Category: குழந்தை வளர்ப்பு

  • பெற்றோரின் கனவுகளை பிள்ளைகள் சுமக்கத்தான் வேண்டுமா?

      கண் விழித்தபோது, படுக்கையில் இருந்தாள் பவித்ரா. கை, கால் எல்லாம் நடுங்கிக்கொண்டிருந்தது. எட்டு வயதான பவித்ரா மயங்கி விழுந்துவிட்டாள். அந்தச் சம்பவத்தை நினைத்துப் பார்த்தாள்.  இத்தனை பேர் முன்னிலையில் இப்படி ஆகிவிட்டதே என்பதைவிட,  அம்மா அப்பா என்ன சொல்வார்களோ என்று நினைக்கையிலேயே பயம் அதிகரித்தது. அதே சமயம், அம்மாவும் அப்பாவும் டாக்டரிடம் பேசிக்கொண்டிருந்தார்கள். கண்டிப்பாக பவித்ராவுக்கு நல்ல ஓய்வு தேவை என்று மருத்துவர் சொல்லிக்கொண்டிருந்தார். “இவ்வளவு சின்னக் குழந்தைக்கு மன அழுத்தம் வந்திருக்கிறது. அதனால்தான் மயங்கி…

  • படுக்கையை நனைத்தல் குற்றமல்ல!

    இன்று அனேக வீடுகளில் பெற்றோர் சந்திக்கும் சங்கடங்களில் ஒன்று, படுக்கையில் குழந்தை சிறுநீர் கழித்தல். இதைச் செய்யும் குழந்தையிடம் பல பெற்றோர் நடந்துகொள்ளும் விதம், கொஞ்சம் முரட்டுத்தனமாக இருக்கிறது. ஆனால் படுக்கையில் சிறுநீர் கழிப்பதென்பது, குழந்தைப் பருவத்தில் பல குழந்தைகள் செய்யும் காரியம்தான். இது இயல்பான ஒன்றுதான்! கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், உறங்கச் செல்லும்போதே, இன்று படுக்கையை நனைத்துவிட்டுத்தான் மறு வேலை என்று எந்தக் குழந்தையும் முடிவு கட்டிக்கொண்டு வருவதில்லை. படுக்கையை ஈரமாக்கும் குழந்தைக்கு, ஒருவித குற்ற…

  • ஆட்டிசம் – பெற்றோர்களுக்கான 10 யோசனைகள்

    உண்மையை ஒப்புக் கொள்ளுவோம் அனேக பெற்றோர் தங்கள் குழந்தைக்கு ஆட்டிசம் என்று தெரிந்தும், அப்படியெல்லாம் இல்லை. என் பிள்ளைக்கு வெறும் ஹைப்பர்தான், லேர்னிங் டிசபிலிட்டி மட்டுந்தான் என்றெல்லாம் பிறரிடமும், தம் மனதுக்குமே கூட நிறுவ முயற்சிப்பது வேண்டாம். உரக்கச் சொல்வோம் நாமே முன்வந்து பிள்ளையின் குறைபாட்டை வெளிப்படையாக பேசுவது நல்லது. அக்கம் பக்கத்தவர் தொடங்கி, ரயில் ஸ்நேகம் வரை அனைவரிடமும் நம் பிள்ளைக்கு இருக்கும் வளர்ச்சிக் குறைபாட்டினை நாமே முன் வந்து சொல்லிவிடுவது சரியாக இருக்கும். 3.…

  •  பாராட்டு அவசியம்!

    சின்னச் சின்ன பாராட்டுக்கள், பெரிய பெரிய செயல்களுக்கு அடித்தளமாக அமையும் என்பதை நாம் நினைவில் வைத்திருப்பது நல்லது. ‘இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் அதெற்கெல்லாம் எங்கே சார் நேரமிருக்கிறது?’ என்று சொல்வோர் அதிகமாகிவிட்டனர். அது உண்மையாகவும் இருக்கலாம். அவர்களுக்காகவே கட்டுரைக்குள் நுழையும்முன், ஒரு சின்னக் கதையைப் பார்த்துவிடுவோம் நாம். அதன்பின் தலைப்புச்செய்திக்கு நாம் திரும்பலாம்.   தங்களின் ஓரே பையனை பள்ளியில் சேர்க்க, பல இடங்களைப் பார்த்து கடைசியாக ஒரு பள்ளியை முடிவுசெய்து சேர்த்துவிட்டனர் அந்தத் தம்பதியினர். மூன்று…

  • மகிழ்ச்சியான அப்பா நான் – நடிகர் ப்ருத்விராஜ் நேர்காணல்

    சின்னத்திரை தொடங்கி, பெரிய திரை வரைக்கும் நீண்ட அனுபவம் கொண்டவர் நடிகர் ப்ரித்விராஜ் (என்கிற) பப்லு. கலைத்துறையைக் கழித்துவிட்டுப் பார்த்தால் – அவர் ஒரு அன்பான கணவர், கனிவான தந்தை, பொறுப்பான குடிமகன். செல்லமேவின் ஏப்ரல் இதழுக்காக அவரிடம் நாம் கண்ட நேர்காணல் இது…   செல்லமே: உங்களுடைய வீட்டில் யாரோட ஆட்சி? பப்லு: இதென்னங்க கேள்வி? (சிரிக்கிறார்) எல்லா வீடுகளைப் போலவே எங்க வீட்டுலயும் அம்மாவோட ஆட்சிதான். அப்பா போலீஸ்காரராக இருந்தாலும், சினிமாவுலதான் ஆர்வம் அதிகம்.…

