Tag: அனுபவம்

  • பிறந்தநாள் வாழ்த்துகள் தோழர்

    எனது முதல்நாவலான ’அவன் -அது +அவள்’ நாவலை வெளியிட முதலில் அணுகியது வயதில் முதிர்ந்த அந்த தலைவரைத்தான். அவருக்கு என்னை நேரடியாகத் தெரியாது என்றபோதும் நிகழ்வுக்கு வர ஒப்புக்கொண்டார். நான் அழைத்தபோது நாவல் அச்சகத்தில் இருந்தது. நூல் கையில் கிடைத்ததும் அதை எடுத்துக்கொண்டு அந்த தலைவரைப் பார்த்து கொடுத்துவிட்டு, நிகழ்வுத்தேதியை நினைவுபடுத்திவிட்டு வந்தேன். ரெண்டாவது நாள் அவரிடம் இருந்து அழைப்பு. நேரில் சென்று பார்த்தேன். நாவலைப்பற்றி பாராட்டிவிட்டு, தன்னால் நிகழ்வில் கலந்துகொள்ள இயலாது என்று வருத்தத்துடன் சொன்னார்.…

  • சின்னச்சின்ன ஆசை- சிறுவிளக்கம்

    சில மாதங்களுக்கு முன்பு ஒரு செய்தியை படித்தேன் இங்கிலாந்தில் உள்ள ஓர் ஆட்டிசநிலைச் சிறுவன் தினம்தோறும் வெவ்வேறு நாடுகளின் கொடிகளை தன் வீட்டு முன்னால் ஏற்றி வருகிறான். அந்த செய்தியை ஒட்டி அச்சிறுவன் மற்றும் அவன் தாயாரின் பேட்டிகளை பார்க்க நேர்ந்தது அப்பேட்டியில் அச்சிறுவன் சொல்லியிருந்த ஒரு விஷயம் என் மனதில் தைத்தது. ஒவ்வொரு நாளும் “காலையில் எழும்போது எதற்காக இன்று எழவேண்டும் என்ற என் கேள்விக்கு இந்த கொடியேற்றும் செயல் ஒரு நல்ல பதிலாக இருக்கிறது”…

  • சின்னச்சின்ன ஆசை

    கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்பது போல ஆட்டிச நிலையாளர்களின் உலகம் என்னவென்பது நமக்குப் புரியாது, அவர்களுக்கோ அதைச் சொல்லத் தெரியாது என்பதுதான் யதார்த்தம். டெம்பிள் கிராண்ட்லின் போல வெகு சிலர் எழுதத் துவங்கிய பின்னரே ஒரளவு அவர்கள் உலகின் மீதும் வெளிச்சம் விழுந்தது எனலாம். ஆனாலும் கூட ஒவ்வொரு ஆட்டிச நிலையாளரின் தனித்துவமான மன உணர்வுகளை இன்னமும் நம்மால் சரிவர புரிந்து கொள்ள முடிவதில்லைதான். அனுபவத்தினால் ஓரளவுக்கு பெற்றோர்/காப்பாளர்கள் சில அனுமானங்களைக் கொண்டிருக்கிறோம் என்றாலும் கூட…

  • சில வேண்டுகோள்கள்

        குறிப்பு: நண்பர்கள், உறவினர்கள், பெற்றோர் என எல்லோருக்குமான வேண்டுகோள். சிறப்புக்குழந்தை, ஆட்டிச நிலைக்குழந்தைகள் பற்றிய ஒரு புரிதலை ஏற்படுத்தவேண்டும் என்பதால் எழுதப்பட்டுள்ளது. 1. பொதுவெளியில் – பயணத்திலோ, திருமண மண்டபத்திலோ, கோவிலிலோ எந்த இடமாக இருந்தாலும், ஓர் ஆட்டிச நிலைக்குழந்தையை எதிர்கொண்டால் அவரின் பெற்றோரிடம் துருவித் துருவி விசாரணைகள் ஏதும் செய்யாமல் இருக்கலாம். கூடவே அதைச்செய், இதைச்செய் என்பதுபோன்ற இலவச அறிவுரைகளையும் தவிர்க்கலாம். 2. ஆட்டிச நிலைச்சிறுவர்களுக்கு புலனுணர்வு சார்த்த சங்கடங்கள் எப்போதும் இருக்க…

  • பால்யத்தை உயிர்ப்பித்த பதின்

      “புத்தகம் வாசிக்கிறதால என்ன பாஸ் கிடைக்கும்?” என்று ஒரு நண்பர்,  பல ஆண்டுகளுக்கு முன் கேட்டார். அதே மாதிரியான கேள்வியை பல சந்தர்ப்பங்களில் வேறு சிலரிடமும் எதிர்கொண்டிருக்கிறேன். இதற்குப் பதில் என்னிடம் எப்போதும் ஒரே மாதிரியாக இருந்ததில்லை. அப்போதைய மனநிலையைப் பொறுத்து மாறிக்கொண்டே இருக்கும். இக்கேள்வி பொதுவான வாசிப்பு பற்றியது என்பதால் அப்படி. குறிப்பிட்ட நூல் பற்றி என்றால் அதற்கென தனித்தனி பதில் சொல்ல முடியும். அப்படியொரு நூலைப்பற்றித்தான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய…

