Tag: சிறார் நாவல்

  • மரப்பாச்சி சொன்ன ரகசியம் [சிறார்நாவல் – 3]

    கதவைத் திறக்கும் சத்தம் கேட்டதுமே மரப்பாச்சி அப்படியே அசைவற்று உரைந்து போனது. “என்னடி.. இன்னுமா எழுது வச்சுகிட்டு இருக்க.. டான்ஸ் கிளாஸ் போகவேண்டாமா?” என்று உள்ளே வந்த அம்மாவின் மரப்பாச்சியைப் பார்த்தார். “எப்பப் பார் இதை வச்சுகிட்டு விளையாடிக்கிட்டு..” என்றபடியே மரப்பாச்சியை எடுக்கப்போனார் அம்மா. அதற்குள் பாய்ந்து அதை எடுத்து, ஓரமாக வைத்தாள் ஷாலு. “ம்மா.. அது பேசுது” என்றான் ஹரி. ““எதுடா..” “அக்கா வச்சிருக்கிற பொம்மை. அது பேசுது..” “இல்லம்மா.. அவன் பொய் சொல்றான்” என்று…

  • மரப்பாச்சி சொன்ன ரகசியம் [சிறார்நாவல் – 2]

    ஷாலுவும், ஹரியும் அப்படியே உறைந்துப் போய் இருந்தார்கள். இவர்களின் முன்னால் அந்த மரப்பாச்சி பொம்மை குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தது. இருவரும் பயந்துபோய் இருந்தனர். அது அவர்களின் உடல் நடுக்கத்தில் தெரிந்தது. மரப்பாச்சி நடப்பதைப் பார்த்ததுமே, வீறிட்டு கத்த நினைத்தார்கள். ‘ஐயோ.. அம்மா’ என்று அழைக்க நினைத்தனர். ஆனால், “ஐ…” என்று குரல் எழும்பியதும் மரப்பாச்சி அவர்களை நோக்கி, கை ஆட்டியது. அவ்வளவுதான் சத்தமிட முடியாமல் போனது. அறைக்கு வெளியே ஓடிவிடலாம் என்று முயன்றபோதும் முடியவில்லை. அப்படியே இருவரையும்…

  • மரப்பாச்சி சொன்ன ரகசியம் [சிறார்நாவல் – 1]

    முன்னுரை அன்பான தம்பி, தங்கைகளே! இந்த கதையின்வழி உங்களை எல்லாம் மீண்டும் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி. ஷாலினி என்ற சிறுமிக்கு ஒரு மரப்பாச்சி பொம்மை கிடைக்கிறது. ஒருநாள் திடீரென அது பேசவும், ஆடவும் ஓடவும் செய்கிறது. ஷாலினி தோழி பூஜா என்பவளுக்கு ஒரு சங்கடம் நேர்கிறது. அதுவும் வெளியில் எல்லோரிடம் எளிதாகச் சொல்லிவிடமுடியாத பிரச்சனை. அவளுக்கு ஷாலுவின் மரப்பாச்சி உதவுகிறது. இது ஏதோ ஒரு பூஜாவின் பிரச்சனை மட்டுமல்ல. நம்மிடையே வெளியே தெரியாமல் பல பூஜாக்கள் உண்டு.…

  • மரப்பாச்சி இனி மக்கள் சொத்து!

    நண்பர்களுக்கு வணக்கம். ஓர் புதிய அறிவிப்பு! உலக புத்தக நாளான இன்று இந்த அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். நான் எழுதிய, ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ என்னும் சிறார் நாவலை இன்றுமுதல் மக்களுக்கானதாக அறிவிக்கிறேன். குழந்தைகளின் மீது நிகழும் பாலியல் சுரண்டல்களை எதிர்ப்பதற்கு அக்குழந்தைகளை தயார்படுத்தவும், அவர்களுடைய உடல் மீதான அவர்களின் உரிமை என்ன என்பதை அவர்களுக்குக் கற்பிக்கவும் இச்சிறுபடைப்பின் வழியாக முயன்றுள்ளேன். தமிழ் கூறு நல்லுலகம் இப்படைப்பை இருகரம் கொண்டு வரவேற்று, விருதளித்து கௌரவித்தது. இன்னும் இன்னும்…

  • ஆமை காட்டிய அற்புத உலகம் 3ஆம் பதிப்பு

    இது சிறுவர் இலக்கியத்தில் எனது முதல் நூல். 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல்பதிப்பு வெளியானது. அப்போதே பரவலான கவனத்தை இந்த நூல் பெற்றது என்றுதான் சொல்லவேண்டும். பெற்றோரும் ஆசிரியர்களும் மட்டுமல்லாது பல சிறுவர்களும் வாசித்து மகிழ்ந்த நூல் இது. வெளியான காலத்தில் அதுவரை வெளிவந்துகொண்டிருந்த சிறார் நூல்களில் இருந்து இது வேறு ஒரு புதிய பாய்ச்சலை நிகழ்த்திக்காட்டியது. புனைவும் அறிவியலும் இணைந்த இந்த நடையை பின்னாலில் சிலர் தொட்டுப் பார்த்தனர். அதோடு இப்படியான ஒரு வடிவம்…

  • பூமிக்கு அடியில் ஒரு மர்மம் – சிறார் நாவலுக்கான முன்னுரை.

