நான் வழக்கமாக சாப்பிடும் கடை நேற்று பூட்டியிருந்தது.(இன்றும் தான்). அதனால்.. வேறு ஒரு கடையில் சாப்பிட்டேன். அது என்னமோ செய்ய.. இரவெல்லாம் ஒரே அவதி! இரவில் எழுத வேண்டிய பதிவை.. இன்று அதிகாலை எழுதி.. நேற்றைய தேதியில் எடிட் பகுதியில் செட் செய்து.. காலையில் போஸ்ட் போட்டு விட்டேன். அதில் எழுதி இருந்த திண்ணைக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது. என்னைப் போலவே பலரும் திண்ணை குறித்த ஏக்கத்தில் இருந்திருக்கிறார்கள் என்பதை எண்ணும் போது.. மகிழ்ச்சி இன்னும் கூடுகிறது. நம் பதிவர்களின் திண்ணைப் பதிவுகளை ஒரே இடத்தில் சேமிக்கும் பொருட்டு.. http://216.185.103.157/~balabhar/blog/திண்ணை/ க்கு என்று தனி பக்கம் அமைத்து இருக்கிறேன். சிரமம் பாராமல்.. அங்கே வந்து திண்ணைப் பதிவு எழுதியவர்கள் தங்கள் பதிவின் சுட்டியை தரவேண்டுகிறேன்.

-OoO-

நாளை தமிழகத்தில் பொது வேலை நிறுத்தத்திற்கு இடதுசாரிக் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. அவர்களின் அழைப்பில் தமிழ்நாடு வணிகர் சங்கமும், ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கமும் கூட குதிக்கப் போவதாக அறிவித்துள்ளது. எரிமொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்படும் இந்த பொது வேலை நிறுத்தத்தில் பேருந்து போக்குவரத்து பாதிப்பு இருக்காதாம். இன்று காலை ஒரு அரசு பேருந்து ஓட்டுநரிடம் பேசிக்கொண்டிருந்த போது, அவர் சொன்ன விசயம் அதிர்ச்சியைத் தந்தது.

ஏழாம் தேதி வேலை நிறுத்தத்திற்கு இடதுசாரிகள் அழைப்பு விடுத்த.. அன்றைய தினமே.. சென்னை போக்குவரத்து கழகத்தினர் ஒரு காரியம் செய்திருக்கிறார்கள். 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை அட்டெனென்ஸில் கையெழுத்து வாங்கி வைத்து விட்டார்களாம். அதனாலேயே வேலைக்கு போய் ஆக வேண்டும் என்று சொன்னார். அவர் சொன்னதைக் கேட்டு.. வாயடைத்து நின்ற போதும்.. எனக்குள் இன்னொரு கேள்வி எழுந்தது.

பணியில் இருக்கும் போது, எதோ ஒரு விதத்தில் அந்த தொழிலாளி இறந்து போனால்.. அவனுக்கு கூடுதல் நிவாரனத்தை அளிப்பது ஒவ்வொரு அரசின் வழக்கம். ஆனால்.. அலுவலகமே வராமல் முன் கூட்டியே கையெழுத்து போட்ட ஒருவர்.. இறந்து போனாலோ, உடல்நிலை முடியாது போனாலோ.. என்ன செய்வார்கள் மாநகர போக்குவரத்து கழகத்தார்? அரசை ஏமாற்றி பணம் வாங்கிக்கொடுப்பார்களா..அல்லது அந்த பணத்தை.. பெற்று இவர்கள் சாப்பிட்டு விடுவார்களா? தெரியவில்லை.

