Category: வாழ்த்து

  • பிறந்தநாள் வாழ்த்துகள் தோழர்

    எனது முதல்நாவலான ’அவன் -அது +அவள்’ நாவலை வெளியிட முதலில் அணுகியது வயதில் முதிர்ந்த அந்த தலைவரைத்தான். அவருக்கு என்னை நேரடியாகத் தெரியாது என்றபோதும் நிகழ்வுக்கு வர ஒப்புக்கொண்டார். நான் அழைத்தபோது நாவல் அச்சகத்தில் இருந்தது. நூல் கையில் கிடைத்ததும் அதை எடுத்துக்கொண்டு அந்த தலைவரைப் பார்த்து கொடுத்துவிட்டு, நிகழ்வுத்தேதியை நினைவுபடுத்திவிட்டு வந்தேன். ரெண்டாவது நாள் அவரிடம் இருந்து அழைப்பு. நேரில் சென்று பார்த்தேன். நாவலைப்பற்றி பாராட்டிவிட்டு, தன்னால் நிகழ்வில் கலந்துகொள்ள இயலாது என்று வருத்தத்துடன் சொன்னார்.…

  • மரப்பாச்சி சொன்ன ரகசியம் நூலுக்கு -பாலசாகித்ய புரஸ்கார்

    மரப்பாச்சி சொன்ன ரகசியம் – நான் எழுதிய சிறுவர் நாவல். 2018ஆம் ஆண்டு வெளியானது. குழந்தைகளின் மீது நிகழ்த்தபப்டும் பாலியல் அத்துமீறலை எதிர்த்து குரல்கொடுக்க, பிள்ளைகளை ஊக்கப்படுத்தும் கதைக்களம். பள்ளி விடுமுறையில் பாட்டி வீட்டுக்குச் செல்லும் ஷாலினி என்னும் சிறுமிக்கு ஒரு மரப்பாச்சி பொம்மை கிடைக்கிறது. அந்த பொம்மை உயிர்பெற்று ஷாலினியோடு பேசுகிறது. அவளின் தோழி பூஜாவுக்கு ஒரு பிரச்னை வரும்போது மரப்பாச்சி பொம்மை அதிலிருந்து விடுபட வழிகாட்டுகிறது. ஓவியர் ராஜனின் அழகான ஓவியங்கள் கதை வாசிப்பை…

  • அப்பா

    நண்பர்கள், தோழிகளின் அப்பாக்களில் எல்லாம் எனது அப்பாவைத் தேடுவேன். இன்னும் சொல்லப்போனால் வயது கூடி மூப்பெய்திய அப்பாவின் வயதொத்த மனிதர்கள் எல்லோரிடமுமே என் அப்பாவின் சாயலைத்தேடுவது எனது வழக்கம். அதற்கொரு காரணமும் உண்டு; எனது 15வது வயதில் என் அப்பா காலமானார். அதனால் எனக்கு அவரது நினைவுகள் பெரும்பாலும் பிறரின் வார்த்தைகளின் வழியே உருவகப்படுத்திக் கொண்டதாகவே இருக்கிறது. கொஞ்சமாக செல்லரித்துப்போன புகைப்படம் போல சொந்த அனுபவத்தில் இருக்கும் நினைவுகளும் கூட உடன் பிறந்தோரின் வார்த்தைகளோ என்ற மயக்கம்…

  • ஆட்டிசம்: “தெய்வக் குழந்தையை வளர்ப்பது உலகின் உன்னதம்!”

    – மனநலம் குறைந்த மகளை ஆசிரியையாக்கிய சாதனையாளர் சாதனை   “அப்பா… நாளைக்கு ஸ்கூல்ல பிங்க் கலர் ஆக்டிவிட்டி. எனக்கு டிரெஸ், வளையல், பொட்டு எல்லாம் பிங்க் கலர்ல எடுத்து வைப்பா’’ என்று தன் தந்தை சதாசிவத்திடம் கேட்கும் நந்தினி, மாணவி அல்ல… பள்ளியில் ஆசிரியை. மனநலம் குறைந்த அவரை ஆசிரியராக்கியது, அந்தத் தந்தையின் அடர்த்தியான அன்பும், அக்கறையும், முயற்சியும், பயிற்சியும்! மனவளர்ச்சி குறைந்த 32 வயதாகும் நந்தினிக்காக அந்த பாசத்தந்தை வாழ்ந்து வரும் போராட்ட வாழ்க்கை,…

  • புத்தக வாசிப்பு என்னும் பெருங்கடல்!

    இன்றைய குழந்தைகள், நூல் வாசிப்பு என்றாலே காத தூரம் ஓடுகின்றவர்களாகவே இருக்கிறார்கள். உள்ளங்கைக்குள் உலகையே கொண்டு வந்துவிட்டது ஸ்மார்ட்போன். ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப், ஜி ப்ளஸ் என்று இணைய மேய்ச்சலுக்குத் தயாராக இருப்பவர்களிடம் நூலைக் கையில் எடுக்கச் சொன்னால், ஓடாமல் என்ன செய்வார்கள்? வாசிப்பின் மகத்துவத்தை அவர்களிடம் பேசுவதற்கோ எடுத்துச் சொல்லுவதற்கோ நமக்கும்கூட நேரம் இருப்பதில்லை என்பதுதான் நிதர்சனம். கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’, எழுதி ஐம்பது ஆண்டுகளைக் கடந்த பின்னும் இன்றும் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால்,…

