Category: கட்டுரை

  • கல்வி: எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்

    அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், அன்னயாவினும் புண்ணியம் கோடி, ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல். பாரதியின் இந்த வரிகளுக்கு மேலதிக விளக்கம் தேவையில்லை. ஆனால் இதில் வரும் ஏழை என்பது பொருளாதாரரீதியில் வறுமையில் இருப்பவர்களை மட்டுமே குறிக்கும் ஒரு சொல்தானா? கல்வியை நோக்கி வரமுடியாத எல்லா இயலாமைகளையும் இச்சொல் அரவணைப்பதாகக் கொண்டால் உடல்ரீதியிலும் அறிவுவளர்ச்சியிலும் இயலாமை கொண்ட எல்லா சிறப்புக் குழந்தைகளுக்கும் கல்வி அளிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ளலாம். உடல் மற்றும் அறிவு…

  • மாற்றுத்திறன் குழந்தைகள் மற்றும் அவரது பெற்றோரின் சுயமரியாதை

      அரங்கில் நிறைந்திருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அறிவுசார் பலவீனங்கள்(Intellectual Impairment) எனும் குடையின் கீழ் பல்வேறு குறைபாடுகள் பட்டியலிடப் பட்டுள்ளன. பொதுவாக சமூகம் “லூசு” என்ற ஒற்றை வார்த்தையில் அடக்கிவிடும் இந்தப் பட்டியலில் இருக்கும் எண்ணற்ற குறைபாடுகளைப் பற்றி இங்குள்ள நண்பர்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? கற்றல் குறைபாடு, ஆட்டிசம், டவுன் சிண்ட்ரோம், செரிபரல் பால்சி, மனவளர்ச்சிக் குறைபாடு என நீளும் பட்டியல் சற்றே பெரியது. இந்த உலகில் இருக்கும் எல்லாக்…

  • நனி சைவம் ட்ரை பண்ணலாமா?

    இது என்ன புதுசா இருக்கே என்று பார்க்கிறீர்களா? வீகேன்(Vegan) என்று ஆங்கிலத்தில் சொல்லுவதைத்தான், தமிழில் நனி சைவம் என்கிறார்கள். நம்மில் பலரும் அறிந்தது சைவம், அசைவம் மட்டுமே. ஆனால் மாறி வரும் உலகில் மாறாதது எதுவுமிருக்க முடியாது என்பதைப்போல, சைவ உணவு பழக்கத்திற்குள்ளேயே தீவிரமான சைவப்பிரிவு தான் இந்த நனி சைவம். இன்றைக்கு உலகின் பல பகுதிகளிலும் கடைபிடிக்கப்பட்டு வரும் இப்பழக்கம், உணவிலிருந்து வாழ்க்கை முறையாக மாறி நனி சைவக் கோட்பாடாக (வீகேனிஸம்) பரவி வருகிறது. பொதுவாகச்…

  • திக்குவாய் – சரியாகப் பயிற்சியும் முயற்சியும் போதும்!

    திக்குவாயன் பாலா.. இப்படித்தான் படிக்கும் காலங்களில் பள்ளி, தெரு எல்லா இடங்களிலும் அழைக்கப்பட்டேன். ஒரு வயதுக்குள்ளாகவே பேச்சு வந்த குழந்தைகளில் நானும் ஒருவனாக இருந்திருக்கிறேன். ஒன்னரை வயது நடந்து கொண்டிருந்த போது, வீட்டில் இருந்த சைக்கிள் தலையில் விழுந்து, பலத்த அடிபட்டுவிட்டது. அள்ளிப்போட்டுக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார்கள் பெற்றோர். பதிநான்கு தையல் போட்டு விட்டு, ”பையனுக்கு இனி பேச்சு வரும்னு சொல்ல முடியாது. பிள்ளையைக் காப்பாற்றியதே பெரிசு” என்று மருத்துவர்கள் சொல்லி விட்டார்கள். சுமார் ஓராண்டு எதுவும் பேசாமல்…

  • தொட்டுத்தொட்டு ஓடிவா!

    இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் நாம் ஓடிக்கொண்டே இருக்கிறோம். எதற்கும் நேரமில்லை நம்மிடம். நட்பு, அன்பு, உறவுகள் என எல்லாவற்றின் இடங்களையும் மின்னனுப்பொருட்கள் பிடித்துக்கொண்டுவிட்டன. சில ஆண்டுகளுக்கு முன்வரை உறவினரின் வீட்டுக்குப்போகிறோம் என்றால், தொலைக்காட்சியில் ஏதேனும் ஒரு நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருக்கும். விளம்பர இடைவேளையின் போதுதான் நம்மிடம் பேசுவதற்கு திரும்வார். இன்று பலரின் வீட்டுக்கு வரும் விருந்தினர்களோடு, பேசத்துவங்கிய சில நிமிடங்களிலேயே, வைபை பாஸ்வேர்ட் தான் கேட்கிறார்கள். இப்படி மின்னனுப்பொருட்களால் சூழப்பட்டுள்ள நம் வாழ்வில் பாதிப்புக்களை உணர்வது குழந்தைகள்…

