Author: admin

  • 5. ஈரோட்டுக்கு குட் பை!

    என்ன ஏது என்று அறிய முடிவதற்குள் குழந்தை இறந்து போனது. பத்துமாசம் சுமந்து பெற்ற சிசு.. ஆறு மாதகாலம் அதன் ஒவ்வொரு அசைவையும் கண்டு உணர்ந்து ரசித்து மகிழ்ந்த நிமிடங்கள்.. அச்சிசுவின் சிரிப்பு, அதன் கண்கள், முகச்சாயல் என எல்லாவற்றையும் ஒப்பிட்டுப் பார்த்து மகிழ்ந்த கணம்.. எல்லாம் சேர்ந்து மனதை பெரிதும் துயரத்தில் ஆழ்த்தியது. குழந்தையின் இழப்பை நினைத்து துவண்டு போய் இருக்கும் நாகம்மையின் முன்னால் தனது சோகத்தை காட்டிக்கொள்ளக்கூடாது என்று ராமசாமி முடிவுக்கு வருகிறார். தன்…

  • 4. நோயில் வீழ்ந்த பெரியாரின் பெண் குழந்தை!

    அதுவரை இருந்த தைரியம் பொலபொலவென உதிர்ந்தது. நாகம்மை, ஏற்கனவே வசதி குறைவான இடத்திலிருந்து வந்தவள் என்ற எண்ணம் சின்னத்தாய்யம்மையாரின் மனதில் இருந்தது. இப்போது தாலி இல்லாமல் எப்படி போய் நிற்க முடியும். அத்தையின் கண்களில் தன் கழுத்தின் மேல் விழுந்துவிட்டால்.. ஆகாத மனுசி கை பட்டால் குத்தம், கால் பட்டால் குத்தம் என்ற சொலவடை போல.. மருமகளாக வந்து விட்ட போதிலும் இன்னும் மாமியாரின் முழு அன்பை பெறவில்லை. இந்நிலையில் மாமியார் சொல்லாத விசயத்தை, கணவன் பேச்சை…

  • 3. யாருடா இந்த தாசி..?- பெரியார் போட்ட நாடகம்.

    ராமசாமி சொன்ன பெண் நாகம்மை. அவரின் மாமா ரெங்கசாமி நாயக்கரின் மகள். சேலம் மாவட்டம் தம்மாப்பட்டியில் வசித்து வந்தவர். மாமா என்றால் நெருங்கிய சொந்தமெல்லாம் கிடையாது. சின்னத்தாயம்மையாரின் ஒன்று விட்ட சகோதரன் ரெங்கசாமி நாயக்கர். வெங்கட்டநாயக்கர் குடும்பம் ரெங்கசாமி நாயக்கர் வீட்டுக்கும், ரெங்கசாமி நாயக்கர் குடும்பம் இவர்கள் வீட்டுக்கும் போய் சில நாட்கள் தங்குவதும் உண்டு. அப்போதே ராமசாமிக்கு நாகம்மையை பிடித்துப் போனது. இதில் அதிர்ச்சி அடைய என்ன இருக்கிறது என்று தோன்றலாம். ரெங்கசாமி நாயக்கரின் குடும்பம்…

  • 2. மைனர் ராமசாமி

    கடைக்கு இளைய மகன் வரத்தொடங்கி, வியாபாரத்திலும் கெட்டிக்காரனாக இருப்பதும் ஆண்டவன் அருளினால் தான் என்று நம்பினார், பக்தி மார்கத்தில் அதிக ஆர்வம் கொண்ட வெங்கட்டநாயக்கர். தன் பிராத்தனைக்கு இறைவன் செவி சாய்த்து விட்டான் என்று நம்பிய காரணத்தால்.. முன்னை விட அதிக ஆர்வத்துடன் பக்தி மார்கத்தின் பக்கம் கவனம் செலுத்தத்தொடங்கினார். அவ்வப்போது வீட்டில் தொடர்ந்து கொண்டிருந்த விரதம், பூஜை போன்றவை அடிக்கடி நடக்கத்தொடங்கின. பஜனையும், பாகவதர்களின் வருகையும் முன்பை விட அதிகமாகிப்போனது. எப்போது பார்த்ததாலும் ஏதாவதொரு பூஜை…