  • ஆட்டிசம் என்னும் ஞான நிலை – மதுமிதா

    அனைவருக்கும் இனிய அன்பான மாலை வணக்கம். குழந்தைகள் திரைப்படமோ, குழந்தைகளைக் குறித்த கதையோ அல்லது கவிதையோ எப்போதும் நம் மனதை உடனே லகுவாக்கும் வித்தையை தனக்குள் வைத்திருக்கும். நாமும் குழந்தையோடு குழந்தையாகி மகிழும் வாய்ப்பை அந்த நேரங்களிலாவது பெற்றுக் கொள்வோம். ஒரு பயணம், அது பேருந்து பயணமோ அல்லது இரயில் பயணமோ, தொடர் பயணத்தின் வறட்சியான ஒரு பொழுதை ஏதோ ஒரு குழந்தையின் புன்சிரிப்பு சட்டென வசந்தமான மனநிலைக்கு மாற்றிவிடும். ஏதோ ஒரு பயணத்தில், ஏதோ ஒரு…

  • வாசிப்பனுபவம் – கரும்புனல்

    உங்கள் வாழ்க்கையை கொஞ்சம் திரும்பிப் பாருங்கள். கடந்த வந்த பாதையில் குறைந்த பட்சம் ஒரு நாவலுக்கான விசயமிருக்கும். அதை நாம்மில் பலரும் கவனிக்காது தவறவிட்டு விடுகிறோம். கவனமாக நினைவுகூர்ந்தால், சம்பவங்களைக் கோர்த்து, அழகான கதைச்சரடை உருவாக்கிட முடியும் என்று அனேக நண்பர்களிடம் நான் சொல்லி இருக்கிறேன்/ சொல்லியும் வருகிறேன்.  அப்படி, தான் கடந்து வந்த அனுபவத்தை அழகாக தொகுத்து, கரும்புனல் நாவலாக கொடுத்துள்ளார் ராம்சுரேஷ். சம்பல் கொள்ளையர்கள், தண்டகாரண்ய மாவோயிஸ்ட்டுகள் என எங்கே மக்களிடம் வன்முறை அதிகரித்தாலும்…

  • வாசிப்பனுபவம்- உச்சி முகர்

    விழியனின் உச்சிமுகர் நூல் குறித்து எனது எண்ணங்களைச்சொல்லும் முன் கொஞ்சம் கொசுவர்த்தி சுற்றுகிறேன். அதையும்  படித்துவிடுங்கள். சம்பவம் :- 1 என் சிறுவயதில் நடந்த சம்பவம் இது. அனேகமாக ஆறாம்வகுப்பு படிக்கும் போது என்று நினைக்கிறேன். படித்தது தமிழ்வழிக்கல்வி என்பதால்.. ஆங்கிலப்பாடங்கள் ஆறாவதில் தான் துவங்கின. அதுவரை ஏ, பி, சி, டி என இருபத்தியாறு எழுத்துகள் மட்டுமே தெரிந்திருந்தது. வகுப்பு தொடங்கிய சில நாட்களில் ஒன், ட்டூ, த்ரி என்று எண்களில்  ஆரம்பித்திருந்தார்கள். அப்போது பதினைந்து…

  • ஆசானுடன் படம் எடுத்துக்கொண்டேன்

    தொன்னூறுகளின் தொடக்கத்தில் அறிவொளி இயக்கம் எங்கள் பகுதிகளில் மிகவும் பிரபலமாக இருந்தது. அப்போது நானும் அதில் தன்னார்வலனாக அதில் இணைந்து செயலாற்றினேன். அப்படியே, அதில் நடிக்கும் வீதி நாடகக்கலைஞர்களைக் கண்டு, நானும் அவர்களோடு இணைந்து பணியாற்ற விரும்பியபோது, ராமநாதபுரத்தில் மாவட்ட அளவிலான நாடக பயிற்சி முகாம் மாவட்ட அறிவொளியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், கலந்துகொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் நானும் ஒருவன். பத்து நாட்கள் திட்டமிட்டிருந்த முகாமில் என்னால் நான்கு நாட்கள் மட்டுமே கலந்துகொள்ள முடிந்தது. எங்களுக்கு பயிற்றுவிற்பவராக இருந்தவர்களில்…

  • வெல்கம் 2014!

    முந்தைய ஆண்டுகளைப்போலவே இந்த ஆண்டும் நிறைய அனுபவப் பாடங்களையும், சில நல்ல நட்புகளையும் அடையாளம் காட்டியுள்ளது. என்னால் ஆனா காரியங்கள் என இதுவரை இயன்றதை இச்சமூகத்திற்கு செய்தி வந்திருந்தேன். ஆனால் கடந்த ஆண்டில் இருந்து ஆட்டிசம் விழிப்புணர்வுக்குத்தான் முதலிடம் என்று முடிவெடுத்து செயலில் இறங்கினேன். கனிக்கு என் அருகாமை தேவை என்பதால், அலுவலகம் விட்டதும் வேறு எந்த கூட்டங்களுக்கும் செல்லமுடியாமல், வீட்டுக்கு ஓடிவந்து கொண்டிருக்கிறேன். இனியும் சில ஆண்டுகள் இப்படித்தான் போகுமென நினைக்கிறேன். நூல்வெளியீடு, இலக்கியக்கூட்டம் என…