Category: சிறுவர் இலக்கியம்

  • சிறார் இலக்கியம் செழிக்க முற்போக்காளர்களின் பங்கு!

    என்னுடைய பால்யத்தை வண்ணமிக்கதாக மாற்றியவர்கள் அப்போதைய சிறார் எழுத்தாளர்கள்தான். திக்குவாய் குறைபாடும், கற்றல்குறைபாடும் சேர்ந்து இருந்த ஒரு மாணவன் நான். இக்குறைபாடுகளினால் பிறரின் கேலிக்கும் கிண்டலுக்கும் எப்படி எல்லாம் ஆட்பட்டுப் போயிருப்பேன் என்பதை இதனை வாசிப்பவரின் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன். பிறரின் கேலிக்கு ஆட்படும்போதெல்லாம் உள்ளுக்குள் உடைந்து அழுவேன். இதன் காரணமாகவே தனித்து இருக்கத் தொடங்கினேன். அந்த நேரத்தை புத்தக வாசிப்பு பக்கம் திருப்பினேன். உடன்பிறந்தோருக்கும் வாசிப்பு பழக்கம் இருந்ததால், அவர்கள் படிக்கும் சிறுவர் பத்திரிக்கைகளை நானும் படிக்கத்தொடங்கியவன்…

  • ஆமை காட்டிய அற்புத உலகம் 3ஆம் பதிப்பு

    இது சிறுவர் இலக்கியத்தில் எனது முதல் நூல். 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல்பதிப்பு வெளியானது. அப்போதே பரவலான கவனத்தை இந்த நூல் பெற்றது என்றுதான் சொல்லவேண்டும். பெற்றோரும் ஆசிரியர்களும் மட்டுமல்லாது பல சிறுவர்களும் வாசித்து மகிழ்ந்த நூல் இது. வெளியான காலத்தில் அதுவரை வெளிவந்துகொண்டிருந்த சிறார் நூல்களில் இருந்து இது வேறு ஒரு புதிய பாய்ச்சலை நிகழ்த்திக்காட்டியது. புனைவும் அறிவியலும் இணைந்த இந்த நடையை பின்னாலில் சிலர் தொட்டுப் பார்த்தனர். அதோடு இப்படியான ஒரு வடிவம்…

  • வணக்கம் தமிழா- நேர்காணல்

    சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வணக்கம் தமிழா நிகழ்ச்சியின் ஒளிப்பதிவு இது. அதே நிறுவனத்தில் செய்தியாளனாகவும் பணியாற்றி இருந்தேன். அதை நினைவுகூர்ந்து அங்கே பணியாற்றிய பலரும் தொலைபேசியில் அழைத்துப் பேசினர். பெரும் மகிழ்ச்சியைத் தந்த சமீபத்திய நேர்காணல் இது. மரப்பாச்சி சொன்ன ரகசியம் – நூலுக்கு பால சாகித்ய புரஷ்கார் விருது அறிவிக்கப்பட்டத்தைத்தொடர்ந்து இந்த நேர்காணல் ஒளிப்பதிவு செய்யப்பட்டது. யூடியூப் சுட்டி இங்கே

  • மரப்பாச்சி சொன்ன ரகசியம் நூலுக்கு -பாலசாகித்ய புரஸ்கார்

    மரப்பாச்சி சொன்ன ரகசியம் – நான் எழுதிய சிறுவர் நாவல். 2018ஆம் ஆண்டு வெளியானது. குழந்தைகளின் மீது நிகழ்த்தபப்டும் பாலியல் அத்துமீறலை எதிர்த்து குரல்கொடுக்க, பிள்ளைகளை ஊக்கப்படுத்தும் கதைக்களம். பள்ளி விடுமுறையில் பாட்டி வீட்டுக்குச் செல்லும் ஷாலினி என்னும் சிறுமிக்கு ஒரு மரப்பாச்சி பொம்மை கிடைக்கிறது. அந்த பொம்மை உயிர்பெற்று ஷாலினியோடு பேசுகிறது. அவளின் தோழி பூஜாவுக்கு ஒரு பிரச்னை வரும்போது மரப்பாச்சி பொம்மை அதிலிருந்து விடுபட வழிகாட்டுகிறது. ஓவியர் ராஜனின் அழகான ஓவியங்கள் கதை வாசிப்பை…

  • புவியாழத்தில் வேர்விட்டு வானளாவிச் செழிக்கட்டும் குழந்தைகள்! -யூமாவாசுகி நேர்காணல்

    யூமா வாசுகி, தமிழின் குறிப்பிடத்தக்க நவீன எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஓவியர், கவிதை, சிறுகதை, நாவல் என இலக்கியத்தின் சகல வடிவங்களிலும் தன் முத்திரையை அழுத்தமாகப் பதித்தவர். தமிழ்ச் சிறார் இலக்கியத்திற்கு மிகச்சிறப்பான பிறமொழிபடைப்புக்களைக் கொண்டுவந்து சேர்க்கும் முதன்மையான ஆளுமை இவர். தனது மனம் திறக்கிறார். தீவிரமான இலக்கிய உலகில் இயங்கிக்கொண்டிருந்த நீங்கள் சிறார் இலக்கியத்தின் பக்கம் எப்படி நுழைந்தீர்கள்? என் பாலபருவத்தில் சிறார் இலக்கியம் அதிகம் வாசித்தேன். வளர்ச்சியின் ஒரு கட்டத்தில் அது நின்றுவிட்டது. பிறகு, மலையாளம்…

