Category: கட்டுரை

  • தகவல் அறியும் உரிமைச்சட்டம்- ஓர் அறிமுகம்

    தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ம் ஆண்டு இயற்றப்பட்டது. இச்சட்டத்தை சரியாக பயன்படுத்துவதன் மூலம் லஞ்சம் மற்றும் ஊழலை பெருமளவு கட்டுப்படுத்த முடியும். சட்டம் எதற்கு? அரசு அலுவலகங்கள் பொது மக்களுக்கு தகவல் சொல்லக் கடமைப்பட்டிருந்தாலும் இச்சட்டம் இயற்றப்படுவதற்கு முன் நீங்கள் கேட்கும் தகவலை அவ்வளவு எளிதில் பெற இயலாது. நீங்கள் தகவல் கேட்டு அனுப்பும் கடிதம் குப்பைக்கு கூட செல்லும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இச்சட்டம் இயற்றப்பட்ட பிறகு தகவல் தர மறுத்தால் சட்டத்தை மீறுவதாகும்.…

  • ஆட்டிசம் – பத்தியமும், ஒவ்வாமையும்

    பொதுவாகவே ஆட்டிசம் பாதிப்புக்குள்ளான குழந்தைகளுக்கு சில பத்திய முறைகளை பலரும் சொல்லி வருகிறார்கள். அதே போல, ஒவ்வாமை என்பதும் இக்குழந்தைகள் சந்திக்கும் பெரிய சவால்களில் ஒன்று. அவற்றைப் பற்றி சிறு அறிமுகத்தை எளிமையாக கொடுக்க முயன்றிருக்கிறேன். GFCF டயட் சில ஆய்வாளர்கள் ஆட்டிசத்திற்கும் ஜீரணக்கோளாறுகளுக்குமான தொடர்புகளை ஆய்ந்து வருகிறார்கள். க்ளூட்டின் (gluten) மற்றும் கேசின் (casein) எனப்படும் இரு வகைப் புரோட்டீன்களை ஜீரணிக்க சிரமப்படும் இவர்களின் குடல் அப்புரோட்டீன்களை சரியாக ஜீரணமாகாத நிலையில் ரத்தத்தில் கலக்க விடுவதால்…

  • ஆட்டிசம் – சென்சரி பிரச்சனைகள் (Sensory Problems) பாகம்-5

    சென்சரி பிரச்சனைகளால் குழந்தைகளின் நடவடிக்கையில் ஏற்பட சாத்தியமுள்ள மாற்றங்களும், அதற்கு சில தீர்வுகளும்: மிகச் சில உணவு வகைகளை மட்டுமே உண்பது: சில வகை உணவுகளின் கட்டமைப்பு (கொழ கொழப்புத் தன்மை, கரடு முரடாக இருப்பது etc) அக்குழந்தைகளுக்கு பிடிக்காது போகலாம். முதலில் அவர்களுக்குப் பிடித்த வகையிலேயே உணவுகளை கொடுக்க வேண்டும். மெல்ல மெல்ல மற்ற வகை உணவுகளுக்கு அவர்களது வாயை பழக்க வேண்டும். வாயின் மூலம் செய்யக் கூடிய சோப்பு நுரைக்குமிழ்(பபிள்ஸ்) விடுவது, ஊதல் கொண்டு…

  • ஆட்டிசம் – சென்சரி பிரச்சனைகள் (Sensory Problems) பாகம்-4

    (சென்சரி பிரச்சனைகள் பாகம்-3ன் தொடர்ச்சி) சென்சரி பிரச்சனைகள் உடையவர்களுக்கு உதவ சில வழிமுறைகள்: இந்த வழிமுறைகள் எல்லாமே எல்லாக் குழந்தைகளுக்கும் பொருந்துவன அல்ல. தெரபிஸ்ட், பெற்றோர் ஆகியோர் கலந்து பேசி குழந்தையின் தேவைக்கேற்ப இங்கே கீழே தரப்பட்டுள்ள விஷயங்களையோ அல்லது அது போன்ற அவர்கள் அறிவுறுத்தும் மற்ற செயல்களையோ முயற்சிக்கலாம். பார்வை தொடர்பான சென்சரி உடையோருக்கு: ஃபுளோரசண்ட் விளக்குகளை தவிர்க்கலாம். குளிர் கண்ணாடி  அணிய பழக்கலாம். திரைச்சீலைகளை பயன்படுத்தி குழந்தைக்கு உறுத்தாத அளவுக்கு ஒளியை குறைக்கலாம். ஒலி…

  • ஆட்டிசம் – சென்சரி பிரச்சனைகள் (Sensory Problems) பாகம்-3

    (சென்சரி பிரச்சனைகள் பாகம் 2ன் தொடர்ச்சி) கடந்த பகுதியில் ஏழுவகையான பிரிவுகள் என்னென்ன என்று பார்த்தோம். அவற்றிலும் கூட இரண்டு நிலைகள் இருப்பதை உணர்ந்துகொண்டோம். இதில் அந்த ஏழுவகைப் பிரிவுகளையும், அதன் நிலைகளையும் பற்றிப் பார்ப்போம். பார்வை (Sight): இதற்கான உணர்வு வாங்கிகள்(sensory receptors) கண்ணின் ரெட்டினாவில் உள்ளது. இவை ஒளியினால் தூண்டப்படுபவை. இதன் மூலம் நாம் ஒரு பருப்பொருளின் அளவு, நிறம், வடிவம் முதலியவற்றை உள்வாங்குகிறோம். இந்த உணர்வைப் பெறுவதில் ஆட்டிச பாதிப்புடையோர் பின்வரும் சிக்கல்களை,…

