Author: admin

  • கோட்டி முத்து

    நான் படித்த தொடக்கப்பள்ளியின் சத்துணவுக்கூடத்தில் விளிம்பு வெடித்த அந்த அலுமினிய குண்டா இன்றும் அப்படியே இருக்கிறது. அதில் கொட்டப்படும் மீதி சோற்றுக்கென.. மதிய வேளைகளில் நாய்களின் கூட்டமொன்று அலைந்தபடியே இருக்கிறது. ஆனால், அந்த குண்டா யாருக்காக வைக்கப்பட்டதோ அவனை இன்றளவும் எதிர்பார்த்தபடியே தான் இருக்கிறார்கள் பள்ளிக்குழந்தைகளும், ஆசிரியர்களும். எனக்கும் என் நண்பர்கள் சிலருக்கும் மட்டும் தான் அவன் போயே போய் விட்டதின் காரணம் தெரியும். கோட்டி முத்து. இந்த பெயரைச் சொன்னால் என் ஊரில் தெரியாதவரே இல்லை…

  • விடுபட்டவை 17.07.09

    என்னமோ தெரியலை.. என்ன மாயமோ தெரியலை.. நெட்டு பக்கம் வர முடியலை. இணையத்து பக்கம் வரக்கூடாதுன்னு எவனாவது செய்வினை வச்சுட்டான்னு நம்பவும் முடியலை. ஆணி அதிகமாகிப் போனது என்னவோ உண்மை. ரவிசங்கர் மாதிரி பல நண்பர்களுக்கு நிதானமாக மடல் எழுதக்கூட நேரமில்லாமல் இருக்குது. சில நாட்கள் மெயில் பார்க்கவே ரெண்டு நாள் ஆகுவது இன்னும் கொடுமை. 90% எந்திரமாகிவிட்ட எண்ணம் மேலோங்குகிறது. எது பற்றியும் யோசிக்கவே முடியவில்லை. சோம்பேறியான நான் மகா சோம்பேறியா மாறி விட்டதாகவே எண்ணுகிறேன்.…

  • அவள் + வலி = வாழ்க்கை. -à®….வெண்ணிலா

    வலி. வேறுபாடுகளைக் கடந்து மனித இனத்திற்குப் பொதுவான உணர்வாக வலி உணரப்படுகிறது. அன்பு செய்தலும், உணர்வுகளை சுகித்தலும் பொதுவான சந்தோஷங்கள். வலி – பொதுவான துக்கம். வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் எத்தனை விதமான வலிகள்; லௌகீக விஷயங்களின் போதாமை உண்டாக்கும் வலி; உறவுகளின் புறக்கணிப்பின் வலி; ஆணுக்கொரு வலி; பெண்ணுக்கொரு வலி; குழந்தைக்கொன்று; பருவங்களுக்கேற்ப மாறுபடும் வலி; ப்பா… எத்தனை விதமான வலிகள்; ஒவ்வொரு வலியின் துக்கத்துடன் வெறொன்றை எந்தக் கணத்திலும் ஒப்பிட்டுவிட முடியாத அளவுக்கு…

  • தியாகிகளை மறந்துபோன காங்கிரஸ் தலைவர்கள்

    தியாகிகளை மறந்துபோன காங்கிரஸ் தலைவர்கள் கக்கன் பிறந்த நாளில் 10 பேர் மட்டுமே கூடினார்கள் சென்னை, ஜுன்.19- விடுதலை போராட்ட தியாகிகளை காங்கிரஸ் தலைவர்கள் மறந்துவருகின்றனர். தியாகி கக்கன் பிறந்தநாளை கொண்டாட, சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று 10 பேர் மட்டுமே கூடினார்கள். காங்கிரஸ் தியாகிகள் இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி தந்த பெருமை காங்கிரஸ் கட்சியையே சாரும். இதற்காக தியாகிகள் பலர் தங்கள் இன்னுயிர் நீத்தனர். ஆயிரக்கணக்கானோர் சிறைகளில் கடும் இன்னல்களை அனுபவித்தனர். ஆனால், இந்தியா சுதந்திரம்…

  • இன்று பதிவர்களுக்கான விக்கீபிடியா கூட்டம்.. அவசியம் வாங்க!

