Category: பெரியார் வரலாறு

  • பெரியாரும் நானும்..

    எனக்குள் பெரியாரின் விதை விழுந்ததற்கு என் அப்பாவிற்கு என்றும் நன்றி சொல்லக்கடமைப் பட்டிருக்கிறேன். சோசலிச காங்கிரஸ்வாதியான அவருக்கு பெரியாரின் மீது எப்போதும் ஒரு பற்று இருந்தது. அதனால் தான் என் சின்ன சகோதரியை திராவிடர் கழகம் நடத்தும் கல்லூரியில் தான் சேர்த்தார். என் வாழ்க்கையில் நான் பெரிதும் வியக்கும் மனிதர் என்றால் அது ஈ.வெ.ரா தான். நான் இணையத்திற்குள் அடியெடுத்து வைத்த சமயங்களில் ஈ.வெ.ராவின் எழுத்துக்களுக்கு நிறைய பஞ்சமிருந்தது. திரிபுகளும், புரணிகளுமே அதிகம் வலம் வந்துகொண்டிருந்தது. நிறைய…

  • 12. பதவிகளை தூக்கி எறிந்த ஈ.வெ.ராமசாமி

    வெங்கட்டர் உடல் நலக்குறைவினால் பாதிக்கப் பட்டிருக்கும் போது அவர் பெயரில் தர்மங்கள் செய்வதற்கு ஒரு அறக்கட்டளை ஏற்படுத்தும் முயற்சியில் ஈ.வெ.ரா ஈடுபட்டார். ஆனால் இதற்கு ஈ.வெ.ராவின் அண்ணன் கிருஷ்ணசாமி கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தார். எல்லா எதிர்ப்புகளையும் மீறி தான் நினைத்ததைச் செய்து முடித்தார் ராமசாமி. ஆண்டொன்றுக்கு குடும்ப சொத்திலிருந்து ரூபாய் இருபதாயிரம் வரை வருமானம் வரும். அதில் இரண்டு மகன்களின் குடும்பச் செலவுக்கும் பணம் ஒதுக்கி மீதி வருமானம் தர்மத்திற்கு செலவிடப் படவேண்டுமென அறக்கட்டளை உருவாக்கி விட்டார்.…

  • 11. ஈ.வெ.ராமசாமி் நிர்வகித்த கோவில் பணி

    வெங்கட்டரின் வரத்து குறைந்தது ஒரு வகையில் ஈ.வெ.ராவுக்கு நிம்மதியாக இருந்தது. சாதி, மத வேறுபாடுகளை கண்டுகொள்ளாமல் கிறிஸ்தவர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், இஸ்லாமியர்கள் என எல்லாப் பிரிவினருடனும் கலந்து பழகுவதற்கு ஏதுவாக இருந்தது. எப்பொழுதும் கடையில் பத்துக்கும் குறையாத நண்பர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருந்தது. அவர்களின் புகை, மது போன்ற மேலாதிக்க பழக்கங்களுக்கு ஈ.வெ.ராவே புரவலராக விளங்கி வந்தார். ஈரோட்டில் எவ்வகுப்பினர் வீட்டிலும் நன்மை தீமை நடைபெற்றாலும் முதலில் இவரை அங்கு காணலாம். எல்லோரும் இவருக்கு தகவல்…

  • 10. ஈ.வெ.ராமசாமி நாயக்கர் மண்டி உதயம்..

    ஒரு வழியாக முகவரியைக்கொண்டு சுப்பிரமணிய பிள்ளையின் வீட்டைக் கண்டு பிடித்தார் வெங்கட்டர். வீட்டின் வாசலின் நின்று கொண்டு, கதவு எண்களை சரி பார்த்துக்கொண்டார். நேரமோ.. நடு நிசியை நெருங்கிக்கொண்டிருந்தது. கதவைத் தட்டுவதில் கொஞ்சம் தயக்கம் காட்டினார் வெங்கட்டர். அவருடன் இருந்தவர்கள் பரவாயில்லை கதவைத் தட்டுங்கள் என்று சொன்னார்கள். வேறு வழி தெரியவில்லை. தான் தேடி வந்தது ராமசாமியைப் பார்க்க.. அவன் கிடைத்தால் போதும்.. கதவைத் தட்டினார். பதில் இல்லை. மீண்டும் பலங்கொண்டு கதவைத்தட்டினார். மொட்டைத் தலையில் கொஞ்சமாய்…

  • 9. மாட்டிக்கொண்ட ஈ.வெ.ரா.