  • கல்வி: எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்

    அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், அன்னயாவினும் புண்ணியம் கோடி, ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல். பாரதியின் இந்த வரிகளுக்கு மேலதிக விளக்கம் தேவையில்லை. ஆனால் இதில் வரும் ஏழை என்பது பொருளாதாரரீதியில் வறுமையில் இருப்பவர்களை மட்டுமே குறிக்கும் ஒரு சொல்தானா? கல்வியை நோக்கி வரமுடியாத எல்லா இயலாமைகளையும் இச்சொல் அரவணைப்பதாகக் கொண்டால் உடல்ரீதியிலும் அறிவுவளர்ச்சியிலும் இயலாமை கொண்ட எல்லா சிறப்புக் குழந்தைகளுக்கும் கல்வி அளிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ளலாம். உடல் மற்றும் அறிவு…

  • மாற்றுத்திறன் குழந்தைகள் மற்றும் அவரது பெற்றோரின் சுயமரியாதை

      அரங்கில் நிறைந்திருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அறிவுசார் பலவீனங்கள்(Intellectual Impairment) எனும் குடையின் கீழ் பல்வேறு குறைபாடுகள் பட்டியலிடப் பட்டுள்ளன. பொதுவாக சமூகம் “லூசு” என்ற ஒற்றை வார்த்தையில் அடக்கிவிடும் இந்தப் பட்டியலில் இருக்கும் எண்ணற்ற குறைபாடுகளைப் பற்றி இங்குள்ள நண்பர்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? கற்றல் குறைபாடு, ஆட்டிசம், டவுன் சிண்ட்ரோம், செரிபரல் பால்சி, மனவளர்ச்சிக் குறைபாடு என நீளும் பட்டியல் சற்றே பெரியது. இந்த உலகில் இருக்கும் எல்லாக்…

  • திக்குவாய் – சரியாகப் பயிற்சியும் முயற்சியும் போதும்!

    திக்குவாயன் பாலா.. இப்படித்தான் படிக்கும் காலங்களில் பள்ளி, தெரு எல்லா இடங்களிலும் அழைக்கப்பட்டேன். ஒரு வயதுக்குள்ளாகவே பேச்சு வந்த குழந்தைகளில் நானும் ஒருவனாக இருந்திருக்கிறேன். ஒன்னரை வயது நடந்து கொண்டிருந்த போது, வீட்டில் இருந்த சைக்கிள் தலையில் விழுந்து, பலத்த அடிபட்டுவிட்டது. அள்ளிப்போட்டுக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார்கள் பெற்றோர். பதிநான்கு தையல் போட்டு விட்டு, ”பையனுக்கு இனி பேச்சு வரும்னு சொல்ல முடியாது. பிள்ளையைக் காப்பாற்றியதே பெரிசு” என்று மருத்துவர்கள் சொல்லி விட்டார்கள். சுமார் ஓராண்டு எதுவும் பேசாமல்…

  • ஆட்டிசம் – பெற்றோர்களுக்கான 10 யோசனைகள்

    உண்மையை ஒப்புக் கொள்ளுவோம் அனேக பெற்றோர் தங்கள் குழந்தைக்கு ஆட்டிசம் என்று தெரிந்தும், அப்படியெல்லாம் இல்லை. என் பிள்ளைக்கு வெறும் ஹைப்பர்தான், லேர்னிங் டிசபிலிட்டி மட்டுந்தான் என்றெல்லாம் பிறரிடமும், தம் மனதுக்குமே கூட நிறுவ முயற்சிப்பது வேண்டாம். உரக்கச் சொல்வோம் நாமே முன்வந்து பிள்ளையின் குறைபாட்டை வெளிப்படையாக பேசுவது நல்லது. அக்கம் பக்கத்தவர் தொடங்கி, ரயில் ஸ்நேகம் வரை அனைவரிடமும் நம் பிள்ளைக்கு இருக்கும் வளர்ச்சிக் குறைபாட்டினை நாமே முன் வந்து சொல்லிவிடுவது சரியாக இருக்கும். 3.…

  • 21. ஆட்டிசம்- சில புரிதல்கள் – ஓர் ஆவணப்படம் (திரைக்கு அப்பால்)

    ஆட்டிசம் பற்றி என் அனுபவப் பயணத்தினைக்கொண்டு, ஒரு விழிப்புணர்வு ஆவணப்படம் எடுக்கலாம் என அதற்கான வேலைகளைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது, அண்ணன் கார்மல் மூலம் விபரம் அறிந்த திரு. கைலாசம் சார் அழைத்தார். (அப்போது சானலின் ஹெட்-ஆக இருந்தார்) தனியா பண்ணப்போறியா..? ஆமாசார் பேசாம சானலுக்கு பண்ணிடேன். நிறைய பேருக்கு போய்ச்சேரும். நான் மவுனமாக நின்றிருந்தேன். இதன் மூலம் விருதுகிருதுன்னு ஏதுனா யோசிக்கிறியா? இல்லசார். விழிப்புணர்வும், பெத்தவங்களுக்கு ஒரு நம்பிக்கையும் கொடுக்கனும்னு தான் யோசிச்சிருக்கிறேன். அப்ப சானலுக்கே பண்ணு..…