Tag: பேச்சுப் பயிற்சி

  • சில வேண்டுகோள்கள்

        குறிப்பு: நண்பர்கள், உறவினர்கள், பெற்றோர் என எல்லோருக்குமான வேண்டுகோள். சிறப்புக்குழந்தை, ஆட்டிச நிலைக்குழந்தைகள் பற்றிய ஒரு புரிதலை ஏற்படுத்தவேண்டும் என்பதால் எழுதப்பட்டுள்ளது. 1. பொதுவெளியில் – பயணத்திலோ, திருமண மண்டபத்திலோ, கோவிலிலோ எந்த இடமாக இருந்தாலும், ஓர் ஆட்டிச நிலைக்குழந்தையை எதிர்கொண்டால் அவரின் பெற்றோரிடம் துருவித் துருவி விசாரணைகள் ஏதும் செய்யாமல் இருக்கலாம். கூடவே அதைச்செய், இதைச்செய் என்பதுபோன்ற இலவச அறிவுரைகளையும் தவிர்க்கலாம். 2. ஆட்டிச நிலைச்சிறுவர்களுக்கு புலனுணர்வு சார்த்த சங்கடங்கள் எப்போதும் இருக்க…

  • ஆட்டிசம்: நம்பிக்கை தரும் மனிதர்கள் -கர்ட் ஹர்பெர் (curt harper)

    “எதிர்காலத்தில் என் குழந்தை தன்பணிகளை தானே செய்துகொள்ளும்படி வளர்வானா?” எல்லா ஆட்டிச நிலைக்குழந்தைகளின் பெற்றோருக்கும் இக்கேள்வி இருக்கும். உண்மையில் எல்லோருக்கும் அது சாத்தியமா என்பதை நான் அறியேன். ஆனால் பலருக்கும் அது சாத்தியம் என்பதை நம்புகிறேன். நம் குழந்தை அந்த இடத்தை அடைய நாம் கடுமையாக உழைக்கவேண்டியதிருக்கும். புராணங்களில் சொல்லப்பட்ட பூமா தேவியை விட, அதிகம் பொறுமை மிக்கவர்களாக பெற்றோர் மாறவேண்டும். ஒரே விஷயத்தை திரும்பத்திரும்ப செய்வதிலோ, கேட்பதிலோ எப்படி நம் குழந்தைகள் சலிப்படைவதில்லையோ… அதைப்போல பல…

  • 30. ஆட்டிசம்: சிறப்புக்குழந்தையின் பெற்றோரே.. ஒரு நிமிடம்!

    “அடேய் பசங்களா பரிட்சை மட்டுமே உங்க வாழ்க்கை மாற்றாதுடா, போய் ஜாலியா பரிட்சை எழுதிட்டு வாங்கடா” இவை +2 தேர்வுக்கு முன்தினம் தூத்துக்குடி அருகே இருந்த ஏதோ ஒரு தேனீர் கடையில் எழுதப்பட்ட வாசகம். இவற்றை இப்பொழு பார்க்கும் பொழுது உங்களிடம் சொல்லிவிட தோன்றுவது இதுதான் ” அன்பிற்கினிய பெற்றோர்களே சிகிச்சை என்பதும், பயிற்சிகள் என்பதும், பள்ளி என்பதும் மட்டுமே உங்கள் குழந்தைகளின் வாழ்க்கையை தீர்மானிக்கக்கூடிய விஷயங்கள் இல்லை, உங்கள் மனமகிழ்ச்சியே அவற்றை தீர்மானிப்பவை. ஆக உங்கள்…

  • ஆட்டிசம்: நம்பிக்கை தரும் மனிதர்கள்- 5 (ஆதித்யா மோகன்)

    ஆதித்யாவின் இசைக்கு ஆட்டிசம் தடையில்லை! ஆங்கிலத்தில்: மிருணாளினி சுந்தர்.                       தமிழில்: ரமேஷ் வைத்யா.   ஆதித்யா மோகன் சிறு பிள்ளையாக இருந்தபோது எதையும் உணரத்தெரியாது. “நான் அவன் அம்மா என்பதையே அவன் புரிந்துகொண்டானா என்பது எனக்குத் தெரியாது” என்கிறார் ஆதித்யாவின் அம்மா ஜெயஸ்ரீ. அவரே தொடர்ந்து, “அவனால் பேச முடியவில்லை. எதையும் கிரகித்துக்கொள்ள முடியவில்லை. எப்போதும் பதற்றமாகவே இருப்பான். அவன் ஒரு…

  • ஆட்டிசம் – செய்ய வேண்டியவையும் செய்யக் கூடாதவையும்

    ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸாடர் (ASD) என்பதைத்தான், சுருக்கமாக ஆட்டிசம் என்று சொல்கிறோம் நாம். இப்பிரிவின் கீழ் பல நிலைகள் உள்ளன. எல்லாவற்றிற்கும் தனித்தனிப் பெயர்கள் இருந்தாலும், அத்தனையும் ஆட்டிசம் என்ற ஒரே குடையின் கீழ்தான் வரும். நேரடியாக கண்களைப் பார்ப்பதைத் தவிர்ப்பது, ஒரே மாதிரியான செயலை மீண்டும் மீண்டும் செய்வது, பிற குழந்தைகளுடன் கலந்து விளையாடாமல் இருப்பது, பேசாமல் இருப்பது என்று ஆட்டிசத்திற்கான சில அடையாளங்கள் சொல்லப்படுகின்றன. ஆனாலும், ஆட்டிசம் குறைபாடுகளை இப்படியானதுதான் என்று வரையறுக்க முடியாது.…