    புதியகதையுடன் உங்களைச் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி! இக்கதையின் களம் நாகபட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூரில் நடைபெறுகிறது. சிலஇடங்கள் நிஜத்தில் உள்ளவை. மற்றவை வழக்கம்போலக் கற்பனையானவை. இதுவொரு சாகச, த்ரில்லர், சஸ்பென்ஸ் வகைக்கதை. எனது முந்தைய கதைகளைப் போலவே இதுவும் பதின்பருவத்தினருக்கான கதைதான். இதில்சில நண்பர்கள் சேர்ந்து, ஒரு சுரங்கத்தைக் கண்டறிகின்றனர். அதன் உள்ளே இருப்பதை அறியவும் சுரங்கத்தின் இன்னொரு வாசலைத்தேடியும் அவர்கள்அதற்குள் நுழைகின்றனர். அங்கே அவர்களுக்கு என்ன நேர்கிறது? அங்கே எதையெல்லாம் பார்க்கிறார்கள் என்பதைப் படித்து…

  • மந்திரச் சந்திப்பு -21 (நிறைவுப் பகுதி)

    டெர்மித் தன்னுடைய புற்றின் அருகில் வந்ததும், கானமூர்த்தியையும், அருள்வளனையும் பார்த்தது. “எனக்கு ஒரு புது அனுபவமாக இருந்தது. ரொம்ப தாங்க்ஸ் டெர்மித்!” என்று கை கூப்பி வணக்கம் தெரிவித்தான் வளன். “அடடா! நாம் இப்போது நண்பர்கள் வளன். நண்பர்களுக்கிடையே நன்றி எல்லாம் வேண்டாம்ப்பா..” என்றது டெர்மித். “நீ சொல்றது சரியா இருக்கலாம். பஸ்ஸுல காசு கொடுத்து டிக்கெட் வாங்கும்போது கூட கண்டக்டர்ட்ட நன்றி சொல்லணும்னு சொல்லிக் கொடுத்திருக்காங்க. நீயோ பூமிக்கு அடியிலேயே ரவுண்ட் கூட்டிட்டு போயிருக்க.. நன்றி…

  • மந்திரச் சந்திப்பு -20

    மேலே செல்வதற்கான பாதைக்கு வெளியே ஏதோவொரு பறவை நின்று கிளறிக் கிளிறி கொத்தித் தின்று கொண்டிருந்தது. அதற்கு பயந்து, ஓரமாக பதுங்கிக் கொண்டனர் கானமூர்த்தியும் அருள்வளனும். பறவையின் கிளறல் நிற்க வெகுநேரம் ஆனது. அதுவரை இருவரும் அப்படியே ஒளிந்து கொண்டிருந்தனர். அது நின்றதும் வளன், வெளியே எட்டிப்பார்க்க முயன்றான். அவனை கானமூர்த்தி தடுத்தார். அவரே மெதுவாக வெளியே சென்று எட்டிப் பார்த்தார். எந்தப் பறவையையும் காணவில்லை. ஆபத்தில்லை என்பதை உணர்ந்தும் வளனை வெளியே வரச்சொன்னார். அவனும் தயங்கித்…

  • மந்திரச் சந்திப்பு -19

    “வளா.. வளா..” என்று குரல் கேட்டு கண்விழித்துப் பார்த்தான் அருள்வளன். ஒரு நிமிடம் தான் எங்கிருக்கிறோம் என்று புரியாமல் பார்த்தான். ஏதோ சிறைக்குள் இருப்பது போலத் தோன்றவே.. பதறிப்போய் சுற்றிலும் தேடினான். சற்று தொலைவில் டெர்மித்தும் கின்னரர் கானமூர்த்தியும் மரத்தின் வேர்களைப் பற்றியபடி அமர்ந்திருந்தனர். இவன் கண் விழித்ததைப் பார்த்ததும் ஒரே நேரத்தில், “அடடா, எழுந்துவிட்டாயா?” என்றனர். குழப்பத்துடன் அவர்களைப் பார்த்தான் வளன். “நெடு நேரமாக ஓடிய மழை நீரையே பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தோமா.. அப்படியே நீ முதலில்…

  • மந்திரச் சந்திப்பு -18

    பூமிக்கு அடியில் தாவரங்களின் பாதுகாவலர்களையும், வண்ண வீரர்களையும் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் வளன். அவர்களில் வண்ண வீரர்கள் அனைவருமே சின்னச் சின்னதாக வண்ண பைகளை இடுப்பில் கட்டிருந்தனர். அவற்றில் பச்சை நிறம் அல்லது பழுப்பு நிறக் கலவைகள் இருந்தன. இவனே கறையான் அளவில் இருந்தான். அந்த வீரர்கள் இவனை விட, சின்னதாக இருந்தனர். தன் கண்களை அவனாலேயே நம்ப முடியாமல் பார்த்துக்கொண்டிருந்தான். பழுப்பு வண்ணப் பையுடன் சென்றுகொண்டிருந்த ஒரு வண்ண வீரனை, கை நீட்டி நிறுத்தினான் வளன்.…