  • ஆட்டிசம் – சென்சரி பிரச்சனைகள் (Sensory Problems) பாகம்-1

    நமக்கு சிறுவயது முதல் கற்பிக்கப்பட்ட பழக்கங்களில் ஒன்று தான் தீபாவளி மாதிரியான பண்டிகை நாட்களில் வெடிவெடித்துக்கொண்டாடுவது. பண்டிகைக்காலம் என்றிலாமல் இப்போதெல்லாம் இழவு ஊர்வலத்தின் போதும், கிரிக்கெட்டில் வெற்றி கிடைக்கின்ற போதும் ஏன்.. நம் மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாகக் கூட பட்டாசு வெடிப்பதை சொல்ல முடியும். ஆனால்.. இந்த பட்டாசு வெடிச்சத்தம் சிலரை நிலைகுலைய வைக்கிறது, அதுவும் அவர்களின் இயல்பு நிலை மாறி, கோபமூட்டி, கட்டுக்குள் அடங்காத வெறிகொண்டவர்களாகவும், தூரத்தில் கேட்கும் பட்டாசு ஒலிக்குக்கூட தூக்கித்தூக்கி போடுபவர்களாகவும் சிலர்…

  • தெரிந்ததும்.. தெரியாததும்- தாராவி

    தாராவி குடிசைப்பகுதியா? மும்பையில் இருந்த சமயங்களில் என்னை அதிகம் கவர்ந்த பகுதிகளில் தாராவியும் ஒன்று. எங்கு பார்த்தாலும் தமிழில் சாயல் முகங்கள்.. வேட்டி, சேலைகளில் மனிதர்கள், மனுசிகள்.., சத்தமாக தேனீர்கடையில் கேட்கும் தமிழ் பாடல்கள், தமிழில் பெரிய பெரிய விளம்பரப் பலகைகள்.. என்று எங்கு பார்த்தாலும் தமிழ்நாட்டின் ஏதோவோரு நகரத்தை.. பார்ப்பவரின் பார்வைக்கேற்ப காட்டும் பகுதி தாராவி. தமிழ்நாட்டுக்கே வந்து விட்ட உணர்வை அது தோற்றுவிக்கும். அப்படிப்பட்ட தாராவி குறித்து… “ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதி; இரண்டாம்…

  • தெரிந்ததும்.. தெரியாததும்- பீடி தொழில்

    என் சிறு வயதில் எங்க ஊரில் ஓர் அப்பத்தா பீடி புகைத்து பார்த்திருக்கிறேன். ஆரம்பகாலத்தில் தாத்தாவோடு சேர்ந்து சுருட்டு புகைத்தாராம். அவரின் மறைவுக்குப் பின் பீடிக்கு மாறியவர் அப்பத்தா! குறைந்தது ஒரு நாளைக்கு எட்டு முதல் பத்து பிடிகள் வரை புகைப்பார். ஆனாலும் அவருக்கு சளி கட்டியோ, இருமல் இருந்த மாதிரியோ நினைவில் இல்லை. ராமேசுரத்திற்கு சுற்றுலா வரும் உ.பி மற்றும் ராஜஸ்தான் மாநில விவசாய மக்கள் பலரும் ஆண்,பெண் பாகுபாடில்லாமல் புகைத்து மகிழ்வதை பார்த்திருக்கிறேன். இன்றைய இந்தியாவில்…

  • ஆட்டிசம் – சரியும் தவறும்

    ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸாடர் என்பதை தமிழில் மதியிறுக்கம் என்றும் மனயிறுக்கம் என்று சொல்கிறார்கள். வேறு சிலரோ ‘தன்முனைப்பு குறைபாடு’ என்று சொல்லுகிறார்கள். எனக்கும் தன்முனைப்பு குறைபாடு என்பது தான் சரியான சொல்லாகப்படுகிறது. பொதுவாக ஆட்டிசம் குறைபாடுகளை இப்படியானது என்று வரையறுக்க முடியாது. அதே சமயம், இக்குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் இருக்கும். இவர்களில் அனேகரும் ஒரு குடையின் கீழ் கொண்டுவரக்கூடிய பிரச்சனை என்றால் அது, ’சென்ஸரி பிரச்சனைகள்’ தான். இப்பாதிப்புக்குள்ளானவர்களை சமன் நிலைக்குக்…

  • ஆட்டிசம் – உட் பிரிவுகள்

    கடந்த பகுதியின் இறுதியில் ஆட்டிசம் குறித்து நிலவும் தவறாக கருத்துக்களை அடுத்த பகுதியில் பார்ப்போம் என்று சொல்லி இருந்தேன். அதற்கு முன், ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸார்டர் எனும் பெயருக்கடியில் வரும் எல்லா குறைபாடுகளையும் பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை அவசியமாகிறது. அதனால் முதலில் அதைப் பற்றி அறிந்துகொள்வோம்! ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸார்டர் (ASD) எனும் பெரிய குடையின் கீழ் குழந்தைகளில் மூளை வளர்ச்சியில் ஏற்படும் பல்வேறு சிக்கல்கள் தொடர்பான குறைபாடுகள் வகைப்படுத்தப்படுகின்றன. எல்லாவற்றுக்கும் எப்போதும் தனித்தனி பெயர்…