Tag: விடுபட்டவை

  • விடுபட்டவை 17.07.09

    என்னமோ தெரியலை.. என்ன மாயமோ தெரியலை.. நெட்டு பக்கம் வர முடியலை. இணையத்து பக்கம் வரக்கூடாதுன்னு எவனாவது செய்வினை வச்சுட்டான்னு நம்பவும் முடியலை. ஆணி அதிகமாகிப் போனது என்னவோ உண்மை. ரவிசங்கர் மாதிரி பல நண்பர்களுக்கு நிதானமாக மடல் எழுதக்கூட நேரமில்லாமல் இருக்குது. சில நாட்கள் மெயில் பார்க்கவே ரெண்டு நாள் ஆகுவது இன்னும் கொடுமை. 90% எந்திரமாகிவிட்ட எண்ணம் மேலோங்குகிறது. எது பற்றியும் யோசிக்கவே முடியவில்லை. சோம்பேறியான நான் மகா சோம்பேறியா மாறி விட்டதாகவே எண்ணுகிறேன்.…

  • விடுபட்டவை 03/ஜூன்/2009

    “பூவுலகு” சுற்றுச்சூழல் இதழ் வெளியீட்டு விழா, நாள்: 13–06–09 மாலை 6 மணிக்கு நடக்கிறது. வாய்ப்பு இருப்பவர்கள் அவசியம் கலந்துகொள்ளவும். இடம்: ரஷ்ய கலாச்சார மையம், 74, கஸ்தூரி ரங்கன் சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை – 600 018 விவசாயிகளின் தற்கொலைக்கான காரணங்களையும், தீர்வுகளையும் தேடும் “I want my father back“ என்ற குறும்படம் திரையிடப்படவிருக்கிறது. —- கலைஞர் கருணாநிதியின் 86வது பிறந்தநாள் இன்று. அறிவாலயம் களைகட்டியது. காலையில் இருந்து பார்த்த சிலவற்றை தருகிறேன். ஆண்டு…

  • தி.மு.க கூட்டணி வெற்றி பெற முடியுமா?

    ஒரு பொது அறிவு தகவல்:- இந்த தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் போட்டிருக்கும் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா? 1200 கோடி ரூபாய். ——– கொஞ்சமல்ல.. நிறையவே பயந்து போய் இருக்கிறது தி.மு.க! தேர்தல் தோல்வி பயம் அளவுக்கு அதிகமாக வாட்டிஎடுக்கிறது அங்கிருப்போரை. அதனாலேயே.. அதிகாரத்தின் வாயிலாக வெற்றியை அடைந்து விடலாம் என்று முனைந்து கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை கிடைக்கும் வெற்றிகள் கூட நிச்சயம் நியாயமான முறையில் கிடைத்ததாக இருக்காது என்பதை உறுதியாக என்னால் சொல்ல முடியும். கடந்த கால வரலாற்றில்…

  • விடுபட்டவை 31.03.09

    கடந்த சில நாட்களுக்கு முன் தம்பி குசும்பனிடமிருந்து மடல்.. அவரின் பதிவுகள் குறித்த எனது எண்ணத்தை அனுப்பும் படி கேட்டிருந்தார். ஆனால்.. என்னுடைய பணிச்சூழல் எழுதவிடாமல் செய்து விட்டது. உண்மையில் குசும்பனின் பதிவுகளில் எனக்கு மிகவும் பிடித்தது.. போட்டோக்களை கிராஃபிக்ஸ் செய்வதும், புகைப்படங்களுக்கு அவர் எழுதும் கமெண்ட்டும் தான். நிச்சயமாக நம்மிடையே நகைச்சுவை உணர்வு குறைந்து வருகிறது என்று அடித்து(யாரைன்னு கேட்காதீங்க!) சொல்லமுடியும். அதையும் எழுத்தில் வடிப்பது என்பது தனிச்சிறப்பான விசயம். இன்று ஜெயமோகனிடம் அத்தகைய நகைச்சுவையுணர்வை…

  • விடுபட்டவை 13 மார்ச் 2009

    இன்று என்னை மிகவும் பாதித்த விசயம் நிரஞ்சன் குமார் என்ற சாப்ட்வேர் இன்ஜினியரின் செயல்தான். (சுட்டியை க்ளிக் செய்தால் விபரம் படிக்க முடியும்.) எம்.ஈ.  படித்து விட்டவருக்கு இப்படியான காரியத்தை செய்ய எப்படித்தான் மனம் வந்ததோ தெரியவில்லை. நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திலிருந்தவரை பார்த்தேன். பிறந்து நான்கு நாட்களே ஆன குழந்தையை கொன்றுவிட்ட வருத்தம் கொஞ்சம் கூட அவரிடம் இல்லை. வாழ்க்கையை அனுபவிக்கவேண்டிய வயதில் இப்படி குழந்தையோடு என் மனைவி இருப்பது பிடிக்கவில்லை. என்னோடு ஜாலியாக(!) இல்லாமல்.. இனி…

  • த்துதெறி!மானம் கெட்ட அரசியல்வாதிகள்!!