(சென்னை போக்குவரத்துக் கழக ஊழியர்கள் அனைவருக்கும் மாத ஊதியத்தை செக் வடிவில் தான் வழங்குகிறதாம். சின்னச் சின்ன நிறுவனங்களே.. 0% டெபாசிட் முறையில் வங்கி கணக்கு திறந்து கொடுக்கும் போது, லட்சங்கள் தினம் வருமானம் பார்க்கும் போக்குவரத்து கழகம் தன் ஊழியர்களுக்கு வங்கி கணக்கு திறந்து கொடுக்காமல்.. இருப்பதற்கான காரணம் ஏன் தெரியுமா..? 0% டெபாசிட் முறையில் வங்கி கணக்கு திறந்து கொடுத்தால்.. ஊழியர்கள் பர்சனல் லோன் போடுவது எளிதாகிவிடும் என்ற காரணம் தானாம். இதயும் அந்த ஓட்டுனர் தான் சொன்னார். நாம் எந்த காலத்தில் வாழ்ந்து வருகிறோம் என்பதை நினைத்து வருத்தமாக இருந்தது)

-OoO-

நான் அதிகம் தேனீர் குடிப்பவன். தினத்திற்கு இவ்வளவு என்று அளவுகள் எல்லாம் கிடையாது. மருத்துவர்கள் தேனீர்குடிப்பதை குறைக்கச் சொன்ன போதும் முடியாமல் தொடருகிறேன். 🙁 சொந்த மண்ணை விட்டு, வந்த பின் டேஸ்ட் எல்லாம் பார்ப்பதில்லை. என்னைப் பொறுத்த அளவில் நல்ல தேனீர் தான் வேண்டும் என்று நினைப்பதில்லை. சூடாகவும், கொஞ்சம் சக்கரையும் இருந்தால் போதுமானது. அதே சமயம் ஏதாவது ஒரு கடையில் தேனீர் குடிக்கும் போது நன்றாக இருந்தால்.. ஒரு தேனீர் குடித்து முடித்த கையோடு, இன்னொரு தேனீர்க்கு ஆடர் கொடுத்து விடுவேன். 🙂 சமீபத்தில் சில நண்பர்களுடன் ஒரு கடையில் தேனீர் குடிக்கச் சென்றோம். அதன் சுவை பிடித்துப் போக.. இன்னொரு தேனீர் சொல்ல நினைத்த போது.. உடன் வந்த நண்பர் ஒருவரும் இன்னொரு தேனீர் சொன்னார். நான் வியந்து போய்.., ”நீங்களும் என்னைப் போலத் தானா? டீ நல்லா இருந்தா.. நான் சமயத்துல ரெண்டு கூட குடிப்பேன்” என்றேன். அதற்கு அவர் சிரித்துக்கொண்டே.., ‘ஆமா.. ஆனா.. கொஞ்சம் வித்தியாசம்.. டீ நல்லா இல்லைன்னாத் தான்.. நான் இன்னொரு டீ குடிப்பேன்’ என்றாரே பார்க்கலாம். சுவை கூட ஆளாளுக்கு மாறுபடும் என்பதை அன்று தான் தெரிந்து கொண்டேன்.

குடும்ப உறுப்பினர்கள் எல்லோரையும் திருப்தி படுத்த.. ஒவ்வொரு பெண்களும் எவ்வளவு சிரமப்படுவார்கள்? 🙁

-oOo-

புலம் பெயர் படைப்பாளியான றஷ்மி-யின் காவு கொள்ளப்பட்ட வாழ்வு கவிதைத் தொகுதியின் மின்னூல் இங்கே.. நன்றி :- நூலகம் டாட் நெட்.


Comments

13 responses to “விடுபட்டவை 06 ஜூன் 2008”

  1. \\அதே சமயம் ஏதாவது ஒரு கடையில் தேனீர் குடிக்கும் போது நன்றாக இருந்தால்.. ஒரு தேனீர் குடித்து முடித்த கையோடு, இன்னொரு தேனீர்க்கு ஆடர் கொடுத்து விடுவேன்.\\
    ஒரே ரத்தம்

  2. //குடும்ப உறுப்பினர்கள் எல்லோரையும் திருப்தி படுத்த.. ஒவ்வொரு பெண்களும் எவ்வளவு சிரமப்படுவார்கள்? //

    வீட்ல ரெண்டாவது டீ கேட்டா à®…’டீ’ தான் கிடைக்கும்
    உங்களைப்போல நல்லா இருக்குதே இன்னொண்ணு தாண்ணு கேட்டா அடுத்த தடவை கேவலமாய் கிடைக்கும். நண்பரைப்போல நல்லாயில்ல இன்னொண்ணு தாண்ணு கேட்டா அடுத்த முறை கிடைக்கவே கிடைக்காது.

