Category: வாசிப்பனுபவம், புத்தகங்கள்

  • முத்துக்குமாரின் உடல் வீழ்ந்து கிடக்கும் சடலமல்ல..

    தமிழர்களே! தமிழர்களே! என்னைத் தூக்கி கடலில் எரிந்தாலும் நான் கட்டுமரமாக மிதப்பேன். கவிழ்த்து விட மாட்டேன்’’ திரு. மு.கருணாநிதி. தமிழின் சிறந்த வசனகர்த்தாவாகிய கலைஞர் கருணாநிதியின் மேற்கண்ட வசன வரிகளைப் போன்ற எத்தனையோ வசனங்களைக் கேட்டு ஏமந்த தமிழினத்தின் முன் நம் அவமானத்தின் சாட்சியமாய் பெருமிதத்துடன் கிடக்கிறது தோழர் முத்துகுமாரின் உடல். கருணாநிதி அரசின் கையாலாகாத் தனத்திற்கும் ரத்த வெறி பிடித்த சிங்கள பேரினவாத பாசிசத்திற்கும் முதுகில் குத்தும் இந்திய வல்லாதிக்கத்தின் துரோகத்திற்கும் எதிராய் தன் மரணத்தை…

  • புத்தக கண்காட்சிக்கு போறீங்களா..? ஒரு நிமிசம் ப்ளீஸ்!!

    இது புத்தகப்பிரியர்களுக்கு திருவிழாக் காலம்.ஜனவரி மாதம் என்றாலே புத்தக கண்காட்சி, புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழாக்கள், எழுத்தாளர்களை சாதாரணமாக அடிக்கடி சந்திக்கமுடிகின்ற வாய்ப்பு எல்லமே இந்த மாதம் நிகழும். சிறந்த நூல்கள் புதிய நூல்கள் என வலை உலகில் அனேகர் டாப் டென் தொடங்கி டாப் நூறு வரை புத்தகங்களின் பட்டியலை போட்டு விட்டார்கள். நான் ரசித்த நூல்களின் சிறு பட்டியல்.. வாசிக்கும் வழக்கம் உடைய அனைவரிடமும் இருக்கவேண்டியதாக நான் கருதும் நூல்களின் லிஸ்ட் இதோ.. 1.…

  • விடுபட்டவை 03 ஜூன் 2008

    இன்று சென்னையின் அனேக இடங்களில் கூம்புவடிவ ஒலிபெருக்கிகளிலும் (இதை இடையில் தடை பண்ணியதாக நினைவு!), ஸ்பீக்கர் பாக்ஸ்களிலும் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள் கொண்டாட்டமாக கழக பாடல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தன. “கட்டு கட்டா கள்ளப் பணம் வச்சிருக்குற கும்பல் இது, அத்தனையும் அள்ளிவிட்டு, ஓட்டு கேட்டு வீடு தேடி வருவாங்க.. விரட்டியடிங்க…” என்றும், ”உப்புக் கருவாடும், ஊறவச்ச சோறும் கூட கிடைக்கலையே எனக்கு.. கொள்ளை கொள்ளையா பணத்தை சேர்க்குறியே ஒனக்கு!” என்றும் ஆளும் அரசை விமர்சிக்கின்ற பாடல்கள்.…

  • நித்யாவும் நானும்..

    உங்களில் பலருக்கும் கென் தெரிந்தவராக இருக்கலாம். அனேக குழுமங்களில் சண்டைக்கோழி சேவலாக வலம் வரும் கோபக்காரன். ஆனால்.. மெல்லிய மனதுக்கு சொந்தகாரன். எதையும் வெளிக்காட்டிக்கொள்வதில் அவனுக்கு தகராறு உண்டு. அது அன்பாக இருக்கட்டும், கோபமாக இருக்கட்டும். கவிதைகள் மட்டுமே தன் வலைப்புக்களில் எழுதிக்கொண்டிருக்கும் கென், அவ்வப்போது உரைநடைபக்கமும் எட்டிப் பார்ப்பதுண்டு. கவிதைகளை விட அவனது உரைநடைக்கு நான் வாசகன். இந்த வாரத்தில் பண்புடன் குழுமத்தில் அவன் எழுதி இருந்ததை பதிவர்களின் பார்வைக்கு வைக்கிறேன். -OoO- ஒன்றாம் வகுப்பு…

