Category: சிறுவர் இலக்கியம்

  • மந்திரச் சந்திப்பு -19

    “வளா.. வளா..” என்று குரல் கேட்டு கண்விழித்துப் பார்த்தான் அருள்வளன். ஒரு நிமிடம் தான் எங்கிருக்கிறோம் என்று புரியாமல் பார்த்தான். ஏதோ சிறைக்குள் இருப்பது போலத் தோன்றவே.. பதறிப்போய் சுற்றிலும் தேடினான். சற்று தொலைவில் டெர்மித்தும் கின்னரர் கானமூர்த்தியும் மரத்தின் வேர்களைப் பற்றியபடி அமர்ந்திருந்தனர். இவன் கண் விழித்ததைப் பார்த்ததும் ஒரே நேரத்தில், “அடடா, எழுந்துவிட்டாயா?” என்றனர். குழப்பத்துடன் அவர்களைப் பார்த்தான் வளன். “நெடு நேரமாக ஓடிய மழை நீரையே பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தோமா.. அப்படியே நீ முதலில்…

  • மந்திரச் சந்திப்பு -18

    பூமிக்கு அடியில் தாவரங்களின் பாதுகாவலர்களையும், வண்ண வீரர்களையும் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் வளன். அவர்களில் வண்ண வீரர்கள் அனைவருமே சின்னச் சின்னதாக வண்ண பைகளை இடுப்பில் கட்டிருந்தனர். அவற்றில் பச்சை நிறம் அல்லது பழுப்பு நிறக் கலவைகள் இருந்தன. இவனே கறையான் அளவில் இருந்தான். அந்த வீரர்கள் இவனை விட, சின்னதாக இருந்தனர். தன் கண்களை அவனாலேயே நம்ப முடியாமல் பார்த்துக்கொண்டிருந்தான். பழுப்பு வண்ணப் பையுடன் சென்றுகொண்டிருந்த ஒரு வண்ண வீரனை, கை நீட்டி நிறுத்தினான் வளன்.…

  • மந்திரச் சந்திப்பு – 17

    மண்புழுவின் மேலிருந்து, சறுக்கிக்கொண்டு கீழே இறங்கியதும், அதற்கு நன்றி சொன்ன வளன் அதன் பெயரைக் கேட்டான். “சின்ன மாத்தன்” என்றது அந்த மண்புழு. “சின்ன மாத்தனா?” “ஆமா, எங்க தாத்தா பெயர் ‘மாத்தன் மண்புழு’ மிகவும் பிரபலம். பென்ஷன் கேட்டு கேஸ் எல்லாம் நடத்தி இருக்கார்!” என்றது சின்ன மாத்தன். “அப்படியா..?” “ஆமா, ’மாத்தன் மண்புழுவின் வழக்கு’ என்னும் பெயரில் தனிக்கதையாகவே வந்திருக்கு. வாங்கிப் படித்து அறிந்துகொள்” என்றது சின்ன மாத்தன். “ஓ.. கண்டிப்பாகப் படிக்கிறேன். சரி!…

  • மந்திரச் சந்திப்பு -16

    அதிர்வு ஏற்பட்டதும் முன்னால் சென்று கொண்டிருந்த டெர்மித்,  பதுங்கிக் கொள்வோம் என்று ஓடத் தொடங்கியதும் பின்னாடியே கானமூர்த்தியும் அருள்வளனும் ஓடத் தொடங்கினர். ஓடும் வழியில் ஏன் மண் துகள்கள் சரிந்து விழுகின்றன என்ற சந்தேகம் எழ, திரும்பிப்பார்த்த வளன் அதிர்ச்சியடைந்தான். அங்கே, ஒரு பெரிய உருண்டை உருண்டு வந்து கொண்டிருந்தது. ஓடிக் கொண்டே, பதுங்குவதற்கு இடம் தேடிக் கொண்டிருந்தான். கால்கள் எல்லாம் வலி எடுக்கத் தொடங்கின. டெர்மித் குறிப்பிட்ட வளைவு திரும்பியதும் அடுத்த அதிர்ச்சி தென்பட்டது. பின்னால்…

  • மந்திரச் சந்திப்பு -14

    சில அடிதூரம் நடந்ததுமே வெளியில் இருந்த வெளிச்சம் உள்ளே இல்லை. ஆனாலும் அருள்வளனால் நன்றாகப் பார்க்க முடிந்தது. சாரை சாரையாக கறையான்கள் நடந்துகொண்டிருந்தன. தானும் ஒரு கறையான் அளவுக்கு மாறிப்போய் உள்ளோம் என்பதால் ஏற்பட்ட வியப்பும், கறையான் புற்றின் உள்பக்கம் தான் பார்க்கும் வினோத உலகமும் அவனுக்கு மிகுந்த வியப்பளிப்பதாக இருந்தது. “ஆமா.. இதற்கு உள்ளேயும் என்னால் மூச்சுவிட முடிகிறதே..?” என்றான். அதனைக் கேட்ட, அந்த வழிகாட்டிக் கறையான், “உள்ளே வரும் முன் உங்கள் மீது ஒரு…