  • ஆட்டிஸம் எனும் குறைபாடு -ரமாமணி சுந்தர்

      ஐக்கிய நாட்டு சபை 2007-ஆம் ஆண்டு நிறைவேற்றிய தீர்மானத்தின்படி, ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 2-ஆம் தேதி உலக ஆட்டிஸம் விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. கோடிக்கணக்கானோரைப் பாதிக்கும் இந்தக் குறைபாட்டைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும்படியும், இந்தக் குறைபாட்டை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்து அதற்கான தக்க நடவடிக்கைகள் எடுக்கும்படியும் உலக நாடுகளை ஐ.நா. சபை கேட்டுக் கொண்டுள்ளது. அன்றைய தினம் சிகாகோ, நியூயார்க் போன்ற முக்கிய நகரங்களின் சரித்திரப் புகழ் பெற்ற கட்டடங்கள், புராதனச் சின்னங்களில் நீல…

  • ஆட்டிசம் : அடுத்து என்ன?

    இன்று உலக அளவில் குழந்தைகளைப் பாதிப்புக்குள்ளாக்கும் குறைபாடுகளில் ஆட்டிசமும் ஒன்று. ஆட்டிசம் என்பது ஒரு நிலை என்று இப்போது சொல்கிறார்கள். அதாவது, இந்த நிலைக்குள் இருப்பவர்கள் வெளியேயும் வரலாம், வராமலும் போகலாம். ஆனால், ஆட்டிசம் ஏன் வருகிறது? எப்படி இதை வராமல் தடுப்பது அல்லது கர்ப்ப காலத்திலேயே கண்டறிய முடியுமா என்று அப்பாவியாக நாம் கேள்விகளை அடுக்கிக்கொண்டே இருக்கிறோம். மருத்துவ உலகில் ஒரு பகுதியினர் இதுமாதிரியான நூற்றுக்கணக்கான கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.…

  • ஃபீனிக்ஸ் சகோதரிகள்

      ‘‘என்னோட சின்ன வயசுல, இப்படி சக்கர நாற்காலியில்தான் வலம்வர முடியும்; யாரையாவது சார்ந்துதான் வாழவேண்டியிருக்கும்னு நினைச்சுக்கூட பார்த்ததில்லை. பத்து வயசு வரைக்கும் சாதாரண குழந்தைகள் போலத்தான் இருந்தேன். ஓட்டம் ஆட்டம்னு வாழ்க்கை இயல்பாகத்தான் போய்க்கிட்டிருந்துச்சு. பத்தாவது வயசுலதான், என்னால மாடிப்படிகளில் சரியா ஏறமுடியவில்லைங்கிறதை கவனிச்சேன்“ என்று பேச ஆரம்பிக்கிறார் வானவன் மாதேவி. மஸ்குலர் டிஸ்ட்ரோபி என்ற தசைச்சுருக்கு நோயால் பாதிக்கப்பட்டவர் இவர். இவரது சகோதரி இயல் இசை வல்லபிக்கும் இதே நோய். ஆனால், இருவரும் தம்…

  • மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் நிப்மெட்

    மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக, மத்திய அரசால், சென்னை அருகில்  முட்டுக்காடில் நடத்தப்பட்டு வரும் தேசிய நிறுவனம்தான், ஒன்றுக்கும் மேற்பட்ட குறைபாடுடையோரின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனம். அது ’National Institute for Empowerment of Persons with Multiple Disabilities’ (NIEPMD). மாற்றுத் திறனாளிகளின் நலனுக்கென அரசு சார்பாகவும், அரசு சாராத தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வாயிலாகவும் பல்வேறு நிகழ்ச்சிகளை நமது அரசு நடத்தி வந்தபோதும், ஒன்றுக்கும் மேற்பட்ட குறைபாடுடையோரின் நலனுக்காகவும் அரசு ஏதேனும் செய்யவேண்டும் என்று தொடர்ந்து…

  • முடிவெட்டிக்கொள்ளுதல் யாவருக்கும் எளிதல்ல

      பொதுவாக குழந்தைகளுக்கு முடிவெட்டுவதென்பது சிரமம். அதிலும் சென்ஸரி பிரச்சனைகளின் ஊடாக வாழும் ஆட்டிச நிலையாளர்களின் கதையைச்சொல்ல வேண்டாம். எங்கள் பகுதியில் எல்லா சலூன் கடைகளிலும் என்னையையும் கனியையும் பார்த்தால், அலறிவிடுவார்கள். அம்புட்டு அலப்பறை கொடுத்திருக்கிறான் பையன். சரி சாதாரண சலூன் கடைகள் தான் பிரச்சனை; கொஞ்சம் உயர்தரத்தில் இருக்கும் பியூட்டிபார்லருடன் இணைந்த சலூன் அழைத்துப்போகலாம் என்று போனால் அங்கேயும் அதே கதைதான். ஒரு பியூட்டி சலூன் விடாமல் எல்லாவற்றியும் அடுத்த தடவை போக முடியாமல் போயிற்று.…