Tag: தொடர்கதை

  • மந்திரச்சந்திப்பு -11

    மந்திரச் சந்திப்பு -11 தலைகீழ் புஸ்வாணம் கதையில் வந்த அருள்வளனை சந்திக்க எண்ணிய நண்பர்கள் அவனை அழைத்தனர். அவனிருந்த அறைக்குள் உருவங்கள் ஏதுமற்று, குரல் மட்டும் கேட்கவும் பயந்து போன அவன் வீறிட்டு கத்தியபடி மயங்கிப்போனான். அவனது சத்தம் கேட்டு அறைக்குள் எட்டிப் பார்த்தார் அவன் அம்மா. வெயிலில் வாடிய கீரைத்தண்டுபோல விழுந்து கிடந்தான் அருள்வளன். அவனை எடுத்து, மடியில் கிடத்தி, “அருளு.. அருளு..” என்று அழைத்தார். அவனிடம் அசைவில்லை. “ஏங்க.. அருளுப்பா..” என்று அவர் சத்தம்…

  • மந்திரச் சந்திப்பு – 10

    அம்மாவின் குரல் கேட்டதும் அறையின் வாசலுக்கு வந்தான் ஜான்சன். ஒரு பக்கெட் நிறைய துவைத்த துணிகளை உலர்த்தக் கொண்டு வந்திருந்தார் அவன் அம்மா. இவனைப் பார்த்ததும், “கொஞ்ச நாளாகவே உன் போக்கு சரியில்லையேடா.. எப்பப் பார்த்தாலும் ஓடி ஓடி இங்க வந்துடுற, என்னடா விஷயம்?” என்று கேட்டார். “அப்படியெல்லாம் ஒண்ணுமில்லைம்மா.. எவ்வளவு நேரம் தான் டிவியையே பார்த்துட்டு இருக்கிறது. அதுதான் இங்க வந்தா.. என் புக்ஸ் படிக்கலாம். கொஞ்சம் கிராப்ட் ஒர்க்கெல்லாம் செஞ்சு பார்க்கலாம். அதுக்குத்தான் மாடிக்கு…

  • மந்திரச் சந்திப்பு- 9

    முத்திரள் உருவம் வழியாக நண்பர்களின் சந்திப்பு பற்றியும், தான் பறந்த கதை எல்லாவற்றையும் ஜான்சனுக்குக் கூறியது காகிதப்பாப்பா. அதனிடம் தான் பறக்க ஒரு குழந்தை எழுத்தாளர் காரணம் என்று ஜான்சன் கூறியதும் வியந்துபோன அது, அந்த எழுந்த்தாளர் யார் என்று கேட்டது. “வாண்டுமாமா” என்றான் ஜான்சன். “என்னது வாண்டுமாமாவா?” ”ஆமா, குழந்தைகளுக்காக பல கதைகள் எழுதி இருக்காரே.. அவரே தான். காலத்தால் அழியாப் புகழ்பெற்ற அவரது கதைகளைப் போலவே அவரது பாத்திரப்படைப்புகளும் சாகாவரம் பெற்றவை. அவர் எழுதிய…

  • மந்தைரச் சந்திப்பு – 8

    கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க, அரசு விதித்த ஊரடங்கினால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எப்படியாவது உதவ முடிந்தால் நன்றாக இருக்கும் என்று நண்பர்களுக்கும் பேச்சு எழுந்தபோது, எல்லோரும் வீட்டுக்குள் இருந்துகொண்டு, வீதியில் கஷ்டப்படும் மக்களுக்கு எப்படி உதவ முடியும் என்ற கேள்வியும் எழுந்தது. தன்னிடம் ஒரு யோசனை இருப்பதாகச் சொன்னது காகிதப்பாப்பா. எல்லோரும் ஆர்வமாக, “என்ன யோசனை?” என்று கேட்டனர். “என்னால் காற்றில் பறக்க முடியும். அதுவும் காற்று அண்ணன் நினைத்தால் எவ்வளவு வேகமாக வேண்டுமானாலும் என்னைக்கொண்டு…

