Category: விடுபட்டவை

  • விடுபட்டவை 03 ஜூன் 2008

    இன்று சென்னையின் அனேக இடங்களில் கூம்புவடிவ ஒலிபெருக்கிகளிலும் (இதை இடையில் தடை பண்ணியதாக நினைவு!), ஸ்பீக்கர் பாக்ஸ்களிலும் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள் கொண்டாட்டமாக கழக பாடல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தன. “கட்டு கட்டா கள்ளப் பணம் வச்சிருக்குற கும்பல் இது, அத்தனையும் அள்ளிவிட்டு, ஓட்டு கேட்டு வீடு தேடி வருவாங்க.. விரட்டியடிங்க…” என்றும், ”உப்புக் கருவாடும், ஊறவச்ச சோறும் கூட கிடைக்கலையே எனக்கு.. கொள்ளை கொள்ளையா பணத்தை சேர்க்குறியே ஒனக்கு!” என்றும் ஆளும் அரசை விமர்சிக்கின்ற பாடல்கள்.…

  • விடுபட்டவை 31 மே 2008

    சின்ன வயதிலிருந்து என்னையும் மீறி, இந்த பாடத்திட்ட முறைகளை வெறுத்து வந்திருக்கிறேன். பாடம் தவிர்த்த என்னுடைய எல்லா ஆர்வங்களையும் குடும்பத்தாரும், ஆசிரியர்களும் சேர்ந்து தடை போட்டிருக்கிறார்கள். அல்லது அந்த ஆர்வங்களை ஒரு வடிவத்துக்குள் கொண்டுவர என்னை கட்டாயப்படுத்தி இருக்கிறார்கள். எட்டாவது படிக்கும் போது அரைப் பரிட்சையில் 90 மார்க் அறிவியலில் வாங்கியது நினைவு இருக்கிறது. என் வீட்டில் எட்டாவது பையனாகிப் போனதால்.. நான் செய்யும் எதுவுமே அவர்களுக்கு புதியதாக படவில்லை. (முன்னோர்களால்.. ஏற்கனவே செய்யப்பட்டவைகளாக அவை இருந்திருக்கும்…

  • விடுபட்டவை 30.மே.2008

    சென்னைக்கு வரும் பதிவர்கள் பலரை சந்திக்கும் விருப்பத்தை தெரிவித்தாலும், அதனை பதிவு நாம் போட்டு அறிவித்தாலும்.. எல்லோரின் கண்ணிலும் அப்பதிவு படுவதில்லை. விளைவு சந்திப்புக்கு முன்பாக எஸ்.எம்.எஸ் வழியாகவோ, தொலைபேசியோ சென்னையில் இருப்பவர்களுக்கு மீண்டும் நினைவு படுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. பதிவு போட்டால் தானே பார்க்க முடியாமல் போகிறது.. மெயிலாக அனுப்பிவிட்டால்.. என்ற ரோசனையை செயல்படுத்த உடனடியாக(!) ஒரு குழுமம் தொடங்கப்பட்டிருக்கிறது. Homepage: http://groups.google.com/group/chennaibloggersmeet Group email: chennaibloggersmeet@googlegroups.com இதில் யார் வேண்டுமானாலும் சேரலாம். ஆனால்…

  • விடுபட்டவை 29.மே.2008

    நீங்கள் வலைப் பதிவரா? இது உங்களுக்கு கொஞ்சம் மகிழ்ச்சியான செய்தியாக இருக்கலாம். உங்களின் சுற்றம் மற்றும் உறவினர்களிடம் வலைப்பதிவர் என்று சொல்லிக்கொள்ளுவதில் நிறைய சிரமம் இருந்திருக்கும். அவர்களுக்கு வலைப்பதிவுகள் பற்றி புரியவைத்து, திரட்டிகள் குறித்து பேசி.. நானும் அதுல எழுதுறேன். உலகம் முழுக்க இருக்கும் பல தமிழர்கள் எனக்கு இதன் மூலம் நண்பர்களாகி இருக்காங்க.. அப்படீன்னு சொல்லுறதுக்குள்ள தாவு தீர்ந்து போய் இருக்கும். நீங்கள் பட்ட கஷ்டம் இனி குறையப்போகிறது. வார இதழ்கள், தினசரிகள், தொலைக்காட்சிகள் என்று…

  • விடுபட்டவை 28.மே.2008

    சென்னையில் ஆர். எஸ்.எஸ் அலுவலகத்தின் குண்டு வைத்து பலியான தீவைரவாதி ஒருவனின் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவர் இறந்து 13 ஆண்டுகள் கழித்தும் அடையாளம் தெரியாததால்.. அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக 28மே 2008 ம் தேதி தினத்தந்தி 11ம் பக்கத்தில் செய்தி வெளியிட்டு உள்ளது. அதே தேதியில் வந்திருக்கும் தினகரன் 5ம் பக்கத்தில் அடையாளம் தெரிந்ததால் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டு இருக்கிறது. அதே போல.. கால்டாக்ஸி டிரைவர் தனசேகர் என்பவனி காவல்துறை கது செய்திருக்கிறது. அவன்…

  • விடுபட்டவை 27.மே.2008

    ‘கமல் கவிதை படிச்சு இருக்கீங்களா.. என்னமா யோசிக்கிறார்ண்ணே?’ “ம்..ஆமா..” ‘ஞாநிக்கு என்ன திறமைண்ணே.. நாமெல்லாம் ஏன் இப்படி சிந்திக்கக்கூட முடியல?’ ” 🙂 ” ‘மதன் எழுதின இந்த வார பதில் படிச்சீங்களா? எவ்வளவு விசயம் தெரிஞ்சு வச்சு இருக்காங்க.. வியப்பா இருக்குண்ணே’ ”ம்..” ‘சுஜாதா எழுத்து என்ன எழுத்துண்ணே.. இருபது வருசத்துக்கு முந்தியே இப்படி எழுதி இருக்காரே.., நாமெல்லாம் எப்ப இப்படி ஆகுறது?’ “ம்..ஆவலாம்.” ‘என்ன ஆச்சுண்ணே.. எல்லாதையும் சாதாரணமா எடுத்துக்கிட்ட மாதிரி தெரியுது! ஒங்களுக்கு…