Category: சமூகம்/ சலிப்பு

  • அணு உலைக்கு எதிராக அதிரடி நோட்டீஸ்!

    100 நாட்களுக்கு மேலாக தொடர்ந்துகொண்டிருக்கிறது… கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம். இந்தபோராட்டைத்தை மழுங்கடிக்க அணு உலைக்கு ஆதராவாகவும் போராட்டங்கள்…பிரஸ்மீட்கள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.”அணு உலை பாதுகாப்பானதுதான். ஏற்கனவே… அணு உலை இயங்கிவரும் காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தை சுற்றியுள்ள மக்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்கிறார்கள்.அணு உலையால் எந்த ஆபத்தும் இல்லை” என்று  அணுசக்தித்துறை விஞ்ஞானிகள், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம், அஸ்பியர்(ASPIRE) தொண்டு நிறுவனத்தின் காரணிவியல் டாக்டர்.மஞ்சுளா தத்தா, மத்திய ஆய்வுக்குழுவினர், அடையார் புற்றுநோய் மைத்தின் இயக்குனர் சாந்தா…

  • எச்சரிக்கை: ON LINE FRAUD

    கடந்த ஆகஸ்ட் மாதம் http://www.indiavarta.com/ இணையதளத்தின் மூலம் ஒரு பொருள் வாங்க ஆடர் செய்தேன். பொருளின் விலை ரூ. 1.799.00/-. ஐசிஐசிஐ வங்கி மூலம் பணம் செலுத்தினேன். பணம் செலுத்திய சில நிமிடங்களியேயே ஏதோ எரர் காட்டி, அந்த பக்கம் வேலை செய்ய வில்லை. அதனால் இன்னொரு முறை http://www.indiavarta.com/ தளத்தில் குறிப்பிட்ட பொருளுக்கு இன்னோரு முறை பணம் செலுத்தி, ஆடரை உறுதி படுத்தினேன். (இதற்குள் முதல் தடவையே வங்கில் இருந்து பணம் எடுக்கப் படிருந்தது. )…

  • தூக்கு தண்டனையை எதிர்ப்போம்! மனித நேயத்தை காப்போம்..

    உலகம் முழுவதும் பல நாடுகளில் தூக்கு தண்டனை என்பது உச்சபட்ச தண்டனையாக இருந்து வருகிறது. அதே சமயம்.. தூக்கு தண்டனைக்கு எதிராக பல பகுதிகளில் இருந்தும் எதிர்ப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. சமீபத்தில் பேரரிவாளன் உட்பட மூன்று பேரின் கருணை மனுவை நிகாரித்துள்ளது, ஜனாதிபதி அலுவலகம். ராஜீவ் காந்தியின் படுகொலைக்கு உதவிய காரணத்திற்காக இத்தண்டனை என்று சொல்லப்படுகின்ற போதும், இதுவரை செய்த குற்றத்தை நிறுவவில்லை அரசு. கட்டாயப்படுத்தியே.. வாக்குமூலம் பெறப்பட்டதாக வருகின்ற செய்திகளை காவல்துறையும் மறுக்க வில்லை. ஊழல்…

  • The Story of Bottled Water

    இன்று அனேக மக்கள் பாட்டில் குடிநீர் தான் சுத்தமானது என்றும் சுகாதாரமானது என்றும் நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால் அதன் பின்னனியில் இருக்கும் பெருமுதலாளிகளின் பயங்கரமுகம் பற்றி இவ்விவரணைப்படம் பேசுகிறது. நம் சென்னையின் புறநகர் பகுதில் இருக்கும்(பள்ளிக்கரணை ஏரி அருகில்) கும்பை மேடு குறித்தும் இதில் வருகிறது. இப்படத்தை தயாரித்தவர்கள், இது போன்று சந்தைப்படுத்தப்படும் பலவற்றைப் பற்றி மக்களிடம் கொண்டு போய்ச்சேர்க்க ஒர் இயக்கத்தையே நடத்துகின்றனர் அவர்களின் வலைத்தள முகவரி: http://www.storyofstuff.org/ —

  • ஸ்பெக்ட்ரம் ஊழலே வெட்கப்படக்கூடிய (திமுக அமைச்சர்களின்) மெகா ஊழல்!

    ஸ்பெக்ட்ரம் ஊழலே வெட்கப்படக்கூடிய (திமுக அமைச்சர்களின்) மெகா ஊழல்! (டெஹல்கா இணையத்தில் வெளிவந்த ஆங்கில கட்டுரையின் தமிழாக்கம்) திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அரசில் இரண்டு கூட்டணிகளையும், மூன்று பதவிக்காலங்களையும் ஆக்கிரமித்து நிற்கும் நிலையில் ஸ்பெக்ட்ரம் ஊழல் ஊடகங்களாலும், மக்களாலும் பேசப்படும் நிலையில் மற்றொரு பிரமாண்ட ஊழலை மறைக்க முடிந்திருப்பது ஆச்சரியம்தான். மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர்களாக திமுகவைச் சேர்ந்த டி. ஆர். பாலுவும், ஆ. ராசாவும் பதவி வகித்த காலத்தில் மேற்கொண்ட தவறான கொள்கை முடிவுகளால் இந்தியாவின்…