    à®…’டீ’ – டீ அல்லாதது எனும் பொருள் கொள்க அபுனைவு மாதிரி.

    🙂

  3. இன்னைக்கு மேட்டர் எதும் நல்லால்ல………..

  4. சிறில் அலெக்ஸ் June 7th, 2008 at 1:33 am
    //குடும்ப உறுப்பினர்கள் எல்லோரையும் திருப்தி படுத்த.. ஒவ்வொரு பெண்களும் எவ்வளவு சிரமப்படுவார்கள்? //

    வீட்ல ரெண்டாவது டீ கேட்டா அ’டீ’ தான் கிடைக்கும்
    உங்களைப்போல நல்லா இருக்குதே இன்னொண்ணு தாண்ணு கேட்டா அடுத்த தடவை கேவலமாய் கிடைக்கும். நண்பரைப்போல நல்லாயில்ல இன்னொண்ணு தாண்ணு கேட்டா அடுத்த முறை கிடைக்கவே கிடைக்காது.

    அ’டீ’ – டீ அல்லாதது எனும் பொருள் கொள்க அபுனைவு மாதிரி.// 🙂 ஓ அடப்பாவமே.. ஏங்க அவர பயமுறுத்துறீங்க..

    உன் கையால இன்னோரு டீ காப்பி தான்னா எத்தனை தடவைன்னாலும் போட்டுடலாம் .. சில சமயம் ஒரு உசிருள்ள டீ தான்னு கேட்டா.. கடுப்பாகி அப்படி எனக்கு போடத்தெரியாதேன்னு சொல்லிட்டு போயிட்டே இருக்கவேண்டியது தான்.. 🙂

  5. சில கடைகளில் ஆட்டுப்பாலிலும், சில கடைகளில் ஒட்டகப் பாலிலும் தேநீர் போட்டுக் கொடுக்கிறார்களோ என்ற சந்தேகம் எனக்கு வருவதுண்டு 🙁

    எழும்பூரில் ஏதோ ஒரு கடையில் நல்ல தேநீர் போட்டு தந்தார்கள். அந்த சுவை வேறு எந்த கடையிலும் இதுவரை எனக்கு கிடைத்ததில்லை.

    எனக்கு தேநீரை விட ஃபில்டர் காஃபி (வடிகட்டப்பட்ட குளம்பி?) தான் ரொம்ப பிடிக்கும். பேஷ்.. பேஷ்.. நரசுஸ் காபி டேஸ்ட்.. டேஸ்ட்..

  6. //சென்னை போக்குவரத்துக் கழக ஊழியர்கள் அனைவருக்கும் மாத ஊதியத்தை செக் வடிவில் தான் வழங்குகிறதாம். சின்னச் சின்ன நிறுவனங்களே.. 0% டெபாசிட் முறையில் வங்கி கணக்கு திறந்து கொடுக்கும் போது, லட்சங்கள் தினம் வருமானம் பார்க்கும் போக்குவரத்து கழகம் தன் ஊழியர்களுக்கு வங்கி கணக்கு திறந்து கொடுக்காமல்.. //

    ஒருவகையில் நல்லதுதான்.

    ஏனெனில் இவர்கள்தான் கிரெடிட் கார்டு மற்றும் பர்சனல் லோன் தரும் நிறுவனங்களின் இலக்கு.

    பெரும்பாலும் வறுமையில் வாழும் இவர்களை ஏமாற்றி கிரெடிட் கார்டையோ, பெர்சனல் லோனையோ தலையில் கட்டிவிட்டு பிறகு வட்டி, வட்டிக்கு வட்டி என்று முழு சம்பளத்தையும் தவணையாக கொள்ளை அடிப்பதையே தனியார் மற்றும் பன்னாட்டு வங்கிகள் முழுநேரத் தொழிலாக செய்து வருகின்றன.

