Tag: சிறுகதை

  • கடந்து போதல்.. (சிறுகதை)

    பயங்கரமான அந்த அலறலில் உறக்கம் கலைந்து எழுந்து உட்கார்ந்தேன். எனக்கு முன்னமே கட்டிலின் விளிம்பில் உட்கார்ந்திருந்தாள் ரேவதி. எத்தனையாவது அலறலில் உறக்கம் கலைந்தது என்பது தெரியாது. ஆனால் ரேவதி முதல் சத்தத்திலேயே எழுந்திருக்க வேண்டும். படுக்கையில் விழுந்த பின் இடையில் நான் எழுவதென்பது நடக்காத காரியம். அவளோ எனக்கு நேரெதிர் இரண்டு முறையாவது எழுந்து விடுவாள். பல முறை கனவுகளினால் பயந்து போய் என்னை எழுப்பி,எழுப்பி சோர்ந்து போய் படுத்திருக்கிறாள். இதை காலையில் அவளே சொல்லும் வரை…

  • பேய் வீடு

    உங்களுக்கு பேய்கள் பற்றித் தெரியுமா? பேய் கதைகள் கேட்டு இருக்கிறீர்களா..? புளிய மரத்தில் தூக்கு போட்டுக் கொண்ட சின்னையன் பேய், புருசன் கொடுமை தாங்காமல் கிணற்றில் குதித்து செத்துப்போன பொன்னம்மா பேய், காதல் மறுக்கப்பட்டதால் விஷம் குடித்து மரித்துப்போன கல்யாணி பேய்.. இப்படி பெயர் தெரிந்த பேய்கள் ஒரு புறமிருக்க. மோகினிப் பேய், ரத்தக் காட்டேரி, கொள்ளிவாய்ப் பிசாசு என  விதவிதமான பேய்கள், எல்லா பேய்களுக்கும் ஒவ்வொரு வித்தியாசமான கதைகள் எதற்கும் பஞ்சம் இருந்ததில்லை  அல்லது இருப்பதில்லை…

  • நம்பிக்கை (சிறுகதை)

    பஞ்சுப் பொதிகள் போல மேகங்கள் பாண்டியின் முகத்தில் அறைந்தன. வலிக்கப்போகிறது என்று கண்களை இறுக்கிக்கொண்டான்.. வலிக்கவில்லை. மேகங்களைக் கடந்து வந்து பறந்து கொண்டிருந்தான். வரிசையாய் பறக்கும் கொக்கு கூட்டம் ஒன்று இவனைக் கடந்து சென்றது. இவனும் அவைகளை முந்த வேண்டும் என்று நினைத்து கைகளை வேகமாக அசைத்தான். ஆனாலும் அவைகளின் வேகத்திற்கு ஈடு கொடுத்துப் பறக்க முடியவில்லை. ‘ட்டண்டனக்..ட்டண்டனக்.. ட்டண்டனக்கட.. ட்டண்டனக்..’ ‘ட்டண்டனக்..ட்டண்டனக்.. ட்டண்டனக்கட.. ட்டண்டனக்..’ கொக்குகளின் வரிசையில் கடைசியாகப் பறந்துகொண்டிருந்த ஒரு கொக்கு இவனைப் பார்த்து…

  • இலக்கியவாதியாக காட்டிக் கொள்ள சில வழிகள்…

    ஆள்பாதி ஆடை மீதி க்ளோஸ் அப்ல ஒரு போட்டோ. அல்லது பேனா கொண்டு மூக்கை குத்துவது போலவோ, கண்ணத்தில் கை வைத்து மோட்டு வளையை பார்த்த மேனிக்கோ, ஒருவாரமோ, ஒரு மாசமோ மழிக்காத தாடி மீசையுடன் இருந்தால் சிறப்பு. பிரதி மட்டுமே மிச்சம். ஆசிரியன் செத்துவிட்டான்னு சொல்லிகிட்டாலும் நாளைக்கு நீங்க புத்தகம் போடும் போது கடைசி அட்டையில போட்டோ போட இதுமாதிரி புகைப்படங்கள் உதவும். பேண்ட் சட்டை எல்லாம் வேலைக்கு ஆவாது. அதனால.. நல்லதா நாலு ஜோடி…

