Tag: அப்பா

  • பிள்ளைத்தமிழ் 4

    நமது குழந்தைகள் யாரோடு அதிக நேரம் செலவழிக்கிறார்கள் என்று கேட்டால், சந்தேகமே இல்லாமல் பெற்றோர்களாகிய நம்மோடுதான். ஆனால், அதில் எவ்வளவு நேரம் பயனுறு நேரம் என்ற கேள்விக்குப் பெரும்பாலான பெற்றோரிடம் பதில் இருக்காது என்றே நினைக்கிறேன். பயனுறு நேரம் என்றால் என்ன? பல் தேய்த்தல், குளித்தல், சாப்பிடுதல் போன்ற அன்றாடச் செயல்பாடுகள், வீட்டுப்பாடம் செய்ய வைப்பது போன்ற படிப்பு சார்ந்த வேலைகள் என, இதில் பாதிக்கும் மேற்பட்ட நேரம் கழிந்துவிடும். அதுபோக, மீதமுள்ள நேரத்தில் குழந்தைகளுடனான நம்…

  •  பாராட்டு அவசியம்!

    சின்னச் சின்ன பாராட்டுக்கள், பெரிய பெரிய செயல்களுக்கு அடித்தளமாக அமையும் என்பதை நாம் நினைவில் வைத்திருப்பது நல்லது. ‘இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் அதெற்கெல்லாம் எங்கே சார் நேரமிருக்கிறது?’ என்று சொல்வோர் அதிகமாகிவிட்டனர். அது உண்மையாகவும் இருக்கலாம். அவர்களுக்காகவே கட்டுரைக்குள் நுழையும்முன், ஒரு சின்னக் கதையைப் பார்த்துவிடுவோம் நாம். அதன்பின் தலைப்புச்செய்திக்கு நாம் திரும்பலாம்.   தங்களின் ஓரே பையனை பள்ளியில் சேர்க்க, பல இடங்களைப் பார்த்து கடைசியாக ஒரு பள்ளியை முடிவுசெய்து சேர்த்துவிட்டனர் அந்தத் தம்பதியினர். மூன்று…

  • உனக்கேன் இவ்வளவு அக்கறை..

    ஆட்டிசம் தொடர்பான கட்டுரைகள் ஒரு தற்காலிக முடிவுக்கு வந்துவிட்டதாக நினைக்கிறேன். தொடர்ந்து ஆட்டிசம் குறித்தான விழிப்புணர்வுக்காக எழுதிக்கொண்டிருப்பேன் என்றாலும் இதுவொரு கமா தான். //..உனக்கேன் இவ்வளவு அக்கறை, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை, என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன். சுயநிலம் என்பீர்கள். என் சுயநிலத்தில் பொதுநலம் கலந்திருக்கிறது. ஆகாரத்திற்காக அழுக்கைச் சாப்பிட்டு தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன் – அதைப் போல.. //பராசக்தி படத்திற்காக கலைஞர் மு.கருணாநிதி எழுதிய வசனம். மேற்கண்ட வசனம் அப்படியே எங்களுக்கும் பொருந்தும். தொடர்ந்து…

  • 17. ஆட்டிசம்- நம்பிக்கை தரும் மனிதர்கள்- 3

    பொதுவாகவே ஆட்டிசத்தின் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் குழந்தையின் பெற்றோரின் நிலைதான் மிகவும் சங்கடமானது. எப்போது தங்கள் குழந்தையின் எதிர்காலம் குறித்து கவலைப்பட்டே தங்கள் உடல்நலத்தினையும் கெடுத்துக்கொள்கின்றனர். ஆனால், அப்படி சோர்ந்துபோய் இருந்து விடத்தேவையில்லை என்பதற்காக.. ஆட்டிசத்தின் பிடிக்குள் சிக்கிக்கொண்டாலும், உலகத்தின் பார்வையை தன் பக்கம் திருப்பிய சிலரைப் பற்றி சுருக்கமாக அடுத்தடுத்து, பார்க்கப்போகிறோம். ஆட்டிசத்தினால் பாதிப்புக்குள்ளான இவர்களால் சாதித்திருக்க முடியும் போது, நம் குழந்தைகளாலும் ஏதாவது சாதிக்கமுடியும் என்று பெற்றோர் நம்பிக்கைகொள்ளவேண்டியது அவசியமானது.   கிருஷ்ணா நாராயணன்:…

  • தகப்பனாய் உணர்தலும் சுகமே!

