Category: நூல் விமர்சனம்

  • பாலபாரதியின் ‘சாமியாட்டம்’ – ஸ்டாலின் ஃபெலிக்ஸ்

    பாலபாரதியின் ‘சாமியாட்டம்’ சமூக ஆர்வலர், எழுத்தாளர், ஊடகவியலாளர் என பல முகங்கள் கொண்ட பாலபாரதியின் முதல் சிறுகதை தொகுப்பு ‘சாமியாட்டம்’. பன்னிரெண்டு சிறுகதைகளை கொண்ட இந்த தொகுப்பினூடே பயணிக்கும் போது சில கதைகள் புலம் பெயர் வாழ்வின் வெம்மையையும் சில மாலை நேரத்து மழை குளிர்ச்சியையும் தருகின்றது. இச்சிறுகதைகளின் வழியாய் ஆசிரியரின் அகவுலகை எளிதாய் தரிசிக்க முடிகிறது. ‘அம்மாவின் கை உணவிற்கு ஏங்கும் வாலிபனாய்’ ‘சாதிய படிநிலையை கண்டு சாடும் முற்போக்குவாதியாய்’ ‘ஊரின் நினைவை தன்னோடு சுமந்து திரியும்…

  • சாமியாட்டம் – ஒரு பார்வை -க.ரா

    சாமியாட்டம் – ஒரு பார்வை சாமியாட்டம் முதலில் ஒரு சொல். இந்த கட்டுரையை தயவு செய்து ஒரு விமர்சனமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஒரு வாசகனாக நான் வாசித்து உணர்ந்ததை மற்றவர்களுக்கும் கடத்தும் ஒரு சிறு முயற்சி மட்டுமே இக்கட்டுரை. கதாசிரியர் தாம் பிறந்த மண்ணிலும் தன் தொழில் பொருட்டு தான் தங்க நேர்ந்த ஊர்களிலும் தன்னை சுற்றி நடந்த நிகழ்வுகளை எழுத்தில் கோர்த்திருக்கிறார். அவர், அவர் வாழ்வில் கடந்து வந்த இந்த தருணங்களில்  சிலவற்றையாவது நாம் கடந்து…

  • துரைப்பாண்டி – மா.சிவக்குமார்

    துரைப்பாண்டி (சாமியாட்டம் – பாலபாரதி) ஒரு வலைப்பதிவருக்கும் எழுத்தாளருக்கும் என்ன வேறுபாடு? ஒரு வலைப்பதிவுக்கும் சிறுகதைக்கும் என்ன வேறுபாடு? சாமியாட்டம் சிறுகதைத் தொகுப்பில் இருக்கும் போது ‘துரைப்பாண்டி’யைப் படிக்கும் போது தோன்றிய கேள்வி. ‘துரைப்பாண்டி’ ஒரு சிறந்த பதிவு என்பதைத் தாண்டி போகவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். எடுத்துக் கொண்ட, கிடைத்த கனமான விஷயத்தின் அனைத்து பரிமாணங்களையும் ஊடுருவாமல் ஒற்றைக் கோட்டில் நகர்ந்து முடிந்து விடுகிறது. ‘தொறப்பாண்டி’ கதை சொல்லியை விட சிறியவன், பரிதாபத்துக்குரியவன் என்பதற்கு ‘பதினொரு…

  • தண்ணீர் தேசம் -மா.சிவக்குமார்

    தண்ணீர் தேசம் (சாமியாட்டம் – பாலபாரதி) ஒன்பது வருடங்களுக்குப் பிறகு சொந்த ஊருக்குத் திரும்பி வந்து ஊர் எப்படி முன்னேறியிருக்கிறது என்று ஆர்வமாக தேடிப்பார்க்கிறார். ஊரில் ‘முன்னேற்றங்களுக்கான’ அறிகுறிகள் நிறைய தென்படுகின்றன. ஊர் மாறிப் போனது போலவே வீடும் மாறிப் போய் இருந்தது. சந்திராயனை விண்வெளிக்கு அனுப்பி விட்ட நிலைக்கு வந்து விட்ட பிறகும் பல கிராமங்களுக்கு குடிதண்ணீர் வசதி மட்டும் இன்னும் வாய்க்கவில்லை. சிறு வயது நண்பனின் குடிசைக்குப் போனால், குடி தண்ணீர் தீர்ந்து போயிருந்தது.…

  • கடந்து போதல் – மா.சிவக்குமார்

    கடந்து போதல் (சாமியாட்டம் – பாலபாரதி) தூங்கிய பிறகு எளிதில் எழுந்து விடாதவரையும் எழுப்பி விடும் ஓலம். ஒரே அலுவலகத்தில் வேலை செய்து காதல் திருமணம் செய்து கொண்ட இளம் தம்பதியினர்.  மும்பைக்கு மாற்றலாகி வந்ததும் ஊர்க்கார அண்ணாச்சிக்கு சொந்தமான வீட்டு வாடகைக்கு கிடைத்து விட்ட நிம்மதியில் இருந்தவர்களை நடு இரவில் எழுப்பி உட்கார வைக்கிறது பயங்கரமான அந்த அலறல். அலறல் மர்மமாக இல்லை, இவர்களைத் தவிர குடியிருப்பில் வேறு யாரும் கவலைப் பட்டதாக தெரியவில்லை. மும்பையில்…