    வரும் சூன் 13 – இன்று வலைப்பதிவர்கள் விக்கிப்பீடியாவுக்குப் பங்களிக்கலாம் என்று ஒரு அறிமுக கூட்டம் கிழக்கு மொட்டை மாடியில் நடக்கிறது. இதற்கு நீங்கள் வந்தால் நன்றாக இருக்கும். விக்கீபிடியாவுக்கும் மிகவும் உதவியாக இருக்கும். விவரங்களுக்கு – http://tamilwikipedia.blogspot.com/2009/06/blog-post.html நன்றி. — ரவி.. பதிவு போட்டாச்சு! 😉

  • ‘பொன்ஸ்’க்கு கன்னாலம்…

    தோழன் கணபதியுடன் இணைந்து  இன்று இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்கும் யானைத் தோழிக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள். பி.கு: படம் வரைந்து உதவிய நண்பர் கார்ட்டூன் பாலாவுக்கு நன்றி. 🙂

  • விடுபட்டவை 03/ஜூன்/2009

    “பூவுலகு” சுற்றுச்சூழல் இதழ் வெளியீட்டு விழா, நாள்: 13–06–09 மாலை 6 மணிக்கு நடக்கிறது. வாய்ப்பு இருப்பவர்கள் அவசியம் கலந்துகொள்ளவும். இடம்: ரஷ்ய கலாச்சார மையம், 74, கஸ்தூரி ரங்கன் சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை – 600 018 விவசாயிகளின் தற்கொலைக்கான காரணங்களையும், தீர்வுகளையும் தேடும் “I want my father back“ என்ற குறும்படம் திரையிடப்படவிருக்கிறது. —- கலைஞர் கருணாநிதியின் 86வது பிறந்தநாள் இன்று. அறிவாலயம் களைகட்டியது. காலையில் இருந்து பார்த்த சிலவற்றை தருகிறேன். ஆண்டு…

  • பதிவர்கள் கவனத்திற்கு:- வரும் 7ம் தேதி – சென்னையில் பேரணி!!

    Dear Bloggers, Could you please add a gadget about “Rally for Justice” in your blog and kindly help in making this rally a success. Also please ask your friends also to display on their blogs 1.Login to blogger 2.click “Layout” link 3. In the “”Page Elements” tab, click “Add a gadget” link at the right…

  • கருணாநிதி என்ற மனிதர்..

    எப்போதுமே முரண்பாடுகள் இன்றி வாழ்வதென்பது சாத்தியமில்லாத ஒன்று. முரண்பாடுகளின் மூட்டை தான் வாழ்க்கை. தி.மு.கழகத்துடன் எனக்கு சில இடங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும், பல இடங்களில் ஒத்துப்போவது என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது. அதுபோலத்தான்.. அதன் தலைவர் மு.கருணாநிதி மீதும் தி.மு.கழகத்தின் மீதும் பல சமயங்களில் விமர்சனம் வைத்திருக்கிறேன். அதற்காக சில/பல நல்ல காரியங்களைச் செய்யும் போது பாராட்டாமல்  இருக்க, நான் ஒன்றும் ஜெயலலிதா அல்ல! 🙂 எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் நம்மில் பலரும் வாசித்திருப்போம். இன்று…

  • இனி அகதிகள் கதி என்ன?

    தொடர்ந்து சிங்கள அரசும், இந்திய அரசும், ஊடகங்களும் பிடிவாதமாக பிரபாகரனும், புலிகள் இயக்கமும் அழிந்து விட்டதாக சாதிக்க முயல்கின்றன. இடையிடையே வெகு சில ஊடகங்கள் அப்படியொன்றும் நடந்து விடாது என்ற நம்பிக்கையை பற்பல ஊகங்கள் மூலமும், உலாவரும் ஆதாரங்களின் மீதான சந்தேகங்கள் மூலமும் உயிர்ப்பிக்க முனைகின்றன. நிறைய அஞ்சலி கட்டுரைகள் – சில நிஜமான ரத்தக்கண்ணீரோடும், சில உள்ளுக்குள்ளே எழும் நிம்மதி பெருமூச்சை அடக்கிக் கொண்டும் எழுதப்பட்டு இணையமெங்கும் இறைக்கப் பட்ட வண்ணம் இருக்கின்றன. போர் ஓய்ந்து…