  • விடுபட்டவை 07/04/2010

    அங்காடி தெரு- நிச்சயம் ஒரு நல்ல படம். கடைநிலை மனிதர்களின் வாழ்க்கையை பிரபதிலிக்கும் முயற்சி. படத்தின் நீளம் சில இடங்களில் பாடல்களில் சலிப்பை ஏற்படுத்துகிறது. படத்திற்கு பின்னனி இசையும் கூட ஏனோ சரியாக இல்லை என்றே தோன்றுகிறது. ஜெயமோகனின் வசனம் மிக கூர்மையாக எழுதப்பட்டுள்ளது. தனது நான்காவது படத்திலேயே சிறப்பாக செயல்பட்டிருக்கிறார் ஜெமோ. நிச்சயம் நல்ல எதிர்காலம் அவருக்கு சினிமா உலகில் உண்டு! வசந்த பாலனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.. இதுமாதிரியான ஒரு கதைக் கருவை எடுத்தமைக்காக..!…

  • கோட்டி முத்து

    நான் படித்த தொடக்கப்பள்ளியின் சத்துணவுக்கூடத்தில் விளிம்பு வெடித்த அந்த அலுமினிய குண்டா இன்றும் அப்படியே இருக்கிறது. அதில் கொட்டப்படும் மீதி சோற்றுக்கென.. மதிய வேளைகளில் நாய்களின் கூட்டமொன்று அலைந்தபடியே இருக்கிறது. ஆனால், அந்த குண்டா யாருக்காக வைக்கப்பட்டதோ அவனை இன்றளவும் எதிர்பார்த்தபடியே தான் இருக்கிறார்கள் பள்ளிக்குழந்தைகளும், ஆசிரியர்களும். எனக்கும் என் நண்பர்கள் சிலருக்கும் மட்டும் தான் அவன் போயே போய் விட்டதின் காரணம் தெரியும். கோட்டி முத்து. இந்த பெயரைச் சொன்னால் என் ஊரில் தெரியாதவரே இல்லை…

  • பார்வை

    எனக்கு அது கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை நான். ஆனால், கொஞ்சம் சந்தேகமாகவும் இருந்தது. அது அவளாக இருக்குமோ? சே, எப்படி அது அவளாக இருக்குமென்று மனதில் நியாயமான கேள்வி எழுந்தாலும் இன்னொரு புறம் ஏன் அது அவளாக இருக்கக் கூடாதென்றொரு காட்டுமிராண்டித்தனமான சிந்தனையும் பிறக்காமல் இல்லை. எதைப் பற்றிப் பேசுகிறேன் என்கிறீர்களா? அதுதான் முக்கியமான பிரச்னை. அன்றும் எல்லா நாளைப் போலத்தான் நகர்ந்து கொண்டிருந்தது. திங்கட் கிழமை. திட்டப்பணிகள் குறித்து எல்லா ஒப்பந்தக்காரர்களிடமும் கலந்தாலோசனை.…

  • துரைப்பாண்டி

    இது கதையல்ல! ஆனால் அந்த வடிவத்தில் சொல்லப்பட்ட முயற்சி! என்வாழ்வில் நான் சந்தித்த மனிதர்களில் அடி மனதில் படிந்துபோயிருப்பவர்களில்… இந்த துரைப்பாண்டியும் ஒருவன். எதிர்ப்படும் எல்லா பணியிடச் சிறுவர்களுக்குள்ளும் ஒவ்வொரு விதத்தில் அவனை நான் பார்த்து வருகிறேன். இனி.. நீங்களும் அவனைத் தேடலாம். என்னைப்போலவே! ———————————— அன்று வீடு மாற்றியாக வேண்டிய நாள். அதனால் எல்லா பொருட்களையும் அட்டைப் பெட்டிகளில் அடுக்கிக் கொண்டிருக்கும் போது, ஒரு டைரிக்குள் இருந்து சில கடிதங்கள் விழுந்தன. அவற்றை எடுத்துப் பார்த்தேன்.…