Category: வாழ்த்து

  • 19. ஆட்டிசம்: NIEPMD என்னும் வழிகாட்டி

    ஆட்டிசம் என்றழைக்கப்படும் தன்முனைப்புக்குறைபாடு, லேர்னிங் டிஸபிளிட்டி என்று சொல்லப்படுகின்ற கற்றல்குறைபாடு உட்பட.. பல்வேறு குறைபாடுகளை உடைய குழந்தைளின் நிலையை மதிப்பீடு(assessment) செய்வது மிகவும் அவசியம். அதற்கு சென்னைக்கு அருகில் உள்ள அரசு நிறுவனமான niepmdஐ பரிந்துரைக்கிறேன். மனிதநேயமிக்க ஊழையர்களைக்கொண்ட இந்த நிறுவன ஊழியர்களின் அணுகுமுறை நிச்சயம் குறிப்பிட்டு பாரட்டப்படவேண்டியதாக உள்ளது. முகவரியும், வழித்தட வரைபடமும் கீழே:- National Institute for Empowerment of Persons with Multiple Disabilities (NIEPMD) East Coast Road, Muttukadu, Kovalam…

  • புதுவருட நல்வாழ்த்துகள் 2013

    பதிவுகளில் எப்போதுமே கொசுவர்த்தி சுத்துவதுதான் வேலை என்பதால்.. டிசம்பர் 31ம் தேதியோ, ஜனவரி 1ம் தேதியோ திரும்பிப் பார்க்கிறேன்; சைடுல பார்க்கிறேன்; ஓரமாக பார்க்கிறேன்; மேலே ஆகாயம், கீழே பூமிங்கிற ரோஞ்சுல எழுத என்னிடம் புதிதாக ஏதுமில்லை. தொடர்ந்து ஃபர்பாக்ஸ் பயனர் என்பதால் அவங்களின் போஸ்டருடன், நானும் வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்கிறேன். அத்துனைபேரும் புதுவருட நல் வாழ்த்துகள்!!

  • நாஞ்சில் நாடனுக்கு பாராட்டுவிழா- ஓர் இனிமையான அனுபவம்

    விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் நாஞ்சில் நாடனுக்கு சென்னையில் பாராட்டுவிழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். ரஷ்யன் கலாச்சார மையத்தில் மாலை 6.30மணிக்கு என்று அறிவித்திருந்தார்கள். கொஞ்சம் முன்னதாகவே போய்ச்சேர்ந்தோம். நண்பர்கள் ரங்கசாமி, கே.ஆர்.அதியமான் போன்றவர்கள் எனக்கு முன்னமே வந்திருந்தனர். அப்படியே அவர்களோடு பேசிக்கொண்டிருந்தோம். ஒவ்வொருவராக வரத்தொடங்கினார்கள். விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்தினர் எல்லோரும் வேட்டியில் வந்து அசத்தியிருந்தனர். புளியமரம் தங்கவேலுவையும் பார்த்தேன். மனுசன் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வந்து ஆறுமாசம் ஆச்சாம். தெரியவே இல்லை. 🙁 ஆறுமணிக்கு சற்று முன்னதாக நாஞ்சில், ஜெமோ,…

  • ஜனவரி-3, சென்னையில் நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா

    நாஞ்சில் நாடன் இவ்வாண்டுக்கான சாகித்ய அகாதமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தாமதம் தான் என்றாலும் சரியான நபரை விருதுக்குழு தேர்வு செய்திருப்பது கொஞ்சம் ஆசுவாசத்தை தந்தது. சந்தேகமில்லாமல் எதிர்வரும் புத்தகக்கண்காட்சியில் இம்முறை நாஞ்சில் நாடனின் நூல்கள் அதிகம் விற்பனையாகும். ’டாப் செல்லர்’ அண்ணாச்சி தான் 🙂 . ஒரு வாசகனாகவும், முன்னாள் புத்தக விற்பனையாளனகவும் நான் பார்த்த அனுபவத்தில் சொல்லுகிறேன். (என்ன செய்ய.. உண்மையான எழுத்துக்குக்கூட, விருது போன்ற அரிதாரங்கள் தேவைப்படுகிறது, அப்போது தான் மக்களின் கவனம்…

  • மண்ணையும் மக்களையும் நேசிக்கும் நாஞ்சில் நாடனுக்கு சாகித்ய அகாதமி விருது

    ”… யதார்த்த நாவல் என்றால் நமது அதிநவீனத் தமிழ்ப் படைபாளிகளிடம் இதழ்க்கடையோரம் இளக்காரமானதோர் கீற்றொன்று காணப்படும். யதார்த்தவாதத்துக்கும் எல்லை ஒன்று இன்மை எனும் தன்மை உண்டு. வெளிப்பாட்டின் தீவிரத்தன்மை தரிசனத் தேடல் இவை இருக்கும் படைப்பாளிக்கு எந்த வடிவமும் சிறந்த வடிவம் தான்…” – நாஞ்சில்நாடன் (கீரனூர் ஜாகிர்ராஜா எழுதிய துருக்கித்தொப்பி நாவலின் முன்னுரையில்..) இந்த ஆண்டு சாகித்ய அகாதமி விருதுக்காக  தமிழ் எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் ”சூடிய பூ சூடற்க” என்ற சிறுகதை தொகுப்பு தேர்வு…