  • பொம்மை – மா.சிவக்குமார்

    பொம்மை (சாமியாட்டம் – பாலபாரதி) உழைக்கும் வர்க்க வாழ்க்கைப் போராட்டங்களின் சித்தரிப்பு. ‘பிரபல’ நிறுவனத்தில் வேலை பார்த்தாலும், அந்த சம்பளத்தில் அமைத்துக் கொள்ளும் வாழ்க்கைக்கு உத்தரவாதம் இல்லை.  ஆட்குறைப்பில் வேலை போன எதிர்த்து போராடும் வழிகள்  பலன் தரப் போவதில்லை. குறைவான சம்பளத்தில் ஜவுளிக் கடையில் ‘பொம்மை’யாக நிற்கும் மாற்று வேலை. மனைவியின் தம்பிக்கு சொந்தமான வீட்டில் குடியிருப்பதால் வாடகை கொடுக்கத் தேவையில்லை. ஓரளவு சமாளிக்க முடிகிறது. இந்த நிலையில் மனைவியின் தம்பி ஊரிலிருந்து வரும் வைபவம். ‘குறைந்த பட்சம்…

  • சாமியாட்டம் – கேபிள் சங்கர்

    சாமியாட்டம் மூத்த பதிவரும், பத்திரிக்கையாளருமான யெஸ்.பாலபாரதியின் முதல் சிறுகதை தொகுப்பு இந்த சாமியாட்டம். இதற்கு முன்னால் இவர் அரவாணிகளைப் பற்றிய நாவல் ஒன்றையும் எழுதியிருக்கிறார். மொத்தம் பன்னிரெண்டு சிறுகதைகளை அடங்கிய இந்த தொகுப்பு 2003 –2011 வரை இவர் எழுதிய சிறுகதைகளின் மொத்தமாம்.  உட்காந்து எழுதியிருக்காரு போல. பாலபாரதியுடன் பேசி பழகியவர்களுக்கு, கதை வாசிக்கையில் அவரின் குரலில் கேட்பதை தவிர்க்க முடியாது. அவ்வளவு கம்பீரமான குரல் மனுஷனுக்கு. சிரித்தால் ப்ரம்ம ராட்ஷசன் போலச் சிரிப்பாரு. சரி.. நாம…

  • கோட்டிமுத்து – மா.சிவக்குமார்

    கோட்டிமுத்து (சாமியாட்டம் – யெஸ் பாலபாரதி) பாலபாரதியின் சாமியாட்டம் சிறுகதைத் தொகுப்பில் வெளியாகியுள்ள ஒவ்வொரு சிறுகதையைப் பற்றியும் தனித்தனியாக விமர்சனம் எழுதுவதாக உத்தேசம். முதலில் கோட்டி முத்து. 1. கோட்டி முத்து நமக்கு அன்னியமான ஒரு கதாபாத்திரம் இல்லை. நமது கிராமத்தில் நாம் பார்த்த வேலையாள் ஒருவரை மனதில் கொண்டு வருகிறது இந்த எளிய மொழியிலான பாத்திரப் படைப்பு. டால்ஸ்டாயின் போரும் அமைதியும் அல்லது அன்னா கரனீனா அல்லது சிறுகதைகளைப் படிக்கும் போது பாத்திரங்களை உயிருள்ள மனிதர்களாக…

  • பாரதியின் ஒரு பாட்டு -மா.சிவக்குமார்

    பாரதியின் ஒரு பாட்டு (சாமியாட்டம் – பாலபாரதி) முதல் கதை – கோட்டி முத்து இரண்டாவது கதை – பாரதியின் ஒரு பாட்டு. 1. சிறு சிறு சம்பவங்களின் மூலம் சிறு சிறு விபரங்கள் மூலம் ஜெயாவைப் பற்றிய முழுமையான சித்திரம் கிடைக்கிறது. ஜெயா படிப்பதை முற்றிலும் உள்வாங்கிக் கொண்டு நடைமுறையுடன் பொருத்திப் பார்க்கும் இயல்புடையவள் என்று தெரிகிறது. ஜெயா ஒன்பதாவது படித்தாலும் வளர்ந்த பெண் என்று தெரிந்து விடுகிறது. வயதுக்கு வந்த பிறகு போராடி தந்தையின்…

  • சாமியாட்டம் – நூல் அறிமுகம் – விழியன்

    சாமியாட்டம் – நூல் அறிமுகம் பாலபாரதி என சிலராலும் தல என பலராலும் அழைக்கப்படும் எஸ்.பாலபாரதியின் ‘சாமியாட்டம்’ சிறுகதை தொகுப்பு வாசித்து முடித்தேன். வழக்கமாக சிறுகதை தொகுதிகள் வாசிப்பது வேகமாக சென்றுவிடும். ஆனால் இந்த தொகுப்பை அத்தனை வேகமாக வாசிக்கமுடியவில்லை. காரணம் அந்த எழுத்து ஏற்படுத்திய தாக்கமாக இருக்கலாம். ஒவ்வொரு கதையை கடக்கையிலும் ஆழ்மனதில் புதைந்திருந்த பல கதைகளையும் நினைவுகளையும் மீட்டு வந்தது என்பதே உண்மை. பாலபாரதியை பல வருடம் முன்னர் இணையத்தில் அறிமுகம். நேரில் இதுவரை 4-5…