  • மந்திரச் சந்திப்பு -13

    மந்திரச் சந்திப்பு- 13 பூமிக்கு அடியில் அழைத்துச்செல்வதாக கின்னரர் கானமூர்த்தி கூறியதை நம்பாதவனாக நின்றான் அருள்வளன். “என்ன அப்படிப் பார்க்கிறாய்? நம்பிக்கை வரவில்லையோ!” ‘அட! இத்தூணூண்டுக்கு இருந்துட்டு, நாம நினைக்கிறதை சரியாகச் சொல்கிறாரே இவர்’ என்ற வியப்பு அவனுக்கு. அதை முகத்தில் காட்டிக்கொள்ளாமல் முத்திரள் உருவத்தினரைப் பார்த்தான். ‘ம்.. போ’ என்பதுபோல சைகை செய்தான் அமீர். முத்திரள் உருவங்களைப் பார்த்து, “நீங்களும் உடன் வரலாம்” என்றார் கானமூர்த்தி. அவர்கள் எல்லோரும் கதை தட்டி தங்களின் உற்சாகத்தை வெளிக்காட்டினர்.…

  • மந்திரச் சந்திப்பு 12

    மந்திரச்சந்திப்பு-12 மீண்டும் உருவமில்லாது வந்த குரலைக் கேட்டு, நடுங்கினான் அருள்வளன். “வளா, நீ அச்சப்படத்தேவை இல்லை.” என்றது அக்குரல். “சொல்லுறது எல்லாம் சரி. ஆனா.. ஆளைக்காணோமே.” “நான் தான் உன் முன்னாடியே இருப்பதாகச்சொல்கிறேனே” என்றது அந்த மெல்லியகுரல். “நீயும் சொல்லுற.. ஆன என்னுடைய கண்ணுக்கு எதுவுமே தெரியமாட்டேங்குதே..” “உன் அளவிலேயே பார்த்துக்கொண்டிருக்கிறாயே.. கொஞ்சம் கீழே பார்” என்றது அந்தக்குரல். குழப்பமாக கீழே குனிந்து தேடினான். அந்த அறையின் நிலைப்படிக்கு அருகில் சின்னதாக ஓர் உருவம் தெரிந்தது. முதலில்…

  • மந்திரச்சந்திப்பு -11

    மந்திரச் சந்திப்பு -11 தலைகீழ் புஸ்வாணம் கதையில் வந்த அருள்வளனை சந்திக்க எண்ணிய நண்பர்கள் அவனை அழைத்தனர். அவனிருந்த அறைக்குள் உருவங்கள் ஏதுமற்று, குரல் மட்டும் கேட்கவும் பயந்து போன அவன் வீறிட்டு கத்தியபடி மயங்கிப்போனான். அவனது சத்தம் கேட்டு அறைக்குள் எட்டிப் பார்த்தார் அவன் அம்மா. வெயிலில் வாடிய கீரைத்தண்டுபோல விழுந்து கிடந்தான் அருள்வளன். அவனை எடுத்து, மடியில் கிடத்தி, “அருளு.. அருளு..” என்று அழைத்தார். அவனிடம் அசைவில்லை. “ஏங்க.. அருளுப்பா..” என்று அவர் சத்தம்…

  • மந்திரச் சந்திப்பு – 10

    அம்மாவின் குரல் கேட்டதும் அறையின் வாசலுக்கு வந்தான் ஜான்சன். ஒரு பக்கெட் நிறைய துவைத்த துணிகளை உலர்த்தக் கொண்டு வந்திருந்தார் அவன் அம்மா. இவனைப் பார்த்ததும், “கொஞ்ச நாளாகவே உன் போக்கு சரியில்லையேடா.. எப்பப் பார்த்தாலும் ஓடி ஓடி இங்க வந்துடுற, என்னடா விஷயம்?” என்று கேட்டார். “அப்படியெல்லாம் ஒண்ணுமில்லைம்மா.. எவ்வளவு நேரம் தான் டிவியையே பார்த்துட்டு இருக்கிறது. அதுதான் இங்க வந்தா.. என் புக்ஸ் படிக்கலாம். கொஞ்சம் கிராப்ட் ஒர்க்கெல்லாம் செஞ்சு பார்க்கலாம். அதுக்குத்தான் மாடிக்கு…

  • மந்திரச் சந்திப்பு- 9

    முத்திரள் உருவம் வழியாக நண்பர்களின் சந்திப்பு பற்றியும், தான் பறந்த கதை எல்லாவற்றையும் ஜான்சனுக்குக் கூறியது காகிதப்பாப்பா. அதனிடம் தான் பறக்க ஒரு குழந்தை எழுத்தாளர் காரணம் என்று ஜான்சன் கூறியதும் வியந்துபோன அது, அந்த எழுந்த்தாளர் யார் என்று கேட்டது. “வாண்டுமாமா” என்றான் ஜான்சன். “என்னது வாண்டுமாமாவா?” ”ஆமா, குழந்தைகளுக்காக பல கதைகள் எழுதி இருக்காரே.. அவரே தான். காலத்தால் அழியாப் புகழ்பெற்ற அவரது கதைகளைப் போலவே அவரது பாத்திரப்படைப்புகளும் சாகாவரம் பெற்றவை. அவர் எழுதிய…