Tag: சமூகம்

  • ராமனின் பெயரால்..

    விவரணைப் படங்களில் உலக அளவில் பேசப்படும் இந்திய இயக்குனர் ஆனந்த் பட்வர்த்தன். பல விருதுகளைப் பெற்றிருக்கும் இவரின் பல படங்கள் அரசு இயந்திரத்திற்கு எதிரானவையாக இருந்திருக்கின்றன. அதேசமயம் சாமானியர்களில் வாழ்க்கை பிரச்சனையை பேசும் படங்களாகவும் அவை இருப்பது இயல்பானது. 2002ல் மும்பையில் நடந்த உலகத்திரைப்பட விழாவில் இவரின் ‘வார் அண்ட் பீஸ்’ படம் திரையிடப்பட்டு, சர்ச்சைகளுக்கு மத்தில் விருதுக்கு தேர்வானது. அப்போது அதே விழாவில் தான் இப்படத்தினை பார்த்தேன். அதன் பின் ஆனந்த் பட்வர்த்தனின் சில படங்களை…

  • நாஞ்சில் நாடனுக்கு பாராட்டுவிழா- ஓர் இனிமையான அனுபவம்

    விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் நாஞ்சில் நாடனுக்கு சென்னையில் பாராட்டுவிழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். ரஷ்யன் கலாச்சார மையத்தில் மாலை 6.30மணிக்கு என்று அறிவித்திருந்தார்கள். கொஞ்சம் முன்னதாகவே போய்ச்சேர்ந்தோம். நண்பர்கள் ரங்கசாமி, கே.ஆர்.அதியமான் போன்றவர்கள் எனக்கு முன்னமே வந்திருந்தனர். அப்படியே அவர்களோடு பேசிக்கொண்டிருந்தோம். ஒவ்வொருவராக வரத்தொடங்கினார்கள். விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்தினர் எல்லோரும் வேட்டியில் வந்து அசத்தியிருந்தனர். புளியமரம் தங்கவேலுவையும் பார்த்தேன். மனுசன் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வந்து ஆறுமாசம் ஆச்சாம். தெரியவே இல்லை. 🙁 ஆறுமணிக்கு சற்று முன்னதாக நாஞ்சில், ஜெமோ,…

  • ஸ்பெக்ட்ரம் ஊழலே வெட்கப்படக்கூடிய (திமுக அமைச்சர்களின்) மெகா ஊழல்!

    ஸ்பெக்ட்ரம் ஊழலே வெட்கப்படக்கூடிய (திமுக அமைச்சர்களின்) மெகா ஊழல்! (டெஹல்கா இணையத்தில் வெளிவந்த ஆங்கில கட்டுரையின் தமிழாக்கம்) திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அரசில் இரண்டு கூட்டணிகளையும், மூன்று பதவிக்காலங்களையும் ஆக்கிரமித்து நிற்கும் நிலையில் ஸ்பெக்ட்ரம் ஊழல் ஊடகங்களாலும், மக்களாலும் பேசப்படும் நிலையில் மற்றொரு பிரமாண்ட ஊழலை மறைக்க முடிந்திருப்பது ஆச்சரியம்தான். மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர்களாக திமுகவைச் சேர்ந்த டி. ஆர். பாலுவும், ஆ. ராசாவும் பதவி வகித்த காலத்தில் மேற்கொண்ட தவறான கொள்கை முடிவுகளால் இந்தியாவின்…

  • கடந்து போதல்.. (சிறுகதை)

    பயங்கரமான அந்த அலறலில் உறக்கம் கலைந்து எழுந்து உட்கார்ந்தேன். எனக்கு முன்னமே கட்டிலின் விளிம்பில் உட்கார்ந்திருந்தாள் ரேவதி. எத்தனையாவது அலறலில் உறக்கம் கலைந்தது என்பது தெரியாது. ஆனால் ரேவதி முதல் சத்தத்திலேயே எழுந்திருக்க வேண்டும். படுக்கையில் விழுந்த பின் இடையில் நான் எழுவதென்பது நடக்காத காரியம். அவளோ எனக்கு நேரெதிர் இரண்டு முறையாவது எழுந்து விடுவாள். பல முறை கனவுகளினால் பயந்து போய் என்னை எழுப்பி,எழுப்பி சோர்ந்து போய் படுத்திருக்கிறாள். இதை காலையில் அவளே சொல்லும் வரை…

  • பஸ்ஸு தொல்லைகள்

    வயது வந்தோர்க்கான எழுத்துக்கள் கோவைக்கு போய் இருந்த போது நண்பரின் வீட்டில் தான் தங்கி இருந்தேன். பகல் முழுக்க வீட்டிலேயே கிடந்தாலும்,இணையம், கணினி என வசதிகள் இருந்த போதிலும் வலைப்பதிவுகளின் பக்கம் வருவதற்கு எனக்கு துணிவு இல்லை. அப்படியே ரீடர் வழி பதிவுகளை படிக்கலாம் என்றாலும் அதற்கும் ஒரு தயக்கம் இருந்துகொண்டே இருந்தது. நண்பரின் வீட்டினர் எவராவது எனக்கு பின்னால் வந்து நின்று நான் படிக்கும் வலைப்பதிவுகளில் (புதிய நண்பர்கள் பலரின் வலைப்பதிவுகளும் இப்படி இருப்பது வேதனை)…