    சில நாட்களாக இல்லை. சில மாதங்களாக.. ராமசாமியைக் காணாமல் மிகவும் வருந்தினார் வெங்கட்டர். மனைவி சின்னதாய்யம்மையாரோ.. பித்து பிடித்த நிலைக்கு ஆளானவர் போல.. புலம்பியபடியே இருந்தார். மறுபக்கம் நாகம்மையின் கண்ணீர். என்ன செய்வதென்று தெரிய வில்லை. வியாபாரத்தையும் சரியாக கவனிக்க முடியவில்லை. ஈ.வெ.ரா.வின் அன்றைய நெருங்கிய நண்பரான ப.வெ.மாணிக்க நாயக்கருக்கு கடிதம் எழுதினார் வெங்கட்டர். இவர் எதிர் பார்த்தபடி பதில் சாதகமாக வரவில்லை. அந்த காலகட்டத்தில் வீட்டை விட்டு ஓடிப் போகும் செல்வந்தர் பலருக்கும் போக்கிடமாக இருந்தது…

  • 8. காசிக்கு கும்பிடு போட்ட பெரியார்

    மடத்தை விட்டு வெளியேறிய பின்னர் எங்கு போய் தங்குவது என்ற குழப்பம் தோன்றியது. கால் போன போக்கில் காசியை வலம் வரத்தொடங்கினார். நிறைய மடங்களும் சத்திரங்களும் கண்ணில் பட்டன. சத்திரங்களில் பார்ப்பனர்கள் மட்டுமே அனுமதிக்கப் பட்டனர். சிறுகுடலை ருசி பார்க்கத்துடிக்கும் பெருங்குடலுக்கு என்ன தெரியவா போகிறது.. பெரிய இடத்துப்பிள்ளை இவர் என்று.. பசி.. காதை அடைக்க.., வேறு வழியின்றி.. ஒற்றை ஆடையுடன் வலம் வரும் தன் தோற்றத்தை வைத்து பிச்சை எடுத்து சில நாட்கள் கழித்தார் ராமசாமி.…

  • 7. எச்சில் இலைகளில் பசியாறிய ஈ.வேரா!

    முப்பத்து முக்கோடி தேவர்களும் வாசம் செய்யும் தலம். ஒவ்வொரு மண் துகளிலும் கடவுளின் உருவத்தை பார்க்க முடிகின்ற தேசம். பாலிலும் தேனிலும் குளித்து எழும் மனிதர்கள். செழிப்பும் வனப்புமாய் இருக்கும் குடிமக்கள். வாழும் காலத்திலேயே ஒருவன் சொர்க்கத்தை பார்க்க வேண்டுமென்றால் காசி போனால் போதும், எல்லா மனிதர்களின் பாவங்களை போக்கும் புனித கங்கை நதி ஓடும் பூமியின் சொர்க்கம். பசி என்று எவரும் இருந்து விட முடியாது.. செல்வந்தர்கள் பல அன்னதான சத்திரங்களை உருவாக்கி வருவோர், போவோர்…

  • 6. பிச்சை எடுத்து சாப்பிட்ட ராமசாமி

    ஊரை விட்டு காசிக்கு போவது என்று முடிவு செய்ததும்.. யாரையாவது துணைக்கு அழைத்து செல்வது என்ற முடிவுக்கு வருகிறார் ராமசாமி. தொலை தூர பயணம். அதுவும் மொழி தெரியாத வடக்கு தேசத்தை நோக்கி போகப்போகிறோம். தனியாளாகப் போய் அவதி படுவதைக்காட்டிலும் கூட்டுக்கு ஆள் இருந்தால் சிரமம் தெரியாது. அவரின் அழைப்பை ஏற்று, உடன் வர சம்மதித்தவர்கள் இருவர். ஒருவர் ராமசாமியின் தங்கையின் கணவர். மற்றொருவர் நணபர். மூவருமாக ஈரோட்டை விட்டு சென்னைக்கு வந்து சேர்ந்தார்கள். செண்ட்ரல் ரயில்…

  • 5. ஈரோட்டுக்கு குட் பை!

    என்ன ஏது என்று அறிய முடிவதற்குள் குழந்தை இறந்து போனது. பத்துமாசம் சுமந்து பெற்ற சிசு.. ஆறு மாதகாலம் அதன் ஒவ்வொரு அசைவையும் கண்டு உணர்ந்து ரசித்து மகிழ்ந்த நிமிடங்கள்.. அச்சிசுவின் சிரிப்பு, அதன் கண்கள், முகச்சாயல் என எல்லாவற்றையும் ஒப்பிட்டுப் பார்த்து மகிழ்ந்த கணம்.. எல்லாம் சேர்ந்து மனதை பெரிதும் துயரத்தில் ஆழ்த்தியது. குழந்தையின் இழப்பை நினைத்து துவண்டு போய் இருக்கும் நாகம்மையின் முன்னால் தனது சோகத்தை காட்டிக்கொள்ளக்கூடாது என்று ராமசாமி முடிவுக்கு வருகிறார். தன்…

  • 4. நோயில் வீழ்ந்த பெரியாரின் பெண் குழந்தை!

    அதுவரை இருந்த தைரியம் பொலபொலவென உதிர்ந்தது. நாகம்மை, ஏற்கனவே வசதி குறைவான இடத்திலிருந்து வந்தவள் என்ற எண்ணம் சின்னத்தாய்யம்மையாரின் மனதில் இருந்தது. இப்போது தாலி இல்லாமல் எப்படி போய் நிற்க முடியும். அத்தையின் கண்களில் தன் கழுத்தின் மேல் விழுந்துவிட்டால்.. ஆகாத மனுசி கை பட்டால் குத்தம், கால் பட்டால் குத்தம் என்ற சொலவடை போல.. மருமகளாக வந்து விட்ட போதிலும் இன்னும் மாமியாரின் முழு அன்பை பெறவில்லை. இந்நிலையில் மாமியார் சொல்லாத விசயத்தை, கணவன் பேச்சை…