Category: குழந்தை வளர்ப்பு

  • ஆட்டிசம் – வரலாறு

    எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது, தன்னந்தனியே சிரித்துக்கொள்வது, சுற்றக்கூடிய பொருட்களின் மீது ஆர்வமாய் இருப்பது, சக வயதுடைய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எவரிடமும் ஒட்டாமல் பெருங்கூட்டத்தில் தனி ஒருவனாக இருப்பது என்பது ஆட்டிசத்தின் கூறுகளாக நாம் இன்று அறிந்திருக்கிறோம். ஆனால்.. இதை முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட போது அந்த மருத்துவர் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார் என்பதை நினைத்தாலே ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. குழந்தை பிறந்த பின் – காது கேட்காமல் போவது, பேசாத்தன்மை, பார்வைக்குறைபாடு, உடல் உறுப்புகளின் வளர்ச்சிக்குறைபாடு போன்றவற்றை…

  • ஆட்டிசம் – விரைவாக அறிந்துகொள்ள சில எளிய வழிகள்

    ஆட்டிசம் – விரைவாக அறிந்துகொள்ள சில எளிய வழிகள்

    இந்தியாவில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் சரியான புள்ளிவிபரங்கள் இங்கே இல்லை. பெற்றோர் தொடங்கி மருத்துவர்கள் வரை ஆட்டிசம் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை. மேலை நாடுகளோடு, ஒப்பிடும் போது இந்தியாவின் நிலை மோசமாக உள்ளது. இந்தியாவில் வட இந்தியாவோடு ஒப்பிடும் போது, தென்னிந்தியாவின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. தென்னிந்தியாவில் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தின் நிலை மிகவும் கவலைக்கிடமாகவே உள்ளது. ஆட்டிசம் என்பது மூளை தகவல்களை பயன்படுத்திப்…

  • Autism குறித்த விழிப்புணர்வு விளம்பரம்

    விகேன் – என்ற நிறுவனத்திற்காக சூர்யாவும் ஜோதிகாவும் நடித்துக்கொடுத்துள்ள விழிப்புணர்வு விளம்பரப்படம். வீடியோ சுட்டி:- http://video.google.com/videoplay?docid=7308785909724630603

  • நமக்கேன் வம்பு

    ப்ராடிஜி- (PRODIGY) ”என்னோட பையன் ஃபஸ்ட்க்ளாஸுல பாஸ் பண்ணிட்டான்’ ‘..ஓ… அப்படியா.. வெரிகுட் அடுத்து என்ன படிக்கப்போறேன்..’ ‘எல்லோரையும் போல செக்கெண்ட் கிளாஸ்தான்’ -மேலே நீங்கள் படித்தது, நான் எப்போதோ, ஏதோவொரு பத்திரிக்கையில் படித்த சிரிப்புத்துணுக்கு. நகைச்சுவைக்காக சிரித்தாலும், உண்மையில் குழந்தைகளில் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று யோசித்தோமானால்.. அந்த பிஞ்சுகளின் மேல் நாம் ஏற்றி வைத்திருக்கும் சுமையை உணர்ந்துகொள்ள முடியும். சிறுவயதிலேயே வயதுக்கு மீறிய அறிவுடன் இருந்ததாக சொல்லப்படும் திருஞான சம்பந்தர் பற்றி படித்து வளர்ந்த…

  • தவறவிடும் அழைப்புகளுக்காக..பொருத்தருள்வீர்!

    இன்று காலை மீண்டும் என் கைபேசியில் பையன் மூச்சா போய்விட்டான். பழைய கைபேசியையும் இது போல ஒரு சந்தர்ப்பத்தில் சாவடித்துவிட்டதால் புதியது வாங்க வேண்டியதிருந்தது (அது பற்றி இங்கே:- http://216.185.103.157/~balabhar/blog/?p=786 ). இந்த கைபேசி வாங்கி ஒரு மாதமே ஆன நிலையில், வழமை போல இதற்கும் வேட்டு வைத்தாயிற்று. எப்படித்தான் குழந்தைகளுக்கு தெரிகிறதோ.. நாம் பயன்படுத்தும் முக்கியமானவற்றை சிதைக்கவேண்டுமென. 🙁 ஆனது தான் ஆயிற்று, கைபேசி வாங்கி ஒருமாதம் தான் ஆகிறது என்பதால் சென்னையில் இக்கைபேசியின் ஊழிய…

