Category: வாசிப்பனுபவம், புத்தகங்கள்

  • எழுத்துக்கு கிடைக்கும் மரியாதை எழுதியவரின் பெயருக்கானது

    கவிதையின் அறிமுகம் எனக்கு ஏற்பட்டது நண்பர்களால் தான். சிறுவயதிலேயே காமிக்ஸ், அம்புலிமாமா போன்ற கதை புத்தகங்கள் படிக்க தொடங்கி விட்டாலும்,எட்டாவது படிக்கும் போதே நூலகத்தில் உறுப்பினர் ஆனேன். அங்கும் வாண்டுமாமா, à®…à®´.வள்ளியப்பா, போன்ற எழுத்தாளர்களின் கதைத்தான் படித்து வந்தேன். அப்புறம், மாத நாவல்களின் அறிமுகம் ஏற்பட்டது.  கவிதையின் அறிமுகம் மட்டும் கொஞ்சம் தாமதமாகத்தான் தொடங்கியது. எட்டுக்கும் மேற்பட்ட நண்பர்கள் குழாம் அரட்டையில் ஈடுபடும்போது, எங்களின் பேச்சில் அனேகமாக இலக்கியமும், அரசியலுமே மையமாக இருக்கும். கம்பனிடம் ஒரு கேள்வி…

  • சீவக சிந்தாமணி- நாவல்- வாசிப்பனுபவம்

    எத்தனையோ புத்தகங்கள் படித்திருப்போம். சினிமாக்கள் பார்த்திருப்போம். சிலருக்கு மன்னர் கால கதைகள் என்றால் கொள்ளைப் பிரியமாய் இருக்கும். அதிலும் திருப்பங்கள் நிறைந்து, சஸ்பென்ஸ் வேறு இருந்துவிட்டால்.. கேட்கவே வேண்டாம். இன்றும் கூட பொன்னியின் செல்வன் சக்கை போடு போடுவதற்காக அடிப்படையே நமக்குள் புதைந்து கிடக்கும் பழங்கால கதைக்கான ஏக்கங்களின் வெளிப்பாடு என்று தான் நான் கூறுவேன். புகைப்படங்களே இல்லாத அந்த பழங்காலத்திற்கு நாம் செல்ல முடியாத ஏக்கம் ஒரு புறம் என்றால்.. பண்டைய மக்களின் வாழ்க்கை எப்படி…

  • பேயோன்1000- நூல் விமர்சனம்

    விமர்சனத்தை படிக்க.. படத்தின் மேல் க்ளிக்கவும். நன்றி:- இந்தியாடுடே(தமிழ்)

  • இலக்கிய உலகின் தாதாக்கள்

    ஒரு கேள்வி ஒருவர் முன் வைக்கப் பட்டால் அதற்கு சாதாரணமானவர்கள் பதில் சொல்வதற்கும் பொது வாழ்வில் இருப்பவர் பதில் சொல்வதற்கும் வித்தியாசம் உண்டு. ஒரு அரசியல்வாதியிடம் அவரது அரசியல் நடவடிக்கைகள் குறித்து யார் வேண்டுமானாலும் கேள்வி எழுப்பலாம். பதில் சொல்லியே ஆக வேண்டும். மக்களின் பிரதிநிதியாக இருப்பவர் அவர்.  அப்படி பதில் சொல்ல விருப்பமில்லையென்றாலும் அதை நாசூக்காக தாண்டிச் செல்ல வேண்டுமே அன்றி, நீ யார் என்னை கேட்க என்று எகிறுவது நல்ல பண்பாகாது. இதே அளவுகோல்…

  • விடுபட்டவை 04 ஜூன்2010

    ஒரு வருடங்களுக்கு மேலாக யோசித்து யோசித்து.. கடைசியாக திரட்டிகளில் இருந்து வெளியே வந்துவிட்டேன். இனி விடுபட்டவையை .. இங்கு நேரடியாகவோ அல்லது ரீடர் மூலமாகவோ பார்த்துக்கொள்ளலாம். என்னிக்கோ ஒன்னு எழுதுறோம்.. அதையும் தூக்கிட்டுப் போய் திரட்டியில் இணைக்க வேண்டியதிருக்கு.. பல சமயம்.. நெட் படுத்தும் பாட்டில் இணைக்க முடியாமல் திரும்பி வரும் படி ஆகிடுது. சரி.. கொஞ்ச நாட்கள் இப்படியும் இருந்து பார்ப்போம். — இலக்கிய(!) கட்டுரைகளை ஆரம்பத்தில் படிக்கும் போது இருக்கும் மோகம் சில நாட்கள்…

