Author: admin

  • தமிழினத் துரோகிகள் ஒழிக!

    http://i454.photobucket.com/albums/qq262/chinthaka1250/19052009002.jpg http://www.fileden.com/files/2006/9/17/223855/paraya_id.JPG http://www.youtube.com/watch?v=RED0EjlrVAE வேறு என்ன சொல்ல.. துரோகத்தில் சிறந்த , மானங்கெட்டவர்களின் தலைமையின் கீழும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் அற்ப அடிமைகள் நாம். 🙁 வீரவணக்கம்.. வீர வணக்கம்..

  • பதிவு (மட்டும்) நீக்கப்படுகிறது.. எச்சரிக்கை தொடர்கிறது!

    என்கடந்த பதிவான பெண்பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கை பதிவு நீக்கப்படுகிறது. வலை உலகில் நான் மதிக்கும் பதிவர்களின் ஒருவரான திரு. ஜ்யோவ்ராம் சுந்தர் ஒரு பதிவு போட்டிருந்தார். அவர் பதிவின் மூலமாக அவரைப்போன்றே சிலருக்கும் சங்கடங்கள் ஏற்பட்டிருக்கும் என அறிய முடிகிறது. (அவரும் கூட தொலைபேசியில் பேசி இருக்கலாம்) யாரையும் சங்கடப்படுத்தவோ, தேவையற்ற பீதியைக் கிளப்பவோ எழுதப்பட்ட பதிவு அல்ல அது. ஓர் எச்சரிக்கை மணி அடிக்க விரும்பினேன் அவ்வள்வே!. ”மற்ற பெண் பதிவர்கள் தங்கள் புகைப்படம்,  குடும்ப…

  • தி.மு.க கூட்டணி வெற்றி பெற முடியுமா?

    ஒரு பொது அறிவு தகவல்:- இந்த தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் போட்டிருக்கும் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா? 1200 கோடி ரூபாய். ——– கொஞ்சமல்ல.. நிறையவே பயந்து போய் இருக்கிறது தி.மு.க! தேர்தல் தோல்வி பயம் அளவுக்கு அதிகமாக வாட்டிஎடுக்கிறது அங்கிருப்போரை. அதனாலேயே.. அதிகாரத்தின் வாயிலாக வெற்றியை அடைந்து விடலாம் என்று முனைந்து கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை கிடைக்கும் வெற்றிகள் கூட நிச்சயம் நியாயமான முறையில் கிடைத்ததாக இருக்காது என்பதை உறுதியாக என்னால் சொல்ல முடியும். கடந்த கால வரலாற்றில்…

  • தேர்தல்- 2009 (அல்லது) விடுபட்டவை- 4.மே.09

    தேர்தல் சூடு பரபர வென இருக்கிறது. படித்த மேல் தட்டு மக்களையும் இளைஞர்களையும் குறிவைத்து பா.ஜ.க அதன் பிரதம வேட்பாளர் அத்வானி பெயரில் தனி தளம் அமைத்திருக்கிறது. ஆங்கிலம், இந்தி மொழிகளில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த தளத்தில் பல செய்திகளையும் பாஜக வின் தேர்தல் அறிக்கையையும் கிடைக்கும் படி வடிவமைத்திருக்கிறார்கள். அதே போல வலைப்பதிவையும் உருவாக்கி இருக்கிறார்கள். இதுவும் இருமொழிகளில் இருக்கிறது. அத்வானியே வலைபதிவது போல இருக்கிறது பதிவுகள். கருத்துசொல்லவும் முடிகிறது. இங்கே பல தமிழ் வலைப்பதிவுகளில் அந்த…

  • தனக்கு தானே விருது.. நன்றி அண்ணாச்சி!

    பொதுவாக எனக்கு விருதுகள் மீது நாட்டமில்லை. இதற்கு காரணம்.. எனக்கு எவன் கொடுப்பான் என்ற உள்ளார்ந்த குமைச்சலின் வெளிப்பாடாகவும் இருக்கலாம்.  அதனாலேயே எந்த போட்டிகளிலும் கூட அதிகம் ஆர்வம் காட்டியதுமில்லை. சமீபத்தில் தமிழ்மணம் விருதுகளுக்கு விண்ணப்பிக்கச் சொன்னபோது கூட நான் செய்யவில்லை. அப்புறம், கிடைக்கும் வாய்ப்புகளில் வலைப்பக்கம் வந்து எட்டிப்பார்த்தால், பட்டாம்பூச்சி விருது அநேக பதிவுகளில் சிறகடித்துக் கொண்டிருந்தது. சிறகடிக்கும் பட்டாம்பூச்சியின் ரகசியம் குறித்து டாக்டர். புருனோ, லக்கி, முரளி கண்ணன், கேபிள் சங்கர், நர்சிம் ஆகியோருடன்…

