Category: கவிதை

  • ஆட்டிசம்: சில புரிதல்கள்- நூல் வெளியீடு அழைப்பிதழ்

    எங்கள் பையனின் வளர்ச்சி எல்லாம் சரியாகத்தான் இருந்ததாக நாங்கள் நம்பிகொண்டிருந்தோம். ஒன்னரை வயதில் மருத்துவரும், ஓர் ஆட்டிசக்குழந்தையின் தகப்பனாகிய நண்பர் ஒருவரும் தான் கனி கண்ணோடு கண் பார்க்கவில்லை அதனால் ஆட்டிசக் குறைபாடு இருக்கலாம் என்று சந்தேகத்தைச் சொன்னார்கள். தொடக்கத்தில் நாங்கள் நம்பவில்லை. அதற்கு காரணமுமிருந்தது. பொதுவாக ஆட்டிசக் குழந்தைகள் யாரையுமே கண்ணோடு கண் காண்பதில்லை. ஆனால் கனியோ எங்களிருவரையும் கண் பார்த்துச்சிரிப்பான். அதே சமயம் வீட்டுக்கு வந்துபோகும் நண்பர்களையோ உறவினர்களையோ அவன் நேரடியாகப் பார்ப்பதில்லை. இது…

  • ஆட்டிசம் – சென்சரி பிரச்சனைகள் (Sensory Problems) பாகம்-2

    ”இப்படி சமநிலை குலைகையில் நான் மிகவும் வினோதமாக நடந்து கொள்கிறேன். ஒரே நேரத்தில் 40 தொலைகாட்சி அலைவரிசைகளை ஒருசேரப் பார்த்தால் எப்படியிருக்குமோ அது போல் குழப்பமாகவும், அசௌகரியமாகவும் உணர்கிறேன்”  – சென்சரி ஓவர் லோட் எனும் நிலையைப் பற்றிய ஒரு ஆட்டிச பாதிப்புடையவரின் வாக்குமூலம் இது. நம்மைப் போல சராசரி வாழ்கை வாழும் மனிதர்களுக்கு இந்நிலையைக் கற்பனை செய்து கொள்வது கூட சிரமம்தான். கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும் மூளையுடன் கொண்டுள்ள தொடர்பை…

  • தகப்பனாய் உணர்தலும் சுகமே!

    — உறக்கத்தில் கடிகார முட்கள் போல கட்டிலில் சுற்றி வந்தாலும் பசியெடுக்கும் நடுசாமத்தில் சரியாக அவன் அம்மாவை அடையாளம் கண்டு எழுப்பி விடுகிறான் பசியை உணர்ந்தவள் தாய் தான் என எப்படித்தான் உணர்ந்துகொள்கின்றனவோ குழந்தைகள் — இன்னுமா உன் மகன் பேசவில்லை என்ற சுற்றத்தாரின் கேள்விக்கு பயந்து உயிரற்றவைகளையும், உயிருள்ளவைகளின் பெயர்களையும் சொல்லிக்கொடுக்கிறேன் தினம் அவனுக்கு. சொற்களற்ற அவனது உலகத்தில் பெயர்கள் அழிந்து வெறும் சப்தங்களாக வெளியேறுகின்றன அவனிடமிருந்து — தோற்றுப்போன முயல் கதையும் தந்திரக்கார நரி…

  • கவிதைகள்..

    பார்வைகள் கத்தியின் பிடிகளை ஆராய்கிறாய் நீ அது பட்டுப்போய் வந்திருக்குமா பச்சையாய் வந்திருக்குமாவென யோசிக்கிறதென் மனம். ~~~~ இருப்பு மடக்கிய குடையுடன் பேசியபடியடைந்தோம் மரத்தடியை மழை இப்போது தூறலாய். ~~~ அடையாளம் தூசுகளால் நிறைந்த கண்ணாடி கதவில் பெயரெழுதிச் செல்கிறது கோடைச்சாரல். ~~~ இலக்கு உனக்கும் எனக்குமான பாதை ஒன்றுதான் ஆனால் எதிரெதிர் திசைகளில் போய்க்கொண்டிருக்கிறோம் நான் வாருவதற்குள்ளாக நீயும் நீ வருவதற்குள்ளாக நானுமென என்றாவதொரு நாள் நேரெதிராய் சந்திக்க நேரும் போது ஒரே திசையை நோக்கியிருக்கும்…

  • கல்யாணியக்கா

    கல்யாணியக்காவின் பதினாறாம் வயதில் என்னை பெற்றெடுத்தாள் அம்மா. பாலூட்டி, குளிப்பாட்டி, சீராட்டி என்னை வளர்த்ததெல்லாம் கல்யாணியக்காதான். விபரம் தெரிந்த நாளிலிருந்தே அப்பா வேலைக்கு போய் பார்த்ததில்லை. அண்ணனும் வீட்டுக்கென பணம் செலவழித்ததில்லை. அதனால் எப்போதும் முணுமுணுப்புகள் அதிகமாகவே இருக்கும் வீட்டில். சம்பள நாளான மாதத்தின் ஏழாம் தேதி அன்று மாத்திரம் அமைதியாக அவளின் வருகையை ஏதிர் நோக்கி காத்திருப்பார்கள் எல்லோரும். தலைகுளித்து வந்ததும், காதோர நரை முடிகளை லாவகமாக மறைக்க முயலும் கல்யாணியக்காவிடம் அம்மா சொன்னாள், நாளைக்கு…

  • நீ நான் மற்றும் கடவுள்

    படம் நன்றி :- நண்பர் இளவஞ்சி இங்கேயும் போகலாம்.. நீ நான் மற்றும் வெட்கம் நீ நான் மற்றும் முத்தம்

  • நீ நான் மற்றும் வெட்கம்

    படத்தை பெரியதாக்கி பார்க்க அதன் மேல் க்ளிக்கவும்! 🙂 மேலும்.. நீ நான் மற்றும் கடவுள் நீ நான் மற்றும் முத்தம்

  • நீ நான் மற்றும் ஒரு முத்தம்

    மேலும்.. நீ நான் மற்றும் வெட்கம் நீ நான் மற்றும் கடவுள்

  • சொற்களற்ற சூன்யவெளியில்..

    ஒருபோதும் சோர்ந்து போனதில்லை மனிதர்களிடம் பேசும் பொழுதுகளில் சோகங்கள் துரோகங்கள் வருத்தம் மகிழ்ச்சி என எதுபற்றியேனும் பேசிக்கொள்ள நேர்ந்திருக்கிறது பல சமயங்களில் முன் சிரித்து பின் கூறு போடுபவர்கள் இருக்கின்ற போதிலும் இவர்களை ஒதுக்கிவிட தோன்றியதில்லை பூனை,நாய்,கிளி ஏன் கடவுள்களே கூட பதில் பேசாமலிருக்கையில் ஏதாவது பேசும் மனிதர்களை புறந்தள்ள முடிவதில்லை.