  • தடைகளைத் தாண்டி.. நாளை திரைக்கு வருகிறார் டாக்டர் அம்பேத்கர் (தமிழில்)

    ஒரு மாமாங்கத்திற்கு பிறகு பல தடைகளைத்தாட்டி, தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு திரைக்கு வருகிறது ‘டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்’ திரைப்படம். மிகப் பெரும் போராட்டத்திற்கும், நீதிமன்றத் தீர்ப்பிற்கும் பிறகு திரைப்படத்தை முடக்கி வைத்திருந்தவர்கள் வழி விட்டு, ஒதுங்கவேண்டியதாகிவிட்டது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன்னையும், தன் வாழ்வையும் அர்ப்பணித்துக் கொண்ட டாக்டர் பாபா சகேப்பின் வாழ்க்கை வரலாறு தான் இப்படம். எடிட்டர் லெனின் தன் சொந்த பணத்தில் இருந்து ரூ. 6லட்சத்தை இப்படம் வெளியாவதற்க்காக கொடுத்துள்ளார். அவரின் உதவியுடன்,தமிழ்நாடு முற்போக்கு…

  • ഓണാശംസകള്‍ …

    ശ്രാവണ പുലരികള്‍ ചിരിതൂകുന്നു ….. നാട്ടിലെങ്ങും വസന്തകാലം …. മനസുകളില്‍ ആഹ്ലാദത്തിന്റെ തിരതള്ളല്‍ … ഓരോ ഓണക്കാലവും ബാല്യകാല സ്മരണകളുടെ പൂക്കളമൊരുക്കി വരുന്ന വിരുന്നുകാരാണ്… എല്ലാവര്‍ക്കും എന്റെ ഹൃദയം നിറഞ്ഞ ഓണാശംസകള്‍ … நன்றி 🙂 படம்: கலேஷ்குமார் மூலக் கவிதை: அஜிஷ்

  • சீவக சிந்தாமணி- நாவல்- வாசிப்பனுபவம்

    எத்தனையோ புத்தகங்கள் படித்திருப்போம். சினிமாக்கள் பார்த்திருப்போம். சிலருக்கு மன்னர் கால கதைகள் என்றால் கொள்ளைப் பிரியமாய் இருக்கும். அதிலும் திருப்பங்கள் நிறைந்து, சஸ்பென்ஸ் வேறு இருந்துவிட்டால்.. கேட்கவே வேண்டாம். இன்றும் கூட பொன்னியின் செல்வன் சக்கை போடு போடுவதற்காக அடிப்படையே நமக்குள் புதைந்து கிடக்கும் பழங்கால கதைக்கான ஏக்கங்களின் வெளிப்பாடு என்று தான் நான் கூறுவேன். புகைப்படங்களே இல்லாத அந்த பழங்காலத்திற்கு நாம் செல்ல முடியாத ஏக்கம் ஒரு புறம் என்றால்.. பண்டைய மக்களின் வாழ்க்கை எப்படி…

  • கென்னுக்கும், சாந்தாமணிக்கும் டும் டும் டும்

    வெகு நாட்களாக டபாய்த்துக் கொண்டிருந்த சாந்தாமணியை கிட்னாப் செய்து வந்து இன்று கென் தலையில் கட்டியாகிவிட்டது. ஸ்ஸப்ப்ப்ப்ப்….பா… இனியாவது அவனின் புலம்பல்கள் குறையுமென்று நம்புகிறேன். இனி விழும் அடிகளெல்லாம் வெறும் உள்காயங்களையே தரும் என்பதாலும், கென்னும் ரொம்ப நல்லவன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் என்பதாலும் வெளிப்படையாக புலம்பும், கெட்ட வார்த்தைகளால் அர்ச்சிக்கும் அவனது உரிமை இன்று முதல் ரத்து செய்யப் படுகிறது. இனிமேல் சுந்தரும், ஆசிப்பும் பப்ளிக்கா கென்கிட்ட ஐ லவ் யூ சொல்ல முடியாது… சொல்லிட்டு தப்பிக்கவும் முடியாது…. 🙂…

  • சாதனை: தன்னம்பிக்கையும், தமிழும் தந்த வெற்றி! (ஒரு பதிவரின் வெற்றிக் கதை)

    தன்னம்பிக்கையும், லட்சிய வேட்கையும் கொண்ட எவரொருவரையும் வறுமையும், சூழ்நிலையும் அடிமையாக்கி வெற்றிகண்டிட இயலாது என்பதற்கு கார்த்திக் ஒரு உதாரணம். யார் அந்தக் கார்த்திக்? ஐ.ஏ.எஸ். தேர்வில் 4 முறை நேர்முகத் தேர்வுக்குச் சென்று தோல்வியே மிஞ்சிய நிலையில் தொடர்ந்து உறுதியுடன் போராடி, தனது கடைசி வாய்ப்பில் (7-வது வாய்ப்பு) வெற்றி பெற்ற கோவில்பட்டியைச் சேர்ந்த இளைஞர்தான் கார்த்திக். தமிழைப் பேசுவதும், படிப்பதும் இழிவு என்று எண்ணும் இக்காலத்தில் ஐ.ஏ.எஸ். தேர்வில் தமிழை விருப்பப்பாடமாக எடுத்துப் படித்து வெற்றிக்…