆட்டிச நிலையாளார்களும் ஒவ்வொரு விதம். அவர்தம் பெற்றோருக்கு ஏற்படும் அனுபவங்களும் விதவிதமானவை. ஆனாலும்.. ஆட்டிச நிலையிலிருக்கும் நான்கு வயதுடைய ஒரு குழந்தையை வைத்திருக்கும் பெற்றோருக்கு, பதினெட்டு வயதுடைய இளைஞனை பராமரிக்கும் பெற்றோருடைய அனுபவம் பெரியதாக உதவா விட்டாலும் கூட ஒருவேளை பயன்படலாம். ஆனால் அவர்கள் பகிரத் தயாராக இருக்கவேண்டும் என்பதுதான் இங்கே விஷயம். கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு சந்தர்ப்பங்களில் சந்தித்த பல பெற்றோரிடமும் சலிக்காமல் இந்த என் எண்ணத்தை வெளிப்படுத்தி…

  • உதவி தேவை:- எழுத்தாளர் ரமேஷ் பிரேதன்

      நண்பர்களே, எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் இன்று மாலை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். ஒருபக்கம் உடல் செயலிழந்துள்ளதாகவும் புதுவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதலுதவி செய்யப்படுவதாகவும் கவிஞர் மனோமோகன் தெரிவித்தார். மேல்சிகிட்சைக்காக சென்னைக்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார். புது எழுத்து ரூ.2,000/-ஐ அனுப்பி உதவியைத் துவக்கியிருக்கிறது. தனியரான ரமேஷிற்கு இந்த சந்தர்பத்தில் அனைவரும் முன் வந்து உதவ வேண்டும் எனவும் வேண்டிக் கொள்கிறது. மேலும் புது எழுத்து வெளியீடான ரமேஷின் பெருந்தொகைக் கவிதை நூலின் விற்பனைத்…

  • வாசிப்பனுபவம் – கரும்புனல்

    உங்கள் வாழ்க்கையை கொஞ்சம் திரும்பிப் பாருங்கள். கடந்த வந்த பாதையில் குறைந்த பட்சம் ஒரு நாவலுக்கான விசயமிருக்கும். அதை நாம்மில் பலரும் கவனிக்காது தவறவிட்டு விடுகிறோம். கவனமாக நினைவுகூர்ந்தால், சம்பவங்களைக் கோர்த்து, அழகான கதைச்சரடை உருவாக்கிட முடியும் என்று அனேக நண்பர்களிடம் நான் சொல்லி இருக்கிறேன்/ சொல்லியும் வருகிறேன்.  அப்படி, தான் கடந்து வந்த அனுபவத்தை அழகாக தொகுத்து, கரும்புனல் நாவலாக கொடுத்துள்ளார் ராம்சுரேஷ். சம்பல் கொள்ளையர்கள், தண்டகாரண்ய மாவோயிஸ்ட்டுகள் என எங்கே மக்களிடம் வன்முறை அதிகரித்தாலும்…

  • வாசிப்பனுபவம் – வாத்து ராஜா

    வாத்து ராஜா மடமன்னன் ஒருவனுக்கு மக்கள் வைத்துள்ள பெயர் தான் வாத்து ராஜா. அது அம்மன்னனுக்கும் தெரியவர.. நாட்டில் உள்ள எல்லா வாத்துக்களையும் கொல்ல உத்தரவிடுகிறான். வாத்துக்களும் கொல்லப்படுகின்றன. சுந்தரி என்ற சிறுமி தன்னிடமுள்ள வாத்துகளை காப்பாற்றிக்கொள்ள என்னென்ன முயற்சிகள் மேற்கொள்கிறாள் என்பது கதை. ஆனால் இது நேரடி கதையாக இல்லாமல் அமுதா என்ற சிறுமிக்கு அவள் பாட்டி சொல்லும் கதையாக விரிகிறது. கதைக்குள் கதை. ஒரு இடத்தில் பாட்டி கதையை முடிக்காமல்.. வேறு ஊருக்கு சென்று…

  • வாசிப்பனுபவம்- உச்சி முகர்

    விழியனின் உச்சிமுகர் நூல் குறித்து எனது எண்ணங்களைச்சொல்லும் முன் கொஞ்சம் கொசுவர்த்தி சுற்றுகிறேன். அதையும்  படித்துவிடுங்கள். சம்பவம் :- 1 என் சிறுவயதில் நடந்த சம்பவம் இது. அனேகமாக ஆறாம்வகுப்பு படிக்கும் போது என்று நினைக்கிறேன். படித்தது தமிழ்வழிக்கல்வி என்பதால்.. ஆங்கிலப்பாடங்கள் ஆறாவதில் தான் துவங்கின. அதுவரை ஏ, பி, சி, டி என இருபத்தியாறு எழுத்துகள் மட்டுமே தெரிந்திருந்தது. வகுப்பு தொடங்கிய சில நாட்களில் ஒன், ட்டூ, த்ரி என்று எண்களில்  ஆரம்பித்திருந்தார்கள். அப்போது பதினைந்து…