  • ஆற்றுப்படை

    1 யெஸ்.பாலபாரதியின் நாவலைப் படிக்கப்போகிறீர்கள். ‘முத்திரள் உருவமாக’இந்தக் கதையில் சிலர் சந்திக்கிறார்கள். அவர்கள்  ‘மாய உருவமாகவும்’இருக்கிறார்கள். இந்தச் சொற்களுக்கிடையே இருக்கும் வேறுபாடு, அவற்றின் பொருள் உங்களுக்குப் புரிகிறதா? 2 இது அறிவியல் புனைகதையா, மிகுபுனைவா? மேலே சொன்ன இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? ‘எல்லாம் ஒண்ணுதானே, படிக்க சுவாரசியமாக இருந்தால் போதாதா?’ என்று கேட்பவர்கள், இந்த அளவில் இதை வாசிப்பதை நிறுத்திவிட்டு, கதைக்குள் போய்விடுங்கள். இங்கே அந்த இரு வகைகளுக்கும் இடையே இருக்கும் வேறுபாட்டைப் பார்க்கப்போகிறோம். அறி(வியல்) புனைகதை…

  • பூமிக்கு அடியில் ஒரு மர்மம் – சிறார் நாவலுக்கான முன்னுரை.

    புதியகதையுடன் உங்களைச் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி! இக்கதையின் களம் நாகபட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூரில் நடைபெறுகிறது. சிலஇடங்கள் நிஜத்தில் உள்ளவை. மற்றவை வழக்கம்போலக் கற்பனையானவை. இதுவொரு சாகச, த்ரில்லர், சஸ்பென்ஸ் வகைக்கதை. எனது முந்தைய கதைகளைப் போலவே இதுவும் பதின்பருவத்தினருக்கான கதைதான். இதில்சில நண்பர்கள் சேர்ந்து, ஒரு சுரங்கத்தைக் கண்டறிகின்றனர். அதன் உள்ளே இருப்பதை அறியவும் சுரங்கத்தின் இன்னொரு வாசலைத்தேடியும் அவர்கள்அதற்குள் நுழைகின்றனர். அங்கே அவர்களுக்கு என்ன நேர்கிறது? அங்கே எதையெல்லாம் பார்க்கிறார்கள் என்பதைப் படித்து…

  • சிறார் இலக்கியத்தில் மாற்றுத்திறனாளிகள்

    பொதுவாக கலை மக்களுக்காக என்னும் எண்ணமுடையவன் நான். அது எந்த வடிவத்தில் இருந்தாலும் அதில் மக்களுக்கான விஷயங்கள் பேசப்படவேண்டும் என்னும் பிரங்ஞையுடன் செயலாற்ற முனைபவன். சிறுவர் இலக்கியத்திலும் கூட எனது நிலைபாடு அதுதான். சிறார் இலக்கியத்தில் வாசிப்பு இன்பத்திற்காக மட்டுமே கதைகள் எழுதப்பட வேண்டும் என்பதையோ, அறிவுரைகளே வரக்கூடாது என்பதிலோ எனக்கு உடன்பாடில்லை. அதே நேரம் நேரடியான பிரச்சாரக் கதைகள் இன்றைய குழந்தைகளுக்கு சற்று அலுப்பூட்டும் என்பதையும் உணர்ந்தே இருக்கிறேன். கதையின் முடிவில் இக்கதையினால் அறியப்படும் நீதி…

  • மந்திரச் சந்திப்பு -21 (நிறைவுப் பகுதி)

    டெர்மித் தன்னுடைய புற்றின் அருகில் வந்ததும், கானமூர்த்தியையும், அருள்வளனையும் பார்த்தது. “எனக்கு ஒரு புது அனுபவமாக இருந்தது. ரொம்ப தாங்க்ஸ் டெர்மித்!” என்று கை கூப்பி வணக்கம் தெரிவித்தான் வளன். “அடடா! நாம் இப்போது நண்பர்கள் வளன். நண்பர்களுக்கிடையே நன்றி எல்லாம் வேண்டாம்ப்பா..” என்றது டெர்மித். “நீ சொல்றது சரியா இருக்கலாம். பஸ்ஸுல காசு கொடுத்து டிக்கெட் வாங்கும்போது கூட கண்டக்டர்ட்ட நன்றி சொல்லணும்னு சொல்லிக் கொடுத்திருக்காங்க. நீயோ பூமிக்கு அடியிலேயே ரவுண்ட் கூட்டிட்டு போயிருக்க.. நன்றி…

  • மந்திரச் சந்திப்பு -20

    மேலே செல்வதற்கான பாதைக்கு வெளியே ஏதோவொரு பறவை நின்று கிளறிக் கிளிறி கொத்தித் தின்று கொண்டிருந்தது. அதற்கு பயந்து, ஓரமாக பதுங்கிக் கொண்டனர் கானமூர்த்தியும் அருள்வளனும். பறவையின் கிளறல் நிற்க வெகுநேரம் ஆனது. அதுவரை இருவரும் அப்படியே ஒளிந்து கொண்டிருந்தனர். அது நின்றதும் வளன், வெளியே எட்டிப்பார்க்க முயன்றான். அவனை கானமூர்த்தி தடுத்தார். அவரே மெதுவாக வெளியே சென்று எட்டிப் பார்த்தார். எந்தப் பறவையையும் காணவில்லை. ஆபத்தில்லை என்பதை உணர்ந்தும் வளனை வெளியே வரச்சொன்னார். அவனும் தயங்கித்…