    ஈழத்தில் தொடரும் தமிழர்களின் சாவு எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. தமிழக முதல்வர் கருணாநிதியோ.. பதவி மோகத்தால் வாயைத் திறக்க மறுக்கிறார். அவரின் இச்செயல்கண்டு கொதித்துப் போன.. டாக்டர் ராமதாஸ் தலைமையில் தா.பாண்டியன், திருமா, நெடுமாறன், வைகோ உள்ளிட்ட அத்துனை தமிழினத்தலைவர்களும் இன்று கூடி சுமார் மூன்று மணிநேரம் ஆலோசனை நடத்தினார்கள். எங்களின் முடிவு..  மத்திய, மாநில அரசுகளை நடுங்க வைத்து விடும் அதனால் உடனே இந்தியா போரை நிறுத்தச்சொல்லும்.. என்றெல்லாம் பில்டப்கள் வேறு. கடைசியில் இப்போது முடிவு…

  • விடுபட்டவை 21.01.09

    உங்களை கை பிடித்து நடை பழக்கிய அப்பா வீட்டில் நிம்மதியாக இருக்கிறாரா? ஒரு வேளை அவர் ஏதாவது விபத்தில் கையோ காலோ சிதைந்து போய் ரத்த சகதியில் கிடப்பதாக கற்பனை பண்ணிப் பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் மீது அன்பை பொழிந்த உங்கள் தாய் வீட்டில் ஓய்வாக இருக்கிறாரா? ஒரு வேளை அவரும் ஏதாவது பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாகி ரத்தம் சொட்ட சொட்ட சினிமா நாயகிபோல் தரையில் தவழ்ந்து தவழ்ந்து உங்களை நோக்கி வருவதாக கற்பனை பண்ணிக்கொள்ளுங்கள். உங்கள் சகோதரர்…

  • விடுபட்டவை 20 நவம்பர் 2008

    சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு இடையில் நடந்த மோதல் குறித்து அனேகர் தம் சொந்தக் கருத்துக்களை வைத்து விட்டார்கள். அதில் ஏகத்துக்கும் தவறாக கருத்துக்களோடு வந்த பதிவுகள் அதிகம். வன்முறைக்கு வன்முறை சரியான தீர்வு ஆகாது எனினும்.. பாரதிகண்ணன் என்ற மாணவனால் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாகி ராயப்பேட்டை மருத்துவமணையில் சிகிக்கை பெற்று வரும் சித்திரைச்செல்வன் பற்றிய எந்த செய்தியையும் மீடியாக்கள் சொல்லவே இல்லை என்பது விளங்காத புதிர். ஒரு வேளை மீடியாக்களில் தலித் அல்லாத உயர்சாதி மக்கள் அதிகம் இருப்பதும்…

  • விடுபட்டவை 09.10.08

    பொது இடங்களில் புகைப்பது குறித்து அரசு கொண்டு வந்திருக்கும் சட்டத்திருத்தம் குறித்து பல்வேறு கருத்துக்கள்.. பேசப்பட்டு வருகிறது. வலை உலகில் கூட பலரும் இது பற்றி பேசி விட்டார்கள். இதில் எனது கருத்து ஒன்றுதான்.(சிலர் பதிவில் பின்னூட்டமாகக்கூட போட்டு விட்டேன்) பொது இடங்கள் தொடங்கி, சாலையோரத்தில் கட்டப்பட்டிருக்கும் சிறுநீர் கழிவறை போல ( அதுவே ஒழுங்க இல்லைன்னு யாரும் சொல்லக்கூடாது) புகைப்பவர்களுக்குமான தனி இடத்தை அரசு ஏற்பாடு செய்யவேண்டும்.அரசு/தனியார் என அனைத்து அலுவலகங்களிலும் புகைப்பிடிப்பவர்களுக்கு தனி இடம்…

  • விடுபட்டவை 05.10.08

    சர்ச்பார்க் பள்ளியைப் பற்றி அறிந்திருப்பீர்கள். ஜெயலலிதா படித்த கான்வெண்ட். சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு அருகில் இருக்கிறது. அதன் நூற்றாண்டு விழா சில நாட்களுக்கு முன் கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக அப்துல்கலாம் கலந்துகொண்டார். பயங்கர கெடுபிடி. ஏகப்பட்ட விஐபிகள், விவிஐபிகள் என்று ஏக கூட்டம். சூப்பர்ஸ்டாருக்கு என்ன கைதட்டல் கிடைக்குமோ.. அதைவிட அதிகமாக கைதட்டல் குழந்தைகளிடமிருந்து கலாமுக்கு கிடைத்தது. வழமைபோல கலாம் மேடையில் உறையாற்றும் போது குழந்தைகளை உறுதிமொழி எடுத்துக்கொள்ளச்சொன்னார். அது பெண் குழந்தைகளுக்கான பள்ளி என்பதால்.. உறுதிமொழியில்…