Category: Uncategorized

  • Hello world!

    Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!

  • என்னை மன்னிப்பாயா நண்பா!

    இருபது வயதுகளின் தொடக்கக் காலத்தில் எப்போதும் நண்பர்கள் குழுவுடனேயே சுற்றித்திரிவோம். அப்போது என் நெருக்கமாக இருந்த நண்பன் ராமகிருஷ்ணன். மிகவும் நல்லவன். தைரியசாலி. பிறக்கு உதவும் குணம் கொண்டவன். முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் என எல்லோருக்கும் தன்னால் உதவும் குணம் கொண்டவன். எப்போதும் ஒன்றாகவே சுற்றுவோம். சின்ன ஊர் என்பதால் காலையில் விடிந்ததும் அவன் வீட்டுக்கு அருகில் இருக்கும் தேனிர் கடைக்குச் சென்றுவிடுவேன். அவனும் எழுந்து வந்துவிடுவான். பெரியதாக வேலைகளுக்குச் சென்று சம்பாதிக்கவேண்டிய நெருக்கடி இல்லாத குடும்பப் பின்னணி…

  • கு. அழகிரிசாமியின் சிறப்பு நூல்: விலையில்லா பிரதி பெற பதிவுசெய்வதற்கான இணைப்பு

    எப்போதும் என் மனத்திற்கு மிகவும் நெருக்கமான எழுத்தாளர் கு. அழகிரிசாமி. இது அவரின் நூற்றாண்டு. இதனை ஒட்டி, அவரது படைப்புகளில் சிலவற்றைத் தொகுத்து, விலையில்லாமல் வழங்கவிருப்பதாக தன்னறம் பதிப்பகம் முன்பு அறிவித்தது பலருக்கும் நினைவிருக்கலாம். இந்த மகத்தான செயல்வழி அழகிரிசாமி என்னும் படைப்பாளுமையை அடுத்த தலைமுறை பலரிடமும் கொண்டுபோய் சேர்க்கிறது தன்னறம் பதிப்பகம். அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும். கவிஞர் ராணிதிலக், அந்நூலினை சிறப்பாகத் தொகுத்துள்ளார். மிகவும் நேர்த்தியான வடிவமைப்பில் வந்திருக்கும் இந்த நூல் நேற்று கிடைத்தது. இதன்…

  • மகிழ்ச்சியைப் பகிர்தல்!

    ஈரோட்டில் இருந்து இன்று காலை ஜெயபாரதி அம்மா அழைத்திருந்தார்கள். அவர்கள் பள்ளியில் படிக்கும் சிறப்புக்குழந்தைகளின் பெற்றோர் ஓர் அமைப்பாய் ஒன்று திரள்கின்றனர் என்ற மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துகொண்டார். அந்த அமைப்பின் முதல் கூட்டம் இன்று தொடங்க உள்ளதாகவும் தெரிவித்தார். நானும் எனது மகிழ்ச்சியைத் தெரிவித்தேன். நீங்கள் பள்ளிக்கு வந்து உரை நிகழ்த்திய பின்னர்தான் இப்படி அமைப்பாய் திரளவேண்டும் என்ற எண்ணமே ஏற்பட்டது அதற்கு உங்களுக்கும் நன்றி எனப் பாராட்டினார். உண்மையில் அந்த பாராட்டு பெரும் மனமகிழ்வைக்கொடுத்தது. ஜெயபாரதி…

  • சிறார் இலக்கியத்திருவிழா -2023

    பள்ளிக்கல்வித்துறையின் ஏற்பாட்டில் சிறார் இலக்கியத்திருவிழா-2023 நடந்துவருகிறது. மாநிலம் முழுவதிலும் இருந்து 150 மாணவ மாணவியரை சென்னைக்கு அழைத்து வந்து, ஆறு நாட்கள் தங்க வைத்து, சென்னையைச் சுற்றிக் காட்டி, எழுதுவதற்கும் உரைவீச்சு நிகழ்த்தவும் பயிற்சிப்பட்டறை நடத்தப்பெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று மாணவர்களிடையே உரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. எனது உரையினூடாக உருவக்கேலி, குறைபாட்டை வைத்து கேலி செய்வது போன்ற செயல்கள் கூடாது என்று கூறினேன். அத்தோடு மாற்றுத்திறனாளிகளுக்கும் இந்த சமூகத்தில் வாழும் சகல உரிமைகளும்…

