Author: admin

  • மரப்பாச்சி இனி மக்கள் சொத்து!

    நண்பர்களுக்கு வணக்கம். ஓர் புதிய அறிவிப்பு! உலக புத்தக நாளான இன்று இந்த அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். நான் எழுதிய, ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ என்னும் சிறார் நாவலை இன்றுமுதல் மக்களுக்கானதாக அறிவிக்கிறேன். குழந்தைகளின் மீது நிகழும் பாலியல் சுரண்டல்களை எதிர்ப்பதற்கு அக்குழந்தைகளை தயார்படுத்தவும், அவர்களுடைய உடல் மீதான அவர்களின் உரிமை என்ன என்பதை அவர்களுக்குக் கற்பிக்கவும் இச்சிறுபடைப்பின் வழியாக முயன்றுள்ளேன். தமிழ் கூறு நல்லுலகம் இப்படைப்பை இருகரம் கொண்டு வரவேற்று, விருதளித்து கௌரவித்தது. இன்னும் இன்னும்…

  • சுழல் – சிறுவர் கதை (டைம்லூப் சிறுகதை)

    சுழல் வீட்டின் வாகனம் நிறுத்துமிடத்தில், அப்பாவின் இருசக்கர வாகனத்திற்கு அருகில், காகிதங்களால் பொதியப்பட்டு நிறுத்தப்பட்டிருந்ததைப் பார்த்ததுமே தெரிந்தது, அது மிதிவண்டி என்று. அதைப்பார்த்ததும் ஏற்பட்ட சந்தோஷம் சுதாகரனை திக்குமுக்காடச் செய்தது. அடுத்த வாரம் வரவுள்ள அவனது பிறந்தநாளுக்கு, வெளிநாட்டில் வசிக்கும் அவனது மாமாவின் அன்பு பரிசு அது. அவர் இணையம் வழியாக ஆர்டர் போட்டுவிட, நேரடியாக இவன் வீட்டுக்கு வந்து, மிதிவண்டியைக் கொடுத்துவிட்டது, தயாரிப்பு நிறுவனம். அதன் மீது சுற்றி இருந்த ஜிகு ஜிகு பிளாஸ்டிக் தாள்களை…

  • சட்டம்

    தங்கள் குடிசைக்கபகுதிக்கு அருகில் கட்டப்படும் கட்டுமான நிறுவனத்தில் காவலாளியாக வேலைக்குச் சேர்ந்தார் பரமசிவம். அவரது மகன் வேலன் ஏழாம்வகுப்பு படித்துவந்தான். திடீரென பரவிய தீக்கிருமியால், வேலனின் பள்ளி வாழ்க்கை முடிவுக்கு வந்தது. கொரோனா கால ஊரடங்கினால் மக்கள் பலவிதங்களில் பாதிக்கப்பட்டனர். அடுத்த சில மாதங்களில் கட்டடப்பணிக்கு அரசு அனுமதி அளித்ததும், வேலை மீண்டும் தொடங்கியது. ஆனாலும், பள்ளிகள் திறக்கப்படவில்லை. அதனால் வீட்டில் இருந்த வேலன், கட்டட வேலைகள் நடப்பதை வேடிக்கை பார்க்கப்போவான். சில நாட்கள் தன் அப்பாவுக்கு…

  • தாத்தா பயந்த கதை

    தாத்தா பயந்த கதை கோடை விடுமுறையில் கிராமத்திற்கு வந்திருந்தான் ஆதவன். அவன் தாத்தாவும், அம்மாச்சியும் மற்ற கிராம மக்கள் போலவே விவசாயம் செய்துவந்தனர். பகலில் வயலுக்குச்செல்லும்போது ஆதவனையும் உடன் அழைத்துச்செல்வர். மாலையில் வீடு திரும்பியதும், முன் வாசல் பக்கம் அமர்ந்துகொண்டு, தினம் தினம் கதை கேட்பது இவனின் வழக்கம். அம்மாச்சி ரத்தினமோ, தாத்தா மாரிமுத்துவோ இருவரில் ஒருவர் சமையல் செய்யப் போய்விடுவர். மற்றொருவர் இவனுக்கு கதை சொல்வார்கள். அன்று மாலை திடீரென மின் வெட்டு. அகல்விளக்கை ஏற்றிவைத்தார்…

  • ஒடிசா பயணமும் டெங்கு காய்ச்சலும்

    சாகித்ய அகாடமியின் பால சாகித்ய புரஸ்கார் விருது வழங்கும் விழா, நவம்பர் 14ஆம் தேதி ஒடிசாவின் புவனேஸ்வரத்தில் என்றதுமே ஒருவித உற்சாகம் தொற்றிக்கொண்டது. வரலாற்றுச்சிறப்பு மிக்க இடங்களின் சிலவற்றையாவது பார்த்துவிடவேண்டும் என்று ஆசைப்பட்டேன்.  நவம்பர் 13ஆம் தேதி மாலை இங்கிருந்து ஒடிசா கிளம்பும்போதே.. சற்று உடல்நலமில்லைதான். புட் பாயிசன் என்ற அளவில் மருத்து மாத்திரைகள் எடுத்துக்கொண்டு, புவனேஸ்வரம் சென்று இறங்கினேன். என்னுடைய முழு பயண விவரங்களையும் முன்னதாகவே, அங்கு உயரிய பதவியில் இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரியான ஆர்.…