  • விடுபட்டவை 31.03.09

    கடந்த சில நாட்களுக்கு முன் தம்பி குசும்பனிடமிருந்து மடல்.. அவரின் பதிவுகள் குறித்த எனது எண்ணத்தை அனுப்பும் படி கேட்டிருந்தார். ஆனால்.. என்னுடைய பணிச்சூழல் எழுதவிடாமல் செய்து விட்டது. உண்மையில் குசும்பனின் பதிவுகளில் எனக்கு மிகவும் பிடித்தது.. போட்டோக்களை கிராஃபிக்ஸ் செய்வதும், புகைப்படங்களுக்கு அவர் எழுதும் கமெண்ட்டும் தான். நிச்சயமாக நம்மிடையே நகைச்சுவை உணர்வு குறைந்து வருகிறது என்று அடித்து(யாரைன்னு கேட்காதீங்க!) சொல்லமுடியும். அதையும் எழுத்தில் வடிப்பது என்பது தனிச்சிறப்பான விசயம். இன்று ஜெயமோகனிடம் அத்தகைய நகைச்சுவையுணர்வை…

  • எச்சரிக்கை:- ‘புனித கங்கை’படங்கள் -இதயம் பலகீனமானவர்கள் தவிர்க்கவும்

    இதுவும் மின்னஞ்சல் வழி வந்த படங்கள் தான். 2002ல் நானும் வாரணாசி என்ற காசிக்கு போய் வந்திருக்கிறேன். அப்போது ஒரு வார இதழில் பணியாற்றி வந்தேன். அவர்கள் செலவில் சுற்றிய சுக அனுபவம் அது.  🙂 காசிக்குப் போயும் கங்கையில் காலைக்கூட நனைக்க மனம் வரவில்லை. ஊடகங்களும், புராணங்களும் காட்ட்சிய காசி அல்ல நான் பார்த்தது. மிகவும் மலிவானதொரு காசியைத் தான் தர்ருசிக்க முடிந்தது. ஆனால்.. இதை எங்கள் வீட்டினருக்கு போனில்  சொன்ன போது என் அம்மா…

  • விடுபட்டவை 13 மார்ச் 2009

    இன்று என்னை மிகவும் பாதித்த விசயம் நிரஞ்சன் குமார் என்ற சாப்ட்வேர் இன்ஜினியரின் செயல்தான். (சுட்டியை க்ளிக் செய்தால் விபரம் படிக்க முடியும்.) எம்.ஈ.  படித்து விட்டவருக்கு இப்படியான காரியத்தை செய்ய எப்படித்தான் மனம் வந்ததோ தெரியவில்லை. நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திலிருந்தவரை பார்த்தேன். பிறந்து நான்கு நாட்களே ஆன குழந்தையை கொன்றுவிட்ட வருத்தம் கொஞ்சம் கூட அவரிடம் இல்லை. வாழ்க்கையை அனுபவிக்கவேண்டிய வயதில் இப்படி குழந்தையோடு என் மனைவி இருப்பது பிடிக்கவில்லை. என்னோடு ஜாலியாக(!) இல்லாமல்.. இனி…

  • முத்துக்குமாரின் உடல் வீழ்ந்து கிடக்கும் சடலமல்ல..

    தமிழர்களே! தமிழர்களே! என்னைத் தூக்கி கடலில் எரிந்தாலும் நான் கட்டுமரமாக மிதப்பேன். கவிழ்த்து விட மாட்டேன்’’ திரு. மு.கருணாநிதி. தமிழின் சிறந்த வசனகர்த்தாவாகிய கலைஞர் கருணாநிதியின் மேற்கண்ட வசன வரிகளைப் போன்ற எத்தனையோ வசனங்களைக் கேட்டு ஏமந்த தமிழினத்தின் முன் நம் அவமானத்தின் சாட்சியமாய் பெருமிதத்துடன் கிடக்கிறது தோழர் முத்துகுமாரின் உடல். கருணாநிதி அரசின் கையாலாகாத் தனத்திற்கும் ரத்த வெறி பிடித்த சிங்கள பேரினவாத பாசிசத்திற்கும் முதுகில் குத்தும் இந்திய வல்லாதிக்கத்தின் துரோகத்திற்கும் எதிராய் தன் மரணத்தை…

  • உன் கனவுகள் பலிக்கட்டும் முத்துக்குமரா..! போய் வா!! (படமும், வீடியோவும்)

    http://blog.balabharathi.googlepages.com/Image003.jpg 29.01.09 இன்று காலை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவன் (பாஸ்போர்ட் ஆபிஸ் உட்பட பல மத்திய அரசு அலவலகம் உள்ள இடம்) வளாகத்தில் தீக்குளித்து இறந்து போன முத்துக்குமாரின் கடைசி நிமிடங்கள் இதோ.. பெயர் தெரியாத யாரோ ஒரு தமிழன் தன் கை பேசியில் எடுத்தது.. யூடியூப்பில் ஏற்றி விட்டேன்.. ஆனால்.. This video is not yet processed. என்றே வருகிறது. அந்த பக்கத்தின் சுட்டி இதோ.. http://in.youtube.com/watch?gl=IN&v=PtWZCx_YUd8 வேறு எங்காவது அப்லோடு…