Category: அனுபவம்

  • விடுபட்டவை 27.மே.2008

    ‘கமல் கவிதை படிச்சு இருக்கீங்களா.. என்னமா யோசிக்கிறார்ண்ணே?’ “ம்..ஆமா..” ‘ஞாநிக்கு என்ன திறமைண்ணே.. நாமெல்லாம் ஏன் இப்படி சிந்திக்கக்கூட முடியல?’ ” 🙂 ” ‘மதன் எழுதின இந்த வார பதில் படிச்சீங்களா? எவ்வளவு விசயம் தெரிஞ்சு வச்சு இருக்காங்க.. வியப்பா இருக்குண்ணே’ ”ம்..” ‘சுஜாதா எழுத்து என்ன எழுத்துண்ணே.. இருபது வருசத்துக்கு முந்தியே இப்படி எழுதி இருக்காரே.., நாமெல்லாம் எப்ப இப்படி ஆகுறது?’ “ம்..ஆவலாம்.” ‘என்ன ஆச்சுண்ணே.. எல்லாதையும் சாதாரணமா எடுத்துக்கிட்ட மாதிரி தெரியுது! ஒங்களுக்கு…

  • இணையம்+ கணினி குறித்த சந்தேகமா உங்களுக்கு?

    பொதுவாக பாரம் (Forum) குறித்த தெளிவான பார்வை என்னிடம் இருந்ததில்லை. அது ஒரு தொல்லையாக மட்டுமே இதுவரை பார்த்து வந்திருக்கிறேன். வலைப்பதிவுகளில் எழுதுவது போல அங்கேயும் கதை கவிதை கட்டுரை என்று எழுதிக்கொண்டிருப்பவர்களைப் பார்த்தால் எனக்கு வியப்பாகத் தோன்றும். நம் கருத்துக்களை நம்ம வலைப்பக்கத்தில் சொல்லாமல் இப்படி ஒரு கட்டம் போட்ட சட்டத்துக்குள் சொல்லுறாங்களேன்னு பல நாள் வியந்திருக்கிறேன். இவ்வகை பாரங்களில் மொக்கை போடுபவர்களும் உண்டு! பின்னூட்ட கும்மி போன்ற வகைகளும் கூட உண்டு! தமிழ், இணையம்,…

  • ஏப்ரல் மாத PIT போட்டி “தனிமை”க்கு முதல் முறையா என் சார்பில் ஒரு போட்டோ!

    தேதி முடிந்தாலும் பிரச்சனையில்லை. நம்ம கிழவியை வேற எப்படித்தான் உலகம் முழுவதும் காட்டுறதாம். ஊருக்கு போயிருந்த போது எடுத்தது. படத்தை பெரியதாக்கிப் பார்க்க… படத்தின் மேல் க்ளிக்கிக்கொள்ளவும். 🙂

  • ஆத்தா… நான் வேலையை விட்டுட்டேன்…

    ஸ்ஸ்ஸ்ஸ்… அப்பாடா… கொஞ்சம் நிம்மதியா இருக்கேன். :))

  • “கும்மி” என்ற சொல்லாடலை நாம் இழிவு படுத்துகிறோமா?

    இனிய நண்பரும் சகபதிவருமான இவான் ”பதிவர்கள் மத்தியில் பிரபலமாக பயன்படுத்தப்படும் ‘கும்மி’ என்ற சொல்லாடலும் அதன் தாக்கங்களும்” என்ற பதிவினை எழுதி இருக்கிறார். அதில் கும்மி என்ற சொல்லாடலை நாம் ஒன்றுக்கும் உதவாது என்ற முடிவுக்கு வந்து, அதன் காரணமாகவே பயன்படுத்துவதாகவும், அழிந்து வரும் கலைகளில் கும்மியும் இருப்பதால் அதன் மீது மோசமான ஒரு பிம்பம் எழுவதற்கு நாம் காரணமாகி விடக்கூடாது என்றெல்லாம் எழுதி இருக்கிறார். அப்படி எல்லாம் எந்தவொரு உள்நோக்கமும் இன்றியே இன்று வரை பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. உண்மையில்…

  • இந்த கொலையில் எனக்கும் பங்கு உண்டு..! 🙁

    ஆம் நண்பர்களே! நான் சொல்லுவதெல்லாம் உண்மை. மேலே படத்தில் பார்க்கும் அந்த பெண் தான் கொலையானவர். இவர் பெயர் உமாராணி. இவரை எனக்கு எப்படி தெரியும்.. இவரின் கொலையில் நான் எப்படி சம்பந்தப்பட்டிருப்பேன் என்பது குறித்து அதிகம் குழம்ப வேண்டாம் நானே சொல்கிறேன். தற்போது செய்திப் பிரிவில் நான் வேலை பார்த்து வருவதால்.. அடிக்கடி அலுவலகத்தை விட்டு வெளியே செய்திக்காக போவது வழக்கம். அப்படி ஒர் அரசியல்வாதியின் நிகழ்ச்சிக்கு போயிருந்த போது தான்.. உமாராணியை சந்தித்தேன். (திரைப்படங்களில்…

  • மாரியம்மன் கோவிலில் தீச்சட்டி எடுங்க!