    இந்த பன்னாட்டு வங்கிகளின் பகாசுர பசிக்கு இரையாகாமல் தப்பும் போக்குவரத்துக்கழக பணியாளர்கள் அதிர்ஷ்டசாலிகளே!

  7. /அதே சமயம் ஏதாவது ஒரு கடையில் தேனீர் குடிக்கும் போது நன்றாக இருந்தால்.. ஒரு தேனீர் குடித்து முடித்த கையோடு, இன்னொரு தேனீர்க்கு ஆடர் கொடுத்து விடுவேன்/

    கி கி கி நான் டோக்கன் வாங்கும்போதே ரெண்டு டோக்கன் தான் வாங்கறது. 😉 கடைல கொடுக்கிற டீயோட அளவு வீட்ல கொடுக்குறதுல பாதி கூட இருக்கிறதில்ல 🙁

    தல, டீயக் குறைக்கிறதுக்கு முன்னாடி தம்ம குறைங்க!

  8. //தல, டீயக் குறைக்கிறதுக்கு முன்னாடி தம்ம குறைங்க!//

    அதே.. அதே. இரண்டாவது அதே அவர் கூட தம்மடிக்கிற மத்தப் பயலுக்கு :))

  9. தூயா Avatar
    தூயா

    🙂 பால்த்தேத்தண்ணி குடிச்சிருக்கிங்களாண்ணா? 😉

  10. vaichno Avatar
    vaichno

    ///ஆபாச தலைப்புகள், சுட்டி இழுக்கும் வாசகங்கள் அல்லது சண்டை போடும் படியான வார்த்தைகளை தலைப்பாக வைத்தால் தான்.. பதிவர்கள் படிப்பார்கள். அதனாலேயே அப்படியான பெயர்களை வைப்பதாக சிலர் சொல்லி இருக்கிறார்கள். தொடக்கம் முதலே இந்த கூற்றில் எனக்கு உடன்பாடு இருந்ததில்லை. தமிழ்மண முகப்பில் இருக்கும் சூடான இடுகையில் வர வேண்டி பலர் வைத்த தலைப்புகள் நம்மை முகம் சுழிக்கவும் வைத்தன. ஆனால்.. உள்ளே என்ன இருக்கும் என்று வாசிக்காமல் அறிந்துகொள்ள முடியாத ”விடுபட்டவை” தலைப்புடன் திகதியும், மாதமும் குறிக்கப்பட்ட பதிவுகள் சூடான இடுகையில் வந்தது.. உண்மையில்.. பதிவர்கள் தலைப்புக்களை வைத்து தேடி வருவதில்லை என்பதை காட்டியதாக உணர்கிறேன். தலைப்புக்களில் இல்லை சூட்சமம் என்பது வலைப்பதிவுகளுக்கு மட்டும் பொருந்தும் என்று நினைக்கிறேன். என் எண்ணம் தவறானதாகக்கூட இருக்கலாம். சுட்டிக்காட்டுங்கள்!///////

    உங்களுடைய இடுகை தற்போது சூடான இடத்தில் இரண்டாவது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் உள்ள பதிவின் பெயர் “காமக் கதைகள்” எழுதிய பதிவர் ஜ்யோவ்ராம் சுந்தர். உங்களுக்கு புரிந்திருக்கும் என்று எண்ணுகிறேன்.

  11. ///நான் அதிகம் தேனீர் குடிப்பவன். தினத்திற்கு இவ்வளவு என்று அளவுகள் எல்லாம் கிடையாது///

    அட இது என்னோட பழக்கம் மாதிரி இருக்கே…அதுவும் கறுப்பு தேநீர்தான் (black tea)என்னுடைய விருப்பம்…

  12. தூயா Avatar
    தூயா

    அடுத்த பாகம் எங்கே?

  13. thinnaikku neenga kuduththa link la pinnoota option illaiyE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *