Tag: வளர்ச்சிக்கான பயிற்சிகள்

  • துலக்கம் – மறுபதிப்பு

    2014ஆம் ஆண்டு விகடன் பதிப்பகத்தின் வழியாக வெளியானது துலக்கம் நாவல். அமெரிக்காவில் காணாமல் போன ஆட்டிச நிலையாளச் சிறுவன் ஒருவனை மூன்று நாட்களுக்குப்பின் வசிப்பிடத்திலிருந்து 64 கிலோமீட்டர் தூரத்தில் கண்டுபிடித்ததாகவும்; அப்படிக் கண்டுபிடிக்க அவர்கள் அடைந்த சிரமத்தையும் விவரித்தது செய்தி.மற்ற நாடுகளை விடக் கொஞ்சம் புரிதல் உள்ள அமெரிக்கா மாதிரி மேலைநாடுகளிலேயே ஆட்டிச நிலையாளச் சிறுவர்கள் காணாமல் போவதும், அவர்களைக் கண்டுபிடிக்க அந்தக் காவல்துறை திணறுவதுமான பல செய்திகள் காணக் கிடைத்தது. போதிய விழிப்புணர்வு இல்லாத நம்…

  • ஆட்டிசம் – துண்டு அறிக்கை

    ஆட்டிசம் எளிமையாக உணர்ந்துகொள்ளும் வழிகள் என 20 ஓவியங்களைக் கொண்டு, ஒரு துண்டு அறிக்கை தயார் செய்து பரவலாக மக்களிடையே கொண்டு சேர்ந்த்தோம். அந்த துண்டு அறிக்கையை மக்கள் பலரும் கேட்பதால் அந்த கோப்பை இணையத்தில் வலையேற்றி வைத்துள்ளோம். வேண்டுவோர் கீழ்க்காணும் சுட்டியைச் சொடுக்கி பதிவிறக்கம் செய்யலாம். சுட்டியை சொடுக்கவும்: ஆட்டிசம் விழிப்புணர்வு துண்டு அறிக்கை ++++++++++++++++++~~~~~~~~~~~~~~~~~~~~~++++++++++++++++

  • பூரணம் -பெற்றோர் ஒன்றுகூடல்

    கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம், ஈரோடு ஜெயபாரதி அம்மாவின் அழைப்பில் சித்தார்த்தா பள்ளிக்குச் சென்று சிறப்புக்குழந்தைகளின் பெற்றோரிடம் உரை நிகழ்த்தினேன். அக்கூட்டத்தில் பேசிய விஷயங்களில் ஒன்று சிறப்புத்தேவை உடைய பெற்றோர் ஒருங்கிணைந்து செயல்படவேண்டியதின் அவசியம் . அதன் தேவை குறித்தும் பேசிவிட்டுத் திரும்பினேன். அடுத்த சில மாதங்களிலேயே அங்கே பெற்றோரின் சங்கம் ஒன்று தொடங்கப்பட்ட து. மாதம் ஒரு துறைசார் வல்லுநரை அழைத்துவந்து உரையாடவைப்பது என்று அவர்களின் செயல்பாடுகளின் தொடக்கமாக இருந்தது. இதோ இப்போது மீண்டும்…

  • ஆட்டிசம்: நம்பிக்கை தரும் மனிதர்கள்- (ஜேக்கப் ராக்)

    19 வயது ஜேக்கப் ராக், ஓர் ஆட்டிச நிலையாளர். இவரால் சிறு வயதில் பேச முடியாததால் அறிவுத்திறனில் குறைவானவர் என்றே மதிப்பிடப்பட்டார். அவரது குடும்பத்தினரின் தொடர் முயற்சிகளுக்கும் பயிற்சிகளுக்கும் பின்னர் ஐ பேடில் தட்டச்சு செய்து, தன் எண்ணங்களை வெளிப்படுத்தத் தொடங்கினார். எழுத்துப் பிழைகளோ இலக்கணப் பிழைகளோ இல்லாத கச்சிதமான வாக்கியங்களை ஜேக்கப் எழுதுவதைக் கண்டு வியந்தனர் அவரது பெற்றோர். தட்டச்சு செய்யக் கற்றக்கொண்ட ஆறு மாதங்களுக்குப் பின், ஒருநாள் தனது பெற்றோரிடம் ’தனது மனத்திற்குள் 70…

  • மன நிறைவு கொடுத்த ஈரோடு பயணம்

    ஓர் உரையாடல் என்னென்ன மாற்றங்களைச் செய்யும் என்பதை அறிந்தவன் நான். என்னுள் ஏற்பட்ட பல மாற்றங்களும் உரையாடல் வழியே நிகழ்ந்தவைதான். உரையாடல்களின் பலம் அறிந்ததால் தான் சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர் கலந்துரையாடல் அவசியம் என்று முடிவுசெய்து கொண்டேன். இதன் பொருட்டே, 2014ஆம் ஆண்டில் ஆட்டிச நிலைக்குழந்தைகளில் முதல் பெற்றோர் ஒன்றுகூடலுக்கு ஏற்பாடு செய்தேன். மிகச்சிறப்பாக நடந்த அந்த கூட்டத்தில் குழந்தைகளை கவனித்துக்கொள்ள, எங்கள் பண்புடன் இணைய இலக்கியக்குழுமத்தில் இருந்து பல தம்பிகள் தன்னார்வலர்களாக வந்திருந்தனர். அவர்களிடம் குழந்தைகளை…

  • புரிந்துகொள்ளுங்கள் மக்களே!

