Tag: நூல் அறிமுகம்

  • உப்பு வேலி – நூல் அறிமுகம்

    (நீண்ட நாட்களாக நூல் அறிமுகம் ஏதும் எழுதவில்லை. பழைய நூல்கள் தான் என்றாலும் எனது வாசிப்பு அனுபவத்தை பதிவு செய்வது நன்றாக இருக்கும் என்று எண்ணுவதால், இனி அவ்வப்போது, நூல்கள் குறித்து எழுததிட்டம்) ராய் மாக்ஸம் எனும் பிரிட்டீர் ஆய்வாளர், ஒரு பழைய புத்தகக்கடையில் ஒரு நூலை கண்டெடுக்கிறார். அது, 1893இல் வெளியான மேஜர் ஜெனரல் ஸ்லீமன் எழுதிய ஒரு இந்திய அதிகாரியின் புலம்பல்களும் ஞாபகங்களும் (Rambles and recollections of an Indian official –…

  • சிறார் இலக்கியத்தில் மாற்றுத்திறனாளிகள்

    பொதுவாக கலை மக்களுக்காக என்னும் எண்ணமுடையவன் நான். அது எந்த வடிவத்தில் இருந்தாலும் அதில் மக்களுக்கான விஷயங்கள் பேசப்படவேண்டும் என்னும் பிரங்ஞையுடன் செயலாற்ற முனைபவன். சிறுவர் இலக்கியத்திலும் கூட எனது நிலைபாடு அதுதான். சிறார் இலக்கியத்தில் வாசிப்பு இன்பத்திற்காக மட்டுமே கதைகள் எழுதப்பட வேண்டும் என்பதையோ, அறிவுரைகளே வரக்கூடாது என்பதிலோ எனக்கு உடன்பாடில்லை. அதே நேரம் நேரடியான பிரச்சாரக் கதைகள் இன்றைய குழந்தைகளுக்கு சற்று அலுப்பூட்டும் என்பதையும் உணர்ந்தே இருக்கிறேன். கதையின் முடிவில் இக்கதையினால் அறியப்படும் நீதி…

  • நல்ல சூழல் என்பது நாம் நம் குழந்தைகளுக்குத் தரும் நல்ல சிந்தனைகளே! -ஆர்.எம். கெளரி (ஓய்வு பெற்ற ஆசிரியர்)

    (ஆமை காட்டிய அற்புத உலகம்- நூல் குறித்து, தனது கருத்துக்களை பகிர்ந்திருக்கும் ஆசிரியர் அம்மா கௌரி அவர்களுக்கு நன்றி) ================ ஒரு தாய் தன் குழந்தைகளுக்குக் கதை சொல்லி மகிழ்விப்பாள். ஆனால் எனக்கு என் பிள்ளைகள் கதை சொல்லி அதை நான் கேட்கும் வாய்ப்புக் கிடைத்துவிட்டது. என் பிள்ளை போன்ற யெஸ்.பாலபாரதியின் சிறார் நாவல் “ஆமை காட்டிய அற்புத உலகம்” படிக்கும் போது நானும் ஒரு குழந்தையாகவே உணர்ந்தேன். பாலா – பொதுவுடைமைவாதி. தன் சிந்தனையைப் படைப்பில் கொண்டுவரும்…

  • ஹிரோஷிமாவின் நெருப்பு (நூல் அறிமுகம்)

    இன்று உலகம் முழுவதும் பிற உயிர்கள் குறித்து சிறிதும் அக்கறையின்றி  கோரமான முறையில் மனித உயிர்களைக் காவு வாங்கிக்கொண்டிருக்கிறது வன்முறை. அதிகார போதை, அடிமைப்படுத்தும் எண்ணம், மதம் மற்றும், சாதி என வெவ்வேறு முகமூடிகளில் இப்பாதகச்செயல் நடந்துகொண்டிருக்கிறது. கொத்துக்கொத்தாக மனித உயிர்கள் மாண்ட வரலாற்றினை நாம் உலக யுத்தம் என்ற பெயரில் படித்திருப்போம். அப்படி இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா வீசிய அணுகுண்டு ஜப்பானின் ஹிரோஷிமாவையும், நாகசாகியையும் சின்னாபின்னமாக்கியது. அந்த இரண்டாம் உலக யுத்தம் பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களைத்…

