Author: admin

  • ராமுவும் சோமுவும் -2

    (குழந்தைகளுக்கான கதை) சோமுவின் தாத்தாவை வீட்டுக்குள் சேர்ப்பதில்லை. திண்ணையில் தான் அவருக்கு வாசம். மண் சட்டியில் தான் அவருக்கு சோறுபோடுவார்கள். ஒரு நாள் சோமுவின் தாத்தா இறந்து போனார். காரியங்கள் முடிந்த பிறகு, காலியாக இருந்த ஒரு திண்ணையில் சோகமாய் அமந்திருந்தான் சோமு. மறுதிண்ணையில் அவன் அப்பா பேப்பர் படித்துக்கொண்டிருந்தார். அவனைப் பார்க்க வந்தான் ராமு. ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தவன் தாத்தாவின் சோற்றுச்சட்டி கண்ணில் பட்டது. அதை எடுத்து சோமுவின் கையில் கொடுத்தான். சட்டியை கையில் வாங்கிய சோமு…

  • முனிவரும் தேளும்

    (குழந்தைகளுக்கான கதை) நீரில் விழுந்து தத்தளித்துக்கொண்டிருந்த தேள் ஒன்றை வெளியில் எடுத்துப் போட்ட முயன்றுகொண்டிருந்தார் முனிவர் ஒருவர். இந்த காட்சியை அந்தப் பக்கம் வந்த சோமு நின்று வேடிக்கை பார்த்தான். நீரில் கையை விட்டு, முனிவர் தேளை தூக்கியதும் அது கையில் கொட்டி விட்டது, ஆ என்று கையை அவர் உதற, தேள் மீண்டும் நீரில் விழுந்தது. சில வினாடிகள் கழித்து, மீண்டும் முனிவர் நீரில் தத்தளித்த தேளை தூக்கிவிடப்பார்த்தார். ஆனால் தேளோ மீண்டும் அவர் கையில்…

  • ராமுவும் சோமுவும்

    ( பேயோன் , அருண்நரசிம்மன் ஆகியோரின் தூண்டலில் குழந்தைகளுக்கான கதை) ராமுவும் சோமுவும் உயிர் நண்பர்கள். ஒருநாள் இருவரும் காட்டு வாக்கில் நடந்துகொண்டிருந்தனர். அப்போது ஒரு பயங்கரக் கரடி எதிரில் வந்தது. இருவரும் பயந்து ஓடத் தொடங்கினர். கரடி அவர்களை விடாமல் துரத்தியது. ராமு நண்பனை விட்டு ஒரு மரத்தின் மேல் ஏறித் தப்பித்தான். சோமுவுக்கு மரம் ஏறத் தெரியாது. அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. காட்டாந்தரையில் படுத்துக்கொண்டு இறந்தது போல் நடித்தான். கரடி அவனை கவனிக்காமல், மரத்தை நிமிர்ந்து…

  • பக்கத்து வீட்டு ரவுசு – பாகம் 2

    படித்தால் மட்டும் போதுமா-ன்னு ஒரு பழைய படம் நீங்கள் பார்த்திருக்கலாம். கண்ணதாசன் வரிகளுக்கு PB ஸ்ரீநிவாஸும், TM சௌந்தர்ராஜனும் உயிர் கொடுத்திருப்பார்கள். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை. அந்த பாடலுக்கு படத்தில் பாலாஜியும், சிவாஜியும் நடித்திருப்பார்கள். நீச்சல் குளத்துக்குள்ளிருந்து.. பாடுவது போல படமாக்கி இருப்பார்கள். சில நாட்களுக்கு முன் காலை அப்பாடல் மெகா டிவியில் ஒளிபரப்பானது. “பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை என்னென்று நான் சொல்லலாகுமா என்னென்று நான் சொல்லவேண்டுமா பூ ஒன்று கண்டேன் முகம்…

  • தெரிந்ததும்.. தெரியாததும்- தாராவி

    தாராவி குடிசைப்பகுதியா? மும்பையில் இருந்த சமயங்களில் என்னை அதிகம் கவர்ந்த பகுதிகளில் தாராவியும் ஒன்று. எங்கு பார்த்தாலும் தமிழில் சாயல் முகங்கள்.. வேட்டி, சேலைகளில் மனிதர்கள், மனுசிகள்.., சத்தமாக தேனீர்கடையில் கேட்கும் தமிழ் பாடல்கள், தமிழில் பெரிய பெரிய விளம்பரப் பலகைகள்.. என்று எங்கு பார்த்தாலும் தமிழ்நாட்டின் ஏதோவோரு நகரத்தை.. பார்ப்பவரின் பார்வைக்கேற்ப காட்டும் பகுதி தாராவி. தமிழ்நாட்டுக்கே வந்து விட்ட உணர்வை அது தோற்றுவிக்கும். அப்படிப்பட்ட தாராவி குறித்து… “ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதி; இரண்டாம்…

