Author: admin

  • சிறார் இலக்கியத்திருவிழா -2023

    பள்ளிக்கல்வித்துறையின் ஏற்பாட்டில் சிறார் இலக்கியத்திருவிழா-2023 நடந்துவருகிறது. மாநிலம் முழுவதிலும் இருந்து 150 மாணவ மாணவியரை சென்னைக்கு அழைத்து வந்து, ஆறு நாட்கள் தங்க வைத்து, சென்னையைச் சுற்றிக் காட்டி, எழுதுவதற்கும் உரைவீச்சு நிகழ்த்தவும் பயிற்சிப்பட்டறை நடத்தப்பெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று மாணவர்களிடையே உரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. எனது உரையினூடாக உருவக்கேலி, குறைபாட்டை வைத்து கேலி செய்வது போன்ற செயல்கள் கூடாது என்று கூறினேன். அத்தோடு மாற்றுத்திறனாளிகளுக்கும் இந்த சமூகத்தில் வாழும் சகல உரிமைகளும்…

  • பிறர் ஏற்படுத்தும் காயங்களின் வலி!

    நூல்: கையறுநதிஆசிரியர்: வறீதையா கான்ஸ்தந்தின் வெளியீடு : கடல்வெளி பதிப்பகம், தொடர்புக்கு: 24332924 விலை : ரூ 220/- கையறுநதி: நாவல் மொழியில் எழுதப்பட்டிருக்கும் ஒரு தந்தையின் தன் வரலாற்று பக்கங்கள் எப்போதும் படிப்பது போல இந்த நூலையும் என்னால் ஒரே மூச்சில் படித்துமுடித்து முடியவில்லை. சில இடங்களில் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளானேன். சில அத்தியாயங்களில் என் கண்கள் கலங்கி, எழுத்துகள் மறைந்தன. மனத்திற்கு சற்று ஓய்வு தேவைப்பட்டது. நூலை மூடிவைத்தேன். ரத்தக்கொதிப்பு உயர்வதை உணரமுடிந்தது.…

  • பிறந்தநாள் வாழ்த்துகள் தோழர்

    எனது முதல்நாவலான ’அவன் -அது +அவள்’ நாவலை வெளியிட முதலில் அணுகியது வயதில் முதிர்ந்த அந்த தலைவரைத்தான். அவருக்கு என்னை நேரடியாகத் தெரியாது என்றபோதும் நிகழ்வுக்கு வர ஒப்புக்கொண்டார். நான் அழைத்தபோது நாவல் அச்சகத்தில் இருந்தது. நூல் கையில் கிடைத்ததும் அதை எடுத்துக்கொண்டு அந்த தலைவரைப் பார்த்து கொடுத்துவிட்டு, நிகழ்வுத்தேதியை நினைவுபடுத்திவிட்டு வந்தேன். ரெண்டாவது நாள் அவரிடம் இருந்து அழைப்பு. நேரில் சென்று பார்த்தேன். நாவலைப்பற்றி பாராட்டிவிட்டு, தன்னால் நிகழ்வில் கலந்துகொள்ள இயலாது என்று வருத்தத்துடன் சொன்னார்.…

  • மன நிறைவு கொடுத்த ஈரோடு பயணம்

    ஓர் உரையாடல் என்னென்ன மாற்றங்களைச் செய்யும் என்பதை அறிந்தவன் நான். என்னுள் ஏற்பட்ட பல மாற்றங்களும் உரையாடல் வழியே நிகழ்ந்தவைதான். உரையாடல்களின் பலம் அறிந்ததால் தான் சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர் கலந்துரையாடல் அவசியம் என்று முடிவுசெய்து கொண்டேன். இதன் பொருட்டே, 2014ஆம் ஆண்டில் ஆட்டிச நிலைக்குழந்தைகளில் முதல் பெற்றோர் ஒன்றுகூடலுக்கு ஏற்பாடு செய்தேன். மிகச்சிறப்பாக நடந்த அந்த கூட்டத்தில் குழந்தைகளை கவனித்துக்கொள்ள, எங்கள் பண்புடன் இணைய இலக்கியக்குழுமத்தில் இருந்து பல தம்பிகள் தன்னார்வலர்களாக வந்திருந்தனர். அவர்களிடம் குழந்தைகளை…

  • ஆட்டிச நிலையாளர்களும் மனிதர்கள் தான்!

    நேற்று மாலை ஒர் ஆட்டிசக்குழந்தையின் தாயார் போன் செய்திருந்தார். அவருடைய 17வயது மகனுடன் ஒரு ஷாப்பிங் மால் போய் இருக்கிறார். வாகனம் நிறுத்துமிடத்தில் தனது காரை பார்க்கிங் செய்துவிட்டு, பையனுடன் வெளியில் வந்துகொண்டிருக்கும் போது, ரிவர்ஸ் எடுத்த ஒரு காரில் இருந்த ஹார்ன் சத்தம் இவனை தொந்தரவு செய்துவிட்டது. சில அடிகள் தூரம் நடந்து, மாலின் வாசலில் நுழையும் இடத்தில், திடீரென உணர்ச்சிப்பெருக்குக்கு ஆட்பட்டவன் விழுந்து புரண்டபடி சத்தம் எழுப்பத்தொடங்கி உள்ளான். இவரால் அவனை சமாளிக்க முடியவில்லை.…

  • புரிந்துகொள்ளுங்கள் மக்களே!