  • பார்வை

    எனக்கு அது கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை நான். ஆனால், கொஞ்சம் சந்தேகமாகவும் இருந்தது. அது அவளாக இருக்குமோ? சே, எப்படி அது அவளாக இருக்குமென்று மனதில் நியாயமான கேள்வி எழுந்தாலும் இன்னொரு புறம் ஏன் அது அவளாக இருக்கக் கூடாதென்றொரு காட்டுமிராண்டித்தனமான சிந்தனையும் பிறக்காமல் இல்லை. எதைப் பற்றிப் பேசுகிறேன் என்கிறீர்களா? அதுதான் முக்கியமான பிரச்னை. அன்றும் எல்லா நாளைப் போலத்தான் நகர்ந்து கொண்டிருந்தது. திங்கட் கிழமை. திட்டப்பணிகள் குறித்து எல்லா ஒப்பந்தக்காரர்களிடமும் கலந்தாலோசனை.…

  • ஆத்தா… நான் வேலையை விட்டுட்டேன்…

    ஸ்ஸ்ஸ்ஸ்… அப்பாடா… கொஞ்சம் நிம்மதியா இருக்கேன். :))

  • ‘தை தை’ என்று குதிக்காமல் வெளியே வரும் பூனைக்குட்டி!

    இந்த ஆனந்தவிகடன் ( ஏப்ரல் 16.2008) பக்கம் 52ல் ஹாய் மதன் கேள்விபகுதி பகுதியில் இடம் பிடித்திருக்கும் கேள்வியும், அதற்கான திரு.மதன் அவர்களின் பதிலும் கீழே! -எம்.சிவகுருநாதன், தஞ்சை. தை முதல் நாள்தான் இனிதமிழ் வருடப் பிறப்பு என்று தமிழக அரசு சட்டம் கொண்டுவந்திருப்பது குறித்து..? இந்த மாற்றம் குறித்துப் பல கோணங்களில் யாருமே கேள்விகள் எழுப்பவில்லை. ஆகவே, தமிழக அரசிடம் விளக்கங்கள் எதையும் கேட்க அவசியமில்லாமல் போய்விட்டது. ஏதாவது கேள்விகள் எழுப்பினால், நம்மைத் ‘தமிழினத் துரோகி’…

  • ஒரு நிமிடம் ஞாநி..

    இளமையான ஞாநி அவர்களுக்கு.. வணக்கம். பல சந்தர்ப்பங்களில் உங்களுக்கு மடல் எழுத நினைத்ததுண்டு, ஆனால்.. அப்போதெல்லாம் எழுத முடியாமலேயே போய் விட்டது. அந்த சமயங்களை நினைத்துப்பார்த்தால்.. பல பாராட்டுக்களும், சில சண்டைகளுக்குமான சமயமாக நினைவு வருகிறது. பரவாயில்லை. இப்போதாவது எழுதி விடுவது என்ற எண்ணத்துடனே அமர்ந்திருக்கிறேன். அனேகமாக வழமை போல இதையும் பாதியில் விட்டு விட மாட்டேன் என்றே நினைக்கிறேன். அக்டோபர் 10,2007 தேதி ஆனந்த விகடன் இதழில் பக்கம் 148-ல் தங்களின் தொடர் பத்தியான “ஓ…பக்கங்கள்”…

  • வாசிப்பனுபவம்: சிறகின் கீழ் வானம்.

    பம்பரம், கோலி, கிரிகெட், பாண்டி, சீத்துக்கல்லு என நம்மில் பலரும் பன்னிரெண்டு வயதில் விளையாடிக் கழித்திருப்போம். ஆனால் கு.à®….தமிழ்மொழி என்ற சிறுமி தன் பன்னிரெண்டாவது வயதில் ஒரு கவிதைப் புத்தகம் வெளியிட்டு இருக்கிறாள். இன்று கவிதை வடிவம் பலதளங்களுக்கு போய் விட்டது. ஆனாலும் பலரையும் ஈர்க்கும் வடிவங்களில் ஒன்று தான் துளிப்பா என்று சொல்லப்படும் ஹைக்கூ வடிவம். பாரதியால் 1916களிலேயே தமிழுக்கு அறிமுகமாகிவிட்ட இந்த ஹைக்கூ வடிவம், 1990களின் தொடக்கத்தில் எழுச்சிகொள்கிறது. இன்று தமிழில் மட்டும் வந்திருக்கும்…