Category: புனைவு

  • சிங்கமும் நரியும்

    (குழந்தைகளுக்கான கதை) காட்டுராஜா சிங்கத்துக்கு தினம் ஒரு விலங்கு உணவாக வலியப்போய் நின்று, சாகவேண்டும் என்ற விதி அந்த காட்டில் இருந்தது. அப்படி ஒரு நாள் முயல் ஒன்றின் முறை. அது சிங்கத்தின் குகை நோக்கி போய்க்கொண்டிருந்த போது, எதிர்பட்ட சிங்கத்தின் காரியதரிசி நரிக்கு, கொழு கொழு முயலைப் பார்த்ததும் ஆசை வந்துவிட்டது. நரியின் எண்ணத்தை புரிந்துகொண்ட முயல் நாலு கால் பாய்ச்சலில் முன்னால் ஓடிப்போய் நின்றுவிட்டு, ’ராஜாவிக்கு நான் உணவாகப் போகவில்லை எனில், வேறு எவரையாவது…

  • ராமுவும் சோமுவும் -2

    (குழந்தைகளுக்கான கதை) சோமுவின் தாத்தாவை வீட்டுக்குள் சேர்ப்பதில்லை. திண்ணையில் தான் அவருக்கு வாசம். மண் சட்டியில் தான் அவருக்கு சோறுபோடுவார்கள். ஒரு நாள் சோமுவின் தாத்தா இறந்து போனார். காரியங்கள் முடிந்த பிறகு, காலியாக இருந்த ஒரு திண்ணையில் சோகமாய் அமந்திருந்தான் சோமு. மறுதிண்ணையில் அவன் அப்பா பேப்பர் படித்துக்கொண்டிருந்தார். அவனைப் பார்க்க வந்தான் ராமு. ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தவன் தாத்தாவின் சோற்றுச்சட்டி கண்ணில் பட்டது. அதை எடுத்து சோமுவின் கையில் கொடுத்தான். சட்டியை கையில் வாங்கிய சோமு…

  • முனிவரும் தேளும்

    (குழந்தைகளுக்கான கதை) நீரில் விழுந்து தத்தளித்துக்கொண்டிருந்த தேள் ஒன்றை வெளியில் எடுத்துப் போட்ட முயன்றுகொண்டிருந்தார் முனிவர் ஒருவர். இந்த காட்சியை அந்தப் பக்கம் வந்த சோமு நின்று வேடிக்கை பார்த்தான். நீரில் கையை விட்டு, முனிவர் தேளை தூக்கியதும் அது கையில் கொட்டி விட்டது, ஆ என்று கையை அவர் உதற, தேள் மீண்டும் நீரில் விழுந்தது. சில வினாடிகள் கழித்து, மீண்டும் முனிவர் நீரில் தத்தளித்த தேளை தூக்கிவிடப்பார்த்தார். ஆனால் தேளோ மீண்டும் அவர் கையில்…

  • ராமுவும் சோமுவும்

    ( பேயோன் , அருண்நரசிம்மன் ஆகியோரின் தூண்டலில் குழந்தைகளுக்கான கதை) ராமுவும் சோமுவும் உயிர் நண்பர்கள். ஒருநாள் இருவரும் காட்டு வாக்கில் நடந்துகொண்டிருந்தனர். அப்போது ஒரு பயங்கரக் கரடி எதிரில் வந்தது. இருவரும் பயந்து ஓடத் தொடங்கினர். கரடி அவர்களை விடாமல் துரத்தியது. ராமு நண்பனை விட்டு ஒரு மரத்தின் மேல் ஏறித் தப்பித்தான். சோமுவுக்கு மரம் ஏறத் தெரியாது. அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. காட்டாந்தரையில் படுத்துக்கொண்டு இறந்தது போல் நடித்தான். கரடி அவனை கவனிக்காமல், மரத்தை நிமிர்ந்து…

  • பக்கத்து வீட்டு ரவுசு – பாகம் 2

    படித்தால் மட்டும் போதுமா-ன்னு ஒரு பழைய படம் நீங்கள் பார்த்திருக்கலாம். கண்ணதாசன் வரிகளுக்கு PB ஸ்ரீநிவாஸும், TM சௌந்தர்ராஜனும் உயிர் கொடுத்திருப்பார்கள். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை. அந்த பாடலுக்கு படத்தில் பாலாஜியும், சிவாஜியும் நடித்திருப்பார்கள். நீச்சல் குளத்துக்குள்ளிருந்து.. பாடுவது போல படமாக்கி இருப்பார்கள். சில நாட்களுக்கு முன் காலை அப்பாடல் மெகா டிவியில் ஒளிபரப்பானது. “பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை என்னென்று நான் சொல்லலாகுமா என்னென்று நான் சொல்லவேண்டுமா பூ ஒன்று கண்டேன் முகம்…