  • ஆசானுடன் படம் எடுத்துக்கொண்டேன்

    தொன்னூறுகளின் தொடக்கத்தில் அறிவொளி இயக்கம் எங்கள் பகுதிகளில் மிகவும் பிரபலமாக இருந்தது. அப்போது நானும் அதில் தன்னார்வலனாக அதில் இணைந்து செயலாற்றினேன். அப்படியே, அதில் நடிக்கும் வீதி நாடகக்கலைஞர்களைக் கண்டு, நானும் அவர்களோடு இணைந்து பணியாற்ற விரும்பியபோது, ராமநாதபுரத்தில் மாவட்ட அளவிலான நாடக பயிற்சி முகாம் மாவட்ட அறிவொளியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், கலந்துகொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் நானும் ஒருவன். பத்து நாட்கள் திட்டமிட்டிருந்த முகாமில் என்னால் நான்கு நாட்கள் மட்டுமே கலந்துகொள்ள முடிந்தது. எங்களுக்கு பயிற்றுவிற்பவராக இருந்தவர்களில்…

  • வெல்கம் 2014!

    முந்தைய ஆண்டுகளைப்போலவே இந்த ஆண்டும் நிறைய அனுபவப் பாடங்களையும், சில நல்ல நட்புகளையும் அடையாளம் காட்டியுள்ளது. என்னால் ஆனா காரியங்கள் என இதுவரை இயன்றதை இச்சமூகத்திற்கு செய்தி வந்திருந்தேன். ஆனால் கடந்த ஆண்டில் இருந்து ஆட்டிசம் விழிப்புணர்வுக்குத்தான் முதலிடம் என்று முடிவெடுத்து செயலில் இறங்கினேன். கனிக்கு என் அருகாமை தேவை என்பதால், அலுவலகம் விட்டதும் வேறு எந்த கூட்டங்களுக்கும் செல்லமுடியாமல், வீட்டுக்கு ஓடிவந்து கொண்டிருக்கிறேன். இனியும் சில ஆண்டுகள் இப்படித்தான் போகுமென நினைக்கிறேன். நூல்வெளியீடு, இலக்கியக்கூட்டம் என…

  • 21. ஆட்டிசம்- சில புரிதல்கள் – ஓர் ஆவணப்படம் (திரைக்கு அப்பால்)

    ஆட்டிசம் பற்றி என் அனுபவப் பயணத்தினைக்கொண்டு, ஒரு விழிப்புணர்வு ஆவணப்படம் எடுக்கலாம் என அதற்கான வேலைகளைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது, அண்ணன் கார்மல் மூலம் விபரம் அறிந்த திரு. கைலாசம் சார் அழைத்தார். (அப்போது சானலின் ஹெட்-ஆக இருந்தார்) தனியா பண்ணப்போறியா..? ஆமாசார் பேசாம சானலுக்கு பண்ணிடேன். நிறைய பேருக்கு போய்ச்சேரும். நான் மவுனமாக நின்றிருந்தேன். இதன் மூலம் விருதுகிருதுன்னு ஏதுனா யோசிக்கிறியா? இல்லசார். விழிப்புணர்வும், பெத்தவங்களுக்கு ஒரு நம்பிக்கையும் கொடுக்கனும்னு தான் யோசிச்சிருக்கிறேன். அப்ப சானலுக்கே பண்ணு..…

  • 20. ஆட்டிசம் – நம்பிக்கை தரும் மனிதர்கள்- 5

    இது பிரவீன் கதை பிரவீனுக்கு ஏதோ பிரச்சனை என்று கண்டுகொண்டபோது பதினோரு மாதங்கள் மட்டுமே ஆகியிருந்தது. டெவலப்மெண்ட் டிலே, முளைவளர்ச்சிக்குறைபாடு அல்லது காது கேட்பதில்லை என்பதாக மருத்துவர்கள் ஆளுக்கொரு காரணங்களைச்  சொல்லிக்கொண்டிருந்தார்கள். சமூக சேவகரான அந்த தகப்பனும், ஆசிரியையான அந்த தாயும் தங்கள் பணிகள் போக மற்ற நேரத்தில் விடாமல் ஊர் ஊறாகச்சுற்றி ஒவ்வொரு மருத்துவரிடமும் குழந்தை பிரவீனை காட்டிக்கொண்டிருந்தார்கள். அக்குழந்தை நான்குவயதை நெருங்கும் போது, ஆட்டிசம் பாதிப்பு தான் இருக்கவேண்டும் என்று உறுதிபட, சேலம் அரசு…