  • மந்திரச் சந்திப்பு- 7

    கிழிந்து போன காகிதப் பாப்பாவை சரி செய்ய என்ன செய்வது என்று எல்லோரும் கலங்கிக் கொண்டிருந்தபோது, அமீர் கொடுத்த ஆலோசனையின் படி, தன் வீட்டில் இருக்கும் முருங்கை மரப்பிசின் டப்பாவை எடுக்க ஓடினாள் மயில். வீட்டின் முன்பக்கம் இருந்த மர நிழலில் நார் கட்டிலைப் போட்டு அதில் அவளது அப்பா படுத்திருந்தார். அம்மவோ, அந்தப்பக்கம் கல் அடுப்பில் வெந்நீர் வைத்துக்கொண்டிருந்தார். வீட்டுக்குள் ஓடிய மயில், காகிதப் பாப்பாவையும் மரப்பாச்சியையும் கீழே வைத்துவிட்டு, அந்த மரப்பிசின் டப்பாவைத் தேடினாள்.…

  • மந்திரச் சந்திப்பு- 6

    காகிதப் பாப்பா சொன்னபடியே, சூர்யாவும் ஷாலுவும் மொட்டைமாடிக்கு வந்துவிட்டனர். மயிலும் குமாரும் வெட்டவெளியில் நின்றனர். மயிலுக்கு ஓர் அடி இடைவெளியில் தரையில் பரப்பப்பட்டிருந்தது காகிதப்பாப்பா. ஆள் நடமாட்டம் இல்லாத அரண்மனையின் உடற்பயிற்சி மைதானத்தில் நின்று கொண்டிருந்தான் சுந்தரன். மெதுவாக காற்று வீசத்தொடங்கியது. தரையில் விரித்துவைக்கப்பட்டிருந்த காகிதப் பாப்பா, இங்குமங்கும் காற்றில் ஆடியது. மெல்ல மெல்ல,, அப்படியே மேலே எழுந்து பறக்கத்தொடங்கியது. அது பறப்பதையே எல்லோரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். இப்போது காற்று சற்றே பலமாக வீசியதுபோல இருந்தது. எல்லோரின்…

  • மந்திரச் சந்திப்பு- 5

    திடீரென குறுக்கிட்ட குரலைக் கேட்டு குழம்பிப்போன சுந்தரன், குரலுக்குச் சொந்தக்காரரை அடையாளம் காட்டும்படி, தனக்கு மந்திரங்கள் கற்பித்த குருவை வேண்டினான். அவரோ, ஒரு பழைய காகிதத்தைக் காட்டினார். காகிதம் எங்காவது பேசுமா என்ன? அதுவும் செய்தித்தாள் போல இருந்தது. சுந்தரன், இம்முறை கண்ணை மூடி, அந்த செய்தித்தாள் எங்கே இருகிறது எனக்கண்டறிய முயன்றான். சூர்யா தொடங்கி, கடைசியாக உரையாடலில் இணைந்துகொண்ட குமார் வரை எல்லோரைச் சுற்றிலும் நோட்டமிடுவதுதான் அவனது திட்டமாக இருந்தது. அப்படி அவன் சூர்யாவிற்கு பின்…

  • மந்திரச் சந்திப்பு -4

    பகுதி-4 (கொரோனா வைரஸ் பரவுலைத்தடுக்க, மக்கள் எல்லோரையும் வீட்டுக்குள் இருக்கும்படி கூறியதோடு, ஊரடங்கு உத்தரவையும் அரசு பிறப்பித்தது. வெளியே செல்லமுடியாத சோகத்தில் சூர்யா, இருந்தபோது சுண்டைக்காய் இளவரசன் சுந்தரன், அவன் முன் முத்திரள் உருவமாகத் தோன்றினான். வெளியில் செல்ல அனுமதி இல்லாததால், விரும்புகிறவர்களை வீட்டுக்குள்ளேயே அழைத்துவருகிறேன் என்று அவன் தெரிவித்தோடு, சூரியாவின் தங்கை ஷாலினியையும், அவள் விரும்பிய மரப்பாச்சி பொம்மையையும் அதன் தோழி மயிலையும் சந்திக்கவைத்தான். இனி..) ”யாரை சந்திக்க விரும்புகிறாய் மயில்?” “அதுதான் என்ன சொல்லன்னு…