  • ’ஈழம்-ஆன்மாவின் மரணம்’ கார்ட்டூன் தொகுப்பு ஓர் அறிமுகம்

    நான் மும்பையில் வசித்த காலங்களில் அறிமுகமானவர்களில் பாலாவும் ஒருவர். எனக்கு முன்னமே சென்னைக்கு வந்து குமுதத்தில் கார்டூனிஸ்டாக வேலைக்கு சேர்ந்தவர். திசை தெரியாமல் திக்கற்றுப் போய் சென்னை வந்திறங்கியபோது, தாயைப் போல அணைத்து, அரவனைத்த இளவல் இவன். பாலகிருஷ்ணன் என்பது தான் அவரின் இயற்பெயரும். எங்களிருவருக்கும் பெயரில் இருந்த ஒற்றுமை கருத்துக்களில் பலசமயங்களில் இருந்ததில்லை. அதனாலென்ன… நட்பு வேறு அரசியல் பார்வை வேறு என்று இருவருக்குமே புரிந்திருந்ததால்.. இன்றும் இந்த நட்பு இனிமையாக தொடர்கிறது. ஈழம் பற்றி…

  • முதல்வர் கருணாநிதி மனதை கரைந்த கட்டுரை.. இதோ!

    கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியா டுடே வார இதழின் தமிழ் பதிப்பில் வெளிவந்த இருள்படிந்த கூடாரங்கள் என்ற கட்டுரையே.. தமிழக முதல்வரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருப்பதாக அவரே கடிதம் எழுதி இருக்கிறார். இன்று காலை அவசர அமைச்சரவை கூட்டத்தை கூட்டினார் முதல்வர். அதன் படி, தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளின் வசதிக்காக ரூ.12 கோடியை ஒதுக்கி இருப்பதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். இலங்கை அகதிகள் நிலை குறித்த ஆலோசனைக் கூட்டம் முதல்வர் கருணாநிதி தலைமையில் இன்று நடந்தது.…

  • விடுபட்டவை 23 August 09

    மிகுந்த மகிழ்சியாக உணர்கிறேன். இன்று வெற்றிகரமாக இலங்கை தமிழ்வலைப்பதிவர்களின் சந்திப்பு மிகச்சிறப்பாக நடந்தேறி இருக்கிறது. சந்திப்புக்கு என உழைத்த அத்தனை உள்ளங்களுக்கும், சந்திப்பில் கலந்துகொண்டு, மற்றவர்களின் அறிமுகமும் பெற்று, கருத்துக்களையும் பகிர்ந்து கொண்ட பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள். பதிவர்களின் சந்திப்புகள் தொடந்து நடைபெறட்டும். எழுதுவதோடு மட்டுமல்லாமல்.. பல்வேறு வளர்ச்சிக்கும், நமது ஒற்றுமைக்கும் வழி வகுக்கட்டும் சந்திப்புகள். மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்கிறேன். சந்திப்பின் ஒலிவடிவம் கேட்க.. மதுவதனன் பதிவுக்கு போகலாம். படங்களைக்காண.. வந்தியத்தேவன் மற்றும் ஆதிரை பதிவுக்கு…

  • அவள் + வலி = வாழ்க்கை. -à®….வெண்ணிலா

    வலி. வேறுபாடுகளைக் கடந்து மனித இனத்திற்குப் பொதுவான உணர்வாக வலி உணரப்படுகிறது. அன்பு செய்தலும், உணர்வுகளை சுகித்தலும் பொதுவான சந்தோஷங்கள். வலி – பொதுவான துக்கம். வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் எத்தனை விதமான வலிகள்; லௌகீக விஷயங்களின் போதாமை உண்டாக்கும் வலி; உறவுகளின் புறக்கணிப்பின் வலி; ஆணுக்கொரு வலி; பெண்ணுக்கொரு வலி; குழந்தைக்கொன்று; பருவங்களுக்கேற்ப மாறுபடும் வலி; ப்பா… எத்தனை விதமான வலிகள்; ஒவ்வொரு வலியின் துக்கத்துடன் வெறொன்றை எந்தக் கணத்திலும் ஒப்பிட்டுவிட முடியாத அளவுக்கு…

  • கருணாநிதி என்ற மனிதர்..

    எப்போதுமே முரண்பாடுகள் இன்றி வாழ்வதென்பது சாத்தியமில்லாத ஒன்று. முரண்பாடுகளின் மூட்டை தான் வாழ்க்கை. தி.மு.கழகத்துடன் எனக்கு சில இடங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும், பல இடங்களில் ஒத்துப்போவது என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது. அதுபோலத்தான்.. அதன் தலைவர் மு.கருணாநிதி மீதும் தி.மு.கழகத்தின் மீதும் பல சமயங்களில் விமர்சனம் வைத்திருக்கிறேன். அதற்காக சில/பல நல்ல காரியங்களைச் செய்யும் போது பாராட்டாமல்  இருக்க, நான் ஒன்றும் ஜெயலலிதா அல்ல! 🙂 எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் நம்மில் பலரும் வாசித்திருப்போம். இன்று…