  • பஸ்ஸு தொல்லைகள்

    வயது வந்தோர்க்கான எழுத்துக்கள் கோவைக்கு போய் இருந்த போது நண்பரின் வீட்டில் தான் தங்கி இருந்தேன். பகல் முழுக்க வீட்டிலேயே கிடந்தாலும்,இணையம், கணினி என வசதிகள் இருந்த போதிலும் வலைப்பதிவுகளின் பக்கம் வருவதற்கு எனக்கு துணிவு இல்லை. அப்படியே ரீடர் வழி பதிவுகளை படிக்கலாம் என்றாலும் அதற்கும் ஒரு தயக்கம் இருந்துகொண்டே இருந்தது. நண்பரின் வீட்டினர் எவராவது எனக்கு பின்னால் வந்து நின்று நான் படிக்கும் வலைப்பதிவுகளில் (புதிய நண்பர்கள் பலரின் வலைப்பதிவுகளும் இப்படி இருப்பது வேதனை)…

  • ”தீதும், நன்றும் பிறர் தர வாரா…”

    சங்கர் இந்த பெயர் கொஞ்ச மாதங்களுக்கு முன் பத்திரிக்கை உலகை கலக்கியது. தமிழகத்தையே உலுக்கிய டெலிபோன் ஒட்டுக் கேட்பு வழக்கில் திமுகவின் அமைச்சர் பூங்கோதை நடத்திய அதிகார துஷ்பிரயோகங்களுக்கு எதிரான ஆதாரங்களை வெளியிட்டார் என்று கைது செய்யப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் இந்த சங்கர். ஊழல் ஒழிப்புத் துறையின் உயரதிகாரியான உபாத்தியாயாவின் அலுவலகத்தில் வேலை செய்த சங்கர், அதிகார பீடங்களின் ஊழல்களின் குணத்தை போட்டுடைத்தவர். எக்மோரில் இருக்கும் கோர்ட்டுக்கு அவரை அழைத்து வந்தார்கள். தப்பு தப்பு இழுத்து வந்தார்கள்…

  • DUPLICATE CREDIT CARD- ஓர் எச்சரிக்கை!! (Exclusive Visual)

    வாங்கும் பொருளுக்கு உடனடியாக பணம் கட்டத் தேவையில்லை. பொருள் வாங்கிய பின் 40 நாட்கள் கழித்து தான் முதல் பில்லே வரும். அப்போது கூட முழுப்பணத்தை செலுத்த வேண்டியதில்லை. தவணை முறையில் கட்டினால் போதும் என்ற உறுதிமொழிகளை நம்பி கிரெடிட் கார்டுகளை மக்கள் தேய்த்து வருகிறார்கள். பிளாஸ்டிக் பணம் என்று அழைக்கப்படும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை மேலை நாடுகளைப் போல இங்கும் கூடியுள்ளது. கிரெடிட் கார்டு பயனர்களிடம் சமீபகாலமாக அச்சத்தை ஏற்படுத்தியுள்ள போலி கிரெடிட் கார்டுகளின்…

  • பிரபாகரனின் தாயாருக்கு அனுமதி மறுப்பு- கண்டனம்

    சென்னை, ஏப்.-17, சிகிச்சை பெறுவதற்காக இந்தியா வந்த பிரபாகரன் தாயாருக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ. நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: பிரபாகரன் அவர்களைப் பெற்ற தாயார் பார்வதி அம்மையார் உடல் நலன் குன்றிய நிலையில் மருத்துவ சிகிச்சைப் பெறுவதற்காக மலேசியாவில் உள்ள இந்தியத் தூதுவர் அலுவலகத்தில் முறைப்படி விண்ணப்பித்து ஆறு மாத காலத்திற்கு விசா பெற்று இந்தியாவுக்கு 16-ஏப்ரல்-2010 இரவு 10.45 மணிக்கு  விமானத்தில் வந்தார். படுத்தப்…

  • விடுபட்டவை 04/03/10

    கேள்வி :- அய்யா நீங்கள் ஏற்கனவே கோவில் கொடியவர்களின் கூடாரமாக ஆகி விடக் கூடாது என்று  சொல்லியிருக்கிறீர்கள்.    இப்போதெல்லாம் மடாதிபதி களால்  ஆசிரமங்களில் அத்துமீறல் நடப்பதாக  அடிக்கடி செய்திகள் வந்து கொண்டே இருக்கிறதே? (திருச்சியில் 03/03/10 அன்று நடந்த செய்தியாளர்களின் சந்திப்பில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு முதல்வரின் பதில் கீழே) கலைஞர் :- சமீப காலமாக  அத்தகைய செயல்கள் அதிகமாகத் தான் நடக் கின்றன.    அது பற்றி ஆலோசித்து,  எத்தகைய நடவடிக்கையை  அரசு மேற்கொள்ளலாம் என்பது குறித்து…