Category: பதிவர் சதுரம் ;-))

  • ஈரோடு சங்கமம் – எவ்வளவு முடியுமோ அவ்வளவு லேட்டா..

    ஈரோடு சங்கமம் நிகழ்ச்சியில் விருது வழங்க என் பெயரை தேர்வு செய்திருப்பாதாகவும், விழாவில் கலந்துகொள்ள ஒப்புதல் கேட்டும் மின்னஞ்சல் வந்த்தும் கொஞ்சம் மிரண்டு தான் போனேன். சும்மாவே மெல்லுவாய்ங்க.. ஈரோடு ஆட்கள் பக்கோடா கொடுக்கப்பாக்குறாய்ங்களேன்னு தான் முதலில் தோணிச்சு. நான் அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டேன், எதுக்கும் கொஞ்சம் யோசிக்க அவகாசம் வேணும்னு கேட்டு கதிருக்கு பதில் அனுப்பினேன். அவரோ 24மணி நேரம் கெடு கொடுத்தார். வலை உலகின் மூலம் அறிமுகமாகி, உடன் பிறந்த அண்ணன் போலாகிவிட்ட, மா.சிவக்குமாரிடம்…

  • பஸ்ஸு தொல்லைகள்

    வயது வந்தோர்க்கான எழுத்துக்கள் கோவைக்கு போய் இருந்த போது நண்பரின் வீட்டில் தான் தங்கி இருந்தேன். பகல் முழுக்க வீட்டிலேயே கிடந்தாலும்,இணையம், கணினி என வசதிகள் இருந்த போதிலும் வலைப்பதிவுகளின் பக்கம் வருவதற்கு எனக்கு துணிவு இல்லை. அப்படியே ரீடர் வழி பதிவுகளை படிக்கலாம் என்றாலும் அதற்கும் ஒரு தயக்கம் இருந்துகொண்டே இருந்தது. நண்பரின் வீட்டினர் எவராவது எனக்கு பின்னால் வந்து நின்று நான் படிக்கும் வலைப்பதிவுகளில் (புதிய நண்பர்கள் பலரின் வலைப்பதிவுகளும் இப்படி இருப்பது வேதனை)…

  • கென்னுக்கும், சாந்தாமணிக்கும் டும் டும் டும்

    வெகு நாட்களாக டபாய்த்துக் கொண்டிருந்த சாந்தாமணியை கிட்னாப் செய்து வந்து இன்று கென் தலையில் கட்டியாகிவிட்டது. ஸ்ஸப்ப்ப்ப்ப்….பா… இனியாவது அவனின் புலம்பல்கள் குறையுமென்று நம்புகிறேன். இனி விழும் அடிகளெல்லாம் வெறும் உள்காயங்களையே தரும் என்பதாலும், கென்னும் ரொம்ப நல்லவன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் என்பதாலும் வெளிப்படையாக புலம்பும், கெட்ட வார்த்தைகளால் அர்ச்சிக்கும் அவனது உரிமை இன்று முதல் ரத்து செய்யப் படுகிறது. இனிமேல் சுந்தரும், ஆசிப்பும் பப்ளிக்கா கென்கிட்ட ஐ லவ் யூ சொல்ல முடியாது… சொல்லிட்டு தப்பிக்கவும் முடியாது…. 🙂…

  • சாதனை: தன்னம்பிக்கையும், தமிழும் தந்த வெற்றி! (ஒரு பதிவரின் வெற்றிக் கதை)

    தன்னம்பிக்கையும், லட்சிய வேட்கையும் கொண்ட எவரொருவரையும் வறுமையும், சூழ்நிலையும் அடிமையாக்கி வெற்றிகண்டிட இயலாது என்பதற்கு கார்த்திக் ஒரு உதாரணம். யார் அந்தக் கார்த்திக்? ஐ.ஏ.எஸ். தேர்வில் 4 முறை நேர்முகத் தேர்வுக்குச் சென்று தோல்வியே மிஞ்சிய நிலையில் தொடர்ந்து உறுதியுடன் போராடி, தனது கடைசி வாய்ப்பில் (7-வது வாய்ப்பு) வெற்றி பெற்ற கோவில்பட்டியைச் சேர்ந்த இளைஞர்தான் கார்த்திக். தமிழைப் பேசுவதும், படிப்பதும் இழிவு என்று எண்ணும் இக்காலத்தில் ஐ.ஏ.எஸ். தேர்வில் தமிழை விருப்பப்பாடமாக எடுத்துப் படித்து வெற்றிக்…

  • சிந்தனைக்கு இரு படங்கள்..

    1. இது குமுதம் பாலா-வரைந்த கார்ட்டூன்.. இதனை பார்க்கும் போது செந்தழல்ரவி-யின் பதிவுக்கும் நினைவுக்கு வருகிறது… 🙂 அதையும் பாருங்க! — 2. ஒரு கவுஜர், கவிமட நிறுவனர், வலை உலகில் நல்லா இருங்கடே-க்கு சொந்தக்காரர். கரப்பான்பூச்சி விருது கமிட்டி தலைவர்&நிறுவனர் இப்படி பல்வேறு சாதனைகளைத் தொடர்ந்துகொண்டிருக்கும்.. நம்ம அண்ணாச்சியை ஒரு குறுகிய சதுரத்துக்குள் சிக்க வைக்க நினைக்கும் சன் டிவி-யின் செயலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். 🙂 அப்ப.. நீங்க..! (அண்ணாச்சி முன்னாள் எழுத்தாளர் தானேன்னு…

  • வலைப்பதிவரோடு BAR-க்கு போறீங்களா.. ஒரு நிமிசம்..!