  • ஒடிசாவில் பால சாகித்திய புரஸ்கார் விழா

    சாகித்திய அகாடமியின் ‘பால சாகித்திய புரஸ்கார் 2020’ விருது வழங்கும் விழா, ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேஸ்வரத்தில் வைத்து நடைபெற உள்ளது. இம்மாதம் (நவம்பர்) 14, 15ஆம் நாட்கள் என்று முடிவு செய்துள்ளனர். நிகழ்வில் கலந்துகொள்ள ஒடிசா செல்கிறேன். பருவநிலை ஒத்துழைப்போடு, எவ்வித தடங்கலும் இன்றி பயணம் நிறைவேறவேண்டும் என்பதே இப்போதைய அவா! (அடித்து துவைக்கும் மழை, அன்றைய நாட்களில் கொஞ்சம் ஓய்வெடுக்கவேண்டும்)

  • சிறார் இலக்கியம் செழிக்க முற்போக்காளர்களின் பங்கு!

    என்னுடைய பால்யத்தை வண்ணமிக்கதாக மாற்றியவர்கள் அப்போதைய சிறார் எழுத்தாளர்கள்தான். திக்குவாய் குறைபாடும், கற்றல்குறைபாடும் சேர்ந்து இருந்த ஒரு மாணவன் நான். இக்குறைபாடுகளினால் பிறரின் கேலிக்கும் கிண்டலுக்கும் எப்படி எல்லாம் ஆட்பட்டுப் போயிருப்பேன் என்பதை இதனை வாசிப்பவரின் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன். பிறரின் கேலிக்கு ஆட்படும்போதெல்லாம் உள்ளுக்குள் உடைந்து அழுவேன். இதன் காரணமாகவே தனித்து இருக்கத் தொடங்கினேன். அந்த நேரத்தை புத்தக வாசிப்பு பக்கம் திருப்பினேன். உடன்பிறந்தோருக்கும் வாசிப்பு பழக்கம் இருந்ததால், அவர்கள் படிக்கும் சிறுவர் பத்திரிக்கைகளை நானும் படிக்கத்தொடங்கியவன்…

  • ஆமை காட்டிய அற்புத உலகம் 3ஆம் பதிப்பு

    இது சிறுவர் இலக்கியத்தில் எனது முதல் நூல். 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல்பதிப்பு வெளியானது. அப்போதே பரவலான கவனத்தை இந்த நூல் பெற்றது என்றுதான் சொல்லவேண்டும். பெற்றோரும் ஆசிரியர்களும் மட்டுமல்லாது பல சிறுவர்களும் வாசித்து மகிழ்ந்த நூல் இது. வெளியான காலத்தில் அதுவரை வெளிவந்துகொண்டிருந்த சிறார் நூல்களில் இருந்து இது வேறு ஒரு புதிய பாய்ச்சலை நிகழ்த்திக்காட்டியது. புனைவும் அறிவியலும் இணைந்த இந்த நடையை பின்னாலில் சிலர் தொட்டுப் பார்த்தனர். அதோடு இப்படியான ஒரு வடிவம்…

  • நிப்மெட்டை -மாற்றாதே!

    எனது தளத்திற்கு வரும் வாசகர்களுக்கு நிப்மெட் பற்றி அறிந்த்திருப்பீர்கள். பலமுறை அதனைப்பற்றி நான் எழுதி உள்ளேன். பேசி உள்ளேன். ஆண்டுக்கு குறைந்தது 500 பெற்றோர்களையாவது அங்கே செல்லும்படி அறிவுறுத்தி வருகிறேன். நிப்மெட் என்பது ஒன்றுக்கும் மேற்பட்ட வளர்ச்சிக்குறைபாடு உடையவர்களின் மேம்பாட்டுக்கான நிறுவனம். சென்னை, முட்டுக்காடு பகுதியில் 15 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. காங்கிரஸ்- திமுக ஆட்சியின் போது தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்ட நிறுவனம் இது. இப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட குறைபாடு உடையவர்களுக்கா நாட்டில் உள்ள நிறுவனங்களிலேயே இது…

  • வணக்கம் தமிழா- நேர்காணல்

    சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வணக்கம் தமிழா நிகழ்ச்சியின் ஒளிப்பதிவு இது. அதே நிறுவனத்தில் செய்தியாளனாகவும் பணியாற்றி இருந்தேன். அதை நினைவுகூர்ந்து அங்கே பணியாற்றிய பலரும் தொலைபேசியில் அழைத்துப் பேசினர். பெரும் மகிழ்ச்சியைத் தந்த சமீபத்திய நேர்காணல் இது. மரப்பாச்சி சொன்ன ரகசியம் – நூலுக்கு பால சாகித்ய புரஷ்கார் விருது அறிவிக்கப்பட்டத்தைத்தொடர்ந்து இந்த நேர்காணல் ஒளிப்பதிவு செய்யப்பட்டது. யூடியூப் சுட்டி இங்கே