  • தெரிந்ததும்.. தெரியாததும்- பீடி தொழில்

    என் சிறு வயதில் எங்க ஊரில் ஓர் அப்பத்தா பீடி புகைத்து பார்த்திருக்கிறேன். ஆரம்பகாலத்தில் தாத்தாவோடு சேர்ந்து சுருட்டு புகைத்தாராம். அவரின் மறைவுக்குப் பின் பீடிக்கு மாறியவர் அப்பத்தா! குறைந்தது ஒரு நாளைக்கு எட்டு முதல் பத்து பிடிகள் வரை புகைப்பார். ஆனாலும் அவருக்கு சளி கட்டியோ, இருமல் இருந்த மாதிரியோ நினைவில் இல்லை. ராமேசுரத்திற்கு சுற்றுலா வரும் உ.பி மற்றும் ராஜஸ்தான் மாநில விவசாய மக்கள் பலரும் ஆண்,பெண் பாகுபாடில்லாமல் புகைத்து மகிழ்வதை பார்த்திருக்கிறேன். இன்றைய இந்தியாவில்…

  • வாங்க பழகலாம்..

    சின்ன வயசில் நான் மிகவும் வியப்பாக பார்த்த மனிதர் என்றால் அது நாகராசன் என்ற அண்ணன் தான். அவர் ஒரு சவ்வு மிட்டாய் வியாபாரி. தோளில் பெரிய மூங்கிலை சாய்த்து வைத்திருப்பார். அந்த கழியின் மேல பாவாடைச் சட்டை அணிந்து, கையில் சலங்கை மாட்டி இருக்கும் பெண் பொம்மை பார்க்க அழகாக இருக்கும். கண் எழுதி, உதட்டுக்கு சாயமிட்டு, தலைவாரி, காதுகளில் கம்மல் மாட்டிக்கொண்டு இருக்கும் பொம்மை அது. மூங்கிலில் உள்ளே இருந்து வரும் கயிறு ஒன்றில்…

  • என்னைப் போல் ஒருவன் (The King’s Speech)

    திக்குவாயன் பாலா.. இப்படித்தான் படிக்கும் காலங்களில் அழைக்கப்பட்டேன். ஒரு வயதுக்குள்ளாகவே பேச்சு வந்த குழந்தைகளில் நானும் ஒருவனாக இருந்திருக்கிறேன். ஒன்னரை வயது நடந்து கொண்டிருந்த போது, வீட்டில் இருந்த சைக்கிள் தலையில் விழுந்து, பலத்த அடிபட்டுவிட்டது. பதிநான்கு தையல் போட்டு விட்டு, இனி பையன் பேசவே மாட்டான் என்று சொல்லி விட்டார்கள் மருத்துவர்கள். எட்டு  மாதங்கள் எதுவும் பேசாமல் மௌனியாகவே வீட்டுக்குள் அலைந்திருக்கிறேன். என் தேவைகளைக்கூட சைகையின் மூலமே தெரியபடுத்தி வந்திருக்கிறேன். அப்புறம் ஒரு நாள் கொஞ்சம்…

  • ஆட்டிசம் – சரியும் தவறும்

    ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸாடர் என்பதை தமிழில் மதியிறுக்கம் என்றும் மனயிறுக்கம் என்று சொல்கிறார்கள். வேறு சிலரோ ‘தன்முனைப்பு குறைபாடு’ என்று சொல்லுகிறார்கள். எனக்கும் தன்முனைப்பு குறைபாடு என்பது தான் சரியான சொல்லாகப்படுகிறது. பொதுவாக ஆட்டிசம் குறைபாடுகளை இப்படியானது என்று வரையறுக்க முடியாது. அதே சமயம், இக்குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் இருக்கும். இவர்களில் அனேகரும் ஒரு குடையின் கீழ் கொண்டுவரக்கூடிய பிரச்சனை என்றால் அது, ’சென்ஸரி பிரச்சனைகள்’ தான். இப்பாதிப்புக்குள்ளானவர்களை சமன் நிலைக்குக்…

  • ஆட்டிசம் – உட் பிரிவுகள்

    கடந்த பகுதியின் இறுதியில் ஆட்டிசம் குறித்து நிலவும் தவறாக கருத்துக்களை அடுத்த பகுதியில் பார்ப்போம் என்று சொல்லி இருந்தேன். அதற்கு முன், ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸார்டர் எனும் பெயருக்கடியில் வரும் எல்லா குறைபாடுகளையும் பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை அவசியமாகிறது. அதனால் முதலில் அதைப் பற்றி அறிந்துகொள்வோம்! ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸார்டர் (ASD) எனும் பெரிய குடையின் கீழ் குழந்தைகளில் மூளை வளர்ச்சியில் ஏற்படும் பல்வேறு சிக்கல்கள் தொடர்பான குறைபாடுகள் வகைப்படுத்தப்படுகின்றன. எல்லாவற்றுக்கும் எப்போதும் தனித்தனி பெயர்…