  • ஈரோடு ராமசாமி- வாழ்க்கை வரலாறு

    நண்பர்களுக்கு வணக்கம்! நீண்ட நாட்களாக.. எனக்குள் பெரியார் ஈரோடு ராமசாமியின் வரலாற்றை பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்து வந்தது. அதற்கான சிறு முயற்சியே இது. ஒருவரின் வாழ்க்கை வரலாற்றினை என்னால் சுவை பட சொல்ல முடியுமா.. என்பதை நான் அறியேன். இருந்தாலும் முயற்சித்து பார்க்கிறேன். சமயம் கிடைக்கும் போதெல்லாம் எழுதுவேன். குறிச்சொல்லாக பெரியார் வரலாறு என்று கொடுத்திருப்பதால் ஒரு சேர வாசிக்கவும் முடியும். இனி… ********* 1. மிகுந்த தெய்வநம்பிக்கையும் பக்தியையும் உடையவர் ராமநாதன்…

  • ஒரு நிமிடம் ஞாநி..

    இளமையான ஞாநி அவர்களுக்கு.. வணக்கம். பல சந்தர்ப்பங்களில் உங்களுக்கு மடல் எழுத நினைத்ததுண்டு, ஆனால்.. அப்போதெல்லாம் எழுத முடியாமலேயே போய் விட்டது. அந்த சமயங்களை நினைத்துப்பார்த்தால்.. பல பாராட்டுக்களும், சில சண்டைகளுக்குமான சமயமாக நினைவு வருகிறது. பரவாயில்லை. இப்போதாவது எழுதி விடுவது என்ற எண்ணத்துடனே அமர்ந்திருக்கிறேன். அனேகமாக வழமை போல இதையும் பாதியில் விட்டு விட மாட்டேன் என்றே நினைக்கிறேன். அக்டோபர் 10,2007 தேதி ஆனந்த விகடன் இதழில் பக்கம் 148-ல் தங்களின் தொடர் பத்தியான “ஓ…பக்கங்கள்”…

  • “தலை வெட்டி”க்கு எதை வெட்டலாம்?

    நண்பர்களே.. இந்த வீடியோவைப் பாருங்கள். உங்கள் கருத்தை சொல்லுங்கள். வீடியோவை பார்க்க முடியதவர்கள்.. நேரடியக கீழே இருக்கும் சுட்டியில் பாருங்கள். http://www.ibnlive.com/videos/39845/money-launderer-leads-ram-temple-trust.html

  • BYTE என்றால் என்ன?

    போன பதிவில் ஏர்-லில் போவது குறித்து சொல்லி இருந்தேன். அதில் பைட்(BYTE) பற்றி தம்பி லக்கி கேட்டிருந்தார். நானும் கோட இந்த சொல்லாடலை டெல்லியில் பணியற்றிய போது தொலைக்காட்சி நிருபர்கள் சொல்லி கேட்டிருக்கிறேன். அப்போதிலிருந்து.. பைட் என்றால் பேட்டி எடுபது என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.(இபோது வரை இதன் பொருள் குறித்து ஆங்கில- தமிழ் அகரதியில் பார்க்க வில்லை) ஆனால்.. புதிய இடத்தில் வேலைக்கு சேரும் வரை.. புழக்கத்தில் பைட் என்பதை எதற்கு குறிபிடுகிறார்கள் என்று உணர்ந்து கொண்டேன். ஒருவரை…

  • கட்டையில போக.., பாடையில் போக.. கேட்டிருக்கோம்- ‘ஏர்ல போக’..தெரியுமா?

    பத்திரிக்கையில் குப்பை கொட்டி பழகிய நான் தற்போது விஷ்வல் மீடியா ஒன்றில் வேலைக்கு சேர்ந்து இருக்கிறேன். பணிக்கு போக ஆரம்பித்த இரண்டாவது நாள்.. அலுவகத்தில் பலரும் ‘ஏர் போக’ என்று திட்டிக்கொண்டார்கள். முதன்முதலில் அப்படியான ஒரு வசவு வார்த்தையை நான் கேட்கிறேன். ஆனால் திட்டியவரும் சரி, திட்டு வாங்கியவரும் சரி.. முகத்தியில் உணர்ச்சியற்று அடுத்த வேலையை நோக்கி நகர்ந்து விடுவதையும் கண்டு நிறையவே குழம்பிப்போனேன். ‘கட்டையில போக..’, ‘பாடையில் போக..’, என்று திட்டிக்கொள்ளுபவர்களை மட்டுமே பார்த்திருந்த எனக்கு…