Tag: ஈழம்

  • த்துதெறி!மானம் கெட்ட அரசியல்வாதிகள்!!

    ஈழத்தில் தொடரும் தமிழர்களின் சாவு எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. தமிழக முதல்வர் கருணாநிதியோ.. பதவி மோகத்தால் வாயைத் திறக்க மறுக்கிறார். அவரின் இச்செயல்கண்டு கொதித்துப் போன.. டாக்டர் ராமதாஸ் தலைமையில் தா.பாண்டியன், திருமா, நெடுமாறன், வைகோ உள்ளிட்ட அத்துனை தமிழினத்தலைவர்களும் இன்று கூடி சுமார் மூன்று மணிநேரம் ஆலோசனை நடத்தினார்கள். எங்களின் முடிவு..  மத்திய, மாநில அரசுகளை நடுங்க வைத்து விடும் அதனால் உடனே இந்தியா போரை நிறுத்தச்சொல்லும்.. என்றெல்லாம் பில்டப்கள் வேறு. கடைசியில் இப்போது முடிவு…

  • விடுபட்டவை 21.01.09

    உங்களை கை பிடித்து நடை பழக்கிய அப்பா வீட்டில் நிம்மதியாக இருக்கிறாரா? ஒரு வேளை அவர் ஏதாவது விபத்தில் கையோ காலோ சிதைந்து போய் ரத்த சகதியில் கிடப்பதாக கற்பனை பண்ணிப் பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் மீது அன்பை பொழிந்த உங்கள் தாய் வீட்டில் ஓய்வாக இருக்கிறாரா? ஒரு வேளை அவரும் ஏதாவது பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாகி ரத்தம் சொட்ட சொட்ட சினிமா நாயகிபோல் தரையில் தவழ்ந்து தவழ்ந்து உங்களை நோக்கி வருவதாக கற்பனை பண்ணிக்கொள்ளுங்கள். உங்கள் சகோதரர்…

  • மானம் கெட்ட தமிழன்..

    மும்பையில் நடந்த தாஜ் ஹோட்டல் தாக்குதலுக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்லாது என கிரிக்கெட் வாரியம் ஏகபோகமாக அறிவித்தது நினைவிருக்கலாம். அப்போது இம்முடிவுக்காய் உணர்ச்சி வசப்பட்டு ஆமாம் சொன்ன அத்துணை தமிழர்களின் கவனத்திற்கும்… ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள இந்திய அணி பிப்ரவரியில் இலங்கை செல்கிறது – இது மிகச் சமீபத்திய செய்தி. இலங்கை பேரினவாதத்தால் கொல்லப்பட்டு அழிந்து கொண்டிருக்கும் தமிழர்களுக்கு குரல் கொடுக்க முன்வராத மத்திய அரசுக்கும், பெரும்படை கொண்டு…

  • வலைப்பதிவர்களே உங்களின் மனிதநேயத்தை காட்டுங்கள்…

    இனிய நண்பர்களே, தேசம் முழுக்க நமது அண்டை நாட்டில் வாழும் தமிழ்ச் சகோதரர்களின் துயர் துடைக்க குரல்கள் ஒங்கி ஒலித்தவண்ணம் இருக்கும் போது வலைப்பதிவர்களாகிய நாம் மட்டும் எப்படி சும்மா இருக்க முடியும்? வீதியில் இறங்கி போராடவோ, கொடி பிடித்து கோஷம் போட்டுக் கொண்டு நடக்கவோ நம்மில் எத்தனை பேருக்கு வாய்க்கும்? அதனால் நமது ஆதரவுக் குரலை இயன்ற விதத்தில் ஒலிக்க முயற்சிக்கலாம். மேலே நீங்கள் பார்க்கும் படம் மடிந்து கொண்டிருக்கும் நம் அப்பாவி சகோதரர்களுக்கு ஆதரவுக்…