    டிஸ்கி:- இந்த பதிவில் வரும் வார்த்தைகள் எதுவும், தனி நபரையோ, குழுவையோ அல்லது எவரையும் யாரையும் குறிப்பிடுபவன அல்ல. இவை அனைத்தும் நிகழக்கூடிய சாத்தியங்கள் இருப்பதால்.. கற்பனையாக எழுதப்பட்டவைகளே.. உஷாரா இருக்க வேண்டியது அவரவர் பொறுப்பு! — 1. தண்ணியடிக்க பதிவர் யாரவது வலிய வந்து கூப்பிட்டால்.. அதுவும் தொடர்ந்து சில நாட்கள் வற்புறுத்தினால் கொஞ்சம் யோசிப்பது நல்லது. 2. வலிய வந்து அழைப்பவருடன் பாருக்கு செல்வது என்பது தவிர்க்கவே முடியாது என்றால்.. தலையில் ஹெல்மெட் மாட்டிக்கொண்டு…

  • இன்று பதிவர்களுக்கான விக்கீபிடியா கூட்டம்.. அவசியம் வாங்க!

    வரும் சூன் 13 – இன்று வலைப்பதிவர்கள் விக்கிப்பீடியாவுக்குப் பங்களிக்கலாம் என்று ஒரு அறிமுக கூட்டம் கிழக்கு மொட்டை மாடியில் நடக்கிறது. இதற்கு நீங்கள் வந்தால் நன்றாக இருக்கும். விக்கீபிடியாவுக்கும் மிகவும் உதவியாக இருக்கும். விவரங்களுக்கு – http://tamilwikipedia.blogspot.com/2009/06/blog-post.html நன்றி. — ரவி.. பதிவு போட்டாச்சு! 😉

  • மானம் கெட்ட தமிழன்..

    மும்பையில் நடந்த தாஜ் ஹோட்டல் தாக்குதலுக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்லாது என கிரிக்கெட் வாரியம் ஏகபோகமாக அறிவித்தது நினைவிருக்கலாம். அப்போது இம்முடிவுக்காய் உணர்ச்சி வசப்பட்டு ஆமாம் சொன்ன அத்துணை தமிழர்களின் கவனத்திற்கும்… ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள இந்திய அணி பிப்ரவரியில் இலங்கை செல்கிறது – இது மிகச் சமீபத்திய செய்தி. இலங்கை பேரினவாதத்தால் கொல்லப்பட்டு அழிந்து கொண்டிருக்கும் தமிழர்களுக்கு குரல் கொடுக்க முன்வராத மத்திய அரசுக்கும், பெரும்படை கொண்டு…

  • வலைப்பதிவர்களே உங்களின் மனிதநேயத்தை காட்டுங்கள்…

    இனிய நண்பர்களே, தேசம் முழுக்க நமது அண்டை நாட்டில் வாழும் தமிழ்ச் சகோதரர்களின் துயர் துடைக்க குரல்கள் ஒங்கி ஒலித்தவண்ணம் இருக்கும் போது வலைப்பதிவர்களாகிய நாம் மட்டும் எப்படி சும்மா இருக்க முடியும்? வீதியில் இறங்கி போராடவோ, கொடி பிடித்து கோஷம் போட்டுக் கொண்டு நடக்கவோ நம்மில் எத்தனை பேருக்கு வாய்க்கும்? அதனால் நமது ஆதரவுக் குரலை இயன்ற விதத்தில் ஒலிக்க முயற்சிக்கலாம். மேலே நீங்கள் பார்க்கும் படம் மடிந்து கொண்டிருக்கும் நம் அப்பாவி சகோதரர்களுக்கு ஆதரவுக்…

  • அவன் – அது = அவள்! – அவசியம் வாங்க!!

    வலைப்பதிவு தோழர்களை நான் முறையாக வெத்தலைப்பாக்கு வைத்து தான் அழைக்க வேண்டும் என்பதில்லை. நான் அழைக்காமலேயே கலந்துகொள்வார்கள் என்றாலும், நிகழ்ச்சி எங்கே, எப்போது நடக்கிறது என்று தெரியப்படுத்துவதற்காக இந்த அழைப்பிதழ்! நூல் வெளியிடுபவர் : தோழர் ஆர்.நல்லக்கண்ணு நூலினை பெற்றுக்கொள்பவர் : தோழி ரேவதி, திருநங்கை வாழ்த்துரை : தோழர் ஆதவன் தீட்சண்யா தோழர் பாட்டாளி ஏற்புரை : அடியேன் நாள் : 31-08-2008, ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணி இடம் : ஸ்ரீபார்வதி மினி ஹால்,…