    நம்மில் பலரும் உடலியக்கம் அளவில் மகிழ்ச்சியான வாழ்வே வாழ்கின்றோம். அதனால் தான் பிறர் வலியை உணர்வதே இல்லை. ஆம்! மாற்றுத்திறனாளிகள் என்ற சமூகத்தில் வலியும் கனவுகளைப் பற்றியும் அறியாதவர்களாகவும் அதுபற்றிய பிரக்ஞை கூட இல்லாதவர்களாகவுமே உள்ளோம். பல இடங்களிலும் எல்லோரையும் உள்ளடக்கிய சூழல் உருவாக வேண்டும் என்பதைப் போலவே சில இடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்குத் தனிப்பட்ட சில வசதிகளும் தேவை என்பதை உணர்வோம். ரயில் நிலையம் தொடங்கி, மருத்துவமனை, விமானநிலையம் என எல்லா இடங்களிலும் தளம் வழுவழுப்பாக…

  • நாற்றங்காலை வலுப்படுத்துவோம்!

    நாற்றங்காலை வலுப்படுத்துவோம்! -யெஸ்.பாலபாரதி தமிழ் இலக்கிய உலகில் பல குழுக்கள் உண்டு. ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு தலைவர், ஆசான் எல்லாமும் உண்டு.  அவர்களில் பலரும் ஒரே குரலில் சொல்லுவது, ’தமிழனுக்கு இலக்கியம் படிக்கிற வழக்கமே இல்லை. தமிழ்நாட்டில் இலக்கிய புத்தகமே விற்க முடியாது. அல்லது இலக்கிய புத்தகங்கள் விற்பனையே ஆக மாட்டேங்குது. எங்கள மதிக்கவே மாட்டேங்கிறாங்க’ இப்படியான குரல்களை உங்களில் பலரும் கேட்டிருக்கலாம். உண்மையில் எனக்கு இக்குரல்களைக் கேட்கும்போதெல்லாம் சிரிப்புதான் எழும். ஒரு குழந்தைக்கு கல்வியை சொல்லிக்…

  • மரப்பாச்சி சொன்ன ரகசியம் [சிறார் நாவல் -13]

    அம்மா, அப்பா, சித்தி, சித்தப்பா என எல்லோரும் சமாதானம் சொல்லிப் பார்த்துவிட்டனர். ஆனால் ஷாலுவால் மரப்பாச்சி கை நழுவிப் போனதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தங்கும் விடுதிக்கு வந்த பின்னும் அழுது அழுது முகமெல்லாம் வீங்கி இருந்தது. யாரோடும் பேசாமல் கட்டிலின் ஓரத்தில் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள். “இதோ பார் ஷாலு… இப்படியே மூஞ்சியைத் தூக்கி வச்சுகிட்டு உட்கார்றதுல எந்த அர்த்தமும் இல்லை. அப்பா வேணும்னா… வேற மரப்பாச்சி வாங்கித்தாரேன்” என்றார். இவள் எதுவும் பேசவில்லை. “அவகிட்ட என்ன கெஞ்சிகிட்டு…

  • மரப்பாச்சி சொன்ன ரகசியம் [சிறார் நாவல் -12]

    காரில் இருந்து இறங்கியதும் சுற்றிலும் பார்த்தாள் ஷாலு. அந்த இடம் மலையில் இருந்தாலும் சமதளமாக இருந்தது. மைதானம் போன்ற அந்த இடத்தின் முடிவில் மலையின் சரிவு தொடங்கியது. அதனால் அங்கே சில மைல்கல் நட்டு, மஞ்சள் வண்ணம் பூசி இருந்தனர். அங்கே இவர்களைப்போலவே பாராகிளைடிங்கில் பறக்க பத்துக்கும் மேற்பட்டவர்கள் நின்றிருந்தனர். அவர்களின் குடும்பத்தினர் தங்கள் வந்த கார்களை ஒட்டி நின்று கொண்டிருந்தனர். பாராகிளைடிங் பயிற்சியாளரிடம் சென்று செல்வம் பேசிவிட்டு வந்தார். அம்மாவும் சித்தியும் பறக்க மறுத்து விட்டனர்.…

  • மரப்பாச்சி சொன்ன ரகசியம் [சிறார் நாவல் -11]

    மறுநாள். பொழுது புலர்ந்து சூரியன் சோம்பல் முறிக்கும் முன் பெரியவர்கள் எல்லோரும் தயாராகிவிட்டார்கள். ஷாலு, ஹரி, சூர்யா மூவரையும் தூக்கத்திலேயே காரில் ஏற்றி விட்டனர். செல்வம்தான் காரை ஓட்டினார். நகரைக் கடந்து கார் நெடுஞ்சாலையில் ஓடத்தொடங்கியது. ஹெட்லைட் போட்டுக்கொண்டு அந்த நெடுஞ்சாலையில் வாகனங்கள் சீறிப் பாய்ந்துகொண்டிருந்தன. சாலைக்கு அந்தப்பக்கம் வரும் வாகனங்களின் ஹெட்லைட் வெளிச்சம் கண்ணைப் பறித்தது. நடுவே வைக்கப்பட்டிருந்த செடிகளினால் முழு விளக்கொளியும் அப்படியே நேராக விழவில்லை என்பது சற்று ஆறுதல். வேலூரைத் தாண்டி, ஆம்பூர்…