Tag: கொரோனா_நாட்கள்

  • மந்திரச் சந்திப்பு- 9

    முத்திரள் உருவம் வழியாக நண்பர்களின் சந்திப்பு பற்றியும், தான் பறந்த கதை எல்லாவற்றையும் ஜான்சனுக்குக் கூறியது காகிதப்பாப்பா. அதனிடம் தான் பறக்க ஒரு குழந்தை எழுத்தாளர் காரணம் என்று ஜான்சன் கூறியதும் வியந்துபோன அது, அந்த எழுந்த்தாளர் யார் என்று கேட்டது. “வாண்டுமாமா” என்றான் ஜான்சன். “என்னது வாண்டுமாமாவா?” ”ஆமா, குழந்தைகளுக்காக பல கதைகள் எழுதி இருக்காரே.. அவரே தான். காலத்தால் அழியாப் புகழ்பெற்ற அவரது கதைகளைப் போலவே அவரது பாத்திரப்படைப்புகளும் சாகாவரம் பெற்றவை. அவர் எழுதிய…

  • மந்திரச் சந்திப்பு- 7

    கிழிந்து போன காகிதப் பாப்பாவை சரி செய்ய என்ன செய்வது என்று எல்லோரும் கலங்கிக் கொண்டிருந்தபோது, அமீர் கொடுத்த ஆலோசனையின் படி, தன் வீட்டில் இருக்கும் முருங்கை மரப்பிசின் டப்பாவை எடுக்க ஓடினாள் மயில். வீட்டின் முன்பக்கம் இருந்த மர நிழலில் நார் கட்டிலைப் போட்டு அதில் அவளது அப்பா படுத்திருந்தார். அம்மவோ, அந்தப்பக்கம் கல் அடுப்பில் வெந்நீர் வைத்துக்கொண்டிருந்தார். வீட்டுக்குள் ஓடிய மயில், காகிதப் பாப்பாவையும் மரப்பாச்சியையும் கீழே வைத்துவிட்டு, அந்த மரப்பிசின் டப்பாவைத் தேடினாள்.…

  • மந்திரச் சந்திப்பு- 2

    யாரை சந்திக்க விரும்புகிறாயோ அவர்களை இந்த அறைக்குள்ளேயே கொண்டுவருகிறேன் என்று சுண்டைக்காய் இளவரசன் சொன்னதும் முதலில் வியந்துபோனான் சூர்யா. பின் சுதாரித்துக்கொண்டு, யாரை அழைக்கலாம் என்று யோசித்தவனுக்கு ஊரில் இருக்கும் தங்கை ஷாலு நினைவு வந்தாள். (ஆம்! மரப்பாச்சி சொன்ன ரகசியம் கதையில் வந்தே அதே ஷாலினிதான்.) ”என்ன யோசனை செய்தாயிற்றா இல்லையா?” என்று கேட்டான் சுந்தரன். “ம்.. ஊரில் இருக்கும் என் தங்கை ஷாலினியை இங்கே வரவைக்க முடியுமா?” “ஹா..ஹா.. ஏன் முடியாது? நான் சொல்லுகின்றபடி…

  • மந்திரச்சந்திப்பு- 1

    மந்திரச்சந்திப்பு- 1

    1. அந்த அறைக்குள் சுவரில் சரிந்து அமர்ந்திருந்தான் சூர்யா. அவனைச் சுற்றிலும் பல கதைப்புத்தகங்கள் சிதறிக்கிடந்தன. பரிட்சை அட்டையில் செருகிய காகிதத்தில், வாட்டர் கலரில் வரைந்த ஓவியம் ஒன்று மின்விசிறியின் காற்றினால் படபடத்துக்கொண்டிருந்தது. திறந்திருந்த ஜன்னலின் வெளியே நடமாட்டமே இல்லாத தெருவை எவ்வளவு நேரம் தான் வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்க முடியும். அப்புறம் படம் வரைந்தான். இந்த புத்தகங்களை எல்லாம் ஏற்கெனவே படித்துவிட்டான். இப்போது சோர்வார் அமர்ந்துவிட்டான். தலையை உயர்த்தி,  à®…றையைச் சுற்றிலும் நோட்டமிட்டன் சூர்யா. எத்தனை முறை…