    சென்னை வந்து இரண்டு வருடங்கள் முழுமையாகி விட்டது. மும்பையில் இருந்து 2005 செப்டம்பர் கடைசி வாரத்தில் வந்திறங்கினேன். மும்பையிலேயே பழக்கமாகி விட்ட நண்பன் ஒருவன் இருந்ததால் அவனுடன் ஜாகையை வைத்துக்கொண்டாகி விட்டது. சென்னை வந்து நிறைய நண்பர்களையும் பெற்று வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. அறை நண்பனுக்கு பெண் பார்த்து முடிவு செய்திருக்கிறார்கள். அனேகமாக இன்னும் நாள் குறிக்கப்படாத அவனுடைய திருமணம் வரும் 2008 மே மாதம் இருக்கலாம். எனக்கும் அவனுக்கும் சரியான புரிதல் இருந்ததால்.. வேறு எவரையும் பாட்னராக…

  • தாவணிக்கனவுகள்

    குளித்து முடித்ததும் துவட்டிக்கொள்ளும் துண்டோடு இருக்கும் உறவு நம்மில் பலருக்கும் அதோடு முடிந்து விடுகிறது. சில சமயங்களில் இடுப்பில் கட்டிக்கொண்டு வீட்டுக்குள் அலைய நேர்ந்திருக்கலாம். ஆனால் குழந்தைகளுக்கு அதே துண்டு பயன்படும் விதம் குறித்து எத்தனை பேர் கவனித்திருப்பீர்கள். அதிலும் பெண்குழந்தைகளால் பயன்படுத்தப்படும் விதம் அலாதியானது. பத்து வயது கூட நிரம்பாத சிறுமிகளில் பலர் துண்டை தலையில் சுற்றிக்கொண்டு இருப்பதை பார்த்திருப்பீர்கள். கூந்தலை அள்ளி கொண்டை போடுவது போலவோ, முன்பக்கம் கூந்தலைப் போடுவது போலவோ துண்டை பயன்படுத்துவதை…

  • ஒரு நிமிடம் ஞாநி..

    இளமையான ஞாநி அவர்களுக்கு.. வணக்கம். பல சந்தர்ப்பங்களில் உங்களுக்கு மடல் எழுத நினைத்ததுண்டு, ஆனால்.. அப்போதெல்லாம் எழுத முடியாமலேயே போய் விட்டது. அந்த சமயங்களை நினைத்துப்பார்த்தால்.. பல பாராட்டுக்களும், சில சண்டைகளுக்குமான சமயமாக நினைவு வருகிறது. பரவாயில்லை. இப்போதாவது எழுதி விடுவது என்ற எண்ணத்துடனே அமர்ந்திருக்கிறேன். அனேகமாக வழமை போல இதையும் பாதியில் விட்டு விட மாட்டேன் என்றே நினைக்கிறேன். அக்டோபர் 10,2007 தேதி ஆனந்த விகடன் இதழில் பக்கம் 148-ல் தங்களின் தொடர் பத்தியான “ஓ…பக்கங்கள்”…

  • BYTE என்றால் என்ன?

    போன பதிவில் ஏர்-லில் போவது குறித்து சொல்லி இருந்தேன். அதில் பைட்(BYTE) பற்றி தம்பி லக்கி கேட்டிருந்தார். நானும் கோட இந்த சொல்லாடலை டெல்லியில் பணியற்றிய போது தொலைக்காட்சி நிருபர்கள் சொல்லி கேட்டிருக்கிறேன். அப்போதிலிருந்து.. பைட் என்றால் பேட்டி எடுபது என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.(இபோது வரை இதன் பொருள் குறித்து ஆங்கில- தமிழ் அகரதியில் பார்க்க வில்லை) ஆனால்.. புதிய இடத்தில் வேலைக்கு சேரும் வரை.. புழக்கத்தில் பைட் என்பதை எதற்கு குறிபிடுகிறார்கள் என்று உணர்ந்து கொண்டேன். ஒருவரை…