  • ஆட்டிசம் என்னும் பளிங்கு அறை

    ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று மணிமேகலை. அதில் ஒரு காட்சி.. மணிமேகலையை அடையும் எண்ணத்துடன் சோழ இளவரசன் துரத்தி வருகிறான். அவனிடமிருந்து தப்ப பூஞ்சோலையில் இருந்த ஒரு பளிங்கு மண்டபத்தில் ஒளிந்துகொள்கிறாள் மணிமேகலை. அந்தப் பளிங்கு அறை தனக்குள்ளே இருப்பவர்களை மறைத்து, அவர்களை வெவ்வேறுவிதமான ஓவியங்களாக வெளியே காட்டுமாம். அந்த ஓவியங்களைப் பார்த்து மனம் மாறி இளவரசன் பூஞ்சோலையைவிட்டு வெளியேறுகிறான் என்று செல்கிறது அந்தக் காட்சி. இதில் வரும் பளிங்கு அறை எனும் படிமம் ஆழமானது. உள்ளே இருப்பவர்கள்…

  • மாற்றுத்திறன் குழந்தைகள் மற்றும் அவரது பெற்றோரின் சுயமரியாதை

      அரங்கில் நிறைந்திருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அறிவுசார் பலவீனங்கள்(Intellectual Impairment) எனும் குடையின் கீழ் பல்வேறு குறைபாடுகள் பட்டியலிடப் பட்டுள்ளன. பொதுவாக சமூகம் “லூசு” என்ற ஒற்றை வார்த்தையில் அடக்கிவிடும் இந்தப் பட்டியலில் இருக்கும் எண்ணற்ற குறைபாடுகளைப் பற்றி இங்குள்ள நண்பர்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? கற்றல் குறைபாடு, ஆட்டிசம், டவுன் சிண்ட்ரோம், செரிபரல் பால்சி, மனவளர்ச்சிக் குறைபாடு என நீளும் பட்டியல் சற்றே பெரியது. இந்த உலகில் இருக்கும் எல்லாக்…

  • திக்குவாய் – சரியாகப் பயிற்சியும் முயற்சியும் போதும்!

    திக்குவாயன் பாலா.. இப்படித்தான் படிக்கும் காலங்களில் பள்ளி, தெரு எல்லா இடங்களிலும் அழைக்கப்பட்டேன். ஒரு வயதுக்குள்ளாகவே பேச்சு வந்த குழந்தைகளில் நானும் ஒருவனாக இருந்திருக்கிறேன். ஒன்னரை வயது நடந்து கொண்டிருந்த போது, வீட்டில் இருந்த சைக்கிள் தலையில் விழுந்து, பலத்த அடிபட்டுவிட்டது. அள்ளிப்போட்டுக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார்கள் பெற்றோர். பதிநான்கு தையல் போட்டு விட்டு, ”பையனுக்கு இனி பேச்சு வரும்னு சொல்ல முடியாது. பிள்ளையைக் காப்பாற்றியதே பெரிசு” என்று மருத்துவர்கள் சொல்லி விட்டார்கள். சுமார் ஓராண்டு எதுவும் பேசாமல்…

  • ஆட்டிச நிலையாளர்களின் பெற்றோர் ஒன்றுகூடல் – 2015

    *எதற்காக இந்த ஒன்றுகூடல்?* இன்றைய பரபரப்பு மிக்க வாழ்க்கையில் எல்லோருக்குமே மன அழுத்தங்கள் அதிகம். அதிலும் சிறப்புக்குழந்தையின் பெற்றோருக்கு இன்னும் அதிகம். இதுமாதிரியான ஒன்றுகூடல் வழி, மற்ற பல பெற்றோரின் அறிமுகமும், வழிகாட்டுதலும் குழந்தை பற்றிய அச்சத்தை போக்க உதவக்கூடும் என்பதால் இது அவசியப்படுகிறது.  தொடர்ச்சியான இவ்வகை சந்திப்புகளின் மூலம் எதிர்காலத்தில் பெற்றோருக்கான அமைப்பு ஒன்றையும் உருவாக்குவது நீண்டகால திட்டமாகும். *யாரெல்லாம் கலந்துகொள்ளலாம்?* ஆட்டிச நிலையாளர்களின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளோடு கலந்துகொள்ளலாம். பார்வையளர்களுக்கோ மற்றவர்களுக்கோ கண்டிப்பாக அனுமதி…

  • நேரம் எங்கே இருக்கு?

      கட்டுரையின் தலைப்பை வார்த்தைகளாக அடிக்கடி (அல்லது எப்போதாவது) உபயோகிப்பவரா நீங்கள்? அல்லது எப்பவுமே சொல்வதில்லை என்பவரா? எந்தப் பிரிவினராக இருந்தாலும் இக்கட்டுரை நிச்சயம் உங்களுக்கு உதவலாம் அல்லது உங்களின் நண்பர்களுக்கு உதவலாம். இன்றைய பொருள் தேடும் அவசர உலகில், நம்மில் பலரும் இல்லத்தில் நேரம் செலவழிப்பதில்லை. அதிலும் இரு பாலருமே ஓடிக் கொண்டிருக்கிறோம். நமது நேரத்தை அலுவகத்தில்தான் அதிகமாகச் செலவழிக்கிறோம். இல்லாவிட்டால், வீட்டிலேயே அலுவலக வேலைக்காக அதிக நேரம் செலவழிக்கிறோம். நமது இப்பழக்கம், நமது அடுத்த…