    — உறக்கத்தில் கடிகார முட்கள் போல கட்டிலில் சுற்றி வந்தாலும் பசியெடுக்கும் நடுசாமத்தில் சரியாக அவன் அம்மாவை அடையாளம் கண்டு எழுப்பி விடுகிறான் பசியை உணர்ந்தவள் தாய் தான் என எப்படித்தான் உணர்ந்துகொள்கின்றனவோ குழந்தைகள் — இன்னுமா உன் மகன் பேசவில்லை என்ற சுற்றத்தாரின் கேள்விக்கு பயந்து உயிரற்றவைகளையும், உயிருள்ளவைகளின் பெயர்களையும் சொல்லிக்கொடுக்கிறேன் தினம் அவனுக்கு. சொற்களற்ற அவனது உலகத்தில் பெயர்கள் அழிந்து வெறும் சப்தங்களாக வெளியேறுகின்றன அவனிடமிருந்து — தோற்றுப்போன முயல் கதையும் தந்திரக்கார நரி…

  • சினேகிதனின் அப்பா

    அப்போது நான் தமிழகத்திலிருந்து வந்துகொண்டிருந்த அரசியல் வார இதழின் மும்பை செய்தியாளன். அப்படியே அங்கே வந்துகொண்டிருந்த தமிழ்ப் பத்திரிக்கைகளில் கதை, கவிதை, கட்டுரைகளையும் எழுதிக்கொண்டிருந்தேன். அப்போது தான் அவன் பழக்கமானான். அவனும் மும்பை நாளிதழ்களில் கதை,கவிதை எழுதிக்கொண்டிருந்தவன். பத்திரிக்கை வாயிலாக தொலைபேசி எண் கிடைத்து, கிங்சர்கிளில் உள்ள பூங்காவில் ஒரு ஞாயிறு மதியம் சந்திப்பதென்று முடிவாகிறது. அங்கே இருந்தவரை, ஒவ்வொரு ஞாயிறும் நண்பர்களை ஏதேனும் ஒரு இடத்தில் சந்திப்பதை வழக்கமாக்கிக்கொண்டிருந்தேன். அப்படி ஒரு ஞாயிறு மகேஸ்வரி பூங்காவுக்கு…

  • பக்கத்து வீட்டு ரவுசு…

    பக்கத்து வீடுல ஒரு பையன் இருக்கான். ஐந்திலிருந்து ஏழு வயசுக்குள் தான் இருக்கும். அவன் அடிக்கிற லூட்டிக்கு அளவே இல்லை. வீட்டுக்கு அருகில் இருக்கும் கோவிலுக்கு போய் இருக்கிறான். சாமி கும்பிட்டு விட்டு அனுமார் இருந்த சன்னதியை வலம் வரத்தொடங்கி இருக்கிறான். கொஞ்ச நேரம் கழித்து அவை பார்த்த கோவில் அர்ச்சகருக்கு அதிர்ச்சி. வலமிருந்து இடமாக சுத்தாமல். பையன் இடமிருந்து வலமாக சுற்றிக்கொண்டிருந்திருக்கிறான். இவனது கோக்குமாக்கை பார்த்தவர் அவனை தடுத்து நிறுத்தி.. ’ஏண்டா இப்படி தலைகீழா சுத்தீண்டிருக்க?ன்னு…

  • குழந்தை வளர்ப்பில் ஆண்களின் பங்கு..

    என் பையனுக்கு மாதாந்திர தடுப்பூசி போடுவதற்காக குழந்தை நல மருத்துவரிடம் போய் இருந்தோம். டோக்கன் வாங்கி எங்கள் முறைக்காக காத்திருந்தோம். பலரும் தத்தம் குழந்தைகளுடன் அங்கே வந்திருந்தனர். எங்களுக்கு முன்னால் அமர்ந்திருந்த தம்பதியினரின் கையில் இருந்த ஆறுமாத குழந்தை ‘கக்கா’ போய்விட்டது. குழந்தையை சற்று பிடிங்க என்று மனைவி சொன்னது தான் தாமதம். வந்ததே கணவனுக்கு கோபம். மனைவியை கண்டபடி திட்டி விட்டு எழுந்து வெளியே போய் விட்டார். அவர் போவதையே பரிதாபமாக பார்த்துக்கொண்டிருந்த மனைவிக்கு என்ன…

  • அப்பா!

    தலைக்கேறிய போதையில் அம்மாவை அடிக்கும் அப்பாக்களும், அதற்காக மகனிடம் அடிவாங்கிய அப்பாக்களையும் நிறைய பார்த்திருக்கிறேன். தன்னால் செய்யமுடியாமல் போன காரியங்களை தன் வாரிசு வடிவில் நிறைவேற்றிக்கொள்ள அவர்களை கட்டாயப்படுத்தும் தந்தைகளையும் நாம் அறிவோம். ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்துவ சிந்தனைகள் இருக்கும். தங்களின் குடும்பத்திற்காக அப்பா, அம்மா என்ற உறவுகளின் எண்ணங்களுக்காக அவற்றை இழந்தவர்களை பட்டியல் போட்டால் அது நீளும். நான் உன்னோட அப்பாடா.. எனக்குத்தெரியும் நீ என்ன படிக்கனும்னு என்று படிப்பு விசயத்தில் தொடங்கி, பல்வேறு கட்டங்களில்…