  • பக்கத்து வீட்டு ரவுசு…

    பக்கத்து வீடுல ஒரு பையன் இருக்கான். ஐந்திலிருந்து ஏழு வயசுக்குள் தான் இருக்கும். அவன் அடிக்கிற லூட்டிக்கு அளவே இல்லை. வீட்டுக்கு அருகில் இருக்கும் கோவிலுக்கு போய் இருக்கிறான். சாமி கும்பிட்டு விட்டு அனுமார் இருந்த சன்னதியை வலம் வரத்தொடங்கி இருக்கிறான். கொஞ்ச நேரம் கழித்து அவை பார்த்த கோவில் அர்ச்சகருக்கு அதிர்ச்சி. வலமிருந்து இடமாக சுத்தாமல். பையன் இடமிருந்து வலமாக சுற்றிக்கொண்டிருந்திருக்கிறான். இவனது கோக்குமாக்கை பார்த்தவர் அவனை தடுத்து நிறுத்தி.. ’ஏண்டா இப்படி தலைகீழா சுத்தீண்டிருக்க?ன்னு…

  • குழந்தை வளர்ப்பில் ஆண்களின் பங்கு..

    என் பையனுக்கு மாதாந்திர தடுப்பூசி போடுவதற்காக குழந்தை நல மருத்துவரிடம் போய் இருந்தோம். டோக்கன் வாங்கி எங்கள் முறைக்காக காத்திருந்தோம். பலரும் தத்தம் குழந்தைகளுடன் அங்கே வந்திருந்தனர். எங்களுக்கு முன்னால் அமர்ந்திருந்த தம்பதியினரின் கையில் இருந்த ஆறுமாத குழந்தை ‘கக்கா’ போய்விட்டது. குழந்தையை சற்று பிடிங்க என்று மனைவி சொன்னது தான் தாமதம். வந்ததே கணவனுக்கு கோபம். மனைவியை கண்டபடி திட்டி விட்டு எழுந்து வெளியே போய் விட்டார். அவர் போவதையே பரிதாபமாக பார்த்துக்கொண்டிருந்த மனைவிக்கு என்ன…

  • காது குத்தல் அல்லது காதணி விழா

    எட்டாம் வகுப்பு படிக்கும் போது கோடை விடுமுறையில் போய் வந்த சுற்றுலா பற்றிய கட்டுரையை எழுதச்சொன்னார்கள். எல்லோரும் தாங்கள் போய் வந்த வெளியூர் பயணம் குறித்து எழுதினார்கள். அதில் அநேகரும் தாய்மாமன் வீட்டுக்கு போய் வந்த்தைப் பற்றியே எழுதி இருந்தார்கள்.  நான் மட்டும் மற்றவர்களை வேடிக்கை பார்த்தபடி இருந்தேன். ஏனெனில் எனக்கு எந்த தாய்மாமனும் இல்லை. என் அம்மாவுடன் பிறந்தவர்கள் மொத்தம் எட்டு பேர் அதில் ஒரு தங்கை. மற்றது எல்லாம் அண்ணன்மார்கள். ஆறு மாமாக்கள் எனக்கு…

  • விடுபட்டவை 23 August 09

    மிகுந்த மகிழ்சியாக உணர்கிறேன். இன்று வெற்றிகரமாக இலங்கை தமிழ்வலைப்பதிவர்களின் சந்திப்பு மிகச்சிறப்பாக நடந்தேறி இருக்கிறது. சந்திப்புக்கு என உழைத்த அத்தனை உள்ளங்களுக்கும், சந்திப்பில் கலந்துகொண்டு, மற்றவர்களின் அறிமுகமும் பெற்று, கருத்துக்களையும் பகிர்ந்து கொண்ட பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள். பதிவர்களின் சந்திப்புகள் தொடந்து நடைபெறட்டும். எழுதுவதோடு மட்டுமல்லாமல்.. பல்வேறு வளர்ச்சிக்கும், நமது ஒற்றுமைக்கும் வழி வகுக்கட்டும் சந்திப்புகள். மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்கிறேன். சந்திப்பின் ஒலிவடிவம் கேட்க.. மதுவதனன் பதிவுக்கு போகலாம். படங்களைக்காண.. வந்தியத்தேவன் மற்றும் ஆதிரை பதிவுக்கு…