Tag: வாசிப்பனுபவம்

  • உப்பு வேலி – நூல் அறிமுகம்

    (நீண்ட நாட்களாக நூல் அறிமுகம் ஏதும் எழுதவில்லை. பழைய நூல்கள் தான் என்றாலும் எனது வாசிப்பு அனுபவத்தை பதிவு செய்வது நன்றாக இருக்கும் என்று எண்ணுவதால், இனி அவ்வப்போது, நூல்கள் குறித்து எழுததிட்டம்) ராய் மாக்ஸம் எனும் பிரிட்டீர் ஆய்வாளர், ஒரு பழைய புத்தகக்கடையில் ஒரு நூலை கண்டெடுக்கிறார். அது, 1893இல் வெளியான மேஜர் ஜெனரல் ஸ்லீமன் எழுதிய ஒரு இந்திய அதிகாரியின் புலம்பல்களும் ஞாபகங்களும் (Rambles and recollections of an Indian official –…

  • அடி!அடி!அடி!

    எழுத்தாளர் ஜெயமோகன்அவர்கள் எழுதாப் பயணம் நூலினைக்குறித்து எழுதிய பதிவு இது   ஆட்டிச வளர்ச்சிக் குறைபாடு  கொண்ட சிறுவனாகிய கனியை ஒரு தனியார் பராமரிப்பாளரிடம் சிலநாள் அனுப்புகிறார்கள் அவன் பெற்றோர். அதன்பின் ‘அடி’ என ஒலிக்கும் எச்சொல்லைக் கேட்டாலும் அவன் வெறிகொண்டு  ’அடி! அடி! அடி!’ என கூவியபடி தன்னைத்தானே கைகளால் அடித்துக்கொள்கிறான். அங்கே அவனை அவர்கள் அடித்திருக்கிறார்கள். அடி என்னும் சொல்லுடன் அவன் அச்செயலை இணைத்துக்கொண்டிருக்கிறான். அதன்பொருள் அவனுக்குத்தெரியவில்லை லக்ஷ்மி பாலகிருஷ்ணனின் எழுதாப்பயணம் ஓர் அன்னையின்…

  • குழந்தைகள் படிக்க ஏற்ற கதைகள்

    மு. கலைவாணன் இப்பெயரை நீங்கள் அறிந்திருப்பீர்கள். தமிழகத்தின் இன்றும் பொம்மலாட்டக் கலையைத் தாங்கிபிடித்து நிற்கும் கலைஞர். தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவம் சுற்றி வருகிறார். பொம்மலாட்டத்தின் வழி, பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைச் செய்துவரும் இவர், குழந்தைகளுக்காகவும் எழுதிவருகிறார். அப்படி, இவர் எழுதிய சின்னஞ்சிறுக் கதைகள் அடங்கிய 8 நூற்களைச் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார். 32 பக்க அளவுடைய இக்குட்டி நூற்கள் ஒவ்வொன்றும் ரூ.10/. 8 நூற்களும் சேர்த்து ரூ.80/- மட்டுமே!   சின்னச்சின்னக் கதைகள் 1,2 அன்புள்ள குழந்தைகளுக்கு..…

  • தமிழ்நாட்டில் 30 லட்சம் குழந்தைகளுக்கு ஆட்டிசம்…! – குறைபாடு ஏன், அறிகுறிகள், பயிற்சிகள்!

    ஆட்டிசம் விழிப்புஉணர்வு அவசியம் தேவை… ஏன்? புதிதாகத் தங்கள் குழந்தைக்கு ஆட்டிசம் பாதிப்பு இருப்பதாகக் கண்டறியும் பெற்றோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. அதனாலேயே ஆட்டிசம் குறித்து நாம் தொடர்ச்சியாக உரையாடிக்கொண்டே இருக்கவேண்டிய தேவையும் இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவில் `68 குழந்தைகளில் ஒன்று’ என்ற விகித்தில் ஆட்டிசநிலைக் குழந்தைகள் இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் சொன்னது. ஆனால் இப்போது, `45 குழந்தைகளில் ஒரு குழந்தை’ என்ற அளவில் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகச் சொல்கிறது மற்றோர் ஆய்வு.…

  • புதிய அனுபவம் கொடுக்கும் சிறார் நாவல்: இருட்டு எனக்குப் பிடிக்கும்

    பயணம் பிடிக்காதவர்கள் இருக்கமுடியுமா? அல்லது பயணம் பிடிக்காத குழந்தைகள் இருக்கமுடியுமா? நானறிந்த வரை குதுகுலமாக குழந்தைகள் பயணங்களுக்குத் தயாராகிவிடுவார்கள். இன்னும் சொல்லப்போனால்.. ஊட்டிக்குப் போய் மலர்கண்காட்சி பார்ப்பதும், ஆக்ரா போய் தாஜ்மகால் பார்ப்பதும் வயதுவந்தவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனால் குழந்தைகளுக்கு புது இடத்திற்குப் போகிறோம் என்பதே மகிழ்வளிக்கக்கூடியதுதான். தமிழைச் சிரமமின்றி வாசிக்கத்தெரிந்த 10 வயதுக் குழந்தை தொடங்கி, எவரும் வாசித்துவிடக்கூடிய அளவில் எழுதப்பட்டுள்ள கதைதான் ’இருட்டு எனக்குப் பிடிக்கும்’  இச்சிறுவர் நாவலின் ஆசிரியர் ரமேஷ் வைத்யாவுக்கு தனி…