  • வாசிப்பனுபவம்- உச்சி முகர்

    விழியனின் உச்சிமுகர் நூல் குறித்து எனது எண்ணங்களைச்சொல்லும் முன் கொஞ்சம் கொசுவர்த்தி சுற்றுகிறேன். அதையும்  படித்துவிடுங்கள். சம்பவம் :- 1 என் சிறுவயதில் நடந்த சம்பவம் இது. அனேகமாக ஆறாம்வகுப்பு படிக்கும் போது என்று நினைக்கிறேன். படித்தது தமிழ்வழிக்கல்வி என்பதால்.. ஆங்கிலப்பாடங்கள் ஆறாவதில் தான் துவங்கின. அதுவரை ஏ, பி, சி, டி என இருபத்தியாறு எழுத்துகள் மட்டுமே தெரிந்திருந்தது. வகுப்பு தொடங்கிய சில நாட்களில் ஒன், ட்டூ, த்ரி என்று எண்களில்  ஆரம்பித்திருந்தார்கள். அப்போது பதினைந்து…

  • டோட்டோ சான் – ஜன்னலில் ஒரு சிறுமி

      டெட்சுகோ குரோயாநாகி என்ற பெண்மணி தன் வாழ்க்கையை திரும்பிப் பார்த்திருக்கும் கதை தான் டோட்டோசான். டெட்சுகோ குரோயாநாகி பின்னாளில் ஜப்பான் முழுக்கத் தெரிந்த முகமானார். தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியில் இருந்தார். (இப்போது ஓய்வில் இருக்கிறார் என்று நினைக்கிறேன்) தொடர்ந்து மிகச்சிறந்த பல விருந்துகளைப் பெற்றிருக்கிறார். இந்நூல் வெளியான ஒரே ஆண்டில் 45 லட்சம் பிரதிகள் விற்று சாதனை படைத்திருக்கிறது. டோமாயி தொடக்கப்பள்ளி, நாம் பார்த்து வளர்ந்த பள்ளி போல, சாதாரணப்பள்ளி அல்ல. இனி பயன்படாது என ஒதுக்கப்பட்ட,…

  • காற்றைப்போல எளிய கதைகள் – ச.தமிழ்ச்செல்வன்

    யெஸ்.பாலபாரதியைப் பல ஆண்டுகளாகப் பழக்கமென்றாலும் அவர் எழுத்துக்களை இதுவரை நான் வாசித்ததில்லை. கோட்டி முத்து பாரதியின் ஒரு பாட்டு பொம்மை கடந்துபோதல் தண்ணீர் தேசம் துரைப்பாண்டி பேய்வீடு நம்பிக்கை சாமியாட்டம் சாமியாட்டம்-2 ஆகிய இந்தப்பத்துக்கதைகளை 2003லிருந்து 2010 வரை எட்டு ஆண்டுகளாக எழுதியிருக்கிறார்.நம்மைவிடப் பெரிய சோம்பேறி ஒருத்தரைப் பார்த்துவிட்ட அற்ப சந்தோசம்தான் முதலில் எனக்கு ஏற்பட்டது..35 ஆண்டுகளில் 29 கதைகள் எழுதியவன் நான்.ஆகவே என்னிடம் ஒரு முன்னுரை அல்லது அணிந்துரை வாங்கிப்போட பாலபாரதி எடுத்த முடிவு அந்த…

  • அவள் + வலி = வாழ்க்கை. -à®….வெண்ணிலா

    வலி. வேறுபாடுகளைக் கடந்து மனித இனத்திற்குப் பொதுவான உணர்வாக வலி உணரப்படுகிறது. அன்பு செய்தலும், உணர்வுகளை சுகித்தலும் பொதுவான சந்தோஷங்கள். வலி – பொதுவான துக்கம். வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் எத்தனை விதமான வலிகள்; லௌகீக விஷயங்களின் போதாமை உண்டாக்கும் வலி; உறவுகளின் புறக்கணிப்பின் வலி; ஆணுக்கொரு வலி; பெண்ணுக்கொரு வலி; குழந்தைக்கொன்று; பருவங்களுக்கேற்ப மாறுபடும் வலி; ப்பா… எத்தனை விதமான வலிகள்; ஒவ்வொரு வலியின் துக்கத்துடன் வெறொன்றை எந்தக் கணத்திலும் ஒப்பிட்டுவிட முடியாத அளவுக்கு…