Author: admin

  • அமெரிக்கா..! செருப்படி வீடியோ!

    மேல இருக்கும் விடியோ படத்தை புது வீட்டில் ஏற்றுவதில் நுட்பம் அறியாத குழப்பம் இருப்பதால்… ஓடாமல் போகலாம். அப்படி ஏதேனும் நிகழ்ந்தால்.. நண்பர்கள் இந்த சுட்டியைச் சொடுக்கி அந்த விடியோவைப் பார்க்கலாம். குறிப்பு:- நண்பரும், பத்திரிக்கையாளருமான டி. அருள் எழிலன் அனுப்பிய சுட்டி மூலம் காணக்கிடைத்த படம்.

  • சென்னை பட்டறை:- விடுபட்ட.., சொல்லவேண்டிய முக்கியமாக தகவல்!

    நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்! சென்னை பட்டறை குறித்த தகவல்களையும், படங்களையும் தொடர்ந்து பார்த்தும் படித்தும் வந்திருப்பீர்கள். இந்த பட்டறைக்காக வேலை பார்த்தவர்களில் அடியேனும் ஒருவன் என்பதால் என் சார்பாகவும் சொல்லவேண்டிய ஒன்று இருக்கிறது! அதற்கு முன், இன்னொரு செய்தியை சொல்லி விடுகிறேன். இந்த பட்டறையில் இன்று மட்டும் புதியதாக ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவுகள், மின்னஞ்சல்கள் தொடங்கி இருக்கிறார்கள் என்பதை மிகுந்த மகிழ்வோடு சொல்லிக்கொள்கிறேன். அந்த புதியவர்களின் வரவை.. நிச்சயம் வலை உலகம் இருகரம் நீட்டி வரவேற்கும்…

  • பகை- குறும்படம்

    அண்ணன் மலைநாடான் அவர்கள் வைத்திருந்த ஒரு நிமிட குறும்படப்போட்டிக்கு விண்ணப்பித்து, படம் அனுப்பியவர்களில் நானும் ஒருவன். வெற்றி பெற்ற நான்கு படைப்புக்களில் என் படைப்பும் ஒன்று. இது குறித்து சிந்தாநதி முன்னமே பதிவு போட்டிருந்தாலும். என் ஆவணப்படுத்தலுக்காக இதை சேமிக்கிறேன் இங்கே! (அண்ணன் மலைநாடான் கொடுத்த ஊக்கத்தினால் என்னிடம் இருக்கும் கைபேசி: K750i சோனி எரிக்ஸன் மாடலில் படம் பிடித்து, அதிலேயே எடிட், இசை மிக்ஸிங் எல்லாம் செய்தேன். புகைப்பவராக நடித்திருப்பது என் நண்பர். ரூபன் அவர்கள்) [youtube=http://www.youtube.com/watch?v=Cfxo-nPxw1g] மற்ற படங்களைக்காண..…

  • தமிழில் மொபைல் புக்! அதுவும் இலவசமாக!!

    கணிணியுடம் இணைக்கக்கூடியதா உங்கள் மொபைல்? இணைய வசதியுடன் இருக்கிறதா.. உங்கள் மொபைல்? இதோ ஈ-புக் மாதிரி வந்து விட்டது மொபைல் புக்! அதுவும் நம் தாய் மொழி தமிழில்! தமிழகத்தை சேர்ந்த கணேஷ்ராம் என்ற இளைஞரின் மொபைல்வேதா என்ற நிறுவனம் இச்சேவையை வழங்கி வருகிறது. சக பதிவரான தம்பி “பிரிண்சு என்னாரெசு “மூலம் இவர்கள் முதலில் பெரியார் வாழ்க்கைச் சுருக்கத்தினை தமிழ், ஆங்கிலத்தில் பென்நூலக்கி இருக்கிறார்கள். அதற்கு கிடைத்த வரவேற்பு இவர்களை தொடர்ந்து தமிழ் மென்நூல்களின் பக்கம்…

  • சொற்களற்ற சூன்யவெளியில்..

    ஒருபோதும் சோர்ந்து போனதில்லை மனிதர்களிடம் பேசும் பொழுதுகளில் சோகங்கள் துரோகங்கள் வருத்தம் மகிழ்ச்சி என எதுபற்றியேனும் பேசிக்கொள்ள நேர்ந்திருக்கிறது பல சமயங்களில் முன் சிரித்து பின் கூறு போடுபவர்கள் இருக்கின்ற போதிலும் இவர்களை ஒதுக்கிவிட தோன்றியதில்லை பூனை,நாய்,கிளி ஏன் கடவுள்களே கூட பதில் பேசாமலிருக்கையில் ஏதாவது பேசும் மனிதர்களை புறந்தள்ள முடிவதில்லை.

  • மசுரு

    கூட்டம் போடு பழந்தமிழ் இலக்கியங்களில் புளங்காகிதமடை கூட்டத்தில் கலகம் செய் குழுசேர்ந்து குசுகுசுத்துக்கொள் புலியை விரட்டிய மறத்தியின் பால் குடித்தவனென மார் தட்டிக்கொள் யதார்த்தம் மாயா- யதார்த்தம் நவீனம் பின்-நவீனம் அரசியல் பேசு அலோவென கை குலுக்கிக்கொள் எழுது பிரதி அழி நாவறளப்பேசு கொன்றுகுவி அடையாளம் தொலைத்ததறியாமல் கூச்சலிடு தமிழனென்று குப்பிகளுடைய கோப்பையை காலி செய் மசுரு சோற்றுக்கு வழியில்லாமல் சாகிறான் விவசாயி.

  • சிரங்குகள்

    உடலெங்கும் சிரங்குகள் அவ்வப்போது சொறிந்து கொள்ளத்தோன்றும் விதத்தில் ஒழுங்காய்த்தான் இருந்தன முதலில் ஆரோக்கியம் சேர்க்குமென ஆசைப்பட்டு பூசிக்கொண்ட களிம்புகளால் விளைந்தவை இவை களிம்புகளை வழங்கியவர்களும் சொறிந்துகொண்டுதானிருக்கிறார்கள் இருந்தும் மோகம் குறையவில்லை மக்களுக்கு முதலில் அதன் விளைவைப் பற்றி விளக்க வேண்டும் பின்னரதனை அழிக்கவேண்டும் அப்போது தான் சரிபடும் தேகமும், தேசமும்!

  • இருப்பு

    மடக்கிய குடையுடன் பேசியபடியடைந்தோம் மரத்தடியை மழை இப்போது தூறலாய்.

  • அடையாளம்

    தூசுகளால் நிறைந்த கண்ணாடி கதவில் பெயரெழுதிச் செல்கிறது கோடைச்சாரல்.

  • இலக்கு

    உனக்கும் எனக்குமான பாதை ஒன்றுதான் ஆனால் எதிரெதிர் திசைகளில் போய்க்கொண்டிருக்கிறோம் நான் வாருவதற்குள்ளாக நீயும் நீ வருவதற்குள்ளாக நானுமென என்றாவதொரு நாள் நேரெதிராய் சந்திக்க நேரும் போது ஒரே திசையை நோக்கியிருக்கும் நம் பயணம்.