Category: கட்டுரை

  • பிள்ளைத் தமிழ் 7

    (கற்றல்குறைபாடு- தொடர்பாக) பள்ளி செல்லும் பிள்ளைகளில் 10 முதல் 15 சதவீதம் பேர், விதவிதமான கற்றல் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்கிறது ஒரு புள்ளிவிவரம். இத்தகவலை, டிஸ்லெக்ஸியா அசோசியேஷன் ஆப் இந்தியா என்னும் அமைப்பு சொல்கிறது. இதுவொரு தோராயமான கணக்குதான் என்றாலும், என்னளவில் இது கண்டிப்பாக அதிகமாகவே இருக்கக்கூடும். ஏனெனில், நானே கற்றல் குறைபாடு உடையவன். நான் எந்த புள்ளிவிவரங்களுக்குள்ளும் சிக்காமல் வளர்ந்து வந்துவிட்டேன். இந்தக் கற்றல் குறைபாடு என்ற வார்த்தை, நிச்சயம் பலருக்கும் பரிச்சயமானதாகவும் அல்லது இல்லாமலும்…

  • பிள்ளைத்தமிழ் 6

    குழந்தை வளர்ப்பைப் பற்றி பேசும்போது, எல்லோருமே மதிப்பெண் முக்கியமில்லை என்று திகட்டத் திகட்ட சொன்னாலும்கூட, யதார்த்தத்தில் யாராலும் மதிப்பெண்களைப் பற்றி லட்சியம் செய்யாமல் இருந்துவிட முடிவதில்லை. நம் குழந்தைகள் நன்கு படிக்க, நாம் என்னென்னவெல்லாம் செய்யலாம் என்று பார்க்கலாம். இரண்டு குழந்தைகள், மலையேறும் பயிற்சிக்காக, கற்கள் பதிக்கப்பட்ட சுவற்றில் ஏறிக்கொண்டிருந்தனர். இருவரின் பெற்றோரும், கீழே நின்று அதைப் பார்த்துக்கொண்டிருந்தனர். முதல் குழந்தையின் பெற்றோர், ‘கீழ விழுந்துடாதே, கை வழுக்கிடப்போகுது, கால் சறுக்கிடப்போகுது, பாத்து ஏறு’ என்றெல்லாம் கத்திக்கொண்டிருக்க;…

  • பிள்ளைத் தமிழ் 5

    அறிந்தவர், தெரிந்தவர் வீட்டுப் பிள்ளைகளைக் கொஞ்சும்போது, சர்வ சாதாரணமாக நாம் கேட்கும் கேள்வி ‘என்னவாகப்போறே?’ என்பது. அந்தக் குழந்தையும், டாக்டர், கலெக்டர் என்று ஏதேனும் ஒரு பதிலைச் சொன்னதும், நாமும் பாராட்டிவிட்டு அடுத்தக் கேள்விக்குப் போவோம். அதே நேரம், நம் சொந்தக் குழந்தையை நோக்கி, நம்மில் எத்தனை பேர் அந்தக் கேள்வியை மனமாறக் கேட்கிறோம் என்று பார்த்தால், பலரிடம் பதில் இருக்காது. அப்படியே இருக்கும் என்றாலும், அக்குழந்தை சொல்லும் விஷயங்களை நாம் நம்பிக்கையோடு ஒப்புக்கொள்கிறோமா என்றெல்லாம் யோசித்துப்…

  • பிள்ளைத்தமிழ் 4

    நமது குழந்தைகள் யாரோடு அதிக நேரம் செலவழிக்கிறார்கள் என்று கேட்டால், சந்தேகமே இல்லாமல் பெற்றோர்களாகிய நம்மோடுதான். ஆனால், அதில் எவ்வளவு நேரம் பயனுறு நேரம் என்ற கேள்விக்குப் பெரும்பாலான பெற்றோரிடம் பதில் இருக்காது என்றே நினைக்கிறேன். பயனுறு நேரம் என்றால் என்ன? பல் தேய்த்தல், குளித்தல், சாப்பிடுதல் போன்ற அன்றாடச் செயல்பாடுகள், வீட்டுப்பாடம் செய்ய வைப்பது போன்ற படிப்பு சார்ந்த வேலைகள் என, இதில் பாதிக்கும் மேற்பட்ட நேரம் கழிந்துவிடும். அதுபோக, மீதமுள்ள நேரத்தில் குழந்தைகளுடனான நம்…

  • பிள்ளைத்தமிழ் 3

    தொழில் சார்ந்து, நான் பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களுடன் உரையாடுவது உண்டு. அத்தகைய சந்தர்ப்பங்களில், இன்றைய இளம் வயதுடையோரின் எண்ணங்கள் என்ன மாதிரி இருக்கின்றன, அவர்களுக்கு தங்களைப் பற்றியும், தங்கள் குடும்பத்தினரைப் பற்றியும், இச்சமூகம் பற்றியெல்லாம் என்ன நினைக்கிறார்கள் என்பதை கொஞ்சம் அறிந்தவனாக இருக்கிறேன். இன்றைய பல பெற்றோர் முக்கியமானதாகக் கருதும் விஷயங்களில் ஒன்று, பிள்ளைகளுக்கு அறிவுரைகள் + நீதி போதனை வேண்டாம். படித்து நிறைய மதிப்பெண்கள் வாங்கி, நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளைத்…