  • பாலபாரதியின் ‘சாமியாட்டம்’ – ஸ்டாலின் ஃபெலிக்ஸ்

    பாலபாரதியின் ‘சாமியாட்டம்’ சமூக ஆர்வலர், எழுத்தாளர், ஊடகவியலாளர் என பல முகங்கள் கொண்ட பாலபாரதியின் முதல் சிறுகதை தொகுப்பு ‘சாமியாட்டம்’. பன்னிரெண்டு சிறுகதைகளை கொண்ட இந்த தொகுப்பினூடே பயணிக்கும் போது சில கதைகள் புலம் பெயர் வாழ்வின் வெம்மையையும் சில மாலை நேரத்து மழை குளிர்ச்சியையும் தருகின்றது. இச்சிறுகதைகளின் வழியாய் ஆசிரியரின் அகவுலகை எளிதாய் தரிசிக்க முடிகிறது. ‘அம்மாவின் கை உணவிற்கு ஏங்கும் வாலிபனாய்’ ‘சாதிய படிநிலையை கண்டு சாடும் முற்போக்குவாதியாய்’ ‘ஊரின் நினைவை தன்னோடு சுமந்து திரியும்…

  • சாமியாட்டம் – ஒரு பார்வை -க.ரா

    சாமியாட்டம் – ஒரு பார்வை சாமியாட்டம் முதலில் ஒரு சொல். இந்த கட்டுரையை தயவு செய்து ஒரு விமர்சனமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஒரு வாசகனாக நான் வாசித்து உணர்ந்ததை மற்றவர்களுக்கும் கடத்தும் ஒரு சிறு முயற்சி மட்டுமே இக்கட்டுரை. கதாசிரியர் தாம் பிறந்த மண்ணிலும் தன் தொழில் பொருட்டு தான் தங்க நேர்ந்த ஊர்களிலும் தன்னை சுற்றி நடந்த நிகழ்வுகளை எழுத்தில் கோர்த்திருக்கிறார். அவர், அவர் வாழ்வில் கடந்து வந்த இந்த தருணங்களில்  சிலவற்றையாவது நாம் கடந்து…

  • தண்ணீர் தேசம் -மா.சிவக்குமார்

    தண்ணீர் தேசம் (சாமியாட்டம் – பாலபாரதி) ஒன்பது வருடங்களுக்குப் பிறகு சொந்த ஊருக்குத் திரும்பி வந்து ஊர் எப்படி முன்னேறியிருக்கிறது என்று ஆர்வமாக தேடிப்பார்க்கிறார். ஊரில் ‘முன்னேற்றங்களுக்கான’ அறிகுறிகள் நிறைய தென்படுகின்றன. ஊர் மாறிப் போனது போலவே வீடும் மாறிப் போய் இருந்தது. சந்திராயனை விண்வெளிக்கு அனுப்பி விட்ட நிலைக்கு வந்து விட்ட பிறகும் பல கிராமங்களுக்கு குடிதண்ணீர் வசதி மட்டும் இன்னும் வாய்க்கவில்லை. சிறு வயது நண்பனின் குடிசைக்குப் போனால், குடி தண்ணீர் தீர்ந்து போயிருந்தது.…

  • கடந்து போதல் – மா.சிவக்குமார்

    கடந்து போதல் (சாமியாட்டம் – பாலபாரதி) தூங்கிய பிறகு எளிதில் எழுந்து விடாதவரையும் எழுப்பி விடும் ஓலம். ஒரே அலுவலகத்தில் வேலை செய்து காதல் திருமணம் செய்து கொண்ட இளம் தம்பதியினர்.  மும்பைக்கு மாற்றலாகி வந்ததும் ஊர்க்கார அண்ணாச்சிக்கு சொந்தமான வீட்டு வாடகைக்கு கிடைத்து விட்ட நிம்மதியில் இருந்தவர்களை நடு இரவில் எழுப்பி உட்கார வைக்கிறது பயங்கரமான அந்த அலறல். அலறல் மர்மமாக இல்லை, இவர்களைத் தவிர குடியிருப்பில் வேறு யாரும் கவலைப் பட்டதாக தெரியவில்லை. மும்பையில்…

  • பொம்மை – மா.சிவக்குமார்

    பொம்மை (சாமியாட்டம் – பாலபாரதி) உழைக்கும் வர்க்க வாழ்க்கைப் போராட்டங்களின் சித்தரிப்பு. ‘பிரபல’ நிறுவனத்தில் வேலை பார்த்தாலும், அந்த சம்பளத்தில் அமைத்துக் கொள்ளும் வாழ்க்கைக்கு உத்தரவாதம் இல்லை.  ஆட்குறைப்பில் வேலை போன எதிர்த்து போராடும் வழிகள்  பலன் தரப் போவதில்லை. குறைவான சம்பளத்தில் ஜவுளிக் கடையில் ‘பொம்மை’யாக நிற்கும் மாற்று வேலை. மனைவியின் தம்பிக்கு சொந்தமான வீட்டில் குடியிருப்பதால் வாடகை கொடுக்கத் தேவையில்லை. ஓரளவு சமாளிக்க முடிகிறது. இந்த நிலையில் மனைவியின் தம்பி ஊரிலிருந்து வரும் வைபவம். ‘குறைந்த பட்சம்…