Category: தகவல்கள்

  • இணையம்+ கணினி குறித்த சந்தேகமா உங்களுக்கு?

    பொதுவாக பாரம் (Forum) குறித்த தெளிவான பார்வை என்னிடம் இருந்ததில்லை. அது ஒரு தொல்லையாக மட்டுமே இதுவரை பார்த்து வந்திருக்கிறேன். வலைப்பதிவுகளில் எழுதுவது போல அங்கேயும் கதை கவிதை கட்டுரை என்று எழுதிக்கொண்டிருப்பவர்களைப் பார்த்தால் எனக்கு வியப்பாகத் தோன்றும். நம் கருத்துக்களை நம்ம வலைப்பக்கத்தில் சொல்லாமல் இப்படி ஒரு கட்டம் போட்ட சட்டத்துக்குள் சொல்லுறாங்களேன்னு பல நாள் வியந்திருக்கிறேன். இவ்வகை பாரங்களில் மொக்கை போடுபவர்களும் உண்டு! பின்னூட்ட கும்மி போன்ற வகைகளும் கூட உண்டு! தமிழ், இணையம்,…

  • “கும்மி” என்ற சொல்லாடலை நாம் இழிவு படுத்துகிறோமா?

    இனிய நண்பரும் சகபதிவருமான இவான் ”பதிவர்கள் மத்தியில் பிரபலமாக பயன்படுத்தப்படும் ‘கும்மி’ என்ற சொல்லாடலும் அதன் தாக்கங்களும்” என்ற பதிவினை எழுதி இருக்கிறார். அதில் கும்மி என்ற சொல்லாடலை நாம் ஒன்றுக்கும் உதவாது என்ற முடிவுக்கு வந்து, அதன் காரணமாகவே பயன்படுத்துவதாகவும், அழிந்து வரும் கலைகளில் கும்மியும் இருப்பதால் அதன் மீது மோசமான ஒரு பிம்பம் எழுவதற்கு நாம் காரணமாகி விடக்கூடாது என்றெல்லாம் எழுதி இருக்கிறார். அப்படி எல்லாம் எந்தவொரு உள்நோக்கமும் இன்றியே இன்று வரை பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. உண்மையில்…

  • தமிழ் எழுது பொருட்கள் பாஸ்வேர்ட்டை திருடுகிறதா?

    தமிழ் எழுது பொருளால் நம் கடவுச்சொல்கள் திருடப்படுவதாக வசந்தம் ரவி ஒரு பதிவை போட்டு இருக்கிறார். அதில் ரவிசங்கர் கேட்ட கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாமல்.. வலையுலக அரசியல்வாதிகள் போல மழுப்பலான பதிலையே கொடுத்துள்ளார். என் சிறு அறிவுக்கு (எழுதிகளின் செயல்பாடுகள் குறித்து முகுந்த் போன்றவர்களிடம் பிறாண்டி கேள்வி கேட்டு கொஞ்சம் அறிந்திருக்கிறேன்.)எட்டியவரை.. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம்.. என்று ஆங்கிலம் தவிர்த்த ஏனைய எல்லா மொழி எழுதிகளும் keystrokeகளை monitor என்பதை செய்யும். அப்போது தான்…

  • தமிழில் மொபைல் புக்! அதுவும் இலவசமாக!!

    கணிணியுடம் இணைக்கக்கூடியதா உங்கள் மொபைல்? இணைய வசதியுடன் இருக்கிறதா.. உங்கள் மொபைல்? இதோ ஈ-புக் மாதிரி வந்து விட்டது மொபைல் புக்! அதுவும் நம் தாய் மொழி தமிழில்! தமிழகத்தை சேர்ந்த கணேஷ்ராம் என்ற இளைஞரின் மொபைல்வேதா என்ற நிறுவனம் இச்சேவையை வழங்கி வருகிறது. சக பதிவரான தம்பி “பிரிண்சு என்னாரெசு “மூலம் இவர்கள் முதலில் பெரியார் வாழ்க்கைச் சுருக்கத்தினை தமிழ், ஆங்கிலத்தில் பென்நூலக்கி இருக்கிறார்கள். அதற்கு கிடைத்த வரவேற்பு இவர்களை தொடர்ந்து தமிழ் மென்நூல்களின் பக்கம்…

  • சென்னையில் உலா வரும் போலி டாக்டர்கள்?!

    இந்தியா மாதிரியான நாடுகளில் பல்வேறு பட்ட பிணிகளினால் அவதிப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகிறது. பணம் படைத்தவர் என்றில்லாமல் அன்றாடம் காய்ச்சிகளுக்கு கூட சில பணக்கார வியாதிகள் வந்த வண்ணமிருக்கின்றன. அரசாங்க மருத்துவ மணைகளில் போதிய வசதியின்மை, நோய் கண்டவர்களை கீழ்த்தரமாக நடத்தும் முறை, தங்களின் சொந்த மருத்துவமணைக்கு நோயாளிகளை திசை திருப்பும் மருத்துவர்கள் என்று ஏகப்பட்ட சார்புடைய கருத்துக்களை வைக்க முடியும். அரசாங்க மருத்துவமணைகளின் நிலை இதுவெனில் தனியார் மருத்துவமணைகளின் செயல் பாடுகள் குறித்து…

  • பயர்ஃபாக்ஸ் சிறந்தது ஏன்?

    நீங்கள் பயன் படுத்தும் இணைய உலாவி எது? இண்டர்நெட் எக்ஸ்ஃப்ளோளர் என்றாலும் சரி அல்லது பயர்பாக்ஸ் என்றாலும் சரி. கீழே சொல்லப்படுகின்ற செய்திகள் உங்களுக்கு பயன் படலாம். 1. மற்ற உலாவிகளை விட பயர்பாக்ஸ் பாதுகாப்பானது. இதன் மூலம் நாம் இணையத்தை அணுகும் போது.. அந்த பக்கத்தில் இருக்கும் படங்களால் பக்கம் டவுண்ட்லோடு ஆகா.. நேரம் அதிகம் செலவாகும். படத்தினை விட நமக்கு செய்தி முக்கியமானதாக இருக்கலாம். அப்படியான தருணங்களில் பயர்பாக்ஸ் செட்டிங் பகுதியில் படங்கள் தேவையில்லை…