  • கோடுகள் இல்லாத வரைபடம் – நூல் அறிமுகம்

    +++++++++++++++++++++++++++ நூல் அறிமுகம்: உலகை வலம் வந்தவர்களின் பயணக்குறிப்புகளில் இருந்து இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. 11 கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுப்பு நூல் இது. இதில் 10 கட்டுரைகள் மனிதர்களின் பயணக்குறிப்புகளை விவரிக்கிறது. அந்த பயணக்குறிப்புகள் விவரிக்கும் பண்டைய உலகை சுவாரஸ்யமாக நமக்கு அறிமுகம் செய்கிறார். அதிலும் அப்பயணக்குறிப்புகளில் அதிபுனைவாக கருதப்படும் தகவல்களையும் சேர்த்து எஸ்.ரா வாசகர்களுக்கு குறிப்பிட்டுச்சொல்கிறார். 11வது கட்டுரை, ஒட்ட்கச்சிவிங்கி என்ற உயிரினம் எப்படி நாடுகள் கடந்து இங்கே வந்தது என்பதைப் பற்றி பேசுகிறது. முந்தைய கட்டுரைகளில்…

  • நாளை

    காற்றிலில் பறந்துபோன காகிதப்பாப்பா.. இன்னும் திரும்பிவரவில்லை என்பதால்.. மந்திரச்சந்திப்பு அடுத்தபாகம் நாளை தொடரும்..

  • கருவிகளின் கதை

    திருவிளையாடல் படத்தில் வரும் வசனம் அது போல, பிரிக்கவே முடியாதது எது என்று கேட்டால்… கேள்விகளும் குழந்தைகளும் என்று தைரியமாகச் சொல்லலாம். குழந்தைகள் கேள்விகள் கேட்கும் போது, பதில் சொல்லியபடியே இருக்கும் பல பெற்றோரும், நமக்குப் பதில் தெரியாத கேள்வி ஒன்றினை அக்குழந்தை கேட்கும் சமயத்தில் கோபப்பட்டு பார்த்திருக்கிறேன். தெரிந்துகொண்டு சொல்கிறேன் என்று சொல்லுவதை விட்டு, கோபப்படுவது எப்படி நியாயமாக இருக்கமுடியும். எல்லா விஷயங்களையும் எல்லோரும் விரல் நுனியில் தெரிந்துவைத்திருக்கமுடியுமா என்ற கேள்வி எழலாம். முடியாது என்பது…

  • கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு

    சில நாட்களுக்கு முன் என் தோழி ஒருத்தியைப் பார்க்க அவர் இல்லம் போய் இருந்தோம். ‘உன் பையனுக்கு ஸ்கூல் லீவு விட்டுட்டாங்களா? ஊருக்கு எங்கேயும் போகலையா?’ என்று கேட்டார். ”இல்லை. வருட இடையில்தான் சொந்த ஊருக்கு போய் வந்தோம். இந்த ஆண்டு போகமுடியுமான்னு தெரியலை. அலுவலகத்தில் வேலை கொஞ்சம் அதிகமாக இருக்கு!” என்றேன். ‘பேசாம எதாவது சம்மர் கேம்ப்ல போட்டு விட்டுங்க’ என்றார். அப்போதுதான் அவரின் மகன் நினைவுக்கு வந்தான். ”எங்கே உன் பையனைக் காணாம்” என்று…

  • ஃபீனிக்ஸ் சகோதரிகள்

      ‘‘என்னோட சின்ன வயசுல, இப்படி சக்கர நாற்காலியில்தான் வலம்வர முடியும்; யாரையாவது சார்ந்துதான் வாழவேண்டியிருக்கும்னு நினைச்சுக்கூட பார்த்ததில்லை. பத்து வயசு வரைக்கும் சாதாரண குழந்தைகள் போலத்தான் இருந்தேன். ஓட்டம் ஆட்டம்னு வாழ்க்கை இயல்பாகத்தான் போய்க்கிட்டிருந்துச்சு. பத்தாவது வயசுலதான், என்னால மாடிப்படிகளில் சரியா ஏறமுடியவில்லைங்கிறதை கவனிச்சேன்“ என்று பேச ஆரம்பிக்கிறார் வானவன் மாதேவி. மஸ்குலர் டிஸ்ட்ரோபி என்ற தசைச்சுருக்கு நோயால் பாதிக்கப்பட்டவர் இவர். இவரது சகோதரி இயல் இசை வல்லபிக்கும் இதே நோய். ஆனால், இருவரும் தம்…