    நம்மில் பலரும் உடலியக்கம் அளவில் மகிழ்ச்சியான வாழ்வே வாழ்கின்றோம். அதனால் தான் பிறர் வலியை உணர்வதே இல்லை. ஆம்! மாற்றுத்திறனாளிகள் என்ற சமூகத்தில் வலியும் கனவுகளைப் பற்றியும் அறியாதவர்களாகவும் அதுபற்றிய பிரக்ஞை கூட இல்லாதவர்களாகவுமே உள்ளோம். பல இடங்களிலும் எல்லோரையும் உள்ளடக்கிய சூழல் உருவாக வேண்டும் என்பதைப் போலவே சில இடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்குத் தனிப்பட்ட சில வசதிகளும் தேவை என்பதை உணர்வோம். ரயில் நிலையம் தொடங்கி, மருத்துவமனை, விமானநிலையம் என எல்லா இடங்களிலும் தளம் வழுவழுப்பாக…

  • நிப்மெட்டை -மாற்றாதே!

    எனது தளத்திற்கு வரும் வாசகர்களுக்கு நிப்மெட் பற்றி அறிந்த்திருப்பீர்கள். பலமுறை அதனைப்பற்றி நான் எழுதி உள்ளேன். பேசி உள்ளேன். ஆண்டுக்கு குறைந்தது 500 பெற்றோர்களையாவது அங்கே செல்லும்படி அறிவுறுத்தி வருகிறேன். நிப்மெட் என்பது ஒன்றுக்கும் மேற்பட்ட வளர்ச்சிக்குறைபாடு உடையவர்களின் மேம்பாட்டுக்கான நிறுவனம். சென்னை, முட்டுக்காடு பகுதியில் 15 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. காங்கிரஸ்- திமுக ஆட்சியின் போது தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்ட நிறுவனம் இது. இப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட குறைபாடு உடையவர்களுக்கா நாட்டில் உள்ள நிறுவனங்களிலேயே இது…

  • போலிகள் போலிகள் -ஆஷா லெனின்

    இது விழிப்புணர்வு எச்சரிக்கைப் பதிவு “சாப்பிடவில்லை என்று போன் காட்டின அம்மாவை – அம்மா என்று அழைக்காத குழந்தைதான் ஆட்டிசம் என்று அழைக்கப்படும்” மேற்சொன்ன கருத்தை தனது முகநூலில் எழுதி உள்ளார் ஹோமியோபதி டாக்டர் ஆஷா லெனின். தனக்கு ஆனா, ஆவன்னா கூடத் தெரியாத ஒரு விஷயத்தைப் பற்றி பொதுத்தளத்தில் அடித்து விளாச ஒரு தனித் திறன் வேண்டும். இந்தக்காவுக்கு அது நிறையவே இருக்கு. இவங்கதான் ஆட்டிசக் குழந்தைகள காப்பாத்த புதுசா அவதாரமெடுத்திருக்கும் நவயுக அன்னை தெரசா.…

  • அடி!அடி!அடி!

    எழுத்தாளர் ஜெயமோகன்அவர்கள் எழுதாப் பயணம் நூலினைக்குறித்து எழுதிய பதிவு இது   ஆட்டிச வளர்ச்சிக் குறைபாடு  கொண்ட சிறுவனாகிய கனியை ஒரு தனியார் பராமரிப்பாளரிடம் சிலநாள் அனுப்புகிறார்கள் அவன் பெற்றோர். அதன்பின் ‘அடி’ என ஒலிக்கும் எச்சொல்லைக் கேட்டாலும் அவன் வெறிகொண்டு  ’அடி! அடி! அடி!’ என கூவியபடி தன்னைத்தானே கைகளால் அடித்துக்கொள்கிறான். அங்கே அவனை அவர்கள் அடித்திருக்கிறார்கள். அடி என்னும் சொல்லுடன் அவன் அச்செயலை இணைத்துக்கொண்டிருக்கிறான். அதன்பொருள் அவனுக்குத்தெரியவில்லை லக்ஷ்மி பாலகிருஷ்ணனின் எழுதாப்பயணம் ஓர் அன்னையின்…

  • அரும்புக்கொண்டாட்டம் 2019

      மனித குலத்தின் வரலாற்றில் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது என்ற செயலுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. முதன் முதலில் சக்கரத்தைக் கண்டுபிடித்தவர் அதை எப்படிச் செய்வது என்பதை அடுத்த தலைமுறையினரிடம் பகிர்ந்து கொள்ளாமல் போயிருந்தால்.. என்னவாகி இருக்கும்..? இன்று வரை நம் மனித இனத்தின் ஆகச் சிறந்த கண்டுபிடிப்பாக சக்கரம் மட்டுமே இருந்திருக்கும். ஆம்! மீண்டும் மீண்டும் அதை மட்டுமே ஒவ்வொரு தலைமுறையும் கண்டுபிடித்துக் கொண்டு இருந்திருக்கக்கூடும். ட்ரெட் மில் இயந்திரத்தில் நின்ற இடத்திலேயே நடப்போமே, அப்படியாக…