  • மீனவர்களின் துயரத்தை படம்பிடிக்கும் – வலை

    மீன் பிடிக்க கடலுக்குப் போன பிள்ளை திரும்புவான் எனப் பல ஆண்டுகளாகக் காத்திருக்கும் தாய். பிறக்கும் பிள்ளைக்கு அப்பாவைப் புகைப்படத்தில் மட்டுமே இனி காட்டமுடியும் என்று உள்ளுக்குள் உடைந்து அழுதுகொண்டிருக்கும் பிள்ளைத்தாச்சி. குடும்ப பாரத்தை சுமக்கப் பள்ளி இறுதியைக்கூடத் தொடாமல் வேலைக்குப்போன பிள்ளைகள் -இப்படி நூற்றுக்கணக்கான மீனவக் குடும்பங்களை பாம்பன் தீவுக்குள் பார்க்க முடியும். இன்னும் சொல்லப்போனால், ராமேஸ்வரத்தில் 500க்கும் குறைவான வீடுகள் கொண்ட, ஒரு சிறுகிராமத்தில் கணவனை இலங்கை ராணுவத்திற்குக் காவுகொடுத்த பெண்கள் வீட்டுக்கு ஒருவரையாவதுப்…

  • காகங்கள் ஏன் கருப்பாச்சு?

    கிச்சா பச்சா என்று இரண்டு காகங்கள், தாங்கள் ஏன் கருப்பாக இருக்கிறோம்..? என்ற கேள்விக்கு விடை தேடி பயணப்படுகின்றன. இதுதான் விழியனின் கிச்சா பச்சா நூலின் ஒன் லைனர். மொத்தம் 9 அத்தியாயங்கள் கொண்ட கதை. ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒவ்வொரு விலங்குகளைச் சந்தித்து, தாங்கள் ஏன் கருப்பாக இருக்கிறோம் என்ற கேள்விக்கு விடை தேட முயல்கின்றன. விலங்குகள் சொல்லும் எந்தப் பதிலும் இவற்றைச் சமாதானப்படுத்தவில்லை என்பதால் இவற்றின் பயணம் தொடர்கிறது. நமக்கும் சுவாரஸ்யமான கதை கிடைக்கிறது. தொடர்…

  • மதுரைக்கு வந்த வேற்றுக்கிரக வாசிகள்

    ஐந்தாம் வகுப்பில் படிக்கும் அருண் என்ற சிறுவனும், அவனது நண்பர்களும் ஒரு வேற்றுக்கிரக்க வாசியைச் சந்திக்கிறார்கள். அதனுடன் விண்கலத்தில் பயணமாகி, அதன் உலகிற்குச் செல்கின்றனர். அங்கே என்னென்ன பார்த்தார்கள் என்ன கற்றுக்கொண்டார்கள் என்பதைக் குழந்தைகளுக்கான மொழியில் எளிமையாக எழுதியுள்ளார் நூலாசிரியர் க.சரவணன். மதுரையில் ஒதுக்குப்புறமாகக் குடிசையில் வாழும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன் அருண். அவனுடைய நண்பர்களோ வேறு பகுதியில் வசிக்கும் மத்தியதர குடும்பத்தினர். அருண் வீட்டில் மின்சாரம் இல்லை என்பதே நண்பர்களுக்கு பெரும் அதிர்ச்சியான செய்தி. அதோடு அவனுடனேயே…

  • ஆட்டிசம்: நம்பிக்கை தரும் மனிதர்கள்- 5 (ஆதித்யா மோகன்)

    ஆதித்யாவின் இசைக்கு ஆட்டிசம் தடையில்லை! ஆங்கிலத்தில்: மிருணாளினி சுந்தர்.                       தமிழில்: ரமேஷ் வைத்யா.   ஆதித்யா மோகன் சிறு பிள்ளையாக இருந்தபோது எதையும் உணரத்தெரியாது. “நான் அவன் அம்மா என்பதையே அவன் புரிந்துகொண்டானா என்பது எனக்குத் தெரியாது” என்கிறார் ஆதித்யாவின் அம்மா ஜெயஸ்ரீ. அவரே தொடர்ந்து, “அவனால் பேச முடியவில்லை. எதையும் கிரகித்துக்கொள்ள முடியவில்லை. எப்போதும் பதற்றமாகவே இருப்பான். அவன் ஒரு…

  • ஆமை காட்டிய அற்புத உலகம் (சிறார் நாவலுக்கான முன்னுரை)

      சாகசகம் பிடிக்காத குழந்தைகளே இருக்கமுடியாது. அப்படியொரு சாகசக் கதைதான் இந்த நாவல். கடல் சூழ்ந்த ஊரில் பிறந்ததாலோ என்னவோ, எனக்கு எப்போதும் கடல் பிடிக்கும். அந்த கடலுக்குள் போய்ப்பார்த்தால் என்ன என்று தோன்றியது. அற்புதங்கள் நிறைந்தது அது. கணக்கில் வராத, கோடானுகோடி உயிரினங்கள் அதன் உள்ளே வாழ்கின்றன என்பது அறிவியலாளர்களின் கருத்து. பால்யத்தில் நான் நீச்சல் பழகி, விளையாடிய, பாறைகள் நிறைந்த, அதே இடத்தில் இருந்து கதையைத் தொடங்கியிருக்கிறேன். ஓர் உண்மையைச் சொல்வதானால் சிறுவயதில் அடிக்கடி…