  • ஹிரோஷிமாவின் நெருப்பு (நூல் அறிமுகம்)

    இன்று உலகம் முழுவதும் பிற உயிர்கள் குறித்து சிறிதும் அக்கறையின்றி  கோரமான முறையில் மனித உயிர்களைக் காவு வாங்கிக்கொண்டிருக்கிறது வன்முறை. அதிகார போதை, அடிமைப்படுத்தும் எண்ணம், மதம் மற்றும், சாதி என வெவ்வேறு முகமூடிகளில் இப்பாதகச்செயல் நடந்துகொண்டிருக்கிறது. கொத்துக்கொத்தாக மனித உயிர்கள் மாண்ட வரலாற்றினை நாம் உலக யுத்தம் என்ற பெயரில் படித்திருப்போம். அப்படி இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா வீசிய அணுகுண்டு ஜப்பானின் ஹிரோஷிமாவையும், நாகசாகியையும் சின்னாபின்னமாக்கியது. அந்த இரண்டாம் உலக யுத்தம் பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களைத்…

  • எனக்கு கிடைத்த சுதந்திரத்தை என் மகனுடன் பகிர்ந்தேன் – நேர்காணல் ஞாநி

      உங்களின் சிறு வயது பற்றிச்சொல்லுங்களேன்! நான் இன்னும் கூட உள்ளுக்குள் சின்னப் பையன் தான். (சிரிக்கிறார்). அதனால அரசியல் சட்டப்படியான சின்ன வயசான 5 வயதுக்கு கீழே இருந்தப்ப எனக்கு என்ன நடந்துதுச்சுன்னு வேணா பேசலாம்.  கொஞ்சம் சிக்கல் இருந்தது. அதைக் கூட பின்னாலதான் உணர்ந்தேன் . அப்பாவுக்கு இரண்டு மனைவியர். நான் இரண்டாவது மனைவியின் பிள்ளை. ஆனால் என்னோட இருபதாவது வயது வரைக்கும் ஒரே குடும்பத்தில் எல்லோரும் ஒன்றாகத்தான் வாழ்ந்தோம். மூணு அண்ணன், ஒரு…

  • உழைப்புக்கு மரியாதை!

    உழைப்பின் பயனை குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள் என்று உங்களிடம் சொன்னால், சண்டைக்கு வந்தாலும் வருவீர்கள்! படிக்கிற பிள்ளைக்கு இப்போ எதற்கு உழைப்பு பற்றி எல்லாம் என்று கேள்வி தோன்றலாம். உண்மையில் நாம் சொல்லவரும் உழைப்பு என்பது, நீங்கள் நினைக்கிற மாதிரியான உழைப்பு மட்டுமல்ல! என்னடா இது கட்டுரையின் தொடக்கத்திலேயே குழப்புகிறேன் என்று நினைக்க வேண்டாம். மேற்கொண்டு படியுங்கள்.. உழைப்பு உயர்வு தரும்! உண்மை. இது நம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால், எந்த உழைப்பு உயர்வு தரும்…

  • சுத்தம் சொல்லிக் கொடுங்க!

    சுத்தம் சோறு போடும்! “ அப்ப குழம்பு எது ஊத்தும்?”னு வேடிக்கையா கேட்குறது நம்மில் பல ஆளுங்க வழக்கம். ஆனால் உலகம் முழுவதும் ஆண்டுக்கு 29 லட்சம் குழந்தைகள் சுகாதாரமின்மையால் இறந்து போகின்றனர் என்று ஒரு புள்ளி விபரம் சொல்கிறது. இதில் ஐந்து லட்சம் பேர் இந்தியக் குழந்தைகளாம்! பதினைந்து வயது வரையிலான சிறார்களுக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்படக் காரணம் சுகாதாரமின்மையே என்று உலக சுகாதார நிறுவனம் ஒர் அறிக்கையில் சொல்கிறது. இன்று பள்ளி செல்லும்…

  • ஐந்திலேயே வளையட்டும்!

    கட்டுரைக்குள் செல்லும்முன் கொஞ்சம் கொசுவர்த்தியைச் சுற்றிக்கொள்ளுங்கள். சில ஆண்டுகளுக்குமுன், பள்ளி விட்டு வீட்டுக்கு வரும் பிள்ளை, பள்ளிப்பையைத் தூக்கி எறிந்துவிட்டு நண்பர்களோடு விளையாட, தெருவில் இறங்கி ஓடிவிடுவான். அவனை வீட்டுக்குள் கொண்டுவந்து சாப்பிட வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். பள்ளியின் வகுப்பறையிலும், வீட்டுப்பாடம் செய்யும்போதும் மட்டும்தான் ஒரே இடத்தில் அன்றைய பிள்ளைகள் இருப்பார்கள். (நீங்கள் மட்டும் உங்களின் சிறுவயதில் எப்படி இருந்தீர்களாம்?) இப்போது இன்றைய பிள்ளைகளை, கொஞ்சம் கவனியுங்கள். காலையில் எழுந்து பள்ளிக்குச் சென்றுவிட்டு மதியத்திற்கு மேல்…