  • பிள்ளைத்தமிழ் -2

    எனது உறவினர் ஒருவர், குடும்ப வாட்ஸ் ஆப் குழுமத்தில் தனது மகன் பத்தாம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்களை வெளியிட்டிருந்தார். 97 சதவீதம் பெற்றிருந்தான் அவன். 3 சதவீதம் குறைந்ததற்கு அவனது இதர ஆர்வங்களே காரணம் என்று ஒரு பட்டியலைப் போட்டு அங்கலாய்த்திருந்தார். பலரும் பலவிதத்தில் அவருக்கு ஆறுதல் கூறிக்கொண்டிருந்தனர். இன்றைக்குப் பெற்றோர் எவ்வளவு மாறிப்போய் உள்ளனர் என்பதைக் கண்டு எனக்கு வியப்பு ஏற்பட்டது. நானெல்லாம் படிக்கும்போது, நல்ல மார்க் எடு என்றும், பாஸானால் போதும் என்றெல்லாம் சொல்வார்களே…

  • பிள்ளைத் தமிழ்..!

    எனது தோழி ஒருத்தியின் பெண், இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி இருந்தாள். அவளுக்கு ஒரே பெண். நாங்கள் அவள் இல்லத்துக்கோ, அல்லது அவள் எங்கள் வீட்டுக்கோ வரும் சந்தர்ப்பங்களில் எல்லாம், தன் பிள்ளையைப் பற்றி புலம்பியபடியே இருப்பாள் தோழி. ‘எப்படியாச்சும் ஒரு டிகிரிய படிக்கவெச்சிட்டா போதும். ஒரு கல்யாணத்தைக் கட்டிவெச்சிடலாம். படிப்பே வரமாட்டேங்குது’ என, விதவிதமான புகார்ப் பட்டியலை வாசித்தபடியே இருப்பாள். அவளது குழந்தை, ஆங்கிலவழிக் கல்வியான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டதில் படிப்பவள் என்பதால், ஊடரங்கு…

  • அவசியமான முன்னெடுப்பு

    டெம்பிள் கிராண்டின்(Temple Grandin) கொலராடோ பல்கலைக்கழகத்தின் கால்நடை அறிவியல் துறையில் ஒரு பேராசிரியர். ஆட்டிச நிலையாளரான இவர் தனது சிறுவயதில் பல்வேறு வகையான சென்சரி பிரச்சனைகளை சந்தித்தவர். நல்வாய்ப்பாக தனது தகவல் தொடர்பாற்றலை மேம்படுத்திக் கொண்டு நிகர் சராசரி வாழ்வை(near normal life) அடைந்த சாதனையாளர். சிறுவயதில் அவருக்கு இருந்த எண்ணற்ற சிக்கல்களில் ஒன்று தொடு உணர்வைப் புரிந்து கொள்வதில் உள்ள குழப்பம். அதாவது எதை இறுகப் பற்றுவது, எதை மென்மையாகப் பற்றுவது என்ற புரிதல் இல்லாமல்…

  • அடி!அடி!அடி!

    எழுத்தாளர் ஜெயமோகன்அவர்கள் எழுதாப் பயணம் நூலினைக்குறித்து எழுதிய பதிவு இது   ஆட்டிச வளர்ச்சிக் குறைபாடு  கொண்ட சிறுவனாகிய கனியை ஒரு தனியார் பராமரிப்பாளரிடம் சிலநாள் அனுப்புகிறார்கள் அவன் பெற்றோர். அதன்பின் ‘அடி’ என ஒலிக்கும் எச்சொல்லைக் கேட்டாலும் அவன் வெறிகொண்டு  ’அடி! அடி! அடி!’ என கூவியபடி தன்னைத்தானே கைகளால் அடித்துக்கொள்கிறான். அங்கே அவனை அவர்கள் அடித்திருக்கிறார்கள். அடி என்னும் சொல்லுடன் அவன் அச்செயலை இணைத்துக்கொண்டிருக்கிறான். அதன்பொருள் அவனுக்குத்தெரியவில்லை லக்ஷ்மி பாலகிருஷ்ணனின் எழுதாப்பயணம் ஓர் அன்னையின்…

  • சின்னச் சின்ன ஆசை :2 (கனியின் தோழன்)

    ஆட்டிச நிலையாளர்கள் பெரும்பாலும் ஏதாவதொரு கற்பனையில் சஞ்சரித்துக் கொண்டிருப்பார்கள். கண்களை கண் கொண்டு நோக்குவது, முகம் பார்த்து புன்னகைப்பது போன்ற செயல்களை இவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. இப்படி இருப்பவர்களை எவர்தான் விரும்புவர். அதனாலேயே இவர்களுக்கு நண்பர்கள் வாய்ப்பது என்பது அரிது. பக்கத்தில் இருக்கும் ஒருவனை மதிக்காமல் கற்பனையில் மிதந்து கொண்டிருப்பவனை எந்த நண்பன் ஏற்றுக்கொள்வான். நட்பு என்பது ஒருவழிப் பாதை அல்லவே. இருவரும் பரஸ்பரம் பேசி சிரித்து பகிர்ந்துகொண்டால் மட்டுமே நல்ல நட்பு வளரமுடியும். இதன் காரணமாகவே…