Category: வாசகப்பரிந்துரை

  • பிள்ளைகள் செய்துபார்க்க எளிய விஞ்ஞான சோதனைகள்!

        எனது பள்ளிப்பருவத்தில் பாடங்கள் தவிர்த்த மற்ற விஷயங்களில் ஆர்வம் அதிகமிருந்தது. அதற்காக வாங்கிய அடிகளும் அதிகம்தான். எந்த விளையாட்டுப்பொருளை எடுத்தாலும் அதனைப் பிரித்து, ஆராய்ந்து மீண்டும் அதேபோல மாட்டிவிடுவேன். மீண்டும் சரியாக பொருத்தமுடியாதபோது, உதைபடுவேன். செய்துபார் என்று எந்த நூலில் படித்தால் அதனை அப்படியே செய்துபார்க்கும் பழக்கமும் இருந்தது எனக்கு! ஒருமுறை எங்கள் ஊருக்கு கியாஸ் பலூன் விற்பவர் ஒருவர், மூன்று சக்கர ட்ரைசைக்கிளில் ஓர் உருளையைக்கட்டிக்கொண்டுவந்து, பலூனில் கியாஸ் நிரப்பி விற்பனை செய்தார்.…

  • பதின்ம வயதினருக்கான நாவல்!

    பதின்ம வயதினர் படிக்க ஏதுவான புனைவு நூல்கள் தமிழில் வருவதில்லை என்ற குறை எனக்கு எப்போதும் உண்டு. ஒன்று அவர்கள் சிறுவர் நூல்களைப் படிக்கவேண்டும் இல்லையெனில் பெரியவர்கள் நூலினை படிக்கும் நிலைதான் உள்ளது. இதுபற்றி தோழி ஒருத்தியிடம் பேசிக்கொண்டிருந்தபோது, மேலை நாடுகளில் பதின்ம வயதினருக்கான புவைவெழுத்துக்கள் அதிகம் வாசிக்கக்கிடைக்கின்றன என்றார். எனக்கு அந்த ஏக்கம் இங்கே எப்போதும் உண்டு. ஆனால் இக்குறையை போக்கும்படியாக, சமீபத்தில் பதின்ம வயதினருக்கான ஒரு கதையை வாசித்தேன். கொ.மா.கோ. இளங்கோ எழுதிய, ’சஞ்சீவிமாமா’என்ற…

  • உலகம் கொண்டாடும் குட்டிக் கடற்கன்னி கதை தமிழில்!

    ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் – சிறுவர் இலக்கிய உலகில் பெரிய அளவில் போற்றப்படும் முக்கியமான படைப்பாளி. இவரது பல கதைகள் உலகின் பலமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கூடவே அனிமேஷன் படங்களாகவும், சினிமாகவும் எடுக்கப்பட்டுள்ளன. சிவரது படைப்புகளில் எல்லோரும் மறக்காமல் சொல்லுவது குட்டிக்கடற்கன்னி என்ற சிறிய நாவலைத்தான். இந்த உலகில் கடலைக்கண்டு வியக்காதவர்கள் இருக்க முடியாது. அந்தக்கடலில் நுரை பொங்கும் அலைகளையும் பார்த்திருப்போம். கடலின் நுரைகளுக்குப் பின் ஒரு கதை இருக்கிறது. அதுவொரு குட்டிக் கடற்கன்னியின் வாழ்க்கைக்கதை. கடலுக்குள் இருக்கும்…

  • பால்யத்தை உயிர்ப்பித்த பதின்

      “புத்தகம் வாசிக்கிறதால என்ன பாஸ் கிடைக்கும்?” என்று ஒரு நண்பர்,  பல ஆண்டுகளுக்கு முன் கேட்டார். அதே மாதிரியான கேள்வியை பல சந்தர்ப்பங்களில் வேறு சிலரிடமும் எதிர்கொண்டிருக்கிறேன். இதற்குப் பதில் என்னிடம் எப்போதும் ஒரே மாதிரியாக இருந்ததில்லை. அப்போதைய மனநிலையைப் பொறுத்து மாறிக்கொண்டே இருக்கும். இக்கேள்வி பொதுவான வாசிப்பு பற்றியது என்பதால் அப்படி. குறிப்பிட்ட நூல் பற்றி என்றால் அதற்கென தனித்தனி பதில் சொல்ல முடியும். அப்படியொரு நூலைப்பற்றித்தான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய…

  • இளையோருக்கான தொடக்க நூல்

    பதிம வயதை அடையும் பிள்ளைகளுக்கு நான் சொல்லிக்கொடுக்கவேண்டிய விஷயங்களின் பட்டியல் மிகவும் நீண்டது. அறவுணர்ச்சியை அடிப்படையானது என்றாலும் கூடவே, இச்சமூகத்தின் மீது அக்கறைகொண்ட குடிமகனாக நம்பிள்ளை வளரவேண்டும். நல்ல மனிதனாக வளருவதற்கு, அவர்களோடு நாம் உரையாடலைத்தொடங்க இந்த வயது சரியானது. மொட்டைத்தாத்தா குட்டையில் விழுந்தார் என்று பொருளற்று எதையும் தொடங்கிவிடுவதை விட, மேலானது ஒரு நூலை நாம் வாசித்து, பின் அவர்கள் கையில் அதனைக்கொடுத்து, அதன் வழியே உரையாடலைக் கொண்டுபோவதென்பது சிறப்பு. அந்த வகையில் ச. தமிழ்ச்செல்வன்…