  • ”தீதும், நன்றும் பிறர் தர வாரா…”

    சங்கர் இந்த பெயர் கொஞ்ச மாதங்களுக்கு முன் பத்திரிக்கை உலகை கலக்கியது. தமிழகத்தையே உலுக்கிய டெலிபோன் ஒட்டுக் கேட்பு வழக்கில் திமுகவின் அமைச்சர் பூங்கோதை நடத்திய அதிகார துஷ்பிரயோகங்களுக்கு எதிரான ஆதாரங்களை வெளியிட்டார் என்று கைது செய்யப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் இந்த சங்கர். ஊழல் ஒழிப்புத் துறையின் உயரதிகாரியான உபாத்தியாயாவின் அலுவலகத்தில் வேலை செய்த சங்கர், அதிகார பீடங்களின் ஊழல்களின் குணத்தை போட்டுடைத்தவர். எக்மோரில் இருக்கும் கோர்ட்டுக்கு அவரை அழைத்து வந்தார்கள். தப்பு தப்பு இழுத்து வந்தார்கள்…

  • குழந்தை வளர்ப்பில் ஆண்களின் பங்கு..

    என் பையனுக்கு மாதாந்திர தடுப்பூசி போடுவதற்காக குழந்தை நல மருத்துவரிடம் போய் இருந்தோம். டோக்கன் வாங்கி எங்கள் முறைக்காக காத்திருந்தோம். பலரும் தத்தம் குழந்தைகளுடன் அங்கே வந்திருந்தனர். எங்களுக்கு முன்னால் அமர்ந்திருந்த தம்பதியினரின் கையில் இருந்த ஆறுமாத குழந்தை ‘கக்கா’ போய்விட்டது. குழந்தையை சற்று பிடிங்க என்று மனைவி சொன்னது தான் தாமதம். வந்ததே கணவனுக்கு கோபம். மனைவியை கண்டபடி திட்டி விட்டு எழுந்து வெளியே போய் விட்டார். அவர் போவதையே பரிதாபமாக பார்த்துக்கொண்டிருந்த மனைவிக்கு என்ன…

  • பிரபாகரனின் தாயாருக்கு அனுமதி மறுப்பு- கண்டனம்

    சென்னை, ஏப்.-17, சிகிச்சை பெறுவதற்காக இந்தியா வந்த பிரபாகரன் தாயாருக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ. நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: பிரபாகரன் அவர்களைப் பெற்ற தாயார் பார்வதி அம்மையார் உடல் நலன் குன்றிய நிலையில் மருத்துவ சிகிச்சைப் பெறுவதற்காக மலேசியாவில் உள்ள இந்தியத் தூதுவர் அலுவலகத்தில் முறைப்படி விண்ணப்பித்து ஆறு மாத காலத்திற்கு விசா பெற்று இந்தியாவுக்கு 16-ஏப்ரல்-2010 இரவு 10.45 மணிக்கு  விமானத்தில் வந்தார். படுத்தப்…

  • விடுபட்டவை 04/03/10

    கேள்வி :- அய்யா நீங்கள் ஏற்கனவே கோவில் கொடியவர்களின் கூடாரமாக ஆகி விடக் கூடாது என்று  சொல்லியிருக்கிறீர்கள்.    இப்போதெல்லாம் மடாதிபதி களால்  ஆசிரமங்களில் அத்துமீறல் நடப்பதாக  அடிக்கடி செய்திகள் வந்து கொண்டே இருக்கிறதே? (திருச்சியில் 03/03/10 அன்று நடந்த செய்தியாளர்களின் சந்திப்பில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு முதல்வரின் பதில் கீழே) கலைஞர் :- சமீப காலமாக  அத்தகைய செயல்கள் அதிகமாகத் தான் நடக் கின்றன.    அது பற்றி ஆலோசித்து,  எத்தகைய நடவடிக்கையை  அரசு மேற்கொள்ளலாம் என்பது குறித்து…

  • விடுபட்டவை 03-03-2010

    கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு நாள் தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சி, பத்திரிக்கைகளின் செய்தி பிரிவுகளுக்கு கூரியரில் ஒரு பார்சல் வந்தது. பார்சலை திறந்து பார்க்கும் வரை யாருக்கும் தெரியாது.. அது இவ்வளவு பெரிய சமாச்சாரம் என்பது. நான்கு பக்க கடிதமும், கூடவே ஒரு சிடியும் இருந்தன அதில். கடித வரிகளை வைத்து அதை எழுதியவர் ஒரு பெண் என்பதை யூகிக்க முடிந்தது. கூடவே சிடியில் இருந்தது 30 நிமிடங்கள் ஓடக்கூடிய அறைக்காட்சிகள். அதில் இருந்த சாமியாரும்,…